சிறைவாசிகளுடன் விவாதிக்கத் தயாரா?
அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள சகோதரர் பி.ஜே.அவர்களுக்கு, தங்களின் ஆன்லைன்-ல் சிறைவாசிகளால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு, பொது மக்களிடம் திருவிடைச்சேரி சம்பவத்தால் ஏற்பட்ட அவப் பெயரை மறைத்து போலியான அனுதாபம் பெறவும், அல்லது மேற்கண்ட படுகொலை சம்மந்தமாக தாங்கள் பழி தீர்க்கபடலாம் என அஞ்சி அதற்கென போலீஸ் பாதுகாப்பு பெற முடிவு செய்து நீங்கள் நடத்தும்
நாடகம் தான் என தங்களை நன்கரிந்தவர்களுக்கு தெரியும்..
இதற்கு ஏன் சிறைவாசிகளை வம்புக்கு இழுக்கின்றீர்கள்? உங்களால் உசுப்பேற்றபட்டு, அதன் பலனால் பல வருடம் சிறை வாசத்தில் நொந்து போயிருக்கும் எங்களை ஏன் மீண்டும் நொம்பலப்படுத்துகிறீர்கள்! உங்களைப்போல் முஸ்லிம்களை கொல்ல நாங்கள் முட்டாள்கள் இல்லை! மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து துரோகி என அறியப்பட வேண்டுமே தவிர தியாகி என மரணித்து விட கூடாது.
நபிகள் நாயகம் வாழ்ந்த காலம் வரை அவர்களின் எந்த தோழரும் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லவில்லை! நீங்கள் வாழும் போதே உங்களுக்காக உயிரை கொடுக்கத் தயாராக இருந்த தோழர்கள் அனைவரும் வெளியேறி விட்ட அவல நிலை! இது தொடரும்! இன்று உங்களோடு அறியாமல் உள்ள சகோதர்களும் விரைவில் உங்களை பற்றி புரிந்து வெளியேறும் நிலை இன்ஷா அல்லாஹ் வரும்.
அன்று உங்களின் செயல்களுக்காக வருந்தி அழும் காலம் வரை நீங்கள் வாழ வேண்டும்! அனைத்திற்கும் காரணமான நீங்கள் உத்தமர் போல் தங்களைக் காட்டிக் கொள்வதேன்? உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் நேரடியாக விவாதிக்கத் தயாரா? நீங்கள் விவாதம் செய்வதில் வல்லவராக இருக்கலாம்! ஆனால் எங்களிடம் சத்தியம் உள்ளது! இன்ஷா அல்லாஹ் அந்த பொது விவாதத்தில் நீங்கள் சமுதயாத்திற்கு செய்த துரோகத்தையும் சிறைவாசிகளுக்கு இழைத்ததை விவாதிக்க நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?
இப்படிக்கு-தடா.அப்துர்ரஹீம் ,ஏர்வாடி.காசிம், அலி அப்துல்லாஹ்.
இதற்கு உங்கள் பதில் என்ன ?
இப்படி ஒரு செய்தியை அனுப்பி ரபீக் என்ற சகோதரர் விளக்கம் கேட்டுள்ளார்.
இதில் உள்ள அலி அப்துல்லாவும், தடா ரஹீம் என்பவரும் ஆரம்பம் முதலே எனக்கு எதிரிகளாகத் தான் தெரியும். அவர்களுடன் இணக்கமான எந்த உறவும் எனக்கு இருந்ததில்லை. ஏர்வாடி காசிம் மட்டும் தான் எனக்கு எதிரியாக இல்லாமல் இருந்தவர்.
நாம் யாருடனும் எது குறித்தும் விவாதிக்கத் தயார். அதற்கான காரணம் இருக்க வேண்டும். நான் காட்டிக் கொடுத்தேன் என்று புலம்பக் கூடியவர்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டு அதற்குப் பதில் சொல்லும் நிலை ஏற்படுத்தினால் தான் விவாதம் செய்யும் தேவை ஏற்படும்.
இன்னின்ன துரோகம் செய்தாய்! அதற்கான ஆதாரம் இது என்று தெளிவுபடுத்தி விட்டுத் தான் விவாத அழைப்பு விட வேண்டும். மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்று போகிற போக்கில் உளறக் கூடியவர்கள் விவாதத்துக்கு அழைக்கவில்லை. மாறாக ஸ்டண்ட் அடிக்கின்றனர். முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்து என்னை நிஜமாகவே விவாதத்துக்கு அழைப்பதாக இருந்தால் எது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை விரிவாக பட்டியல் போட்டுச் சொல்ல வேண்டும்.
பீஜே காட்டிக் கொடுத்தார் என்றால் யாரைக் காட்டிக் கொடுத்தார்? என்பதையும் சொல்ல வேண்டும்.
காட்டிக் கொடுத்ததை நிரூபிக்க நான் தயார் என்றும் கூற வேண்டும்.
இப்படி விபரமாகப் பட்டியலை வெளியிட்டு ஒவொன்றையும் நிரூபிப்பதாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அழைப்பு விட வேண்டும்.
சிறைவாசிகளுக்குத் துரோகம் செய்தேன் என்று குற்றம் சாட்டினால் என்ன துரோகம்? யார் யாருக்கு செய்த துரோகம் என்று பட்டியல் போட்டு விட்டு விவாதிக்கத் தயாரா என்று அழைக்க வேண்டும்.
அது தான் விவாதத்துக்கு அழைக்கும் முறை.
அது போல் இவர்கள் செய்த கட்டப் பஞ்சாயத்து, பண வசூல் போன்றவைகளையும் ஒரு தலைப்பாகச் சேர்க்க வேண்டும். அபோது தான் இவர்களைப் பற்றி நான் அம்பலப்படுத்தும் நிலை ஏற்படும். எனவே இதற்கேற்றவாறு விவாத அழைப்பை விடட்டும்.
அனைத்தையும் ஒன்று விடாமல் விவாதிக்க நான் தயார்.
பணம் திரட்டுவதற்காக இப்போது இவர்கள் எடுத்துள்ள புது அவதாரம் உள்ளிட்ட அனைத்தையும் அமபலப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.
என் பக்கம் சத்தியம் இருக்கிறது. இதிலும் இவர்கள் தான் தோற்பார்கள். இன்ஷா அல்லாஹ்
இது தான் எனது பதில்.
சிறைவாசிகள் குறித்த முழு விபரம் அறிய
Published on: September 23, 2010, 9:56 PM
சிறைவாசிகளுடன் விவாதிக்கத் தயாரா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode