இறைவனின் திருப்பெயரால்
அடிமை முறை ஒழிக்கப்பட்டது கடந்த பத்தொன்பதாம் நுாற்றாண்டில்தான். இயந்திரங்களும், தொழிற்புரட்சியும்தான் அதை சாத்தியமாக்கியதே தவிர எந்த சமூக செயற்பாட்டாளரும் அதை உருவாக்கவில்லை. இதன் அடிப்படையில்தான் நாம் அடிமைத்தனத்தை அணுக வேண்டும்.
போர்களில் பிடிக்கப்பட்ட ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக்கும் வழக்கம் இஸ்லாம் உருவாக்கிய வழக்கம் அல்ல. மாறாக. இஸ்லாம் வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவான நடைமுறை. உலகம் முழுவதும் நடைமுறையில் இருந்த ஒரு விஷயத்தில் இஸ்லாம் எவ்வாறு செயல்பட்டது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.
பழைய உலகம்
இஸ்லாத்தின் அடிமை தொடர்பான சட்டத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் அக்கால உலக சூழலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் வாழும் உலகில் நாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐநா மன்றம் இருக்கிறது. உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் அகதிகளின் நலன்களை கவனித்து கொள்ள ஐநா அகதி முகமை இருக்கின்றது. உலக சுகாதார நிறுவனம், மனித உரிமை அமைப்பு, ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், சர்வதேச நீதிமன்றம், செஞ்சிலுவை சங்கம் போன்ற எண்ணற்ற அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற எந்த அமைப்புகளும் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலைமை என்றால் 500, 1000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அக்காலத்தில் இரண்டு நாடுகளோ அல்லது இரண்டு கூட்டங்களோ போரிட்டால் அதில் அதிகம் மடிவது ஆண்களே. காரணம் அக்கால போர்கள் ஊரை விட்டு வெகு துாரம் தள்ளி சமவெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் நடைபெறும். ஆகவே அதில் கலந்து கொள்ளும் ஆண்களே அதிகம் மடிந்தனா். அப்படி ஒரு நாடு தோற்கடிக்கப்படும் பொழுது தோற்ற நாட்டில் அதிகமாக பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் எஞ்சியிருப்பர்.
போரில் பிடிபட்ட பெண்களை அடிமைகளாக்குவது
இங்குதான் ஒரு பிரச்சினை எழுகிறது. இந்த கூட்டத்தை யார் பாதுகாப்பது? யார் இவர்களின் உணவுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது? அவர்களை அங்கேயே விட்டு சென்றால் அவர்களை இன்னொருவர் கைப்பற்றிக் கொள்வார்கள். ஆகவே போரில் கைப்பற்றப்பட்ட பொருள்களோடு அவர்களையும் எடுத்துச் செல்வதே சிறந்தது. அதனால்தான் அன்றைய உலகில் அனைவரும் இந்த நடைமுறையே பின்பற்றினார்கள்.
பிடிக்கப்பட்ட கைதிகளில் ஆண்களை கடுமையான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் வலிமை தேவைப்பட்டதால் ஆண்களே அதிகம் தேவைப்பட்டனர். ஆனால், பெண்களை என்ன செய்வது? பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளுக்கே தேவைப்பட்டனர். 90 சதவீதம் விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ள காலத்தில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆண்களுக்கே வேலை இல்லாத போது பெண்களின் நிலைமை மிகவும் மோசம். சுதந்திரமான பெண்களே தங்களின் வாழ்கைத் தேவைகளுக்கு தந்தையையோ கணவணையோ நம்பியிருக்கும்போது அடிமைப்பெண்கள் எங்கு செல்வர்? ஆகவேதான் பெரும்பாலும் செல்வந்தர்களே அதிகம் அடிமைகளை வைத்திருந்தார்கள்.
போரில் பிடிபட்ட பெண்களிடம் உடலுறவு கொள்ளுதல்
குற்றச்சாட்டு 1: பெண்களை பிடிப்பதற்காகவே போர் செய்தார்களா?
பனுா முஸ்தலிக் கூட்டத்தார் உஹத் போரில் முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா குறைஷிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். மேலும் அவர்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர் என்ற தகவலும் கிடைக்கவே நபி ஸல் அவர்கள் பனுா முஸ்தலிக் கூட்டத்தாருக்கு எதிராக போரிட்டனர். திரிபு வேலை செய்யும் கிறுத்துவ கூட்டம் இதை மறைத்துவிட்டு வெறும் பெண்ணாசையால் போரிட்டார்கள் என்று பொய் சொல்கின்றனர்.
ஆனால் உண்மையில் பெண்ணுக்காக கொலை செய்த வரலாறு கிறுத்துவ கூட்டத்திற்கே உண்டு.
பைபிளில் பெண் அடிமைகளின் நிலை:
உயர்சாதி பெண்களை தேடி சென்றார்கள் என்று இந்த கள்ளக்கூட்டம் கதறுகிறது. ஆனால் உண்மையில் அழகான பெண்களை தேடி சென்றது இந்த கூட்டங்கள்தான் என்பதை கீழ்கண்ட பைபிள் வசனம் விளக்குகிறது.
திராட்சத்தோட்டங்களில் பதுங்கியிருந்து பெண்களை பிடித்தல்:
20. அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,21. சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள். நியாயாதிபதிகள்21:20,21
அழகான பெண்களை தேடி பிடித்தல்:
10. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, - உபாகமம் 21
இயேசு கூறுகிறார் " நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்". வெளி22-16.
இயேசு தன்னை பெருமையோடு எந்த தாவீது ராஜாவின் வாரிசு என்று சொன்னாரோ அந்த தாவீது ராஜாதான் ஒரு பெண்ணுக்காக அதுவும் திருமணமான ஒரு பெண்ணை அடைய வெறி கொண்டு அவள் கணவனையே கொன்றவர் 2 சாமுவேல் 11:5-27. அவரைத்தான் புதிய ஏற்பாட்டின் கடைசி பகுதியான வெளிப்படுத்தலில் இயேசு தனது முன்மாதிரி என்கிறார்.
குற்றச்சாட்டு 2: அடிமைப்பெண்களிடம் அஸ்ல் செய்வது
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். புகாரி 2229
போரில் கைதியாக இருக்கும் பெண்கள் பிணைத்தொகை கிடைக்கும் வரை அல்லது வேறு ஒருவருக்கு விற்கப்படும் வரை ஒருவரின் பராமரிப்பிலேயே இருப்பார். அப்போது அந்த எஜமானருக்கும் உடல் ரீதியான தேவை இருக்கும். அதேபோல் அப்பெண்ணிற்கும் உடல்ரீதியான தேவை இருக்கும். அவர் தன் இனத்தாரால் மீட்கப்படும் வரை அல்லது வேறொருவர் வாங்குவதற்கு நாட்களாகளாகும் மாதங்களாகளாகும். அதுவரை இருவரில் ஒருவர் தவறான வழியை தேடக் கூடும்.
எனவே தான் அஸ்ல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக போர்களில் பிடிக்கப்படும் பெண்களை நன்றாக அனுபவித்துவிட்டு பிறகு அவர்களை கர்ப்பமாக்கி பின்னர் அவர்களை கைவிட்டு விடுவார்கள். அவர்களை விலைக்கு வாங்கிய எஜமானர்களும் அவள் பிள்ளையை கவனிக்க மறுத்துவிடுவார்கள். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். ஆகவே அஸ்ல் என்பது பல வகைகளில் மேலான ஏற்பாடாகும்.
பைபிளில் பெண் அடிமைகளின் நிலை:
அஸ்ல் செய்வதை குறித்து அங்கலாய்க்கும் இந்த கிறித்துவ கூட்டம் பைபிளில் போரில் பிடிபட்ட பெண்களை என்ன செய்தது?
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?...... 17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். – எண்ணாகமம் 31: 14-18
அதாவது கன்னி பெண்ணாக இருந்தால் இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் திருமணமான பெண்ணென்றால் உடனடியாக மரணம் தான்.
குற்றச்சாட்டு 3: குடும்பத்தை இழந்த பெண்களிடம் உடலுறவு கொள்வதா?
கணவனையும் தந்தையையும் சகோதரனையும் இழந்த பெண்களை வலுக்கட்டயமாக அனுபவிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். இது உண்மையில் தவறான வாதமாகும். ஏனெனில் ஒருவேளை முஸ்லிம்கள் போரில் தோற்றிருந்தால் அப்பெண்களின் கணவர்கள் தந்தையர்கள் சகோதரர்கள் இதே போல் முஸ்லிம்களை செய்திருப்பார்களே. ஒட்டுமொத்த உலகமும் கைதிகளை அடிமைகளாக்கும்போது இஸ்லாம் மட்டும் அதைத் தடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒருவேளை எதிரிகள் நாங்கள் வென்றால் உங்கள் பெண்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று அனைவரும் உடன்படிக்கை எடுத்தால், இஸ்லாமும் அதே நடைமுறையை பின்பற்றி இருக்கும், அனைவரும் சேர்ந்து இனிமேல் யாரையும் அடிமைகளாக்குவதில்லை என்று முடிவெடுத்தாலே தவிர இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை. அதனால்தான் அடிமைமுறை பத்தொன்பதாம் நுாற்றாண்டின் கடைசியில் ஒழிக்கப்பட்டது.
பைபிளில் பெண் அடிமைகளின் நிலை:
கணவனை தந்தையை சகோதரனை இழந்த பெண்களை பைபிள் ஐயோ! பாவம்! என்று விட்டுவிட்டதா? போரில் பிடிபட்ட பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பைபிள் விரிவாக step by step ஆக சொல்கிறது.
STEP1: திருமணமானவளை கொலை செய்தல்:
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?...... 17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள் எண்ணாகமம் 31: 14-17
STEP2: கன்னியை விட்டுவைத்தல்
18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். – எண்ணாகமம் 31: 14-18
STEP3: அழகானவளை தேர்வு செய்தல்
11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, - உபாகமம் 21
STEP4: தலையை மொட்டை அடித்தல்
12. அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, உபாகமம் 21
பிறகு அவளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு அவமானப்பட்டுத் தான் ஒருஅடிமைப்பெண் பைபிளில் வாழ வேண்டும்.
அடிமை முறை x கூட்டு பலாத்காரம்
பெண்களை அடிமைகளாக எடுத்துக்கொள்வது பலமடங்கு அப்பெண்களுக்கு பாதுகாப்பனது. காரணம் ஒரு போரில் வென்றவுடன் உடனே அந்த வீரர்கள் எதிரியின் நாடுகளுக்கு சென்று கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழிப்பது சர்வ சாதாரணமாக நடைபெறுவது. இன்னும் சொல்லப்போனால் கூட்டுப்பலாத்காரம் செய்து பல பெண்களை சர்வ சாதாரணமாக கொன்று விடுவார்கள். வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் இருந்தாலும் மிக அருகில் சில உதாரணங்களை பார்ப்போம்..
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவம் மேற்கு ஜெர்மனியில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தி தொண்ணுாராயிரம் பெண்களை கற்பழித்ததாக ஜெர்மனி நாளேடு டெர் ஸ்பீகல் 2016ம் ஆண்டு தெரியப்படுத்தியது. தன்னை கம்யூனிஸ நாடு என்று மார்தட்டிய சோவியத் யூனியனின் படைகள் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கை சுமார் இருபது லட்சம் என்று மேற்கத்திய வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பல லட்சக்கணக்கான பெண்கள் சுகாதாரமின்மை, செக்ஸ் நோய்த் தொற்றுகள், கருகலைப்பு, கூட்டு பலாத்காரத்தில் ஏற்பட்ட நிரந்தரமான காயங்கள் மற்றும் பல மணி நேரம் மாறி மாறி கற்பழித்ததால் லட்சக்கணக்கான பெண்கள் இறந்தும் போனார்கள். வரலாற்றில் இந்த கருப்பு பக்கங்கள் நடந்தது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. மாறாக வெறும் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக. நடத்தியது தங்களை நாகரிகத்தில் முன்னேறியதாக மார்தட்டிக் கொண்ட நாடுகள். அதுவும் கிறுத்துவ நாடுகள். இந்த லட்சணத்தில் தான் இவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கின்றனர்.
ஆனால், இஸ்லாமிய மார்க்கமோ கைதியாக பிடிக்கப்பட்ட பெண்களை இரக்கத்துடன் நடத்த உத்தரவிட்டது. முறையாக கைதிகளை பிரித்துக் கொடுத்தது. விரும்பியவர் வைத்துக் கொள்ளலாம் அல்லது அவர்களை விற்றுவிடலாம். கைதிகளை வாங்கியவர்கள் அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்றுத்தர வேண்டும் (புகாரி 2544). அவர்களை விரும்பினால் தாங்களே திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது நல்ல அடிமைகளுக்கு திருமணம் செய்த வைக்கலாம்.
பைபிளில் மேலும் அடிமைப்பெண்களின் நிலை
தந்தையே மகளை அடிமையாக விற்பனை செய்யலாம்
7. ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. யாத்திராகமம்21 அதிகாரம்
இஸ்லாத்தின் பெண்களின் நிலை
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார் கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள் புகாரி 5138.
கற்பழிக்கலாம் காசு கொடுக்கலாம்
நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால். அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்;-உபாகமம்22:28,29
இஸ்லாத்தின் நிலை:
2. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! (திருக்குர்ஆன் 24:2)
மோசமான எஜமானனுக்கும் பணிவது தேவனுக்குப் பணிவது
வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்
1பேதுரு2:18
இஸ்லாத்தின் நிலை:
'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:
'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார் – புகாரி 30மோசமாக நடத்தும் எஜமானனுக்கு அறிவுரை கூறாமல் அடக்குமுறைக்கு ஆளான அடிமையை கீழ்ப்படியச் சொல்கிறது, இதுதான் கிறித்துவத்தின் லட்சணம். ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ வெறும் வார்த்தைகளால் கடிந்து பேசிய எஜமானனை சரியாக நடக்குமாறு உபதேசிக்கிறது.
இந்த அளவோடு இஸ்லாம் நின்றுவிட்டதா என்றால் அதுதான் இல்லை. மாறாக அடிமைத்தனம் என்பது ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
அடிமைகளை விடுதலை செய்ய ஊக்குவித்தல்
நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். திருக்குர்ஆன் 4:92
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. திருக்குர்ஆன் 5:89
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும், தர்மங்கள் உரியனவாகும். திருக்குர்ஆன் 9:60
திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும்.435 உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்!301 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்! திருக்குர்ஆன் 24:33
சொல்லில் மட்டுமல்ல செயல்படுத்தியும் காட்டியது
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!" என்று கூறினார்கள். புகாரி 2155
அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். புகாரி 1054
உச்சகட்டமாக அடிமையை விடுதலை செய்வதை இறைநம்பிக்கையின் அடையாளமாக இஸ்லாம் சொல்லியது.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஜகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
திருக்குர்ஆன் 2:177
இருவழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?அவன் கணவாயைக் கடக்கவில்லை.கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல்.
திருக்குர்ஆன் 90:10-17
M. Fakrudeen Ali Ahammed
9790345345
அடிமை முறை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode