இனி ஆய்வுகள் மட்டுமே
அன்பிற்குரிய கொள்கைச் சகோதரர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக ஏகத்துவக் கொள்கையை நாம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தியவைகளை விட தெளிவுபடுத்த வேண்டியவை அதிகமாக உள்ளன.
சமீபத்தில் நடந்த விவாதத்துக்குப் பின் இது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இறைவனுக்கு உருவம் உண்டு என்ற விஷயம் இந்த விவாதத்துக்கு முன்னால் அதிகமான தவ்ஹீத் சகோதரர்களுக்குத் தெரியாமலே இருந்துள்ளது என்பதை இப்போது அறிய முடிகிறது.
இந்த விஷயம் மேலோட்டமாகத் தான் தெரியும்; இவ்வளவு ஆதாரங்களுடன் எங்களுக்குத் தெரியாது என்று சிலரும், இறைவனுக்கு உருவம் இருப்பதே இப்போது தான் தெரிந்தது என்று சிலரும், இறைவனுக்கு உருவம் இல்லை என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்று கருதியிருந்தோம்; இப்போது தான் தெளிவு கிடைத்தது என்று சிலரும் என்னிடம் கூறினார்கள்.
முக்கியமான விஷயங்கள் கூட இவ்வளவு காலம் சென்ற பின்பும் தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியானது.
இதற்குக் காரணம் நூல் வடிவில் மக்களுக்குப் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தான்.
எனவே அரசியல், சமுதாயப் பிரச்சனைகள், இயக்க நடவடிக்கைகள் ஆகிய அனைத்தில் இருந்தும் ஆறு மாத காலம் முழுமையாக ஒதுங்கி முற்றிலும் மார்க்கம் சம்மந்தமான ஆய்வில் ஈடுபட்டு அனைத்தையும் நூல் வடிவில் மக்கள் மத்தியில் வைப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
எனவே எந்தப் பிரச்சனைக்காகவும் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்.
எந்தப் பிரச்சனையையும் ஆறு மாத காலத்துக்கு என் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாக்களித்த சில நிகழ்ச்சிகள் மட்டும் உள்ளன. அவற்றை வாக்களித்த படி நிறைவேற்றுவேன். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்.
26.07.2010. 19:27 PM
குறிப்பு : கொள்கைச் சகோதரர்கள் வாய்ப்பளிக்காததால் இதில் கூறியவாறு நடக்க முடியவில்லை.
இனி ஆய்வுகள் மட்டுமே
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode