Sidebar

30
Fri, Oct

✍️ஒட்டகங்களுக்கான ஜகாத் எப்படி

✍️ஜக்காத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒட்டகங்களுக்கான ஜகாத் முறைமை என்பது, தமிழகச் சூழலில் வாழும் மக்களுக்குப் பயன்பாட்டில் இல்லாத ஒன்றாகத் தோன்றினாலும், இஸ்லாமிய மார்க்கக் கல்வியின் வரலாற்றையும் அதன் சட்ட நுணுக்கங்களையும் அறிந்து கொள்வதற்கு இது மிகவும் அவசியமானதொரு ஞானமாகும். கால்நடைகளுக்கான ஜகாத் சட்டத்தில் மிக முக்கியமான அடிப்படை என்னவெனில், பண்ணைகள் அமைத்துத் சாப்பாடும் தண்ணீரும் சொந்தச் செலவில் வழங்கி வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு ஜகாத் கடமையாகாது. எவ்விதப் பராமரிப்புச் செலவுமின்றி, வெளியில் மேய்ச்சலுக்குச் சென்று தாமாகவே புல் பூண்டுகளை மேய்ந்து, இரவில் மட்டும் இருப்பிடத்திற்குத் திரும்பும் ‘சாயிமா’ எனப்படும் மேய்ச்சல் கால்நடைகளுக்கு மட்டுமே ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில், ஒட்டகங்களுக்கான ஜகாத் கணக்கீடு நபிகள் நாயகம் (ஸல்) இந்த அவர்களின் வழிகாட்டுதலின்படி, அண்ணலாரின் மறைவுக்குப் பின் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் தம் ஆளுநர்களுக்கு எழுதிய அதிகாரப்பூர்வக் கடிதத்தின் வாயிலாக நமக்கு மிகத் தெளிவாகக் கிடைக்கிறது.

في أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الإِبِلِ فَمَا دُونَهَا مِنَ الْغَنَمِ مِنْ كُلِّ خَمْسٍ شَاةٌ :புகாரி) 1454)

புகாரி ஷரீபில் இடம்பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட விதிகளின்படி, ஒருவரிடம் நான்கு ஒட்டகங்கள் மட்டுமே இருந்தால் அதற்கு ஜகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்கள் பூர்த்தியாகும் போதே ஜகாத் கடமை ஆரம்பமாகிறது.

ஐந்து முதல் இருபத்தி நான்கு ஒட்டகங்கள் வரை உள்ள கணக்கீட்டில், ஒட்டகத்திற்குப் பதிலாக ஆடுகளே ஜகாத்தாகப் பெறப்படும். அதாவது, 5 ஒட்டகங்களுக்கு 1 ஆடு, 10 ஒட்டகங்களுக்கு 2 ஆடுகள், 15 ஒட்டகங்களுக்கு 3 ஆடுகள், 20 ஒட்டகங்களுக்கு 4 ஆடுகள் என்ற வீதத்தில் வழங்கப்பட வேண்டும். ஐந்துக்கு இடைப்பட்ட எண்களான 6, 7, 8, 9 போன்ற உபரி ஒட்டகங்களுக்குத் தனி ஜகாத் இல்லை; அவை முந்தைய கணக்கிலேயே சேரும்.

ஒட்டகங்களின் எண்ணிக்கை 25 ஐ எட்டும்போது, ஆடுகளாகக் கொடுக்கும் முறை மாறி, ஒட்டகத்தையே ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும்.

 إِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَفِيهَا بِنْتُ

 25 முதல் 35 வரை ஒட்டகங்கள் இருந்தால், அதற்கு ஓராண்டு நிறைவடைந்த ஒரு பெண் ஒட்டகக் குட்டியை ஜகாத்தாக அளிக்க வேண்டும்.

فَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلَاثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا بِنْتُ لَبُونٍ

 36 முதல் 45 வரை ஒட்டகங்கள் இருந்தால், அதன் மதிப்பு கூடுவதால் ஈரான்டு நிறைவடைந்த ஒரு பெண் ஒட்டகத்தை வழங்க வேண்டும்.

فإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْجَمَل

46 முதல் 60 வரை ஒட்டகங்கள் இருந்தால், பருவமடைந்து சினைப்படும் தகுதியைப் பெற்ற மூவாண்டு நிறைவடைந்த ஒரு பெண் ஒட்டகத்தை அளிக்க வேண்டும்.

فَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَفِيهَا جَذَعَةٌ

 61 முதல் 75 வரை ஒட்டகங்கள் இருந்தால், நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த ஒரு தகுதி வாய்ந்த பெரிய பெண் ஒட்டகத்தை ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். எண்ணிக்கையில் ஒன்றாக இருந்தாலும் வயதின் அடிப்படையில் அதன் மதிப்பு உயர்கிறது.

فَإِذَا بَلَغَتْ يَعْنِي سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ فَفِيهَا بِنْتَا لَبُونٍ

76 முதல் 90 வரை ஒட்டகங்கள் இருந்தால், ஈராண்டு நிறைவடைந்த இரண்டு பெண் ஒட்டகங்களை வழங்க வேண்டும். 91 முதல் 120 வரை ஒட்டகங்கள் இருக்கும் பட்சத்தில், மூவாண்டு நிறைவடைந்த இரண்டு பெண் ஒட்டகங்களை ஜகாத்தாகச் செலுத்த வேண்டும்.

فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ

ஒட்டகங்களின் எண்ணிக்கை 120 ஐத் தாண்டிப் பெருகும் போது, கணக்கீட்டை எளிமையாக்கும் பொருட்டு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி, 120 க்கு மேல் உள்ள ஒட்டகங்களை 40 மற்றும் 50 ஆகிய எண்களின் மடங்குகளாகப் பிரித்துக் கணக்கிட வேண்டும். 120 க்கு மேல் வரும் ஒவ்வொரு 40 ஒட்டகங்களுக்கும் ஈராண்டு நிறைவடைந்த ஒரு பெண் ஒட்டகமும், ஒவ்வொரு 50 ஒட்டகங்களுக்கும் மூவாண்டு நிறைவடைந்த ஒரு பெண் ஒட்டகமும் ஜகாத்தாகக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். 40 மற்றும் 50 என்ற இந்த அளவீடுகளுக்குள் வராத இடைப்பட்ட உபரி எண்களுக்கு ஜகாத் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தத் துல்லியமான நெறிமுறையானது ஜகாத் வசூலிப்பவர்கள் உரிமையாளர்களைத் துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவும், மார்க்கச் சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காகவும் வகுக்கப்பட்ட உன்னதமான வரலாறாகும்.