390. பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? .
இவ்வுலகில் பார்வையற்றவராக இருப்பவர் மறுமையில் பார்வையற்றவராக எழுப்பப்படுவார் என்று இவ்வசனத்தில் (17:72) கூறப்படுகிறது.
ஒருவர் இவ்வுகில் குருடராக இருந்தால் அவரை அவ்வாறு இறைவன் படைத்திருப்பதால் தான் குருடராக இருக்கிறார். மறுமை வாழ்க்கையில் உடல் ஊனத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு ஏற்பவே தீர்ப்பு அளிக்கப்படும். இந்த அடிப்படைக்கு ஏற்பவே இவ்வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வசனத்தில் குருடன் என்று கூறப்படுவது பார்வையின்மையைக் குறிப்பதாக இருக்க முடியாது. இவ்வுலகில் கருத்துக் குருடராக இருந்து சத்தியத்தை ஏற்காதவர்கள் தான் குருடர் என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.
இதை 17:97, 20:124,125 வசனங்கள் தெளிவாகவும் சொல்கிறது.
எனவே பார்வை இருந்தும் கருத்துக் குருடர்களாக இருந்தவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பது தான் 17:72 வசனத்தின் கருத்தாகும்.
390. பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்களா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode