Sidebar

22
Sun, Dec
38 New Articles

பைபிளில் விதி - தலைவிதி - பற்றி கூறப்பட்டுள்ளதா

இஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பைபிளில் விதி - தலைவிதி - பற்றி கூறப்பட்டுள்ளதா

கேள்வி

பைபிள் விதியைப் பற்றி ஏதும் சொல்கின்றதா/ தயவு செய்து விளக்கவும். என் கிறித்தவ நண்பன் பைபிள் விதியைப் பற்றி எங்கும் சொல்லவில்லை என்கிறான். பைபிள் மூலமே பதில் கூற வேன்டும்.

ஜெர்மனியில் இருந்து பைசல் அன்வாரி.

பதில்

எல்லாம் விதிப்படி நடக்கின்ற்ன என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு எதிராக கிறித்தவ போதகர்கள் பல் குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாம் விதிப்படி என்றால் சொர்க்க நரகம் ஏன்? பாவம் செய்தவன் விதிப்படி தானே பாவம் செய்கிறான்? அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.

இந்த நிலையில் நீங்கள் கேட்டுள்ள கேள்வி மிகவும் அவசியமான கேள்வியாகும். இஸ்லாத்தில் விதி குறித்த நம்பிக்கை உள்ளது போல் பைபிளிலும் விதி குறித்த நம்பிக்கையைப் பேசும் வசனங்கள் பல உள்ளன. ஆனால் கிறித்தவ போதகர்கள் அவற்றைப் படிக்காமல் இஸ்லாத்துக்கு எதிராக கேள்வி கேட்கின்றனர்.

 

8. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 13 வது அதிகாரம் 8 வது வசனம்

12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 20 வத அதிகாரம் 12 வது வசனம்

13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.

14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

15. ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 20 வது அதிகாரம் 13,14,15 வது வசனங்கள்

18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார்.

19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 22 வது அதிகாரம் 18, 19 வது வசனம்

26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.

27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 21 வது அதிகாரம் 26, 27 வது வசனம்

3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

4. என் நாவில் சொல்பிறவாததற்கு முன்னே,இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 139 வது அதிகாரம் 3, 4 வது வசனம்


16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

சங்கீதம் 139வது அதிகாரம் 16 வது வசனம்

21. அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும் போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப் பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.

உபாகமம் 31 வது அதிகாரம் 21 வது வசனம்

2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

1ம் பேதுரு 1 வது அதிகாரம் 2 வது வசனம்

29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 10 வது அதிகாரம் 29லிருந்து 31 வரை

28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8 வது அதிகாரம் 28 வது வசனம்

10. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியான போது,

11. பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,

12. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.

13. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

14. ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.

15. அவர் மோசேயை நோக்கி: எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச்சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

16. ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

18. ஆதலால் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன்யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.

20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்குஅதிகாரம் இல்லையோ?

22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,

23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

ரோமர் 9 வது அதிகாரம் 10 லிருந்து 23 வரை

7. உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

1 ம் கொரிந்திரியர் 2 வது அதிகாரம் 7 வது வசனம்

இது போல் விதியின்படியே எல்லாம் நடக்கின்றன எனக் கூறும் பல வசன்ங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஏராளமாக உள்ளன,.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account