298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது
ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது.
இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தித்தல், இறந்தவர்களை வழிபடுதல், இறந்தவர்களிடம் கோரிக்கை வைத்தல், நேர்ச்சை செய்தல் போன்ற காரியங்களைச் செய்பவர்களுக்கு இவ்வசனம் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.
இறந்தவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் திரை போடப்படுகிறது என்று சொன்னால் இந்த உலகில் உள்ளவர்கள் செய்யும் எதையும் இறந்தவர்கள் அறிந்து கொள்ளவே முடியாது என்பதுதான் பொருள்.
இறந்தவர்களால் எதையும் அறிந்து கொள்ளவே முடியாது எனும் போது அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது என்பது உறுதி.
இது குறித்து மேலும் அறிய 79வது குறிப்பைக் காண்க!
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!
298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode