மற்றவர்களை வழிகேடர்கள் என்று கூறலாமா?
நீங்கள் மட்டும் தான் நேர்வழி பெற்றவர்கள் மற்ற இலங்கை வாழ் தவ்ஹீத் உலமாக்கள் வழிகேடர்களா என்ற வாதத்தை மக்களும் உலமாக்களும் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு உங்கள் பதில் அவசியம்.
ரிசாஃப், இலங்கை
பதில் :
ஒருவர் வழிகேட்டில் இருக்கின்றார் என்று கூறுவதாக இருந்தால் அவருடைய கொள்கையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் யாரையும் கொள்கை அல்லாத மற்ற விஷயங்களைக் காரணமாக அவர்கள் வழிகேட்டில் இருக்கின்றார்கள் எனக் கூற மாட்டோம். ஏனென்றால் வழிகேட்டில் இல்லாதவர்களை வழிகேட்டில் உள்ளார்கள் எனக் கூறுவதே மிகப்பெரிய வழிகேடாகும்.
92و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرِئٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلَّا رَجَعَتْ عَلَيْهِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து இறைமறுப்பாளனே! (காஃபிரே!) என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் 92
ஒருவருடைய கொள்கை குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக இருந்தால் அவர் வழிகேட்டில் இருக்கின்றார் எனக் கூறலாம். நாம் யாரை வழிகேடர்கள் என்று கூறுகிறோமோ அவர்கள் மார்க்க வரம்புகளை மீறியவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்பதை அதற்குரிய ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறோம்.
வழிகேட்டில் உள்ளவர்களை வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று தான் கூற முடியும். நேர்வழியில் இருக்கிறார்கள் என்று மாற்றிக் கூற முடியாது. அப்படிக் கூறினால் வழிகேட்டை நேர்வழியாக ஏற்றுக் கொண்டோம் என்று பொருளாகிவிடும்.
பிறமதத்தினர் தங்கள் கொள்கை தான் சரி என்று நம்புகிறார்கள். காதியானிகள் நாங்களே நேர்வழியில் இருக்கின்றோம் எனக் கூறுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரும் தாங்கள் நேர்வழியில் இருப்பதாகவே நினைக்கின்றனர்.
ஆனால் அவர்களின் கொள்கை குர்ஆனுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் வழிகேடர்கள் என்று கூறுகிறோம். இந்த அடிப்படையிலேயே இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாமிய நெறிமுறைக்கு மாற்றமாக வாழ்பவர்களை நாம் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று கூறுகிறோம்.
நாம் கூறுவது தவறு என்றால் ஆதாரத்துடன் அதை நிரூபிக்கும் கடமை அவர்களுக்கு உள்ளது. இதைச் செய்யாமல் ஆவேசப்படுவதில் பயன் இல்லை.
13.02.2012. 8:09 AM
மற்றவர்களை வழிகேடர்கள் என்று கூறலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode