Sidebar

23
Mon, Dec
31 New Articles

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை சொல்வது என்ன?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை சொல்வது என்ன?

முஸ்லிம்களின் கல்வி நிலை (பக்கம் 17)

1, தொடக்கக் கல்வி (1 முதல் 5 வரை) படித்த முஸ்லிம்கள் 65.31%  பேர்

2,  நடு நிலை கல்வி (8-ஆம் வகுப்புவரை) - படித்த முஸ்லிம்கள் 15.14%

(அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

3,  உயர் நிலை கல்வி (10-ஆம் வகுப்பு வரை) - படித்த முஸ்லிம்கள் 10.96%

(அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4,  மேல் நிலை கல்வி (12-ஆம் வகுப்புவரை) - படித்த முஸ்லிம்கள் 4.53%

(அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5,  பட்டம் (டிகிரி படித்தவர்கள்) - 3.6%

(அதாவது 1000-க்கு 964 பேர் பட்டம் படிக்காதவர்கள்)

முஸ்லிம்களின் கல்வி அறிவு (பக்கம் 16)

முஸ்லிம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் - 59.1 %

கிறித்துவர்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் - 80.3 %

அதாவது 40.9% முஸ்லிம்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது.

அதாவது 10 முஸ்லிம்களில் 4 பேருக்கு எழுதப்படிக்க தெரியாது.

மக்கள் தொகை (பக்கம் 13)

 2001-ஆம் கணக்கெடுப்பு படி

முஸ்லீம்கள் - 13.4 %

கிறித்துவர்கள் - 2.3%

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1,  முஸ்லிம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2,  முஸ்லிம்களில் 41.2% பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3,  மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் மட்டுமே வசிக்க தகுந்த வீடுகளில் வாழ்கின்றனர்.

பரிந்துரைகளில் சில :

1,  இந்திய அரசியல் அமைப்புச்சட்டம்  Article 16 (4) விதி - படி சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லிம்களுக்கு  கொடுக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனத்தொகையில் 73% உள்ளனர்.

மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபான்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்பட வேண்டும்.

சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்க வேண்டும்.

(பெரும்பாண்மை சமுதாயத்திற்கு கொடுக்கக்கூடாது)-  (பக்கம் 150,152)

2, கல்வி வேலை வாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் (கிரமப்புற  வேலைவாய்ப்பு திட்டம், பிரதமர் ரோஜர் யோஜனா, கிராமின் ரோஜர் யோஜனா, etc..)  முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற  சிறுபான்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3,  SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கும் கல்வி கற்பதற்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்த்தப்பட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்ப்ட வேண்டும்.

4,  முஸ்லிம்கள் மத்தியில் கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்த  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் (உத்தரப் பிரதேசம்), ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக் கழகம் (டில்லி) போல் முஸ்லிம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலைக் கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலைக் கழங்களுக்கு கூடுதல் பொருப்பு வழங்கி முஸ்லிம் மாணவர்களின் நலனுக்காகச் செயல்படும் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5, அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லிம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லிம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.  (பக்கம் 151)

5,  முஸ்லிம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

வறுமைக்கோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது, இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக கருதப்படுவர்.

 ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள்.

ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள்.

வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்.

 வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்,

படிப்பறிவு இல்லாதவர்கள்,

கூலி வேலை செய்பவர்கள்,

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள்.

நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்.

இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிட பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்கு கீழ்) வாழ்கின்றன்ர்

10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.​ 550க்கும் குறைவாகவே உள்ளது.

2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள கிராமப்புற ​முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.

நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.​ தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.​ முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​

2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account