அகோரி மணிகண்டன் சூனிய ஒப்பந்தம்

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சூனியம் குறித்த ஒப்பந்தம்

இன்று முதல் 01.08.2014 ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூனியத்திற்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும்.

அவ்வாறு செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்தில் பேசியிருந்தார்.

அவரது பேச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக காட்டுத்தீப்போல் பரவியது.

இந்நிலையில்….

திருச்சி அரியமங்களம் சர்பநதிக்கரையை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து சூனியம் செய்ய முடியும் என்பதை தாம் நிரூபிக்க தயார் என்று பகீரங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில் சரியாக 48 நாட்களுக்குள் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களே சூனியத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கிறேன்; அல்லது அவரை சூனியத்தின் மூலமாக தற்கொலை செய்ய வைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அகோரி மணிகண்டன் கூறியது போல் 48 நாட்களுக்குள் சூனியம் செய்து வெற்றியடைந்து விட்டால் பி. ஜைனுல் ஆபிதீன் தரப்பினர் 50 லட்சம் ரூபாயை அகோரி மணிகண்டனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் அமுலில் ஆகும் நாள் 01.08.2014 ஆரம்பம் ஆகிறது.

சரியாக 48 நாட்கள் கழித்து 18.09.2014 அன்று உண்மையை உலகம் அறிந்து கொள்ள இருக்கிறது.

January 11, 2017

சூனியம் தோற்றதால் மண்ணடியில் பீஜே அவர்கள் இது குறித்து செப்டம்பர் 21 - 2014 அன்று பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்தி பல்லாயிரம் மக்கள் முன்னால் சூனியத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபித்தார்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account