Sidebar

19
Thu, Sep
1 New Articles

உயர் பதவிகளில் முஸ்லிம்கள் நிலை

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

உயர் பதவிகளில் முஸ்லிம்கள் நிலை

மொத்தம் உள்ள 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள் தாம் உள்ளனர்.

அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள் தாம் உள்ளனர்.

30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் கல்லூரிகள் (கலை மற்றும் பொறியியல்) தமிழ் நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை?

நாட்டில் பட்டம் பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் 15 சதவீதம் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள் என எஸ்.எஸ்.ஓ ஆய்வு சொல்கிறது.

இஸ்லாமியர்களின் நிலை என்ன?

நமது நாட்டின் மக்கள் தொகையில் 13.4 விழுக்காடாக உள்ள இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, பொருளாதார, சமூக நிலை எப்படியுள்ளது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளித்த நீதிபதி இராஜேந்திர சச்சார் குழு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட 15 பரிந்துரைகளை மத்திய அரசிற்கு செய்துள்ளது.

அந்த அறிக்கையில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள முக்கிய புள்ளி விவரங்களாவன:

1) இந்திய மக்கள் தொகையில் 13.4 விழுக்காடு இருந்தும், இஸ்லாமியர்களில் 4.9 விழுக்காட்டினர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

2) அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

3) இவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகளிலும் 98.7 விழுக்காட்டினர் மிகவும் கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.

4) உயர் மட்ட வேலைகளில் அவர்களின் பங்கு வெறும் 3.2 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது இந்திய அளவிலான நிலையாகும்.

5) மாநிலங்களில் எடுத்துக் கொண்டால், மேற்கு வங்க மாநிலத்தின் மக்கட் தொகையில் 25.2 விழுக்காடு இஸ்லாமியர்கள். ஆனால் பணி வாய்ப்பு பெற்றவர்கள் 4.7 விழுக்காடு (இப்போது முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ள வேலை ஒதுக்கீடு கூட 10 விழுக்காடுதான்).

6) பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 18.5 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், வேலை வாய்ப்பு 7.5 விழுக்காடு.

7) அஸ்ஸாமில் இவர்களின் மக்கள் தொகை 30.9விழுக்காடு. வேலை வாய்ப்பு பெற்றோர் 10.96%

8) கல்வியைப் பொறுத்தவரை எழுத்தறிவு பெற்றவர்கள் 5.91 விழுக்காடு, பட்டம் பெற்றவர்கள் 3.4 விழுக்காடு

9) வறுமை எனும் அளவுகோலை எடுத்துக் கொண்டால், இவர்களில் 31 விழுக்காட்டினர் ஏழ்மையில் உழல்கின்றனர்.

10) இதில் அடித்தட்டு மக்களில் 10 விழுக்காடு கடுமையான வறுமை சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

11) மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மதிப்பிடப்படும் கேரளத்தில் மொத்தமுள்ள இஸ்லாமிய மக்களில் 9 விழுக்காட்டினரின் மாத வருவாய் ரூ.300க்கும் கீழ்தான்.

இப்படிப்பட்ட நிலையிலுள்ள ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக, அவர்களுக்கு உரிய அதிகாரப் பங்கு அளிப்பதற்காக, மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் சட்ட ரீதியான தடைகளை தாண்ட இயலாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இந்த நிலை நீடித்தால், அவர்களுக்கு நியாயப்படி வழங்க வேண்டிய சமூக நீதி - திட்டமிட்டு மறுக்கப்படுவதாக ஆகாதா?

மத்திஅரசை ஆண்டு கொண்டிருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள், தமது குறைந்த பட்ச பொதுத் திட்ட அறிக்கையில் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்வதற்கு ஒர குழு அமைத்து அக்குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறியிருந்தன. அதன் அடிப்படையில் 2005 மார்ச் ஒன்பதாம்; தேதி தில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் சையத் ஹமீத், டாக்டர் டி.கே.ஊமன்,எம்.ஏ. பாஸித், டாக்டர் அக்தர் மஜீத், டாக்டர் அபுசாலிஹ் ஷரீப், டாக்டர் ராகேஷ் பாஸந்த ஆகிய 7 நபர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக்குழ அமைக்கப்பட்டது.

ஆதனடிப்படையில் ஆய்வு செய்து விரிவான 12 அத்தியாயங்களை கொண்ட சுமார் 417 பக்க அறிக்கையை 2006 நவம்பர் 18 ம் தேதி அன்று பிரதமரிடம் சமாப்பித்தது.

நவம்பர் 30 ம் தேதி இவ்வறிக்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ ஆர் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிதத்தினராக இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அவர்கள் உரிய விகிதாச்சாரத்தில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 3 சதவீதத்தினர் தான் முஸ்லிம்கள்.

சர்வதேச விவகாரங்களை தீர்மாணிக்கிற ஐ.எப்.எஸ் அதிகாரிகளில் 1.8 சதவீததினராகவும்,

ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 4 சதவிததத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாவல் படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் 3.2 சதவீதத்தினராகவும்

மாவட்ட நீதிபதிகளில் 2.7 சதவீதத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் பதவி வகிக்கிறார்கள்.

மத்திய மாநில அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 4.9 சதவீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.

முஸ்லிம்களில் 4 சதவீதத்தினர் தான் பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரிக்கு செல்கிறார்கள்.

7.2 சதவீதத்தினர் தான் உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள்; என்றும்

பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 1.2 சதவிதத்தினர் தான் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக் கீழே இருக்கிறார்கள். இந்திய நகரங்களில் இருக்கிற முஸ்லிம்களில் 28.3 சதவீதம் பேர் மிக மோசமான வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிடுகிற சச்சார் குழு இந்தியாவில் இந்நிலையில் வாழ்பவர்களின் மொத்த சதவீதமே 22.8 தான் என்று குறிப்பிடுகிறது.

நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவீதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவீதமாக இருக்கிறது.

தலித்துகளில் 23 சதவீதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கும் போது முஸ்லிமகளில் 19 சதவிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.

தலித்துகளில் 32 சதவீதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிததினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.

பொதுத்துறை (7.2) சுகாரத்துறை (4.4) ரயிலவே துறை (4.5) போன்ற பல்வேறு துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.

முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவீதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள்.

ஒரு சதவீதத்தினர் தான் நிலத்துக்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திரக்கிறார்கள்.

எல்லா வற்றுக்கும் மேலாக சச்சார் குறிப்பிடுகிற முக்கியமான விசயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்பதாகும். தற்போதைய மக்களவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு சச்சார் வழங்கும் எண்ணிக்பை;படி பார்த்தாலும் சுமார் 75 பேர் முஸ்லிம் எம்.பி க்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்பொதைய மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33 மட்டுமே!

மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.

அது போல சேரிகளில் வாழபவர்களிலும் முஸ்லிம்களே அதிகம்.

1982இல் அமைக்கப்பட்ட கோபால்சிங் கமிட்டியும் இதே போன்று தனது அறிக்கையை முன்வைத்தது.

  • முஹம்மது அலி ஐபிஎஸ்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account