Sidebar

18
Thu, Apr
4 New Articles

சிறைவாசிகளுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சிறைவாசிகளுக்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை?

தொடர்_1

சிறைவாசிகளான அல் உம்மா இயக்கத்திற்கும் பீஜே என்ற தனிநபருக்கும் இடையில் எந்தப் பிரச்சணையும் இல்லை. பீஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் தமுமுகவில் இருந்த போது இயக்க அடிப்படையில் தான் அல் உம்மாவுக்கும், தமுமுகவுக்கும் பிரச்சணை ஏற்பட்டது. ஆனால் பீஜே என்ற தனிமனிதனுடன் இவர்களுக்குப் பகை ஏற்பட்டவுடன் அனைவரும் சேர்ந்து காரண காரியத்துடன் எடுத்த முடிவுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று நாடகமாடுகின்றனர்.

இது பீஜேக்கும் அல் உம்மாவுக்குமான பிரச்சனை என்று திசை திருப்புகின்றனர். அது எந்த அளவுக்கு உண்மை? பீஜேயின் மீது அனைத்தையும் சுமத்திவிட்டு அனைவருக்கும் நல்லவர்களாக ஆக நினைப்பவர்களின் சொந்த முகமும் அல் உம்மா பிரச்சனை என்ன என்பதும் இந்த வீடியோவில் அம்பலமாகும்.

இது தமுமுகவில் இருந்து நாம் விலகுவதற்கு முன் அனைத்து தமுமுக நிர்வாகிகளும் கூட்டாக அமர்ந்து விளக்கம் அளித்து தமுமுக சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ.

தமுமுக சார்பில் பாக்கர் கூறுவதைக் கேளுங்கள்!

 

இதனை டவுன்லோட் செய்ய

தொடர்_2

மேலே சொன்ன சில விபரங்களையும் கீழே சொல்லி இருக்கும் விபரங்களையும் இப்போது நான் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதைக் கடைசியில் சொல்லி இருக்கிறேன்.

தமுமுக மாநில அமைப்பாளராக பீஜேயாகிய நான் இருந்த போது அல்உம்மாவுக்கும் தமுமுகவுக்கும் இடையே பிரச்சணை ஏற்பட்டது.

அதன் சுருக்கம் இது தான்.

தடா எனும் கொடும் சட்டத்தின் கீழ் பாஷா அவர்களும், மற்றும் சில சகோதரர்களும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது எந்தக் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்திருக்கவில்லை. டிசம்பர் 6ல் பேருந்தில் கல் வீசியதற்காகத் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி அவர்கள் மீது தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் இவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுத்தாலே தடாவில் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்களைப் பற்றி யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினர் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மக்களிடம் நிதி திரட்டி அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் இரண்டாயிரம் வீதம் பல வருடங்கள் நான் தான் உதவி வந்தேன். மாதாமாதம் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அந்த உதவித் தொகையை வழங்கினால் கூட தடா சட்டம் பாயும் என்று பயந்து யாரும் இதற்குத் துணை செய்ய முன்வரவில்லை. எனது மைத்துனரை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அனைத்து சிறைவாசிகளின் வீடுகளுக்கு அனுப்பி அந்த உதவித் தொகையை வழங்க வைத்தேன்.

ஒவ்வொரு பெருநாளின் போதும் அவர்களின் குடும்பத்தினரின் வயது வாரியான பட்டியல் தயாரித்து ஒவ்வொருவருக்கும் தேவையான உயர்தர ஆடைகள் எடுத்து அவர்களின் வீடுகளுக்கு என் மைத்துனர் மூலம் அனுப்பினேன். இதெல்லாம் என் பணத்தில் செய்யவில்லை. அதற்கான வசதி என்னிடம் இல்லை. ஆனால் மக்களிடம் இதற்காக உதவி கேட்பதற்கே பயந்த காலத்தில் நான் பயப்படாமல் உதவினேன்.

அந்தக் காலத்தில் பாக்கரும், சில சகோதரர்களும் வழக்கறிஞர் மூலம் அவர்களின் வழக்குகளைப் பார்த்து வந்தனர்.

இந்த இரண்டு ஆண்டுகள் மிக நெருக்கடியான காலம். தடா சிறைவாசிகளுக்கு ஆதரவாக யாரும் வாய் திறக்கவே பயந்த காலத்தில் கூட அவர்களுக்கு உதவ நான் அஞ்சவில்லை.

இதை பாஷா அவர்களிடமும் அப்போது தடாவில் இருந்த அனைவரிடமும் விசாரித்துக் கொள்ளலாம்.

இதன் பின்னர் தான் தமுமுக ஆரம்பிக்கப்பட்டது. தமுமுக ஆரம்பிக்கப்பட்ட பின் அந்தக் கணக்குகளை தமுமுகவிடம் ஒப்படைத்து இனி மேல் தமுமுக சார்பில் அந்த உதவிகளைச் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தடா சிறைவாசிகளின் விடுதலைக்காக வீரியமான போராட்டங்கள் பல நடத்தப்பட்டன. அவர்களின் வழக்குகளுக்காக பல இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டன.

இதனால் பாஷா உள்ளிட்ட அனைவரும் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டு ஜாமீனில் வந்தனர். வந்தவர்களில் பாஷா உள்ளிட்ட சிலர் சென்னையில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை காரணமாக புரசைவாக்கம் தாக்கர் தெருவில் இருந்த தமுமுக தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போதுதான் அவர்களின் நடவடிக்கைகளை நாங்கள் நேரடியாகப் பார்த்தோம். அவர்கள் நமது முஸ்லிம் சகோதரர்களிடம் பணம் பறிப்பதும், மிரட்டுவதும், பணத்துக்காக கொலை செய்வதும் தெரிய வந்ததால் அவர்களை தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியே போகச் சொல்லும் நிலை உருவானது.

எனக்கும், ஹைதருக்கும், ஜவாஹிருல்லாவுக்கும் கொலை மிரட்டல் விட்டனர். என்னை நேரடியாகவே மிரட்டினார்கள். மாதாமாதம் ஒரு தொகையைக் கப்பமாக செலுத்த வேண்டும் என்று நானும் அலாவுத்தீனும் மட்டும் தமுமுக அலுவகத்தில் இருந்த போது அன்சாரி தலைமையில் வந்து ஒரு கும்பல் மிரட்டினார்கள்.

இது போன்ற மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று சொல்லி எதிர்த்து நிற்கும் நிலை உருவானது. இவர்களின் அச்சுறுத்தலுக்காகவே எனக்கும் ஹைதருக்கும், ஜவாஹிருல்லாவுக்கும் எப்போதும் உடன் இருக்கக் கூடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் எனக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு நீடித்தது. நான் துபை சென்ற போது (அதாவது சுனாமி ஏற்பட்ட ஆண்டு) போலீஸாரைத் திருப்பி அனுப்பி விட்டுச் சென்றேன். பின்னர் மீண்டும் கேட்டுப் பெற விரும்பவில்லை. இது வரை எனக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இவர்களின் அச்சுறுத்தலுக்காகவே.

அல் உம்மாவை அங்கீகரிக்கக் கூடாது என்ற முடிவும் அவர்களின் தவறுகளை தைரியமாகச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற முடிவும் தக்க காரணங்களுடன் தமுமுக நிர்வாகிகள் அனைவராலும் எடுக்கப்பட்டது. அதில் எனது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் எல்லாப் பழியையும் என்மீது மட்டும் சுமத்தி தங்களைச் சம்மந்தமில்லாதவர்கள் என்று காட்டிக் கொண்டது போல் இப்போதும் தங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்து உள்ளனர் .

எனவே தான் இந்த இரண்டாவது வீடியோவை வெளியிடும் நிலை உருவானது.

எங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. பீஜே தான் இதற்குக் காரணம் என்று சிறை மீண்டவர்களைச் சிலர் உசுப்பேற்றியுள்ளனர். பீஜேயைக் கொல்வது மார்க்கக் கடமை எனவும் முடிவு செய்து அதற்கான திட்டத்தையும் வகுத்துள்ளனர். வகுத்தவர்கள் யார் என்பதும் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதும் அல்லாஹ்வின் உதவியால் எனக்குத் தெரிய வந்துள்ளது. சென்னையின் ஒரு பகுதியில் நடந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. என்னைக் கொல்வது மிக எளிதானது தான். அப்படித்தான் என் மரணம் நிகழும் என்றால் அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி நிகழாது என்பது இறைவனின் விதி என்றால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் இவர்கள் நினைப்பது நடக்கப் போவதில்லை.

எந்த மிரட்டலுக்காகவும் எனது எந்த நிலையையும் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். நான் இல்லாமலே இந்த ஏகத்துவப் பிரச்சாரம் நடக்க எல்லா ஏற்பாடும் செய்து விட்ட நிலையில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எந்தப் பின்னடைவும் இன்ஷா அலாஹ் ஏற்படாது.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பொய் சொல்வதில் வல்லவர்கள் என்பதால் என்னைக் கொன்று விட்டு அதற்காகக் கண்டனக் கூட்டம் போட்டு என் மக்களை ஏமாற்றத் தயங்க மாட்டார்கள். அப்படி ஏமாற்றக் கூடாது என்பதற்காகவும், அப்பாவிகள் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காகவும் யார் யார் பின் புலத்தில் உள்ளனர் என்பதையும் சம்மந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி வைத்துள்ளேன். பாதுகாப்பு எதையும் கோரவில்லை. எதையும் சந்திக்கத் தயார்படுத்திக் கொண்டு தான் பொது வாழ்வுக்கு வந்துள்ளேன்.

தமுமுக அமைப்பாளராக இருந்த நானும்

தலைவராக இருந்த ஜவாஹிருல்லாவும்

பொதுச் செயலாளராக இருந்த ஹைதர் அலியும்

பொருளாளராக இருந்த பாக்கரும்

துணைத் தலைவராக இருந்த அப்துல் ஜலீல் அவர்களும்

கூட்டாக தமுமுக சார்பில் கொடுத்த விளக்கத்தைக் கீழே காணலாம். இதில் விளக்கம் தருவது நான் என்றாலும் அது தமுமுக இயக்கத்தின் சார்பில் அளித்த விளக்கமாகும்.

அதில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை என்பது தான் அன்றும் இன்றும் எனது நிலை. எனக்குச் சம்மந்தம் இல்லை என்று உயிர்ப்பிச்சை கேட்கும் கோழைத்தனம் எனக்கு இல்லை. வீரமரணத்துக்குத் தான் நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால் இதில் உடன் இருந்தவர்கள் தங்களுக்குச் சம்மந்தம் இல்லை என்று கூறி சிறைவாசிகளின் அபிமானிகளாக காட்டிக் கொள்வது வடிகட்டிய கோழைத்தனம்.

தங்களின் இழி செயலால் செல்லாக்காசாகிப் போனவர்கள் சிறை மீண்டவர்கள் பலத்தில் இயக்கம் கட்ட நினைக்கின்றனர்.

அல் உம்மா பற்றி தமுமுக சார்பில் விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோவைக் காணுங்கள்!

இதனை டவுன்லோட் செய்ய

குறிப்பு: கோவை பாஷா அவர்கள் பின்னர் தனது செயலுக்காக என்னிடம் வருத்தம் தெரிவித்து தற்போது என்னுடன் நல்லுறவாக இருக்கிறார். ஆனால் அவருடன் இல்லாத சிலரைத் தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு நடந்த இன்னும் சில விஷயங்களையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தொடர்_3

சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.

ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இது குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை.

இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப் போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீது தான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக் கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.

அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளில் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய் வரலாற்றில் உண்மையாகி விடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.

பாஷா அவர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்பூர்வமான வாக்கு மூலத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.

இப்படி பீஜேயைச் சம்மந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செய்து வந்தனர்.

நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.

அப்துன்னாஸர் மதானி எங்களுக்கு உதவினார்; அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.

இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.

பாஷாவும், அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.

ஆனால் தமுமுகவுக்கும், அல்உம்மாவுக்கும் இருந்த பகை பற்றியும், அல் உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது.

இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.

ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச்சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.

அதன் படி பீஜே ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதிமன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.

திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.

எனது வீட்டில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.

அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்து விடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.

ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.

நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.

குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு,

என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார்.

இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.

நான் இது குறித்து கீழ்க்கண்டவாறு விளக்கினேன்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் என்னிடம் பின்வருமாறு கூறினார்.

நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள் என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்.

அதைத் தொழில் அதிபர் அன்வர் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார். உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைத் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சொன்னார். அதன்படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

பிற்சேர்க்கை

மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவர் உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வெடிப்புக்காக பிஜே கொடுத்த பணம் அல்ல என்று புஹாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் பாஷா திரும்ப வாங்கினார் என்று அதிகாரிகளிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.

என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரனை செய்தது. அவர்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

ஆனால் காவல்துறையினர் இதை முழுமையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் சொல்வது முழு உண்மை என்று கண்டு கொண்டனர்.

அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்படிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.

அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜுபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல்துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணர்வு அலுவகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்.

இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.

உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினர் எதிர்பார்த்தனர்..

இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜுபைர் கொடுத்த வாக்கு மூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அவர்கள் நகலைத் தந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.

ஜுபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)

அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும் அற்புதம் நிகழ்ந்தது எனலாம்.

புரசைவாக்கம் தாக்கர் தெருவில் தான் உணர்வு அலுவகம் இருந்தது.

பின்னர் இப்ராஹிம் ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

அலுவலகம் மாற்றப்பட்டு விட்டாலும் நீதிமன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்தோம். இதைப் பார்த்து விட்டுத் தான் ஜுபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ராஹீம் ஷா தெருவுக்கு மாறி விட்டோம்.

அதாவது எந்த மாதத்தில் என்னை தக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.

எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்து உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.

மறுநாள் நீங்கள் கூறியது உண்மை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்து விட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.

அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பல காலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்.?

அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன் நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்கு மூலமே காரணம்.

ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.

என் மீது இவர்கள் பழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலில் காவல்துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகை தான் இருந்தது என்பதை நீதிமன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப் புகார் தான் காரணம்.

(என்னை விசாரித்தது குறித்து நீதிபதி பிற்காலத்தில் சொன்னதைப் பார்க்க!) பீஜேயை விசாரித்த நீதிபதி பார்வையில்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.

குண்டு வெடிப்பு தொடர்பாக பீஜேயாகிய நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகை தான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையில் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.

என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு என்னை அலைய வைத்து விட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.

இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.

மீண்டும் நான் உறுதிபடக் கூறுகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்பட மாட்டான்.

மதுரை ராஜா ஹுஸைனைக் காட்டிக் கொடுத்ததாகவும் பரப்பி வருகின்றனர். அது குறித்த உண்மையையும் அடுத்து சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்

தொடர்_4

மதுரை ராஜா ஹுஸைன் பிரச்சனை என்ன?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இருந்து மதுரை ராஜா ஹுஸைன் எனக்கு அறிமுகமானவராக இருந்தார். நம்முடைய மதுரை மர்கஸில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார். அவருடைய திருமணம் என் தலைமையில் நடந்ததாக நினைவு இருக்கிறது.

மதுரை ராஜகோபாலன் கொலை வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது முதல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தக் கால கட்டத்தில் தமுமுக துவக்கப்பட்டதால் நான் சென்னைக்குக் குடியேறினேன்.

தலைமறைவாக இருந்த அவர் ஒரு நாள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். தமுமுக சக மாநில நிர்வாகிகளைக் கலந்து பேசி விட்டு அவரைச் சந்திப்பதற்காக வரச் சொல்லி ஒரு இடத்தில் அவரைச் சந்தித்தேன்.

என்னைச் சந்தித்த போது என்னிடம் பின்வரும் விபரங்களை அவர் கூறினார்.

தலைமறைவாக வேறு மாநிலங்களில் சுற்றித் திரிவது கஷ்டமாக உள்ளது. யாருடைய உதவியும் கிடைப்பதில்லை.

வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதால் என் மனைவியையும் மக்களையும் பார்க்க முடியவில்லை. அவர்களைப் பார்க்க வேண்டும் என்று என் மனது துடிக்கிறது.

எனவே எனக்கு அடைக்கலம் தந்து உதவுமாறு நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சிபாரிசு செய்தால் நான் என் மனைவி மக்களை அங்கே வரச் செய்து நான் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்.

தேடப்படும் ஒருவருக்கு யாரும் அடைக்கலம் தருவதற்கு முன் வர மாட்டார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். ராஜகோபாலன் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அடைக்கலம் கொடுத்தவர்களுக்கும் தடாச் சட்டம் பாயும். இதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். எனவே இதற்கு நான் யாரிடமும் பரிந்துரை செய்வது சாத்தியமாகாது என்று கூறினேன்.

தனது மகனைப் பார்க்காமல் இருப்பது தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் சிறையில் இருந்தாலாவது என் மனைவி சிறைக்கு வந்து பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்கும். தலைமறைவாக உள்ளதால் அந்த வாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்டது என்றும் தனது ஆதங்கத்தை என்னிடம் தெரிவித்தார்.

இது தான் உங்கள் பிரச்சனை என்றால் உங்கள் மீதுள்ள வழக்கைச் சட்டப்படி சந்தித்தால் உங்கள் மனைவி மக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஆலோசனை கூறினேன். மேலும் என்றாவது ஒரு நாள் காவல் துறையினர் கையில் சிக்காமல் இருக்க முடியாது. அப்படி சிக்கினால் உங்கள் அண்ணன் சீனி நெய்னா முகம்மதுக்கு செய்யப்பட்டது போன்ற நிலையை நீங்கள் சந்திக்க நேரும் என்பதையும் விளக்கினேன்.

சரணடைந்தால் இது வரை நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் என் தலையில் காவல்துறையினர் போட்டு விடுவார்கள் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

நீங்கள் விரும்பினால் அதற்கு வழி இருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் மூலம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் வழியாக சரணடையலாம்.

 இல்லாத வழக்குகளைப் போடக் கூடாது

 சித்தரவதை செய்யக் கூடாது.

 உடனே ஜெயிலுக்கு அனுப்பி விட வேண்டும்

என்றெல்லாம் நிபந்தனை போட்டு சரணடைய வழி இருக்கிறது.

அவ்வாறு செய்யும் போது நீங்கள் சம்மந்தப்படாத வழக்குகளை உங்கள் மீது சுமத்த மாட்டார்கள் என்று நான் தெரிவித்தேன்.

அவர் இதற்கு நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார். ஆனால் இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்று கேட்டார். மார்க்க அடிப்படையில் இதில் எந்தத் தவறும் இல்லை என்று காரண காரியத்துடன் விளக்கினேன். மார்க்கத்தில் தவறு இல்லை என்றால் நான் சரணடைய ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.

இது என்னுடைய கருத்து தான். மற்ற நிர்வாகிகளிடம் கலந்து கொண்டு இது நன்மை பயக்குமா என்று நன்கு ஆய்வு செய்து சொல்கிறேன். நீங்களும் நன்றாக யோசித்து விட்டு யாரிடமாவது ஆலோசனை கேட்பதாக இருந்தால் கேட்டு விட்டு முடிவு எடுங்கள். அவசரப்பட வேண்டாம் ஒரு வாரம் கழித்து மீண்டும் என்னைச் சந்தியுங்கள் என்று கூறி அனுப்பினேன்.

இதன் பின்னர் நானும் தமுமுக நிர்வாகிகளில் முதன்மையானவர்களிடம் கலந்து பேசினேன். இது குறித்து அரசின் நிலைபாட்டை அறிந்து கொள்ளும் பொறுப்பு பொதுச் செயலாளராக இருந்த ஹைதர் அலி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பலவிதங்களில் முயற்சி செய்து உயர் அதிகாரிகளிடம் பேசினார்.

ஒருவர் எங்கள் மூலம் சரணடைய விரும்புகிறார். அவரை எப்படி நடத்துவீர்கள் என்று ஹைதர் அலி கேட்டறிந்து கொண்டார். யார் என்ற விபரத்தைக் கூறவில்லை.

குறித்த நாளில் ராஜா ஹுஸைன் வந்தார். நான், ஹைதர் அலி, நெல்லை ஜின்னா ஆகிய மூவரும் இருந்த இடத்துக்கு அவரை வரச் சொல்லி இருந்தோம்.

அதன்படி அந்த இடத்தில் அவரைச் சந்தித்தோம்.

 காவல் துறையினர் பொய்வழக்குகள் எதையும் போட மாட்டார்கள்;

 தலைமறைவாக இருந்த போது பிடித்ததாகக் காட்ட மாட்டார்கள்.

 தானாக சரணடைந்ததாகத் தான் காட்டுவார்கள்.

 சித்திரவதை செய்ய மாட்டார்கள்.

இந்த உறுதியை அதிகாரிகள் தந்துள்ளனர். ஆனாலும் காவல் துறையினர் கூறியபடி நடக்காமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே நாங்கள் கொண்டு போய் தள்ளி விட்டோம் என்று நீங்கள் கூறக் கூடாது. நீங்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று நானும் ஹைதர் அலியும் ஜின்னாவும் திரும்பத் திரும்ப ராஜா ஹுஸைனிடம் கூறினோம்.

அன்றைய தினம் அவரைத் தங்க வைத்து மறுநாள் முடிவு செய்யுமாறு கூறினோம்.

எனக்கு ஒவ்வொரு ஊராக ஓடிக் கொண்டிருக்க முடியாது. யாரும் உதவ மறுக்கிறார்கள். எனவே சரணடைய ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

அதன் பின்னர் ஹைதர் அலியும் ஜின்னாவும் ராஜா ஹுசைனை ஒரு காரில் அழைத்துச் சென்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய வைத்தனர்.

தனக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அவர் உணர்ந்து கேட்டுக் கொண்டதால் அவரது சம்மதத்துடன் இது செய்யப்பட்டது.

ஆனால் காவல் துறையினர் சொன்ன படி நடக்காமல் துரோகம் செய்து விட்டனர். அவரை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த போது பாய்ந்து பிடித்ததாக பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர்.

ஆனால் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.

இதைத் தான் பீஜே ராஜா ஹுஸைனைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று பிரச்சாரம் செய்து வருகிறது ஒரு கூட்டம்.

சம்மந்தப்பட்ட மனிதர் தனது இயலாமையையும், தனக்கு யாரும் உதவவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டு என் மனைவி மக்களைப் பார்க்க வேண்டும் என்று கூறி அதற்கான வழிமுறையைக் கேட்டால் ஆலோசனை கூறுவதும் அவர்களுக்கு உதவுவதும் எந்த வகையிலும் தவறானது அல்ல.

ஒரு வாதத்துக்காக இது தவறு என்று வைத்துக் கொண்டாலும் இது பீஜே என்ற தனி நபரின் முடிவு அல்ல.

இது தனிப்பட்ட பீஜே என்ற நபர் செய்த காரியம் அல்ல. இது ஒரு இயக்கத்தின் செயல்பாடு. அந்த இயக்கத்தில் நான் இருந்த போது எனது ஒப்புதலும் உள்ளதால் அதில் எனக்கும் பொறுப்பு உண்டு. நான் மட்டுமே இதற்கு முழுப் பொறுப்பல்ல.

இதில் என்னைக் குறை கூற எந்தக் காரணமும் இல்லை. இது சம்மந்தமான பேச்சுவார்த்தையை அதிகாரிகளிடம் ஹைதர் அலி நடத்தினாலும் அதை அவர் மீது மட்டும் நான் சுமத்த மாட்டேன். நானும் சேர்ந்து அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததால் எங்கள் அனைவரின் சார்பிலும் தான் அவர் அதிகாரிகளிடம் பேசினார். எங்கள் அனைவரின் சார்பிலும் தான் அவர் சரணடைய உதவினார். இது முழுக்க முழுக்க கூட்டுப் பொறுப்பாகும்.

 

இதனை டவுன்லோட் செய்ய

சிறைவாசிகள் தொடர்பாக சொல்லப்படும் மற்றும் சில அவதூறுகளைக் குறித்து அடுத்தடுத்து விளக்குகிறேன். இன்ஷா அல்லாஹ்

தொடர்_5

ஏர்வாடி காசிம் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த ஏர்வாடி காசிம் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை அன்றைய தமுமுக குறிப்பாக பீஜேயும் ஹைதரும் காட்டிக் கொடுத்தனர் என்று ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. தமுமுகவில் இருந்து நாம் விலகிய பின்னர் ஹைதர் பெயர் நீக்கப்பட்டு பீஜே பெயர் மட்டும் இப்போது பரப்பப்படுகிறது.

இது பற்றிய உண்மை நிலவரத்தையும் நாம் விளக்க வேண்டியுள்ளது.

கொடுங்கையூர் நஸ்ருத்தீன் என்பவரின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து சென்னையின் முக்கிய சாலையில் ஏர்வாடி காசிம் சென்று கொண்டிருந்த போது சீருடை அணியாத காவல் துறையினர் அந்த டூவீலரை மடக்கினார்கள். பின் சீட்டில் இருந்த காசீமை மட்டும் பிடித்துக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்த நஸ்ருத்தீனை காவல் துறையினர் விட்டு விட்டனர்.

ஏர்வாடி காசிம் பல வழக்குகளில் தேடப்பட்டாலும் காவல்துறைக்கு அவருடைய பெயர் மட்டும் தான் தெரியும். அவருடைய உருவ அமைப்பு கூட தெரியாது. அவருடைய புகைப்படம் கூட காவல்துறையிடம் அப்போது இருக்கவில்லை. முகம் தெரியாத ஒருவர் சரியாக மடக்கிப் பிடிக்கப்பட்டால் அவர் நிச்சயம் காட்டிக் கொடுக்கப்பட்டுத் தான் பிடிக்கப்பட்டிருப்பார் என்பது நூறு சதவிகிதம் உண்மை. இந்தச் சந்தேகம் எனக்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அப்போதே ஏற்பட்டது.

அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினமோ அல்லது மறுதினமோ கொடுங்கையூர் நஸ்ருத்தீன் தமுமுக அலுவலகம் வந்தார்.

நான் காசிமை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வரும் போது காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்து விட்டனர் என்று என்னிடமும் ஹைதர் அலியிடமும் கூறினார். மற்ற நிர்வாகிகள் அப்போது இருந்தார்களா என்பது நினைவில் இல்லை.

காசிமை நீங்கள் எப்படிச் சந்தித்தீர்கள் என்று நாங்கள் கேட்ட போது நான் தான் கொடுங்கையூரில் அவரை ஒரு வீடு பிடித்துக் கொடுத்து தங்க வைத்திருந்தேன்; அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து வந்தேன். அதன் அடிப்படையில் தான் அவரை என் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றேன் என அவர் கூறினார்.

நீங்கள் இருவரும் வாகனத்தில் வரும் போது அவரைக் காவல் துறை எப்படி கைது செய்யும்?

அவருடைய முகம் கூட அவர்களுக்குத் தெரியாதே?

மேலும் தலைமறைவான ஒருவரை வாகனத்தில் நீங்கள் ஏற்றிச் சென்றால் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக உங்களை ஏன் கைது செய்யவில்லை?

விசாரணைக்குக் கூட உங்களை அழைத்துச் சொல்லாதது ஏன்?

மேலும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பில் இல்லாதவரும் உங்களுக்கும் நன்கு தெரிந்தவருமான உளவுத்துறை அதிகாரி ஏன் கைது செய்ய வேண்டும்?

உங்களை மட்டும் ஓடச் சொல்லி விட்டு அவரை மட்டும் சொல்லி வைத்தது போல் எப்படிப் பிடிக்க முடியும் என்றெல்லாம் அவரிடம் நாங்கள் கேள்வி கேட்டோம். இதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர் ஏர்வாடி காசிமை தன் பொறுப்பில் நஸ்ருத்தீன் வைத்திருந்தது அப்போது தான் எங்களுக்குத் தெரியும்.

இந்தச் சம்பவம் நடந்த போது நஸ்ருத்தீன் தமுமுகவில் மாவட்டத்திலோ கிளையிலோ பொறுப்பில் இருந்தார். தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தார். தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் எதிரிகள் ஊருறுவிடாமல் கண்காணிக்கும் பொறுப்பும் அவரிடம் இருந்தது. அதாவது தலைவர்களுக்கு நிழலாக இருந்தார் என்று சொல்லும் அளவுக்கு இருந்தார்.

ஏர்வாடி காசிம் மட்டும் கைது செய்யப்பட்டு நஸ்ருத்தீன் விரட்டி விடப்பட்டது காசிம் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்துகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இதன் பின்னர் எங்களுக்குத் தோன்றியது போலவே ஏர்வாடி காசிமுக்கும் தோன்றி இருக்கிறது. தனது வாகனத்தில் அழைத்து வரும் தகவலை நஸ்ருத்தீன் தான் காவல்துறைக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்து விட்டார் என்று காசிம் முடிவுக்கு வந்தார். இதன் காரணமாக நஸ்ருத்தீனைப் பழிவாங்கத் திட்டம் போட்டுள்ளார் என்ற தகவல் நஸ்ருத்தீனுக்கும் கிடைத்தது. காசிம் மூலம் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நஸ்ருத்தீன் இருந்தார்.

இந்த நிலையில் வேறொரு வழக்கில் நஸ்ருத்தீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் காசிமைச் சந்தித்து கதையை மாற்றினார்.

தன்னைக் காத்துக் கொள்வதற்காக பீஜேயும் ஹைதரும் தமுமுக நிர்வாகிகளும் தான் போலீஸுக்குத் தகவல் கொடுத்து காட்டிக் கொடுத்தனர். எனக்குச் சம்மந்தம் இல்லை என்று காசிம் நம்பும் வகையில் கூறி காசிமின் பழிவாங்கும் உணர்வை எங்கள் பக்கம் திருப்பி விட்டார்.

இந்தச் செய்தி தமுமுக தலைமைக்கு சிறையில் உள்ள சிலரால் தெரிவிக்கப்பட்டது. தமுமுக தலைமைக்கு இது தெரிந்து விட்டது என்ற விஷயம் நஸ்ருத்தீனுக்கும் தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்தால் தமுமுகவால் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய நஸ்ருத்தீன் சிறையில் இருந்து கொண்டு தமுமுக தலைமைக்கு ஒரு கடிதம் எழுதினார். இன்லாண்ட் லட்டரில் அந்தக் கடிதம் எழுதப்பட்டு சிறை அதிகாரிகள் தணிக்கை செய்து தபால் இலாகா வழியாக அனுப்பப்பட்டது.

என்னைக் காத்துக் கொள்வதற்காக காசிமிடம் உங்களைப் பற்றி சொல்லி தப்பித்துக் கொண்டேன். இதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்; வேறு வழியில்லை. இல்லாவிட்டால் காசிம் என்னைக் கொலை செய்திருப்பார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை தமுமுக பாதுகாத்து வைத்துள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை.

காசிமிடம் நஸ்ருத்தீன் கூறிய பொய் எந்த அளவுக்குத் தாக்கத்ததை ஏற்படுத்தியது என்பது மற்றொரு நிகழ்ச்சியின் மூலம் உறுதியானது. அந்த நிகழ்ச்சி இது தான்.

சென்னை நேதாஜி நகரில் தவ்ஹீத் சகோதரர்களுக்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் கலவரம் வெடித்தது, அப்போது மிகவும் சிறுபாண்மையாக இருந்த தவ்ஹீத் சகோதரர்கள் ஜும்மாவில் வைத்து பயங்கரமாகத் தாக்கப்பட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட நாங்கள் ஹைதரையும் பாக்கரையும் அந்த இடத்துக்கு அமைதி ஏற்படுத்த அனுப்பி வைத்தோம். (அப்போதெல்லாம் தவ்ஹீத் சகோதரர்களைச் சார்ந்தே தமுமுக செயல்பட்டு வந்தது. தவ்ஹீத் சகோதரர்கள் மட்டுமே தமுமுகவில் இருந்த காலம் அது.)

ஆனால் ஹைதரும், பாக்கரும் அங்கே சென்ற போது அமைதி ஏற்படும் நிலை இல்லை. மாறாக இவர்களைக் கண்டவுடன் சுன்னத் ஜமாஅத்தினர் தமுமுகவின் காரை உடைத்தனர். இவனுங்களைக் கொல்லுங்கடா என்று கூறிக் கொண்டே கொலை வெறியுடன் இவர்களைத் தாக்க சுன்னத் ஜமாஅத்தினர் ஓடி வந்தனர். இருவரும் தப்பித்து ஓடி ஒரு வீட்டில் நுழைந்து கொண்டனர்.

பின்னர் சுன்னத் ஜமாஅத்துக்கு அன்று இருந்த அரசியல் செல்வாக்கு காரணமாக தவ்ஹீத் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஹைதரையும் பாக்கரையும் போலீஸார் கைது செய்தனர். கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு வேலூர் சிறையில் அடைத்தனர்.

சில மாதங்கள் அவர்கள் வேலூர் சிறையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அந்தச் சிறையில் தான் ஏர்வாடி காசிமும் வேறு பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையின் திறந்த வெளியில் ஹைதரும் பாக்கரும் காலாற நடக்கும் போது அதைப் பார்த்த காசிம் ஓடி பாய்ந்து வந்து ஹைதரின் குரல்வலையைக் கடித்துக் கொல்ல முயன்றார். சிறைக்காவலர்கள் விரைந்து வந்திருக்கா விட்டால் ஹைதரின் கதை அங்கேயே முடிந்திருக்கும்.

ஆனால் காசிம், பாக்கரை ஒன்றும் செய்யவில்லை. ஏனெனில் தமுமுக எடுக்கும் எல்லா நடவடிக்கையிலும் உடன்பட்டு விட்டு பின்னர் சம்மந்தப்பட்டவர்களுடன் தான் மட்டும் கள்ள உறவு வைத்துக் கொள்வது பாக்கரின் குணம். எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. நான் உங்கள் நிலையை ஆதரிப்பவன் என்று எல்லோருக்கும் இந்த டயலாக்கைப் பயன்படுத்துவார்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் நீக்கப்பட்டு தமுமுகவும் பாக்கரும் சேர்ந்து நடத்திய மண்ணடி பொதுக்கூட்டத்தில் ஹைதருக்கும் தனக்கும் கள்ள உறவு இருந்ததை பாக்கர் ஒப்புக் கொண்டார். ஹைதரும் அதை உறுதிப்படுத்தினார். எல்லோருக்கும் நல்லவராக இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்பவர் என்பதால் தமுமுகவின் எதிரிகளில் ஒருவரும் பாக்கரை மட்டும் எதிரியாகக் கருத மாட்டார்கள். இதனால் தான் காசிம் பாக்கரை ஒன்றும் செய்யவில்லை.

தமுமுகவில் அன்று எடுக்கப்படும் எல்லா முடிவும் கூட்டு முடிவு தான் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்பிகிறேன்.

நஸ்ருத்தீன் விதைத்தது எந்த அளவுக்கு காசிமுக்கு வெறியை ஏற்படுத்தி இருந்தது என்பது அப்போது தான் எங்களுக்குத் தெரிந்தது.

ஆனால் பீஜேயோ, ஹைதரோ மற்ற தமுமுக நிர்வாகிகளோ காட்டிக் கொடுத்ததாக இதை வைத்துத் தான் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

காசிம் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதில் கடுகளவும் சந்தேகம் எனக்கு அன்றும் இல்லை. இன்றும் இல்லை. ஆனால் இதில் தமுமுகவுக்கோ எனக்கோ கடுகளவும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.

இதற்கான ஆதாரங்கள் அந்த நிகழ்ச்சிக்குள்ளேயே அடங்கியுள்ளது.

காசிமுக்கும் எனக்கும் அல்லது காசிமுக்கும் தமுமுகவுக்கும் எந்த முன் பகையும் இருக்கவில்லை.

அல் உம்மா மிரட்டல் இருந்த போது கூட காசிம் அல் உம்மாவுடன் சேரவில்லை. அவர்களுடன் உடன்படவில்லை. அவரால் எங்களுக்கு எந்தக் கேடும் ஏற்படும் நிலை இருக்கவில்லை.

மேலும் அவர் கொடுங்கையூரில் தங்க வைக்கப்பட்ட விபரம் அவர் கைது செய்யப்பட்ட பின் நஸ்ருத்தீன் சொல்லித் தான் எனக்கும், தமுமுக நிர்வாகிகளுக்கும் தெரியும்.

நஸ்ருத்தீனின் இரு சக்கர வாகனத்தில் காசிம் இத்தனை மணிக்கு இந்த இடத்துக்கு வரப் போகிறார் என்பது எங்களுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?

நாங்கள் காட்டிக் கொடுத்திருந்தால் காசிமுடன் நஸ்ருத்தீனும் கைது செய்யப்பட்டிருப்பார். அவருக்கு உடந்தையாக இருந்து வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கும் போது அவர் மட்டும் தப்பவிடப்பட்டிருக்க மாட்டார்.

இதை விட முக்கியமான ஒரு செய்தியும் உள்ளது. தமுமுகவில் இருக்கும் போது நான் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் எந்த அதிகாரியுடனும் தொடர்பு வைத்துக் கொள்வது இல்லை. நான் காவல்துறையினர் தொடர்பை விரும்பியதில்லை. என் சுபாவத்துக்கு அது ஒத்து வராது. எனவே எந்த அதிகாரியையும் எனக்குத் தெரியாது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். மிக நெருக்கடியான பிரச்சனையின் போது மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து உயர் அதிகாரிகளைச் சந்தித்தது தவிர காவல் துறையினருடன் எனக்கு உறவு ஏதும் இல்லை.

பொய்யர் கூட்டம் காசிமையும் எனக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதால் இந்த விபரத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

இதனால் நஸ்ருத்தீனின் பகை கூடுதலாகும் என்றாலும் காட்டிக் கொடுத்தவன் என்ற பட்டத்தை அவருக்காக நான் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

நம்முடைய பிரச்சாரகர்களான அஷ்ரபுத்தீன் போன்றவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இயக்கம் நடத்தும் சிலரால் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளான போது அவ்வாறு தாக்கியவர்களை அதிகாரிகளிடம் நான் அடையாளம் காட்டி இருக்கிறேன். இனியும் அப்படி ஒரு நிலையைச் சந்திக்கும் போது அவ்வாறு செய்வதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. எனக்கு எது நேர்ந்தாலும் தூண்டி விட்டவர்கள் யார் என்பதையும் செய்தவர்கள் யார் என்பதையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பது இந்த அடிப்படையில் தான்.

இது காட்டிக் கொடுப்பதில் சேராது. அவ்வாறு இல்லாமல் வேறு யாரையும் எந்தக் காலத்திலும் நான் காட்டிக் கொடுத்தது இல்லை. நான் அங்கம் வகித்த எந்த இயக்கமும் நான் அந்த இயக்கத்தில் இருந்த வரை அப்படி யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.

இன்னும் சில செய்திகள் உள்ளன. அடுத்தடுத்து எழுதுகிறேன்.

தொடர்_6

சிறைவாசிகளுக்கு உதவ மறுத்தது ஏன்?

சிறைவாசிகளின் வழக்குகளுக்கோ, அவர்களின் குடும்பங்களுக்கோ நான் உதவவில்லை என்றும் மற்றவர்கள் உதவுவதைத் தடுத்தேன் என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

தமுமுக ஆரம்பிக்கப்படுவதற்கு நான் சிறைவாசிகளுக்கு உதவி வந்தேன் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.

தமுமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் நான் அமைப்பாளராக இருந்த காலம் வரை சிறைவாசிகளின் வழக்குகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

ஆனால் குண்டு வெடிப்புக்குப் பின் அல் உம்மாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற கைதிகளுக்கான உதவியை அப்போதைய தமுமுக செய்தது.

பின்னர் சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தமுமுக பணம் திரட்டி இயக்கம் நடத்துகிறது என்று தமுமுகவில் மாதாமாதம் உதவி பெற்ற சிலர் வெளிநாடுகளுக்குக் கடிதம் மூலம் பரப்பியதால் இனிமேல் சிறைவாசிகளுக்காக தனியாக உதவி கோருவதில்லை எனவும், இயக்கத்துக்காக திரட்டப்படும் நிதியில் இருந்து இயன்ற உதவிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி அன்றைய உணர்வில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறைவாசிகளுக்கு தமுமுக உதவவில்லை எனக் கூறியவர்கள் மாதாமாதம் தமுமுகவில் உதவி பெற்று அளித்த வவுச்சர்களையும் உணர்வில் வெளியிடும் நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் சிறைவாசிகளின் குடும்பங்கள் மிகுந்த அல்லல்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உதவும்படி உணர்வில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காகவே சிறைவாசிகளால் அமைக்கப்பட்ட ட்ரஸ்டுகளுக்கு உதவுமாறும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உணர்வில் விளம்பரம் வெளியிட்டோம்.

சிறைவாசிகளுக்காக எங்கள் முகவரிக்கு யாராவது அனுப்பினால் அதை அப்படியே சிறைவாசிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவோம் என்று அறிவிப்பு செய்து அவ்வாறே கொடுத்தோம். சிறைவாசிகளில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் நாம் குறுக்கே நிற்கவில்லை.

சிறைவாசிகளை ஜாமீனில் விடுமாறும் நாம் அரசைக் கேட்டு வந்தோம்.

இந்த நிலையில் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. ஜெயலலிதாவைச் சந்தித்து சிறைவாசிகளின் ஜாமீன் மனு பற்றி கோரிக்கையை நானே முன் வைத்தேன்.

ஆனால் சிறையில் இருந்து சிறைவாசிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். எங்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் பண்ண வேண்டாம். எங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தனர். இன்னும் பலவிதமான குற்றச் சாட்டுக்களையும் அதில் சுமத்தி இருந்தனர். அந்த அறிக்கையைப் பிரசுரமாகவும் கோவை முழுவதும் விநியோகம் செய்தனர்.

நாங்கள் குரல் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று சிறைவாசிகள் கருதுவதால் அவர்கள் விஷயமாக எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டோம். கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உறையாற்றச் சென்ற போது அந்தக் கூட்டத்திலேயே அந்த அறிக்கையை விநியோகம் செய்தனர். எங்களை வைத்து அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த பின்னர் அவர்கள் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொண்டோம்.

இதன் காரணமாக நாங்கள் இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருந்தாலும் அவர்கள் எங்களை அணுகும் போது பழைய சம்பவங்களை மனதில் வைத்து நாம் நடந்து கொள்ளவில்லை.

அந்த அடிப்படையில் கடந்த மாதம் சிறைவாசிகள் சார்பில் எங்களைச் சந்தித்து எங்கள் விடுதலைக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்துல் பாசித் வந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

நாம் பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைக்காமல் அவர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யுமாறு முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்தோம்.

சிறையில் உள்ளவர்களைப் பொருத்த வரை அவர்கள் குழப்ப நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளை மறுக்கக் கூடாது என்று தான் நடந்து வந்துள்ளோம்.

சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று மக்களிடம் கேட்பதைத் தான் நிறுத்திக் கொண்டோம். ஆனால் இயக்கப் பணிகளுக்காகக் கிடைக்கும் நிதியில் இருந்து இப்போதும் நம்மை அணுகும் சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

தொடர்_7

சிறைவாசிகளுடன் விவாதிக்கத் தயாரா

அன்புள்ள சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு, தங்களின் ஆன்லைன்-ல் சிறைவாசிகளால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு,பொது மக்களிடம் திருவிடசெரி சம்பவத்தால் ஏற்பட்ட அவப் பெயரை மறைத்து போலியான அனுதாபம் பெறவும், அல்லது மேற்கண்ட படுகொலை சம்மந்தமாக தாங்கள் பழிதீர்க்கப்படலாம் என அஞ்சி அதற்கென போலீஸ் பாதுகாப்பு பெற முடிவு செய்து நீங்கள் நடத்தும் நாடகம் தான் என தங்களை நன்கரிந்தவர்களுக்கு தெரியும்.

இதற்கு ஏன் சிறைவாசிகளை வம்புக்கு இழுக்கின்றீர்கள்? உங்களால் உசுப்பேற்றபட்டு , அதன் பலனால் பல வருடம் சிறை வாசத்தில் நொந்து போயிருக்கும் எங்களை ஏன் மீண்டும் நொம்பல படுத்துகிறீர்கள்! உங்களை போல் முஸ்லிம்களை கொல்ல நாங்கள் முட்டாள்கள் இல்லை! மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து துரோகி என அறியப்பட வேண்டுமே தவிர தியாகி என மரணித்து விடக் கூடாது.

நபிகள் நாயகம் வாழ்ந்த காலம் வரை அவர்களின் எந்த தோழரும் அவர்களை விட்டு பிரிந்து செல்லவில்லை! நீங்கள் வாழும் போதே உங்களுக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்த தோழர்கள் அனைவரும் வெளியேறி விட்ட அவல நிலை! இது தொடரும்! இன்று உங்களோடு அறியாமல் உள்ள சகோதர்களும் விரைவில் உங்களை பற்றி புரிந்து வெளியேறும் நிலை இன்ஷா அல்லாஹ் வரும்! அன்று உங்களின் செயல்களுக்காக வருந்தி அழும் காலம் வரை நீங்கள் வாழ வேண்டும்! அனைத்திற்கும் காரணமான நீங்கள் உத்தமர் போல் தங்களை கட்டி கொள்வதேன்? உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் நேரடியாக விவாதிக்க தயாரா? நீங்கள் விவாதம் செய்வதில் வல்லவராக இருக்கலாம்! ஆனால் எங்களிடம் சத்தியம் உள்ளது! இன்ஷா அல்லாஹ் அந்தபொது விவாதத்தில் நீங்கள் சமுதயாத்திற்கு செய்த துரோகத்தையும் சிறைவாசிகளுக்கு இழைத்த நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?

இப்படிக்கு-

தடா.அப்துர்ரஹீம் ,

ஏர்வாடி.காசிம்,

அலி அப்துல்லாஹ்

இதற்கு உங்கள் பதில் என்ன ?

இப்படி ஒரு செய்தியை அனுப்பி ரபீக் என்ற சகோதரர் விளக்கம் கேட்டுள்ளார். இதில் உள்ள அலி அப்துல்லாவும் ரஹீம் என்பவரும் ஆரம்பம் முதலே எனக்கு எதிரிகளாகத் தான் தெரியும். அவர்களுடன் இணக்கமான எந்த உறவும் எனக்கு இருந்ததில்லை. காசிம் மட்டும் தான் எனக்கு எதிரியாக இல்லாமல் இருந்தவர்.

நாம் யாருடனும் எது குறித்தும் விவாதிக்க தயார். அதற்கான காரணம் இருக்க வேண்டும். நான் காட்டிக் கொடுத்தேன் என்று புலம்பக் கூடியவர்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டு அதற்கு பதில் சொல்லும் நிலை ஏற்படுத்தினால் தான் விவாதம் செய்யும் தேவை ஏற்படும்.

இன்னின்ன துரோகம் செய்தாய் அதற்கான் ஆதாரம் இது என்று தெளிவுபடுத்தி விட்டுத் தான் விவாத அழைப்பு விட வேண்டும். மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்று போகிற போக்கில் உளறக் கூடியவர்கள் விவாதத்துக்கு அழைக்கவில்லை. மாறாக ஸ்டண்ட் அடிக்கின்றனர். முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்து என்னை நிஜமாகவே விவாதத்துக்கு அழைப்பதாக இருந்தால் எது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை விரிவாக பட்டியல் போட்டுச் சொல்ல வேண்டும்.

பீஜே காட்டிக் கொடுத்தார் என்றால் யாரைக் காட்டிக் கொடுத்தார்? என்பதையும் சொல்ல வேண்டும். காட்டிக் கொடுத்ததை நிரூபிக்க நான் தயார் என்றும் கூற வேண்டும். இப்படி விபரமாக பட்டியலை வெளியிட்டு ஓவொன்றையும் நிரூபிப்பதாக பொறுப்பேற்றுக் கொண்டு அழைப்பு விட வேண்டும். சிறைவாசிகளுக்கு துரோகம் செய்தேன் என்று குற்றம் சாட்டினால் என்ன துரோகம் யார் யாருக்கு செய்த துரோகம் என்று பட்டியல் போட்டு விட்டு விவாதிக்க தயாரா என்று அழைக்க வேண்டும்.

சிறைவாசிகள் பெயரால் வசூலித்து ஏப்பம் விட்டேனா? சிறைவாசிகளுக்காக யாரும் தந்த பணத்தை நான் சாப்பிட்டு விட்டேனா? என்று விபரத்துடன் குற்றத்தைச் சொல்லி அது குறித்து விவாதிக்க அழைக்க வேண்டும். அது தான் விவாதத்துக்கு அழைக்கும் முறை. மேலும் என்னிடம் விவாத அழைப்பு கொடுத்தவர்கள் என்னைப் பற்றி விவாதிப்பது போல் விவாத அழைப்பு கொடுத்த இவர்கள் செய்த பணவசூல், அந்தப் பணம் என்னவானது? அது போல் இவர்கள் செய்த கட்டப்பஞ்சாயத்து பண வசூல் போன்றவைகளையும் ஒரு தலைப்பாக சேர்க்க வேண்டும். அபோது தான் இவர்களைப் பற்றி நான் அம்பலப்ப்டுத்தும் நிலை ஏற்படும். எனவே இதற்கேற்றவாறு விவாத அழைப்பை விடட்டும்.

அனைத்தையும் ஒன்று விடாமல் விவாதிக்க நான் தயார்.

பணம் திரட்டுவதற்காக இப்போது இவர்கள் எடுத்துள்ள புது அவதாரம் உள்ளிட்ட அனைத்தையும் அமபலப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.

என் பக்கம் சத்தியம் இருக்கிறது. இதிலும் இவர்கள் தான் தோற்பார்கள். இன்ஷா அல்லாஹ் இது தான் எனது பதில்

தொடர்_8

குண்டு வெடிப்பு வழக்கில் விசாரிக்கப்பட்ட போது தான் காட்டிக் கொடுத்ததாக பீஜே சொன்னாரா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜேயை காவல் துறையினர் விசாரித்த போது நான் சொல்லித்தான் நஸ்ருத்தீன் காசிமைக் காட்டிக் கொடுத்தார் என்று பீஜே வாக்கு மூலம் கொடுத்தார். சொன்னார். இப்போது மறுத்து பேசுகிறார் என்ற பிரச்சாரத்தையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எனது வாக்கு மூலம் என்ற பெயரில் சுமார் ஐம்பது பக்கங்கள் (என்று நினைக்கிறேன்.) காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஒரு புத்தகத்தை தாக்கல் செய்தனர். காவல்துறையினர் நான் சொன்னதையும் சொல்லாததையும் சேர்த்து எழுதிக் கொண்டு என்னிடம் கையெழுத்து கேட்ட போது நான் மறுத்து விட்டேன்.

மேலும் அப்போதே உணர்வு இதழிலும் இது குறித்து விளக்கி மறுப்பும் எழுதினேன்.

பாஷா உள்ளிட்ட அனைவரின் வாக்கு மூலத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் பாஷா அவர்களின் கையெழுத்து போடப்பட்டிருக்கும். எனது வாக்கு மூலம் என்று வெளியிடப்பட்டதில் எந்த ஒரு பக்கத்திலும் எனது கையெழுத்து இருக்காது. அதன் கடைசியிலும் எனது கையெழுத்து இருக்காது.

இதனால் தான் இதைப் பரப்பக்கூடியவர்கள் கடைசியில் என் கையெழுத்து இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் கடைசி சில வரிகளை மறைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் அதற்கு மாற்றமாக நான் அவ்வாறு சொன்னதாக எழுதிக் கொண்டனர்.

நான் வாக்குமூலம் கொடுத்ததாக எடுத்துக் காட்டுவோர் என் கையெழுத்துடன் அல்லது நான் நீதிமன்றத்தில் நான் அளித்த சாட்சியத்துடன் எடுத்துக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்ட முடியது.

நான் ஒரு வாதத்துக்காக காட்டிக் கொடுத்திருந்தால் கூட நான் தான் காட்டிக் கொடுத்தேன் என்று எப்படிச் சொல்வேன்? அதுவும் சமுதாயத்தில் மதிப்பு இல்லாதவர்கள் இப்படிக் கூற வாய்ப்பு உள்ளது. 25 ஆண்டுகள் பாடுபட்டு நான் காத்து வரும் எனது நற்பெயர் இந்த ஒரு வார்த்தையில் அழிந்து விடும் என்ற அறிவு கூட எனக்கு இருக்காதா?

அந்த வாக்குமூலம் காவல் துறையினர் எழுதிக் கொண்டது தானே தவிர நான் கொடுத்தது அல்ல.

இதை அந்த வாக்குமூலம் வெளியான அதே ஆண்டிலேயே உணர்வு இதழில் தெளிவுபடுத்தி விட்டேன்.

டிசம்பர் ஆறு போராடத்தில் என்னை முன் கூட்டியே கைது செய்த காவல் துறை அண்ணா மேம்பாலத்தில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டிய போது பிடித்தோம் என்று நீதிமன்றத்தில் சொன்னார்கள். இதெல்லாம் உண்மையா? இது போல் காவல் துறையினர் தாமாக எழுதிக் கொண்டது தான் இவர்களிடம் இருக்கும் ஆதாரம்.

தமுமுகவில் நான் இருக்கும் போதே அனைவரும் சேர்ந்திருக்கும் போது தான் உணர்வில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டது. அப்போது இது பொய் வாக்கு மூலம் என்று பேசிய பொய்யர் கும்பல் இப்போது கதையை மாற்றப் பார்க்கிறது. இதிலும் அவர்களுக்குத் தோல்வி தான் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்

தொடர்_9

 குமுதம் ரிப்போர்டர் செய்தியின் பின்னணி

எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித்திட்டம் குறித்து நான் எழுதிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு குமுதம் ரிப்போர்டர் இதழ் சிலரது பேட்டியை வெளியிட்டுள்ளது. அநதச் செய்தி அனைவரின் முகத்திரையையும் கிழித்துக் காட்டும் வகையிலும் நான் எழுதியதை மெய்ப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. அந்தச் செய்தி இது தான்.

குமுதம் ரிப்போர்டர் செய்தியின் பின்னணி

குமுதம் ரிப்போர்டரில் நமது இணைய தளத்தில் எழுதியதைத் தொடர்ந்து சிலரது பேட்டிகளை வெளியிட்டுள்ளனர்.

அது குறித்து தேவையான விளக்கம் அளிக்குமாறு சில சகோதரர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா இது பற்றிக் கூறும் போது திருவிடைச்சேரி சம்பவத்தைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு நான் பொய் சொல்வதாகக் கூறியுள்ளார்.

ஜவாஹிருல்லாவைப் பொருத்தவரை அவரது பேச்சில் அறிவு சார்ந்த எந்த வாதமும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. தனக்குத் தானே முரண்படுவதில் அவருக்கு நிகர் அவரே. அவரது அறிவார்ந்த வாதங்களின் இலட்சணம் குறித்து முன்னரே நாம் விளக்கியுள்ளோம்.

பார்க்க

திருவிடைச்சேரியில் ஹஜ் முஹம்மத் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் மரணித்து நால்வர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு முழுக் காரணம் பீ.ஜைனுல் ஆபிதீன் தான் என்று அனைவருக்கும் தெரியும். இந்தச் சம்பவத்தில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளத்தான் தற்போது அவர் இப்படியெல்லாம் எழுதியும் பேசியும் வருகிறார்

என்று பேராசிரியர்(?) உளறிக்கொட்டி இருக்கிறார்.

பீ.ஜைனுல் ஆபிதீன் தான் காரணம் என்பதை அவர் நீதி மன்றத்தில் நிரூபிக்கும் வாய்ப்பு அளிப்பதற்காக இன்ஷா அல்லாஹ் அவர் மீது வழக்குத் தொடுக்க இருக்கிறேன் என்பது தனி விஷயம்.

இவர் வாதம் எந்த அளவு அபத்தமானது என்பதை மட்டும் இப்போது விளக்குகிறேன்.

திருவிடைச்சேரி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணம் என்று இவரும் பொய்யரும் தவிர வேறு யருமே சொல்லவில்லை. மக்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராகக் கொந்தளிக்கவில்லை. துப்பாக்கியால் சுட்ட ஹாஜி முஹம்மத் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவரோ ஆதரவாளரோ அல்ல என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் சென்றடைந்து விட்டது.

மேலும் காவல் துறையினரும் இதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதில் தெளிவாக உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கும் போது அதைத் திசை திருப்பும் அவசியம் ஏதும் இல்லை. இந்தச் சாதாரண அறிவு கூட ஜவாஹிருல்லாவுக்கு இல்லை.

எனக்கு எதிராக சதித்திட்டம் எங்கே தீட்டப்பட்டது? யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற விபரங்களை ரமலான் மாதம் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீதும் நானும் தெரிவித்து விட்டோம்.

திருவிடைச்சேரி சம்பவம் ரமலானில் கடைசியில் நடந்தது. இந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்பே நாம் தகவல் தெரிவித்துள்ள போது இது எப்படி திசை திருப்புவதாக அமையும்? திசை திருப்புவது என்று கூறியதன் மூலம் பேராசிரியர், பொய்யனுக்கே அண்ணனாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

திருவிடைச்சேரி சம்பவம் இதனால் எப்படி திசை திரும்பும்? என்ற அறிவும் அவருக்கு இல்லை.

திசை திருப்புவதற்காக நான் பொய் சொல்லி இருந்தால் என்னேரமும் என்னுடன் இருக்கக் கூடிய ஆயுதம் தாங்கிய நான்கு பேரை காவல் துறை உயர் அதிகாரிகள் நியமிப்பார்களா? எல்லா நேரமும் எனது வீட்டில் பாரா போட்டு காவல் காவல் காக்கும் காவலர்களை நியமித்து இருப்பார்களா? ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் வந்தவுடன் பாதுகாப்பை அதிகப்படுத்தவில்லை. இன்னும் அது பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் காவல் துறையினர் கடுகளவு சந்தேகம் இல்லாத போது தான் பாதுகாப்பு அளிப்பார்கள். இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் தனக்கு மிரட்டல் உள்ளது என்று கூறி போலீஸ் பாதுகாப்புடன் வலம் வர ஆரம்பித்து விடுவார்கள்.

பாதுகாப்பு கொடுப்பதில் அதுவும் அரசாங்கத்தின் தவறுகளை தாட்சண்யமில்லாமால் கண்டிக்கக் கூடிய ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தக்க ஆதாரமும் காரணமும் இல்லாமால் காவல் துறையினர் முடிவெடுக்க மாட்டார்கள். காவல் துறையினர் எனக்கு வழங்கியுள்ள பாதுகாப்பே பொய்யாசிரியரின் முகத்தைக் கிழித்துக் காட்டுகிறது.

ஒரு காலத்தில் இதே பேராசிரியருக்கு பொலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதே? (பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரியை வீட்டுக்கு காய்கறி வாங்கவும், பின்னால் பெட்டியைத் தூக்கி வருவதற்கும் பயன்படுத்தினார் என்பதற்காக திரும்பப் பெறப்பட்டது) அது எதைத் திசை திருப்புவதற்காக? பொய்யாசிரியர் பதில் சொல்வாரா?

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும். இது பற்றிய விபரங்கள் சம்மந்தப்பட்ட என்னிடம் தான் இருக்கும். சம்மந்தமில்லாத பொய்யாசிரியருக்கு என்னிடம் இது குறித்து என்ன விபரங்கள் உள்ளன என்பது தெரியாது. இவர் மனித இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன சொல்லி இருக்க வேண்டும்?

பீஜேக்கு எந்த அச்சுறுத்தல் உள்ளது என்பது எனக்குத் தெரியாது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசு அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம். பொய்யாக இருக்கும் பட்சத்தில் பதட்டம் ஏற்படுதியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எந்த நல்ல மனிதனும் சொல்வான்.

நாளைக்கு பொய்யாசிரியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் பொய்யாசிரியருக்கு ஒன்றும் இல்லை. தேர்தலில் மக்கள் மொட்டை அடித்ததால் அதை திசை திருப்புவதற்காக ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார் என்று நான் கூறலாமா? நாளைக்கு பொய்யாசிரியருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டு அரசு பாதுகாப்பு அளித்தால் இதே பதிலை அப்போது திருப்பிக் கொடுப்போம்.

பொய்யாசிரியருக்கு இதில் என்ன ஆனந்தம்? இவரது சம்பளத்தில் பிடித்தம் செய்து எனது பாதுகாப்புக்கு செலவிடப் போகிறார்களா?

தேர்தலில் இவர்கள் விஷயத்தில் தனி அக்கறை செலுத்தி தனி முடிவு எடுப்பதை இதன் மூலம் பொய்யாசிரியர் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எளிதாக்கி விட்டார்.

அடுத்ததாக பொய்யன் என்ற பெயருக்குச் சொந்தக்காரரும் இதே காரணத்தைச் சொல்கிறார். அதற்கும் மேலே எழுதியது தான் பதிலாகும்.

எனது மைத்துனர் மூலம் சிதம்பரத்தில் ஹஜ் முஹம்மத் சரணடைந்தார் என்று பொய்யர் கூறியதன் மூலம் பொய் சொல்வதில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு நான் தான் காரணம் என்ற வழக்கு மட்டும் இன்றி சிதம்பர ரகசியம் சம்மந்தமான வழக்கையும் சேர்த்து சந்திப்பார். அவரும் நீதிமன்றத்தில் இதை நிரூபிப்பதற்கான வாய்ப்பை பெற இருக்கிறார். அங்கே வந்து இதை நிரூபிக்கட்டும்.

அதே நேரத்தில் ஏர்வாடி காசிம் ஹைதரைத் தான் தாக்கினார். பாக்கரை தாக்கவில்லை என்று நான் எழுதியதைப் பற்றி கூறும் போது அவரால் மறுக்க முடியவில்லை.

நீங்கள் வேலூர் சிறையில் இருந்த போது உங்களுடன் இருந்த ஹைதர் அலியின் குரல் வளையை ஏர்வாடி காசிம் கடிக்க முயன்றார் என்று பீஜே கூறியிருக்கிறாரே என்று கேட்ட போது சிறையில் ஹைதர் அலியைப் பார்த்த சிலர் ஆத்திரமடைந்து தாக்க வந்தனர். அதற்குள் அங்குள்ள சிறைக் காவலர் ஹைதர் அலியை மீட்டு பத்திரமாக ஆழைத்துச் சென்று விட்டனர். இது தான் நடந்தது

என்பது குமுதம் ரிப்போர்ட்டரில் பொய்யர் சொன்னது.

காசிமால் பாக்கர் தாக்கப்படவில்லை என்று நான் எழுதியது உண்மை என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

ஹைதர் அலியை மீட்டு பத்திரகாக அழைத்துச் சென்றனர் என்றால் அவரை மீட்டுச் செல்லும் அளவுக்கு கடுமையான நிலை இருந்தது என்பது இதில் உறுதியாகிறது.

ஹைதர் அலியைப் பார்த்து சிலர் ஆத்திரமடந்ததாக பொய்யர் கூறுகிறார். அந்தச் சிலர் யார்? ஏன் ஆத்திரம்? என்றெல்லாம் குமுத ரிப்போர்டர் செய்தியாளர் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை.

வர்கள் மெண்டல்களா? ஹைதரைப் பார்த்தவுடன் ஆத்திரம் ஏன் வந்தது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. மேலும் அது யார் என்பதையும் அவர் சொல்லாமல் மறைக்கிறார். இந்தக்கேள்விக்கான விடை நான் எழுதிய செய்தியில் இருக்கிறது.

சொன்ன உண்மையை பொய்யராலும் மறைக்க முடியவில்லை.

ஏர்வாடி காசிம் ஹைதரை தாக்கினார் என்று நான் எழுதியது பாக்கர் வாயாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னொரு செய்தியையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மேற்கண்ட பேட்டியில் பொய்யர் பின்வரும் செய்தியையும் கூறுகிறார்.

கொல்லப்பட்டவர் சுன்னத் ஜமாஅத் தலைவர் என்பதாலும் தலைவரின் குடும்பம் சற்று செல்வாக்கு மிகுந்தது என்பதாலும் அவர்கள் ஆத்திரமடைந்து பிஜெவுக்கு எதிரான விளைவுகள் ஏற்படுத்தக் கூடும் என்ற வாய்ப்பும் உள்ளது.

கொல்லப்பட்டவர் பொய்யர் சொல்வது போல் ஒருவரைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு படைபட்டாளம் உடையவர் அல்லர். எத்தனயோ குக்கிராமங்களில் உள்ள ஜமாஅத் தலைவரைப் போல் ஒரு தலைவர் அவ்வளவு தான்.

அப்படி இருந்தும் அவர்களால் தான் பிஜேவுக்கு ஆபத்து உள்ளது என்று பொய்யர் கூறுகிறார். அவர்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்து கொண்டே இப்படி கூறுகிறார் என்றால் அதன் உட்பொருள் என்ன? யாரால் ஆபத்து என்பது அவருக்குத் தெரிந்துள்ளது. அவர்கள் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் திருவிடைச்சேரி ஜமாஅத்தின் பக்கம் பழியைத் திருப்புகிறார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினரும் அல்ல. ஆதரவாளரும் அல்ல. அனுதாபியும் அல்ல. இந்த விபரம் திருவிடைச்சேரியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.

அவர்கள் பொய்யர் சொல்வது போல் பாரதூரமான சக்தியாக இருந்தால் ஹாஜி முஹம்மதுக்குத் தான் ஆபத்து ஏற்படுத்துவார்களே தவிர பீஜேக்கு அவர்கள் ஆபத்து ஏற்படுத்த எந்தக் காரணமும் இல்லை. அப்படி இருந்தும் திருவிடைச்சேரி ஜமாஅத் தான் காரணமாக இருப்பார்கள் என்று பொய்யர் கூறுவது சதிகாரர்களைக் காப்பாற்றத் தான் என்பதை யாராலும் ஊகிக்க முடியும்.

எனக்கு எது நேர்ந்தாலும் அதற்கு திருவிடைச்சேரி ஜமாஅத் காரணம் அல்ல. ஏனெனில் சதிகாரர்களின் சதித்திட்டத்தை திருவிடைச்சேரி சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே நான் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். எனக்கு எது நேர்ந்தாலும் அதிகாரிகள் திருவிடைச்சேரி ஜமாஅத்தின் பக்கம் திசை திரும்ப மாட்டார்கள். யாரை நோக்கித் திரும்ப வெண்டுமோ அவர்க்ளை நோக்கித் திரும்புவார்கள்.

ஒரு ஆள் இருக்கிறார். அவரைத் தீர்த்துக்கட்டி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று யார் காட்டுக்கத்தல் போட்டாரோ அவரை நோக்கியும் சதித்திட்டம் தீட்டியவர்களை நோக்கியும் தான் காவல்துறையின் கவனம் திரும்பும். அதற்கான ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே இவர்களால் ஆபத்து என்று பொய்யர் சொன்னதன் உள் அர்த்தம் குறித்து காவல் துறையினர் தக்க விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரலாம்.

அது போல் நஸ்ருத்தீன் தான் வண்டியில் காசிமைக் கூட்டிச் சென்ற போது பீஜேயிடம் சொல்லி விட்டுச் சென்றதாக வழக்கம் போல் புளுகி இருக்கிறார்.

நான் கேட்ட முக்கிய கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது.

நாங்கள் சென்ற இடம் பிஜேவுக்கு முன் கூட்டியே தெரியும். நான் காசிமைக் காட்டிக் கொடுத்தேன் என்பது பொய்யானது. காஸிமை பீஜே தான் காட்டிக் கொடுத்தார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. அப்போது எங்களைப் பிடித்த போலீஸார் என்னிடம் வெள்ளைக் காகிதத்தில் எழுதி வாங்கிக் கொண்டுதான் அனுப்பி விட்டனர் என்றார்.

அதில் தான் உண்மை ஒளிந்து கிடக்கின்றது.

ஏர்வாடி காசிம் பல வருடமாகத் தேடப்படுபவர். அப்படிப்பட்ட ஒருவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது ஏற்றிச் சென்றவரை எப்படி விடுவார்கள்? கையெழுத்து வாங்கிக் கொண்டு எப்படி அவரை மட்டும் விடுவார்கள்? காசிமுக்கு அடைக்கலம் கொடுத்தவரை அதற்கான பிரிவுகளில் கைது செய்யாமல் விரட்டி விடுவார்களா? அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்யாமல் விடுவார்களா? அவரே காவல் துறைக்கு உதவினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நஸ்ருத்தீன் மீது இது குறித்து எந்த வழக்கும் போடப்படாதது ஏன் என்பதற்கு நஸ்ருத்தினிடமும் பொய்யரிடமும் எந்தப் பதிலும் இல்லை. இதற்கு என்னிடம் பதில் உள்ளது. நஸ்ருத்தீன் தான் காட்டிக் கொடுத்தார். அதற்கு கைமாறாக அவர் தப்புவிக்கப்பட்டார் என்பது தான் அந்தப் பதில்.

எனவே பொய்யரும் நஸ்ருத்தீனும் குமுதம் ரிப்போர்டரில் கூறி இருப்பது நான் எழுதியதை மெய்ப்படுத்தும் சான்றாக அமைந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்களை நான் சுட்டிக் காட்டுகிறேன்.

எனது இந்த இணைய தளத்தில் எழுதப்பட்டதன் எதிரொலியாகவே குமுதம் ரிப்போர்ட்டரின் செய்தி வெளியிடப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் எனது இணைய தளத்தில் நான் எழுதியதை நன்கு அறிந்திருந்த ஜவாஹிருல்லா அவர் சம்மந்தப்பட்டதையும் தமுமுக சம்மந்தப்பட்டதையும் மறுத்திருக்க வேண்டும். ஒரு பக்கம் அளவுக்கு திருவிடைச்சேரி சம்பவத்தை சம்மந்தமில்லாமல் சொன்ன அவர் பல விஷயங்களை மறுக்காததால் நான் எழுதிய அனைத்தும் உண்மை என்பது ஊர்ஜிதமாகிறது.

நஸ்ருத்தீன் சிறையில் இருந்து கடிதம் எழுதினார் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காசிமிடம் பொய் சொல்லி உங்கள் மேல் பழி போட்டு விட்டேன் என்று நஸ்ருத்தீன் சிறையில் இருந்து கடிதம் எழுதினார் என்று நான் கூறி இருந்தேன். இதை ஜவாஹிருல்லாவும் மறுக்கவில்லை. நஸ்ருத்தீனும் மறுக்கவில்லை. பொய்யரும் மறுக்கவில்லை. இதில் இருந்தே காட்டிக் கொடுத்தது யார் என்பது உறுதியாகி விடுகிறது.

அப்படி கடிதம் எழுதவில்லை என்று அவர்கள் கூறினால் நான் அதை எடுத்துக் காட்ட முடியாது. கடிதம் அவர்களிடம் தான் உள்ளது. வெளிநாட்டில் உள்ள சில கிளைகள் அன்று இது பற்றி கேட்ட போது அதன் ஜெராக்ஸை அந்தக் காலகட்டத்தில் நாங்கள் அனுப்பினோம். அவர்களிடம் வேண்டுமானால் அந்தக் கடிதம் இருக்கலாம்.

பிஜேயிடம் ஆதாரம் இல்லை என்று அவசரப்பட்டு மறுத்து விட மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இது குறித்து பல தர்பியா நிகழ்ச்சிகளில் அவர்களே விளக்கியுள்ளனர். அந்த் வீடியோவை யாராவது வைத்திருந்தால் சிக்கலாகி விடும் என்பதைக் கவனித்து அவர்கள் பதில் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அது போல் ராஜா ஹுஸைன் தொடர்பாக நான் எழுதியதை ஜவாஹிருல்லாவும் பொய்யரும் மறுக்காததால் அதுவும் உண்மை என்பது உறுதியாகிறது. இன்னும் நான் சொன்ன எந்த விஷயத்தையும் அவர்கள் மறுக்கவில்லை என்பதால் இணைய தளத்தில் நான் எழுதிய எட்டு தொடர்களும் முழு உண்மை என்பது உறுதியாகிறது. அல்ஹம்து லில்லாஹ்

தொடர்_10

உயிருக்குத் துணிந்தவர்கள்

பீஜே உயிருக்குப் பயந்து விட்டார் என்று உயிருக்குத் துணிந்தவர்கள் சிலர் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரையும் உடமையையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் அது குறித்து உரிய ஏற்பாடுகள் செய்வது மார்க்கத்தின் கடமையாகும். அந்தக் கடமையைச் செய்வதைக் கோழைத்தனம் என்று யாராவது கூறினால் அவர்கள் மூடர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே நேரத்தில் யாராவது மிரட்டுகிறார்கள் என்பதற்காக கொள்கையை மாற்றிக் கொள்வது, மிரட்டியவர்களிடம் சரணடைவது, ரவுடிகளுக்கு அடி பணிவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தான் கோழைத்தனம். அல்லாஹ்வின் அருளால் இந்தக் கோழைத்தனம் என்றும் என்னிடம் இருந்ததில்லை..

இப்போது கூட எனக்கு யார் மிரட்டல் விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேனோ அவர்களுக்கு எதிராக என் கருத்துக்களை முன்பை விட அழுத்தமாகவும் வீரியமாகவும் பதிவு செய்து வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் மிரட்டல் வருவதற்கு முன்னால் இவர்களைப் பற்றி நான் அனைவரையும் சென்றடையக் கூடிய வகையில் நான் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறேன்.

எனக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுடன் இரகசிய சந்திப்பு நடத்தி டீலிங் பேசி தம்மைக் காத்துக் கொண்ட கோழைகளைப் போல் நான் நடக்கவில்லை. என் சக்திக்கு உட்பட்டு என்னைப் பாதுகாக்க என் மார்க்கம் கட்டளை இட்டுள்ளதால் அதை மட்டும் தான் செய்கிறேன். ஆனால் எந்தக் கொள்கைக்காக எனக்கு அச்சுறுத்தல் உள்ளதோ அந்தக் கொள்கையை முன்னிலும் தீவிரமாகவும் உறுதியாகவும் நான் சொல்வேனே தவிர ரவுடித்தனம் செய்பவர்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

இவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் நான் நான் வரிக்கு வரி பதில்சொல்வதே இதற்கு போதுமான ஆதாரமாகும்.

ஆனால் உயிருக்குத் துணிந்து விட்டதாக உதார் விடும் பேர்வழிகள் தான் உண்மையில் வடிகட்டிய கோழைகள். தன்னுடன் பத்துப் பேர் இருக்கிறார்கள் என்பது தான் அவர்களின் பலமே தவிர தனிப்பட்ட முறையில் இவர்கள் தான் கோழைகள். இது குறித்து நான் இரண்டாம் தொடரில் வெளியிட்ட வீடியோவில் சொல்லி இருக்கிறேன்.

இப்போது இருப்பதை விட இன்னும் நூறு மடங்கு அச்சுறுத்தல் எனக்கு ஏற்பட்டாலும் அதற்காக நான் தீயவர்களுக்கு எதிரான கடும்போக்கை கடுகளவும் குறைத்துக் கொள்ள மாட்டேன்.

ல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் என்னை அணுகாது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

பணம் சம்பாதிப்பதற்காக செய்யும் ரவுடித்தனத்தை ஜிஹாத் என்று சித்தரிக்கும் பித்தளையப்பாக்கள் எனக்கு எதிராகத் திட்டம் தீட்டிக் கொள்ளட்டும். இன்ஷா அல்லாஹ் அவர்களை விட வீரமுள்ளவனாகவே நான் இருப்பேன்.

தொடர்_11

குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா?

கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகின்றது.

இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை காவல் துறை ஒட்டுமொத்தமாக அரசுக்குக் கட்டுப்படாமல் ஸ்ட்ரைக் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக சமூக விரோதிகளை ஏவி விட்டனர். சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளி 19 பேரைக் கொன்று குவித்தனர். இன்னும் சொல்லிமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்தனர்.

இந்தக் கொடுமையை மனித உரிமைக் கமிஷன் சிறுபான்மைக் கமிஷன் வரை அப்போதைய தமுமுக மூலம் நாம் கொண்டு சென்றோம்.

தமிழக அரசு இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக முஸ்லிம் விரோதப்போக்கை அப்போதைய முதல்வர் வெளிப்படையாகக் காட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் இதற்குப் பழி தீர்ப்பதற்காக கோவையில் சில இடங்களில் குண்டு வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தகவல்கள் தமுமுக தலைமைக்குக் கிடைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவார்கள் என்று அப்போதைய தமுமுக நிர்வாகிகள் கவலைப்பட்டோம். மேலும் இதன் விளைவு கடுமையாக இருக்கும்; ஏற்கனவே கோவை கலவரம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கோவை முஸ்லிம்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் அவசரப்பட்டு இச்செயலைச் செய்தவர்கள் காகாலத்துக்கும் இன்னல்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

மேலும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவம் நடந்து விட்டால் அதற்கு முன் நடந்த கலவரம், முஸ்லிம் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு நீதி கோரும் தார்மீக பலத்தை நாம் இழந்து விடுவோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம்.

இந்தச் சமுதாயம் தாங்கிக் கொள்ள முடியாத கடும் விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்றால் குண்டு வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

எனவே எங்கெங்கே குண்டு வைக்கப்படவுள்ளன என்ற தகவலை விரிவாகத் திரட்டினோம்.

அப்போது காவல் துறை டிஜிபி யாக இருந்த அலெக்ஸாண்டர் அவர்களைச் சந்தித்து விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

நான், ஜவாஹிருல்லா, ஹைதர் இன்னொருவர் (நினைவில் இல்லை. அநேகமாக விஞ்ஞானி ஜலீலாக இருக்கலாம்) ஆக நான்கு பேர் டிஜிபியைச் சந்தித்தோம். பொதுவாக நான் இது போன்ற சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி நானும் அதில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.

இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்பட்டவுள்ளன. அதனால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் ஆதாரத்துடன் நாங்கள் எடுத்துச் சொல்லி குண்டு வெடிக்காமல் எப்படியாவது தடுத்து விடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

கவனமாகக் கேட்டுக் கொண்ட டிஜிபி இந்த தகவலை நீங்கள் கோவை காவல் துறையிடமும் தெரிவியுங்கள் நானும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதன் படி நம்பகமானவர்கள் மூலம் கோவை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முழு விபரமும் சொல்லப்பட்டது.

அவர்கள் நினைத்திருந்தால் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகளைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் காவலர்கள் குடி இருப்பும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் மட்டும் குண்டு வெடிக்காமல் காவல் துறையினர் காப்பாற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில் குண்டு வெடிப்பைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் தடுக்கவில்லை. தடுக்க அவர்கள் விரும்பவில்லை.

19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் மற்றும் பலர் காயப்படுத்தப்பட்டதிலும் சொத்துக்கள் சூறையாடியதிலும் கோவை காவல் துறையினர் விசாரணையை எதிர் நோக்கி இருந்தார்கள். அதில் இருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அதை விடப் பெரிய கொடுஞ்செயல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து நிகழ வேண்டும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.

இதன் காரணமாக அவர்கள் குண்டு வெடிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

குண்டு வெடிப்பைத் தடுப்பதற்காக நாம்செய்த இந்த முயற்சி யாரையும் காட்டிக் கொடுப்பதற்காகச் செய்தது அல்ல. மாறாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி செய்த காரியமாகும். இன்னும் சொல்லப் போனால் குண்டு வைத்தவர்களுக்குக் கூட இது நன்மையாக அமைந்திருக்கும்.

இதையும் காட்டிக் கொடுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஒட்டு மொத்த சமுதாயத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரியம் ஒன்று நடக்க இருப்பது தெரிய வந்தால் இப்போதும் அதைத் தடுக்க நான் முயல்வேன். இது காட்டிக் கொடுத்ததில் சேராது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

14.09.2010. 7:51 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account