34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம்
2011 ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் மூன் பப்ளிகேசன் சார்பில் அரங்கு எடுக்கப்பட்டது குறித்து அன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பீஜே அளித்த விளக்கம்.
34வது புத்தக கண்காட்சியில் மூன் பப்ளிகேசன் பெயரில் ஸ்டால் போட்டு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஏன் போடவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கேள்விகள் எழுப்புவது நல்லது தான்.
ஆனால் இந்தக் கேள்வி சென்ற வருடமும் எழுப்பப்பட்டு அதற்கு தக்க பதில் சொல்லப்பட்டது. சென்ற வருடமும் மூன் பப்ளிகேசன் சார்பில் தான் ஸ்டால் போடப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போடப்படவில்லை.
இது குறித்த விபரத்தை அனைவரும் புரிந்து கொள்வதற்காக தெளிவுபடுத்துகிறேன்.
சென்னையில் ஆண்டு தோறும் பதிப்பாளர்கள் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் அதிகமான மக்கள் வந்து குழுமுவதால், வரக்கூடியவர்களில் அதிகமானவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர்களாக உள்ளதால் நாமும் அதில் ஒரு கடையை எடுத்தால் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பிரசுரங்களை வினியோகிக்கலாம்; தாவா செய்யலாம் என்று பல சகோதரர்கள் நம்முடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
நான் தமுமுகவில் அமைப்பாளராக இருந்த போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டு முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் மூலம் ஸ்டால் போடுவதென்று முடிவு செய்யப்பட்டது. அப்போது தமுமுகவின் சார்பில் எந்தப் புத்தகமும் வெளியிடப்படவில்லை. மூன் பப்ளிகேசனும் அப்போது இருக்கவில்லை.
உணர்வு இதழை விளம்பரப்படுத்துவதுடன் ஸாஜிதா புத்தக நிறுவனத்தில் தாவா தொடர்பான நூல்களை வாங்கி விற்பனை செய்யப்பட்டது. மேலும் இலவசப் பிரசுரங்களும் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. இதில் பல ஆயிரம் ரூபாய்கள் நமக்கு செலவாயின. ஆனாலும் தாவா நோக்கில் இதை விடாமால் செய்து வந்தோம்.
தமுமுகவில் இருந்து நாம் பிரிந்து வந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. எனவே முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் நாம் ஸ்டால் போட்டதை நிறுத்தி விட்டோம். முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் உறுப்பினர் கட்டணம் செலுத்துவதையும் விட்டு விட்டோம்.
இந்த நிலையில் தான் மூன் பப்ளிகேசன் மூலம் அதை நடத்துவது என நான் முடிவு செய்தேன். அதற்கான கட்டணைத்தைச் செலுத்தி மூன் பப்ளிகேசனை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தில் உறுப்பினராக்கினோம்.
அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் மூன் பப்ளிகேசன் மூலம் ஸ்டால் போட்டோம். ஆள் பற்றாக்குறை காரணமாக அதை நிறுத்தி விட்டோம். எனவே இரண்டு ஆண்டுகள் நாம் ஸ்டால் போடவில்லை.
இந்த நிலையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தாவா நோக்கத்தில் ஸ்டால் போட வேண்டும் என்று புதிய நிர்வாகிகள் கூடி முடிவு செய்தனர்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஸ்டால் போடுவதில் சில பிரச்சனைகள் இருந்தன. இயக்கம் சார்பில் ஸ்டால் போட அனுமதி இல்லை என்பது அதில் முக்கியப் பிரச்சனை.
புதிதாக ஒரு பதிப்பகம் பெயரில் தான் ஸ்டால் போட வேண்டும். அப்படி புதிய பதிப்பகம் துவங்கினால் உடனே பதிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே உறுப்பினராகச் சேர முடியும்.
உறுப்பினர்களுக்கு மட்டுமே ஸ்டால் போடுவதில் முன்னுரிமை அளிப்பார்கள்.
இதைக் கவனத்தில் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்கனவே உறுப்பினராக உள்ள மூன் பப்ளிகேசன் ஸ்டால் போடுவதை நிறுத்தி விட்டதால் அவர்கள் பெயரில் ஸ்டால் எடுத்து கேட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் முழுப்பொறுப்பில் நடத்துவது என்று முடிவு செய்தனர். மூன் பப்ளிகேசன் பெயரைப் பயன்படுத்த அனுமதி பெறுவது தவிர வேறு எந்த ஒத்துழைப்பும் நம்மால் தர வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தோம்..
மூன் பப்ளிகேசன் பதிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளதால் அதன் பெயரில் ஸ்டால் எடுத்துக் கொடுத்தோம். உறுப்பினராக இருப்பதற்காக ஆண்டு தோறும் செலுத்தும் கட்டணத்தையும் நாம் ஏற்றுக் கொண்டோம்.
இதைத் தவிர அந்த ஸ்டாலுக்கும், நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. உரிமையும் இல்லை.
உறுப்பினர் கட்டணம் அல்லாமல் நாம் கேட்கும் கடையின் அளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் தமக்குத் தேவையான அளவுக்கான ஸ்டால் கட்டணம் மட்டும் செலுத்தி அதை பயன்படுத்துகிறார்கள். அதில் கிடைக்கும் லாப நட்டங்களுக்கும் நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அதன் வரவு செலவுகளிலோ, கொள்முதலிலோ நமக்கு எந்தப் பங்கும் இல்லை.
தவ்ஹீத் ஜமாஅத் தனக்குத் தேவையான நூல்களை நம்மிடமும் மற்றவர்களிடமும் 30 சதவிகித தள்ளுபடியில் வாங்கி விற்பனை செய்வார்கள்.
(இன்னும் சொல்லப் போனால் சவூதியில் இலவசமாக வெளியிட்ட மானிதர் நூல் போன்றவற்றை அங்கே இலவமாக விநியியோகம் செய்வது மூன் பப்ளிகேசனைப் பாதிக்கக் கூடியதாகும்.)
மேலும் தாவா நோக்கத்தில் ஸ்பான்சர் பெற்று சலுகை விலையிலும் சில நூல்களைக் கொடுக்கிறார்கள். தீவிரவாதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் இலவசப் பிரசுரங்களும் அங்கே வினியோகம் செய்கிறார்கள்.
இதில் எந்த ஒன்றிலும் மூன் பப்ளிகேசனுக்குச் சம்மந்தம் இல்லை. பெயர் மட்டும் தான் மூன் பப்ளிகேசன். ஸ்டால் நடத்துவது, அதன் லாப நட்டங்கள் யாவும் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தது தான்.
அதன் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவர்கள் தான்.
34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode