243. ஓரங்களில் குறையும் பூமி
இவ்வசனங்களில் (13:41, 21:44) பூமியின் ஓரங்கள் குறைந்து வருகின்றன என்று கூறப்படுகின்றது.
நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு, குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பனிப்பாறைகள் உருகிக் கடலில் கலக்கின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து நிலப்பரப்பைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.
நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு யாரும் அறிந்திருக்க முடியாது.
ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப்பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பைக் கூறியதன் மூலம் திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தை என்பது நிரூபணமாகின்றது.
243. ஓரங்களில் குறையும் பூமி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode