331. மனிதர்களால் குறையும் பூமி
இவ்வசனங்களில் (50:4, 71:17) உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.
பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அவற்றுக்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அவை மனிதனாக, மிருகங்களாக, மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.
இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருட்களுமே தங்களின் எடையைப் பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.
எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் படைத்தபோது இருந்த எடை தான் இருக்கும்.
மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கிறான் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம்தான் என்பது நிரூபணம் ஆகிறது.
(மேலும் விபரத்திற்கு 167வது குறிப்பைக் காண்க!)
331. மனிதர்களால் குறையும் பூமி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode