அஸ்ஸலாமு அலைக்கும்,
முதலில் இஸ்லாத்தில் அடிமைத்தனத்தை பற்றி பேசும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வருவதற்கு முன்னர் இந்த உலகத்தில் அடிமைத்தனம் இல்லாமல் இருந்தது போலவும். இஸ்லாம் தான் முதன் முதலாக அடிமைத்தனத்தை தோற்றுவித்தது போலவுமான கருத்தோடுதான் பேசுகிறார்கள். முதலில் அடிமைத்தனம் உருவான வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும்.
அடிமைகள் உருவான வரலாறு
“Mesapotamian Code of Hammurabi” என்ற கல்வெட்டின் படி அடிமைத்தனம் சுமார் கிமு 3500 ஆண்டுகளில் ஆரம்பம் ஆகிறது. சுமார் நபிகள் நாயகம் வருவதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னரே அடிமைத்தனம் ஆரம்பம் ஆகிறது. 4000 வருடங்களாகவே அடிமைகளும் அவ்ரகளுக்கு எதிரான கொடுமைகளும் நடந்தது தான் வருகின்றன.
யார் அடிமைகள்?
நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்தில் உலகம் முழுவதிலும் பல காரணங்களுக்காக மக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர்
அவைகள்,
- பெரும்பான்மையான அடிமைகள் போரின் மூலமாக அடிமைகள் ஆக்கப்பட்டனர். போரில் வெற்றி பெற்ற நாட்டினர் தோல்வி அடைந்த நாட்டின் படை வீரர்களை கைதிகளாக பிடித்து வந்தது அடிமைகள் ஆக்கினர்.
- போரில் வெற்றி பெற்ற நாட்டினர் தோல்வி அடைந்த நாட்டின் உள்ளே சென்று போரில் கலந்து கொள்ளாத பொதுமக்களை கைதிகளாக பிடித்து வந்து அடிமைகள் ஆக்கினார்.
- வாங்கிய கடனுக்கு பகரமாக கடன் வாங்கியவரையோ அல்லது வாங்கியவரின் குழந்தைகளையோ அடிமைகளாக பிடித்து கொண்டனர்.
- சுதந்திரமாக உள்ள ஒருவரை கடத்தி சென்று அடிமை சந்தையில் விற்று அடிமைகள் ஆக்கினர்.
- ஏற்கனவே அடிமைகளாக இருப்பவர்களின் குழந்தைகளும் அடிமைகள் ஆக்கப்பட்டனர்.
மேல் கூறப்பட்ட பல வழிகளில் அடிமைகள் உருவாகினர்.
ஒரு சில காலக்கட்டத்தில் அடிமைகளின் எண்ணிக்கை ஒரு நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. அதிகமான அடிமைகள் இருந்ததினால் அடிமைகளை வாங்கவும் விற்கவும் “அடிமைகள் சந்தை” உருவானது. அதில் அடிமைகளை வாங்கவும் விற்கவும் தொடங்கினர்.
அடிமைகளுக்கெதிரான கொடுமைகள்
அடிமைகள் பெரும்பாலும் மிக கடினமான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டார்கள். ஒரு நாட்டில் கட்டப்படும் அரண்மனைகள், பெரிய கட்டிடங்களை கட்டுவதற்காக அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். ஒரு சில மன்னர்கள் வேலைக்கு அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே சிறிய நாடுகளின் மீது போர் தொடுத்து அங்குள்ள மக்களை அடிமைகளாக பிடித்து வந்தார்கள்.
இந்த அடிமைகளுக்கு தங்கள் பார்க்கும் வேலைகளுக்கு எந்த வித ஊதியமும் வழங்கப்படவில்லை. சரியான உணவும் வழங்கப்படாமல் கடுமையான வேலைகள் வாங்கப்பட்டனர்.
அடிமைகளிடம் அதிகமான வேலைகளை வாங்குவதற்காக, அவர்களின் வேலைகளில் தொய்வு ஏற்படும் போது சாட்டைகளால் அடிக்கப்பட்டனர். கர்ப்பிணி பெண்களிடம் கூட எவ்வித இறக்கமும் காட்டப்படவில்லை. குழந்தையை ஈன்றெடுத்த அடிமைப் பெண்கள் கூட குழந்தை பெற்ற உடனே வேலைக்கு செல்வதற்கு அனுப்பப்பட்டனர்.
அடிமைகளின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. அவர்களால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. அடிமைகள் ஒரு உயிராகவே மதிக்கப்படவில்லை. அதாவது ஒரு அடிமையின் எஜமான் அந்த அடிமையை அடித்து கொன்றுவிட்டால் கொண்றவர்க்கு எதிராக எந்த வழக்கும் பாயாது.
அடிமைகள் செய்த தவறுக்காக நிர்வாண படுத்தி சாட்டைகளால் அடிக்கப்பட்டனர், கை கால்கள் கட்டப்பட்டு வெயிலில் சுடுமணலில் வீசப்பட்டனர், மிருகங்களிடம் சண்டை போட வைத்து அவைகளுக்கு அவர்களை உணவாக்கினர். அடிமைகளுக்குள்ளேயே சண்டை போட வைத்து ரசித்தனர். கை கால்களை வெட்டி ஊனமாக்கினர்.
பெண் அடிமைகள் கூட்டாக கற்பழிக்கப்பட்டனர். நண்பர்களை விருந்த்துக்கு அழைத்து அவர்களுக்கு அந்த பெண் அடிமைகளை வழங்கி அவர்களின் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்தனர். அவர்களை விபச்சார தொழிலுக்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்தனர்.
நபிகள் நாயகம் காலத்தில் அடிமைகள்
நபிகள் நாயகம் வருகைக்கு பின்னர், முதலில் அவர்கள் அடிமைகள் உருவாகும் வழிகளை குறைத்தார்கள். போர் கைதிகளை தவிர வேற யாரையும் அடிமைகள் ஆக்க கூடாது என்றார்கள்.
“மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்'. ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன். இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி)” (நூல் புகாரி 2227, 2270)
அடிமைகள் விசயத்தில் எவ்வாறு நடந்தது கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கூறிய அறிவுரை. பின்வரும் செய்தியில் இருந்து.
நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘‘நீர் இவருடைய தாயைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசினீரா” என்று கேட்டார்கள்.
பிறகு, ‘‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான்.
ஆகவே, எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர், தம் சகோதரருக்கு தாம் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.புகாரி 2545
மேலே கூறப்பட்ட ஒரு செய்தியே போதுமானது அடிமைகளிடம் எவ்வாறு நடந்தது கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் எவ்வாறு கட்டளையிட்டு உள்ளார்கள் என்பதற்கு.
அடிமைகள் உங்கள் சகோதரர்கள் என்ற ஒரு வார்த்தையே அடிமைகள் விசயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) கொண்டு வந்த மிகப் பெரிய புரட்சி. அடிமைகள் உயிரினங்களுக்கும் கீழாக பார்க்கப்பட்ட காலத்தில் அடிமைகளை சகோதரர்களாக பார்க்க சொன்னார்கள்.
சரியான உணவும் உடையும் வழங்கப்படாத காலத்தில் நீங்கள் உண்ணுவதையே அவர்களுக்கும் கொடுங்கள், நீங்கள் உடுத்துவது போலவே அவர்களுக்கும் கொடுங்கள் என்று மக்களுக்கு கூறினார்கள்.
அடிமைகளிடம் மிக கடுமையான வேலைகள் வாங்கப்பட்ட நேரத்தில் அவர்களால் முடியாத வேலையே வழங்காதீர்கள் அவ்வாறு வழங்கினால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.
பெண் அடிமைகள்
இந்த பெண் அடிமைகள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் போர் நடக்கும் பொழுது எதிரி நாட்டு படை வீரர்களுக்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பார்கள். இந்த பெண்களால் போரில் எதிர் நாட்டு வீரர்கள் பின் வாங்கி செல்லாமல் இருப்பார்கள்.
மற்றும் அடிமை சந்தைகளில் இருந்ததும் பெண் அடிமைகளை வாங்கி வருவார்கள்.
பெண் அடிமைகள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொண்டிருந்த காலத்தில் ஒரு பெண் அடிமையை ஒரு எஜமானனின் கீழ் கொண்டு வந்தார்கள் அந்த எஜமானனை தவிர வேறு யாரும் அவளை நெருங்க கூடாது.
அந்த பெண்களை அவர்கள் வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்தி கொள்வார்கள். அந்த எஜமானனின் கீழ் பல காலங்கள் அவர்கள் வேலை செய்வார்கள். ஆண்களை போலவே பெண்களும் உணர்ச்சி உள்ளவர்களாவே இருப்பார்கள். தன்னுடைய உணர்ச்சிகளை தீர்த்து கொள்வதற்காக அவர்கள் தவறான பாதையில் சென்று விட கூடாது என்பதற்காக அந்த எஜமானன் மட்டும் உடல் ரீதியாக அவளை அடைந்து கொள்வதற்கு அனுமதி அளித்தார்கள்.
அவர்கள் விரும்பினால் அந்த பெண் அடிமைகளை அவர்கள் திருமணமும் செய்து அவர்களை மனைவியாகவும் ஆக்கி கொள்ளலாம். பெண் அடிமைகள் பாலியல் சுகத்திற்க்காக சின்னாபின்னமாக ஆக்கப்பட்ட காலத்தில் அவர்களை திருமணம் செய்து கொள்ள ஊக்கப்படுத்தினார்கள். இதன் மூலம் அவர்கள் அடிமை எந்த அந்தஸ்திலிருந்த்து மனைவி என்ற அந்தஸ்திற்கு வந்து விடுவார்கள்.
“உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள்”
குர்ஆன் 4:25
மேலே கூறப்பட்ட குர்ஆன் வசங்களின் படி அவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது அவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று இறைவன் கட்டளை இடுகிறான்.
“மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்”
குர்ஆன் 24:33
அடிமை பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி அதன் மூலம் பொருள் ஈட்டுவதை இறை கட்டளையின் படி தடுத்தார்கள்.
இதன் மூலம் பெண் அடிமைகளின் வாழ்க்கையை சீராக்கியது இஸ்லாம்.
நபிகள் நாயகம் ஏன் அடிமை முறையை முற்றிலுமாக ஒழிக்கவில்லை?
அரேபிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக இருந்த நபிகள் நாயகம் ஏன் தன்னுடைய நாட்டில் அடிமை முறையை முழுமையாக ஒழிக்கவில்லை என்ற காரணத்தை கீழே காணலாம்,
- போர் புரிய வரும் எதிரி நாட்டினர் தாம் தோல்வி அடைந்தால் ஒன்று போர்க்களத்தில் கொல்லப்படுவோம் அல்லது அடிமையாக பிடிக்கப்படுவோம் என்று தெரிந்தேதான் போருக்கு வருவார்கள். இந்த எண்ணமும் பயமும் தான் போர் புரிவதற்கு எதிரி நாட்டு படை வீரர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்தில் அதிகமான போர்கள் நடைபெற்ற காலம். எப்பொழுது யார் படையெடுத்து வருவார்கள் என்று சுதாரிப்போடு இருக்க வேண்டிய காலம். இந்த சமயத்தில் இனி நம் நாட்டில் அடிமை முறை கிடையாது என்று கட்டளை இட்டால் அது நாட்டிற்கு பெரும் ஆபத்தாக முடியும். இந்த ஒரு அறிவிப்பே பிற நாட்டினர் அதிகமாக நம் நாட்டின் மீது போர் புரிவதற்கு காரணமாக அமைந்தது விடும். ஏனென்றால் நாம் வெற்றி பெற்று விட்டால் நபிகள் நாயகம் படை வீரர்களை அடிமைகளாக பிடித்து கொள்ளலாம் அல்லது நாம் தோல்வி அடைந்தால் நபிகள் நாயகம் நம்மை அடிமையாக பிடித்து கொள்ள மாட்டார் என்ற எண்ணம் நம் நாட்டின் மீது எதிரிகள் போர் புரிவதற்கான பயத்தை குறைத்து விடும். ஏனெனில் அந்த காலத்தில் சிறை சாலைகள் கிடையாது சிறை சாலைகளை கட்டி நடத்துவதற்கும் மிகுந்த சிரமமான காலம் அது அதனால் கைது செய்யப்பட்ட எதிரி போர் வீரர்களை அடிமையாக வைத்து கொள்ளாமல் விடுதலை தான் செய்ய வேண்டியது வரும்.
- போர் புரிந்தவர்கள் நம் நாட்டு படை வீரர்களை கொல்லவும், நாட்டை கைப்பற்றவும் வந்தவர்கள். நம் நாட்டுடன் போர் புரிந்ததால் நம் நாட்டின் வீரர்களின் எண்ணிக்கை, பயன்படுத்திய ஆயுதங்கள், நாம் பயன்படுத்திய போர் நுணுக்கங்களை அறிந்திருப்பார்கள். அவர்களை விடுதலை செய்தால் நம் நாட்டின் ராணுவத்தின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து கொண்டு திரும்பவும் போர் தொடுப்பதற்கு வசதியாக அமைந்தது விடும்.
- போர் புரிந்ததால் நம் நாட்டு படை வீரர்கள் பலபேர்களை இழந்திருப்போம், பலர் ஊனமுற்றோர்களாய் இருந்திருப்பார்கள். பலர் ரத்தம் சிந்தி வெற்றி பெற்ற போரில். எதிரிகளை விடுதலை செய்வது என்பது நம் நாட்டு படை வீரர்களை மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாக்கிவிடும்.
- அடிமை சந்தைகளில் அடிமைகளை வாங்குவதை தடை செய்திருக்கலாம் என்ற எண்ணம் வரலாம். அதன் மூலம் அடிமைகளுக்கு எந்த நல்லதும் நடக்காது. இவர்கள் வாங்கவில்லை என்றால் அவர்களை மற்ற நாட்டினர் வாங்கி சென்று விடுவார்கள். அங்கு சென்று அவர்கள் கொடுமைகளை அனுபவிப்பதற்கு பதிலாக இங்கேயாவது அவர்கள் நிம்மதியாக இருந்து விடலாம்.
- அடிமைகள் இப்பொழுதுள்ள மதிப்பில் 10 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள். அடிமைகளின் விலை காலத்தை பொருத்தும், அடிமைகளை பொருத்தும் மாறுபடும். 1850 களில் அடிமைகள் இப்பொழுதுள்ள மதிப்பில் 30 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள். இவ்வாறு அதிக விலை கொடுத்து அடிமைகள் வாங்கப் பட்டார்கள். இப்பொழுது திடிரென்று அடிமை முறையை ஒழித்தால். அது அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட காலத்தில் இதை போன்று செய்வது நிச்சயமாக பணம் செலவு செய்து அடிமைகளை வாங்கியவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநியாயமாகும். அனைவருக்கும் நஷ்டஈடு வழங்குவதும் முடியாத காரியம்.
மேலே கூறப்பட்ட முக்கிய காரணங்களால் தான் அடிமை முறையை முற்றிலுமாக நபிகள் நாயகம் ஒழிக்கவில்லை.
அடிமைகளை விடுதலை செய்ய நபிகள் நாயகம் காட்டிய வழிகள்.
அடிமைகளை விடுதலை செய்வதற்கு பல வழிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்தார்கள்.
அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் மனமுவந்து அடிமைகளை விடுதலை செய்வதற்கு வழிவகை செய்தார்கள்.
அவைகள்,
- “உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்” குர்ஆன் 4:25
அடிமைகளை அவர்களின் எஜமானர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தினார்கள். இதன் மூலம் அடிமைகள் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்வார்கள். பல பேர் தங்களின் அடிமைகளை திருமணமும் செய்து கொண்டார்கள்.
- “(எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்”
குர்ஆன் 5:89
ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை காப்பாற்ற தவறி விட்டால் அதற்க்கு பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய உத்தரவிட்டார்கள்.
- “(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.”
குர்ஆன் 9:60
ஜகாத் என்ற தர்மத்தின் மூலம் அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்களை விடுதலை செய்ய இறைவன் கட்டளையிட்டான். அதை நபிகள் நாயகம் நடைமுறை படுத்தினார்கள். இதன் மூலமும் அடிமைகள் விடுதலை செய்ய பட்டார்கள்.
- “(அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக”
குர்ஆன் 24:33
அப்பொழுது அடிமையாய் இருந்தவர்களில் எவரேனும் தன்னுடைய எஜமானனிடம் தனக்கான ஈட்டு தொகையை சம்பாதித்து தருவதாக வாக்குறுதி கொடுத்து தன்னை விடுதலை செய்ய கூறினால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்களா, நல்ல நடத்தை உள்ளவர்களா என்பதை பார்த்து அவர்களை விடுதலை செய்து, அவர்கள் தொழில் செய்வதற்கும், வருமானம் ஈட்டவும் உதவி செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளை இடுகிறான். இதன் மூலம் தகுதியான அடிமைகள் தாங்களாகவே விடுதலை ஆனார்கள்.
- எஜமானரின் மூலம் ஒரு அடிமைப்பெண் குழந்தை பெற்று விட்டால் அந்த அடிமைப்பெண் அடிமைத்தனத்திலிருந்த்து வெளியேறி விடுவாள் அந்த குழந்தையும் அந்த எஜமானரின் வாரிசு ஆகிவிடுவார். அவரின் சொத்துகளுக்கு உரிமை உள்ளவராகி விடுவார். இதன் மூலம் அடிமையின் குழந்தை அடிமை என்ற முறையை ஒழித்தார்கள். குழந்தையை ஈன்றெடுத்த பெண்ணும் விடுதலை அடைந்தது விடுவாள்.
- “ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். உம்மை அழித்தது எது என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஒரு அடிமையை உரிமையிடுங்கள் என்றார்கள்”
நூல்: இப்னு மாஜா
- “தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல, உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்”
குர்ஆன் 4:92
விபத்தின் மூலமாகவோ அல்லது அறியாமல் செய்த செயல் ஒருவரின் மரணத்திற்கு காரணமாகி விட்டால் ஒரு அடிமையை விடுதலை செய்யவும் பிறகு மரணித்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்கவும் இறைவன் கட்டளையிட்டான். இதன் மூலமும் அடிமைகள் விடுதலை செய்யபட்டார்கள்.
- “மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.”
குர்ஆன் 58:3
அறியாமை காலத்தில் தன் மனைவியை தலாக் இடுவதற்கு பயன் படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் ளிஹார் என்பது. அதாவது ஒருவர் தன் மனைவியை பார்த்து நீ என் தாயின் முதுகைப் போல் என்று கூறினால், அந்தப் பெண் தலாக் இடப்பட்டவளாக கருதப்படுவாள். அதாவது என் தாய் எனக்கு ஹராம் என்பது போல், நீயும் என்மீது ஹராம் என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும். அந்த காலத்தில் தன்னுடைய மனைவியை கோபத்தில் இவ்வாறு கூறி அவர்களை விட்டு விலகி இருக்கும் மூடப்பழக்கம் இருந்து வந்தது இதை ஒழித்துக்கட்ட இந்த செயலுக்கு பரிகாரமாக அடிமையை விடுதலை செய்ய இறைவன் கட்டளையிட்டான்.
- “அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும், பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்)” (திருக்குர்ஆன் 90:11-17)
“ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அவரின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக விடுதலை செய்தவருடைய ஓர் உறுப்பை இறைவன் நரகத்திலிருந்து விடுவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
அடிமைகளை விடுதலை செய்வதை மிகப்பெரிய நன்மையான காரியம் என நபிகள் நாயகம் போதித்தார்கள்.
இதனைச் செவியுற்ற ஆரம்ப கால முஸ்லிம்கள் தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் இருந்த அடிமைகளையும் விலைகொடுத்து வாங்கி இயன்ற அளவுக்கு விடுதலை செய்தார்கள்.
- “உங்களில் யாரும், என் அடிமை; என் அடிமைப் பெண் என்று கூற வேண்டாம். ‘‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” என்று கூறட்டும்.”
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி 2552
இதன் மூலம் அடிமை என்ற வார்த்தையையே தன்னுடைய சமுதாயத்தில் ஒழித்தார்கள் நபிகள் நாயகம்.
அடிமைகள் விடுதலை சம்பந்தமாக ஏகப்பட்ட செய்திகளை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை குறிப்பான ஹதீஸ்களில் காண முடிகிறது.
அடிமைகளும், அடிமைக் கொடுமைகளும் மேலோங்கி இருந்த அந்த காலத்தில் இதை விட சிறந்த சட்டத்தையும், வழிக்காட்டுத்தலையும் யாரும் கூற இயலாது. இதையெல்லாம் அரைகுறையாக மழுங்கிய மூளைகளோடு புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்ச்சிக்கின்ற கிறிஸ்த்துவ மடச் சாம்பிராணிகள் தன்னுடைய மதத்தில் அடிமைகள் பற்றிய செய்திகளை தெளிந்த கண்களோடு காண வேண்டும்.
இஸ்லாமிய ஹதீஸ்களை அரை குறையாக புரிந்து கொண்டு அவற்றின் கால அளவுகளை சரியாக தெரிந்து கொள்ளாமல் நபித்தோழர்கள் பலவந்தமாக அடிமைகளிடம் நடந்து கொண்டதை போன்ற ஒரு தோற்றத்தை விதைக்கிறார்கள்.
“நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது”
திருக்குர்ஆன் 4:19
பெண்களை பலவந்தமாக அடைவதை இஸ்லாம் மிகக் கடுமையாக கண்டிக்கின்றது.
இவ்வாறு இருக்க நபித்தோழர்கள் அடிமை பெண்களிடம் கடுமையாக நடந்தது கொண்டது போன்ற ஒரு மடை மாற்று வேலையை செய்து வருகிறார்கள்.
இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன் அவர்கள் இஸ்லாத்தை தெளிவாக விளங்கிருந்த்தால் விமர்சனம் செய்வதற்கான எந்த ஒரு அடித்தளமும் அவர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.
ஹதீஸ்களின் விளக்கம்
கிருஸ்த்தவர்கள் குறிப்பிட்ட மூன்று ஹதீஸ்களில் இரண்டு அஸ்ல் பற்றியதும், (புகாரி 2229, முஸ்லிம் 2834) ஒன்று கணவன் உள்ள அடிமைகள் சம்பந்தமானதும் (முஸ்லிம் 2885) ஆகும்.. அதாவது உறவு கொள்ளும் போது விந்தணுவை உள்ளே செலுத்தாமல் வெளியேற்றுவது. நபித்தோழர்கள் அஸ்ல் செய்வதற்கு காரணம் அந்த பெண் கைதிகளை விற்க நினைத்தனர் மற்றும் அவர்களை தேடி யாரேனும் வந்து நஷ்டஈடு கொடுத்து பெற்று செல்லலாம் என்று இருந்தனர். இந்த விஷயத்தில் அடிமைகளாக அழைத்து வரப்படும் போரில் கலந்துகொண்ட எதிரி நாட்டு பெண்களை சிலர் உடனே விற்று விடாமல் சில காலம் தங்களுடன் வைத்துக்கொள்வார்கள்.பெண் அடிமைகளை எவ்வளவு காலம் வைத்துக்கொள்வது என்பது அந்தந்த நபர்களை பொறுத்தது. அவர்களுடன் இருக்கும் காலமெல்லாம் அந்த பெண்களும் தங்களுடைய உணர்ச்சிகளை அடைக்கிக் கொள்ள வேண்டும். இது கால போக்கில் அவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கு வழிவகைக்கும். அதனால் அந்த எஜமானர்கள் அவர்களுடன் உறவு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி உறவு கொள்ளும் போது அந்த பெண் கருவுற்று குழந்தை பெற்று விட்டால் அவள் அடிமைத்தனத்திலிருந்த்து வெளியேறி விடுவாள். பிறகு அவளை அடிமையாக யாரும் விற்க முடியாது. பெண் அடிமைகளை சில ஆண்டுகளுக்கு பிறகு விற்று விடலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் அந்த அடிமை மூலம் குழந்தை பெற்று கொள்ள விரும்ப மாட்டார்கள். அந்த எண்ணம் உள்ளவர்கள் அந்த அடிமைகளிடம் அஸ்ல் செய்து கொள்வார்கள். நஷ்டஈடு பெற நினைப்பவர்களும் உடனே அந்த அடிமைகளை தேடி யாரும் வருவதில்லை. கடைசி வரையிலும் அந்த அடிமைகளை தேடி யாரும் வராமலும் போகலாம். நஷ்டஈடு பெற்று விட்டுவிடலாம் என்று இருப்பவர்களிடமும் அந்த அடிமைகள் சில ஆண்டுகள் தங்குவார்கள். அவர்கள் தாங்கும் காலமெல்லாம் அந்த பெண்களின் உடல் தேவைகளுக்காகவும் மற்றும் அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் அந்த எஜமானர்கள் அவர்களுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் அஸ்ல் செய்து கொள்வார்கள். இதை தான் ஒரு சந்தேகமாக நபிகள் நாயகத்திடம் கொண்டுவந்தார்கள். இப்படி செய்வது சரியா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள. அதற்க்கு நபிகள் நாயகம் உங்களின் மூலமும் உங்கள் அடிமை மூலமும் ஒரு உயிரை இறைவன் படைக்க நினைத்து விட்டால் அந்த உயிர் உருவாகாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். இதன் மூலம் அவர்கள் அஸ்ல் செய்வதையும் தடுக்கவில்லை அதை செய்யமல் இருப்பதையும் தடுக்கவில்லை.
கணவன் உள்ள அடிமைகள் விஷயத்தில். அடிமைகளாக கொண்டு வரப்படும் கணவன் உள்ள பெண்கள் இந்த எஜமானனிடம் இருப்பார்கள். இந்த அடிமைகளின் கணவன்கள் வேறு எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். இந்த அடிமை அவரின் கணவனை காண்பது மிக்க கடினமான விஷயம். அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் ஒவ்வொருவர் மூலமாக விற்கப்பட்டு எங்கேயோ சென்று விடுவார். இப்படி கணவன் உள்ள அடிமைகள் தன்னுடைய கணவனுடன் திரும்ப சேருவதற்கு வழி இல்லாத காரணத்தினால் கணவன் உள்ள பெண் அடிமைகள் இத்தா என்று அழைக்கப்படும் சில காலங்கள் பிறகு அவர்களின் எஜமானர்கள் அந்த அடிமைகளின் உடல் தேவைகளுக்காகவும் தவறான பாதைகளுக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் அவர்களை அடைந்து கொள்ளலாம். இதை தான் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்கும் போது அனுமதி வழங்கினார்கள்.
கிருஸ்த்துவத்தில் அடிமைகளின் நிலை
கழிவறைக்கு சென்று சரியாக கழுவாதவன் அடுத்தவன் சுத்தமாக இருக்கின்றனா என்று சோதிப்போது போல உள்ளது விமர்சனம் செய்த கிறிஸ்தவர்களின் நிலை. முதலில் அவர்கள் தங்கள் மதத்தில் உள்ள அடிமைகளின் நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டும். அவைகள்,
எண்ணாகமம் 31:17
“இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள். 18 எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள்.”
மோசே தன் மக்களுக்கு கட்டளை இடுகிறார் போரில் தோல்வி அடைந்த நாட்டின் ஆண் குழந்தைகளையும், திருமணமான பெண்களையும் கொன்று விட்டு கன்னி பெண்களை மட்டும் அவர்கள் அனுபவிப்பதற்காக உயிரோடு வைத்திருக்க கட்டளையிடுகிறார். ஆனால் இஸ்லாம் போரில் தோல்வி அடைந்தவர்களில் யாரையும் கொல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.
எண்ணாகமம் 31:26
“பிறகு கர்த்தர் மோசேயிடம், 26 “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும். 27 பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும்.”
கர்த்தர் மோசேவிற்கு கட்டளை இடுகிறார் மிருகங்களையும், ஆண் பெண் கைதிகளையும் போருக்கு சென்று வந்தவர்களுக்கும், இஸ்ரவேலர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க சொல்கிறார். பெண் கைதிகளை அவர்கள் எவ்வாறு கொடுமை படுத்தினார்கள் என்று ஏற்கனவே மேலே பார்த்தோம்.
உபாகமம் 15:12
“எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும்.”
ஏதோ கிருஸ்த்தவம் அடிமைகளை வைத்து கொள்ளாதது போல் பேசுபவர்கள் ஏன் அடிமைகளை இயேசு கிறிஸ்த்து உடனடியாக விடுதலை செய்யவில்லை என்று பார்க்கவில்லை.
உபாகமம் 15:16
“உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம். 17 நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.”
தன்னுடன் இருப்பதற்கு ஆசை பட்ட அடிமையிடம் கிறிஸ்தவம் நடந்து கொள்ள சொல்லும் முறை. அந்த அடிமைக்கு நல்ல வாழ்வாதாரத்தை ஏற்படுத்தாமல் காலா காலத்திற்கும் அவர்களை அடிமையாக வைத்திருக்க சொல்லுகிறது கிறிஸ்தவம். ஆனால் இஸ்லாம் இதிலிருந்த்து முற்றாக மாறுபட்டு அவர்களுக்கு நல்ல வாழ்வை அமைத்து கொடுக்க சொல்கிறது.
உபாகமம் 21:10
“நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். 11 அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.”
இஸ்லாத்திற்கும் கிருஸ்த்தவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவாக சொல்லுகிறது இந்த வசனம்.
லேவியராகமம் 25:44
“உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம். 45 உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள். 46 உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.”
இந்த வசனத்தின் படி இஸ்ரவேலர்களில் யாராவது அடிமையாய் வந்தால் அவர்களை அடிமைகள் போல் நடத்தக்கூடாதாம் ஆனால் புறஜாதிகளில் யாராவது அடிமையாய் வந்தால் அவர்களை விற்கலாம்
விலைக்கு வாங்காலாம் அந்த புறஜாதிகளில் உள்ள அடிமைகளை இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு சுதந்தரமாக்கலாமாம்
யாத்திராகமம் 21: 4
“அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.
5 “ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும். 6 இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.”
ஒருவன் அடிமையாய் இந்த கிருஸ்தவர்களுக்கு இருந்து பைபிள் கர்த்தர் கூறிய ஆறுவருஷம் சேவைசெய்தபின்பு
அவர்களுக்கு எதுவுமே கொடுக்காமல் விடுதலை செய்யவேண்டுமாம் அந்த அடிமைக்கு பெண்பிள்ளைகள் இருந்தால் அவர்களை இந்த கிருஸ்தவர்களிடம் கொடுத்து விட்டு தனிமையாய் செல்லவேண்டுமாம் அதை அந்த அடிமை விரும்பவில்லை என்றால் அந்த அடிமையை பிடித்து அவன் காதை கம்பியினால் குத்தி கொடுமைபடுத்திவிட்டு இவர்களுக்கு மறுபடியும் அடிமையாய் வைத்துக்கொள்ள வேண்டுமாம் காலா காலத்திற்கும்.
யாத்திராகமம் 21: 20
“ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
21ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.”
கிருஸ்தவர்கள் இவர்களுடைய அடிமையை அடித்து துண்புறுத்தி அவள் அப்போதே இறந்து போனால் பழிக்கு பழி வாங்க வேண்டுமாம் அவள் இரண்டு நாட்கள் வழியால் துடித்து சித்திரவதைப்பட்டு செத்துப்போனால் பழிக்கு பழி வாங்கவேண்டியது இல்லையாம்.
ஆதியாகமம் 38:9
இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான்.
அந்த ஹதீஸில் அஸ்ல் செய்வதை பற்றி பேசும் பொழுது அதை பேச முடியவில்லை கூச்சமாக இருப்பதாக கூறியவர்களுக்கு பைபிளின் இந்த வசனத்தை படிக்கும் போது மூளை மழுங்கி விடும் போலும்.
அடிமைகள் உருவான வரலாறு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode