Sidebar

21
Sat, Dec
38 New Articles

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது ஏன்?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது ஏன்?

கேள்வி

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது ஏன்?

திருவிடைச்சேரியின் தற்போதைய நிலைமை என்ன?

நமது முன்னாள் சகாக்கள் தங்களது பத்திரிக்கையில் நம் தரப்பில் தான் தவறு உள்ளதாக எழுதி உள்ளார்கள். ஒரு முஸ்லிம் கொலை செய்யப்பட்டதற்கு PJ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்? என்றும் எழுதி உள்ளார்கள். விளக்கம் தேவை

ராஜா முஹம்மத், குவைத்

பதில்

ஒருவரை ஒருவர் கொல்ல நடந்த முயற்சியில் ஒருவர் கை ஓங்கி விட்டால் அதற்காக நாம் கண்டனம் தெரிவிக்க மாட்டோம். நபிவழிக்கு ஏற்ப நாம் நடப்போமே தவிர சந்தர்ப்பவாதிகளின் விருப்பப்படி நாம் நடக்க மாட்டோம். இதற்கான நபி வழி இது தான்.

صحيح البخاري

31 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ المُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ: ذَهَبْتُ لِأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ؟ قُلْتُ: أَنْصُرُ هَذَا الرَّجُلَ، قَالَ: ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا التَقَى المُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالقَاتِلُ وَالمَقْتُولُ فِي النَّارِ»، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا القَاتِلُ فَمَا بَالُ المَقْتُولِ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ»

31அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஜமல் போரின் போது) அந்த மனிதருக்கு (அலீ ரலி அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் அந்த மனிதருக்கு உதவி செய்யச் செல்கிறேன் என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத் தான் செல்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்ட போது அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று சொன்னார்கள் என்றார்கள். 

நூல் : புகாரி 31

ஒரு சாரார் அரிவாள், கத்தியுடனும், அடியாட்களுடனும் காத்திருக்கின்ற போதுதான் ஒருவர் துப்பாக்கியுடன் செல்கிறார். இதில் யாருடைய கை ஓங்கினாலும் இருவருமே குற்றவாளிகள் தான்.  கொல்லப்பட்ட காரணத்தால் அக்கிரமங்கள் நியாயமாகி விடாது. இருவரும் சமமான குற்றவாளிகள் தான்.

கொலை செய்யும் நோக்கமின்றி சென்று தன்னைக் காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக ஹஜ் முஹம்மத் தரப்பு சொல்வது உண்மை என்றால் அப்போதும் கண்டிக்க வழியில்லாமல் போய் விடுகிறது.

Published on: September 20, 2010, 10:47 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account