்தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி.
இந்திய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் அதிகாரப்பூர்வ மாத இதழான சமரசம் பத்திரிக்கையில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கேள்வி பதில் பகுதியில் இந்தச் செய்தியை அவர்களே வெளியிட்டுள்ளார்.
இதோ தஜ்ஜாலின் வருகை பற்றி மவ்தூதி சொல்வதைக் கவனியுங்கள்:
அபுல் அஃலாவினால் வெளியிடப்பட்ட தர்ஜுமானுல் குர்ஆன் என்ற சஞ்சிகையில் தஜ்ஜால் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இதுதான்:
தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
(தர்ஜுமானுல் குர்ஆன் செப்டம்பர்-அக்டோபர் 1945)
அதே போல் அதே சமரசம் பத்திரிக்கையில் ஏப்ரல் மாத இதழில் தஜ்ஜாலைப் பற்றி அபுல் அஃலா மவ்தூதி வெளியிட்ட மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த இதழில் தஜ்ஜால் தொடர்பாக மவ்தூதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை வெளியிட்டுள்ளார்கள். அந்த பதில் இதுதான்.
இது தொடர்பாக நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும். அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள்.
சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள்,
வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து
இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து
தோன்றுவான் எனக் கூறுவார்கள்.
ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யூதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள்.
இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிருஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும் (பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்)மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும் அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக் கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக் கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அதுபற்றி சந்தேகத்தை தெரிவித்துவிட்டார்கள். ஆனால் நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன். என்றார்கள்.
நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது. (தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி - 1946)
(சமரசம் ஏப்ரல் 1-15)
அதைத் தொடர்ந்து மவ்தூதி சொல்லும் வாசகத்தைக் கவணியுங்கள்.
தமீம் தாரி அவர்கள் அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?
நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா?
(தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி - 1946) (சமரசம் ஏப்ரல் 1-15)
தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி.
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode