இஸ்லாமிய அறநெறிக் கோட்பாட்டின்படி, ஒருவருக்குரிய உடைமைகள் யாவும் 'செல்வம்' என்றே வரையறுக்கப்படுகின்றன. அரபு மொழியில் 'மால்' (பன்மை: 'அம்வால்') எனக் குறிக்கப்படும் இச்சொல், மனிதன் வைத்துள்ள அனைத்து வகையான சொத்துக்களையும் குறிப்பதாகும். திருக்குர்ஆனும், இறைத்தூதரின் வழிகாட்டுதலும் இத்தகைய செல்வங்கள் அனைத்தின் மீதும் ஜகாத் எனும் 'கடமைக்கொடை' விதியாக்கப்பட்டுள்ளதாகப் பறைசாற்றுகின்றன.
நபி ஸல் கூறினார்கள்:
أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ ". "
இறைவன் மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஜகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அச்செல்வம் செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு, வறியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்."(புஹாரி : 1395, 1496)
இதன் மூலம், ஜகாத் என்பது தங்கம் மற்றும் வெள்ளியோடு மட்டும் சுருங்கிவிடுவதில்லை என்பதும், ஒருவருக்குரிய அனைத்து வகைச் செல்வங்களையும் உள்ளடக்கியது என்பதும் தெளிவாகிறது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்خُذۡ مِنۡ اَمۡوَالِہِمۡ صَدَقَۃً மொழிபெயர்ப்பு "(நபியே!) அவர்களின் செல்வங்களிலிருந்து நீர் தர்மத்தைப் (ஜகாத்தை) பெற்றுக் கொள்வீராக!" திருக்குர்ஆன் (9:103) இவ்வசனம், 'செல்வம்' என்ற விரிந்த பொருளுடைய சொல்லையே பயன்படுத்துகிறது. எனவே, நிலம், இல்லம், ஆபரணங்கள், இதர சொத்துக்கள் எனப் போற்றப்படும் யாவும் இதனுள் அடங்கும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான் وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ "அவர்களுடைய செல்வங்களில், யாசிப்போருக்கும் வறியோருக்கும் உரிய பங்கு (உரிமை) இருக்கின்றது."திருக்குர்ஆன் (51:19 & 70:24)
எனவே, ஜகாத் என்ற கடமை, குறிப்பிட்ட சில பொருள்களுக்கு மட்டுமே உரியது அன்று. எவையெல்லாம் ஒரு மனிதனின் சொத்தாகவும், செல்வமாகவும் கருதப்படுகிறதோ, அவை அனைத்திற்கும் ஜகாத் வழங்குவது இறைக்கட்டளையாகும். செல்வம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட கொடை; அதில் வறியவர்களின் பங்கும் இணைந்துள்ளது என்பதை உணர்ந்து அறம் செய்வதே உன்னத நெறியாகும்.
✍️அனைத்து சொத்துக்களுக்கும் ஜகாத்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode