Sidebar

22
Sun, Dec
38 New Articles

இல.கனேசனுடன் கைகோர்த்த ஜவாஹிருல்லாஹ்

தமுமுக TMMK
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இல.கனேசனுடன் கைகோர்த்த ஜவாஹிருல்லாஹ்

ஜவாஹிருல்லாவின் பொய்யான வாதங்கள்

பா.ஜ.க.வுடன் கைகோர்த்த ம.ம.கட்சி என்ற தலைப்பில், ஜவாஹிருல்லா சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம்.

பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்து போஸ் கொடுத்து நின்றது ஏன்? என்பதற்கு அற்புதமான(?) விளக்கத்தை ஜவாஹிருல்லாஹ் அளித்துள்ளார்.

அதொல்லியல் துறையால் கோவில் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி நடைபெற்ற போராட்ட்த்தில் இல கனேசனுடன் கலந்து கொண்டதைப் பின்வருமாறு ஜவாஹிருல்லா நியாயப்படுத்துகிறார்.

மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிபாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது. தற்போது புதிய சட்டத்தின் கீழ் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிறகு 14ஆம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருக்கும் தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதன் காரணமாக ஹிந்துப் பெருங்குடி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்பட்டதுடன் இந்தக் கோயிலைச் சுற்றி 300 மீட்டர் அளவிற்கு வாழும் அனைத்து சமூக மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொல்லியல் துறை எடுத்துள்ள 32 இடங்கள் மற்றும் கடைசியாக எடுத்த தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது புனரமைப்புப் பணியோ அல்லது ஒரு மின்விசிறியை மாற்றி மாட்டும் பணியோ முடங்கிப் போகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வாழும் மாமல்லபுரத்தை மயான பூமியாக மாற்ற இந்திய தொல்லியியல் துறை திட்டமிட்டத்தைக் கண்டித்துத் தான் பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 28 அன்று தொடர் முழக்கப் போராட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன என்று முதலில் தான் ஏன் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்

என்று ஜவாஹிருல்லாஹ் சொல்லுகின்றார்.

மாமல்லபுரத்திலுள்ள முஸ்லிம்களும் தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்களாம். அதனால் தான் முஸ்லிம்கள் நலம் நாடி இந்தப் போராட்டத்தில் சங்பரிவாரக் கும்பலோடு கைகோர்த்ததாக சொல்லுகின்றார்.

இவர் சொல்லும் காரணம் சரியானது தானா? இவர் கூறுவது உண்மையா? என்பதை நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

அதாவது தொல்லியல்துறை இந்தக் கோவிலை கையில் எடுத்தால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற  வாதம் முற்றிலும் பொய்யானது.

அவர் தனது அறிக்கையில், மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிபாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே மாமல்லபுரத்திலுள்ள 32 கோவில்களையும், பழங்கால கட்டடங்களையும் தொல்லியல்துறை கையில் எடுத்துள்ளதால் இவரது கூற்றுப்படி அங்கு அதைச் சுற்றியுள்ள 300மீட்டர் தூரம் அளவுக்கு எந்த முஸ்லிமுடைய வீட்டிலும் மின்விசிறி கூட மாற்ற முடியாத நிலை இதற்கு முன்பே இருந்து இருக்க வேண்டும்

அப்படியானால் தற்போது தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால் என்னென்ன புதிய சட்ட திட்டங்கள் போடுவார்களோ, அந்தப் புதிய வரையறைகள் எல்லாம் ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது இந்த தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல்துறை கையில் எடுப்பதால் புதிதாக எந்த முஸ்லிமும் பாதிக்கப்படப் போவதில்லை என்ற உண்மை இவரது அறிக்கையிலிருந்தே வெளிப்படுகின்றது.

ஏற்கனவே 32 கோவில்களை கையகப்படுத்தியபோது எந்த முஸ்லிமும் கொதித்தெழவில்லை. எந்த முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தவில்லை. தற்போது இந்தப் போராட்டத்தை அறிவித்தவர்களும் முஸ்லிம்கள் இதில் பாதிக்கப்படுகின்றார்கள் என்று சொல்லவில்லை. அப்படியிருக்கையில் தான் செய்த ஈனச் செயலை நியாயப்படுத்தத்தான் இந்த பதிலை யோசித்து தயார் செய்துள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதனால் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் தடைபட்டு விடும் என்பது தான் பிரதானப் பிரச்சனையே தவிர முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

இச்சட்டத்தின் கீழ் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியல் துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், மத்திய அரசு இச்சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பேசினேன் என்று அடுத்து ஒரு புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் ஜவாஹிருல்லாஹ்

அதாவது ஜார்ஜ் கோட்டையான தலைமைச்செயலகத்தை தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ளது என்றால் அதிலிருந்து 100மீட்டர் தொலைவுக்கு உள்ள பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதா? அந்த 100மீட்டர் தொலைவிற்குள் எந்த ஈ காக்காயும் போவதில்லையா?

மேலும், தலைமைச்செயலகத்திலிருந்து 300மீட்டர் தொலைவிற்குள் உள்ள எந்த கட்டடத்திலும் ஆணி அடிக்கப்படுவதில்லையா? மின்விசிறி மாற்றப்படுவதில்லையா? கட்டுமானங்கள் நடைபெறுவதில்லையா? என்ற கேள்விக்கு இவர் பதிலளிக்க வேண்டும்.

மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிவாசல் பாதிக்கப்படுமாம்:

அடுத்ததாக, நான் பேசிய மேடையில் மாமல்லபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவரும் இருந்தார். பேசி முடித்த பிறகு மக்ரிப் தொழுகைக்காக மாமல்லபுரம் பள்ளிவாசலுக்கு அவருடன்தான் சென்றேன். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தப் பள்ளிவாசலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதை என்னால் அறிய முடிந்தது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு தான் செய்த செயலுக்கு புதிய ஆதாரத்தை உருவாக்க முயல்கின்றார் ஜ்வாஹிருல்லாஹ்

அந்த கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால் நமது பள்ளிவாசலும் பாதிக்கப்படும் என்று தூர(?) நோக்கோடு சிந்திக்கக்கூடிய இவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றோம்.

இந்தப் போராட்டத்தில் இல.கணேசனுடன் போஸ் கொடுத்துவிட்டு வந்த பிறகுதான் பள்ளிவாசல் மேல் உங்களுக்கு அக்கறை வந்ததா? பள்ளிவாசல்கள் மேல் இவ்வளவு அக்கறை உள்ளதால்தான், பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தை, மூன்றாகப் பிரித்து இடித்தவனுக்கு இரண்டு பங்கும், இழந்தவனுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்ற அலகாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை, அற்புதமான தீர்ப்பு; அதை நாங்கள் வரவேற்கின்றோம் என்று வரவேற்று அறிக்கை விட்டீர்களா? இதுதான் நீங்கள் பள்ளிவாசல்களை பாதுகாக்கும் லட்சணமா?.

ஒரு கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால், அதைச் சுற்றியுள்ள பள்ளிவாசல்கள் பாதிக்கப்படும் என்று சட்டம் பேசும் தாங்கள், இராமேஸ்வரத்தை புனித பூமியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்களே! அப்படி புனித பூமியாக அறிவிக்கப்பட்ட ஊரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் ஆப்பு வைக்கப்படும் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டுதானே இந்தக் கோரிக்கையை வைத்தீர்கள்.

இப்படி பள்ளிவாசல்களுக்கு மூடுவிழா நடத்த அறிக்கை வெளியிட்டு, கோரிக்கை வைத்த தாங்கள் தான் பள்ளிவாசல் நலனிற்காக இல.கணேசனுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினீர்களா?

அடுத்து ஜவாகிருல்லா சொல்வதைக் கேளுங்கள்!

நேரடியாக மேடைக்கு வந்து எனக்கு அருகில் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து என் அருகில் இல.கனேசன் அமர்ந்துக் கொண்டார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று புகைப்படம் எடுக்க கைகோர்த்து நிற்கச் சொல்ல மேடையில் இருந்த நெருக்கடியின் காரணமாக நான் நகர முடியாமல் மனதில் பெரும் வருத்தத்துடன் இல. கணேசனுடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

அனைவரும் எழுந்து உற்சாகமாக கைகோர்த்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த வீடியோவில் இல.கணேசனுடைய கையை பிடித்துக் கொண்டு இவர் விடாததும், இல.கணேசன் இவரது கையை உதறிவிடும் காட்சியும் தெளிவாக ஒளிபரப்பப்பட்டன.

இலகணேசன் வருவது முன்கூட்டியே தெரியுமாம்:

இவர் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்குப் பிறகு தான் தெரிகின்றது. இல.கணேசன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் என்ற செய்தி இவரிடம் முன்பே சொல்லப்பட்டுள்ளது.

;பிற மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பதற்கு சான்றாக கலீபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் கீழ் ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்த நிலையில் அந்நகரில் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களை அந்நகரின் கிறிஸ்தவத் தலைமை குரு சோபோர்னிசிஸ் அந்நகரைச் சுற்றிக் காட்டிய நிகழ்ச்சியையும் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படும் தேவலாயத்திற்கு (Church of Nativity) சென்று அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாங்கு சொல்லப்பட்ட வேளையில் அந்த தேவலாயத்திலேயே தொழுகையை நிறைவேற்றும்படி அந்த பாதிரியார் கேட்டுக் கொள்ள அதனை உமர் ரலி மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இங்கு இப்போது தொழுதால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உங்கள் வழிப்பாட்டு உரிமை கோரக்கூடும். அதற்கு நான் வழி வகுக்க விரும்பவில்லை என்று உமர் (ரலி) தொழுவதற்கு மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி பேசினேன். நான் இந்த கருத்தைத் தெரிவித்த போது போராட்டத்தில் பங்குக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் இந்த அற்புதமான சகிப்புத்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பெரிய கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர் என்று தான் பேசிய பேச்சிற்கு பலத்த கரகோஷம் கிளம்பியதாக கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்

முதலில்,

இவர் கூறிய இந்தச் சம்பவத்திற்கு எந்த ஆதாரத்தையும் இவர் காட்டவில்லை.

இது ஆதாரப்பூர்வமான செய்திதான் என்பதற்கு சரியான சான்றை தர வேண்டும்

அடுத்ததாக, இந்தச் சம்பவம் முஸ்லிம்கள் எல்லாம் அடாவடித்தனம் செய்யக்கூடியவர்கள் என்ற கருத்தை தரக்கூடியதாக உள்ளது.

ஒரு கலீபா தொழுத இடம் என்பதற்காக பிறமத வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சொல்வதாக இருந்தால், அந்த அளவிற்கு முஸ்லிம்கள் என்ன மோசமானவர்களா?

இப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ரீதியில் பேசியதால் தான் இல.கணேசன் உட்பட அனைவரும் பலத்த கரகோஷத்தை எழுப்பினார்கள் போலும்.

மேலும், இந்தச் செய்தி உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்தச் செய்தியிலேயே, தேவாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, பாங்கு சொல்லப்பட்ட வேளையில் அந்த சம்பவம் நடந்ததாக கதை சொல்லியுள்ளார். அப்படியானால் அருகே பள்ளிவாசல் இருந்திருக்குமேயானால் உமர் (ரலி) அவர்கள் அங்கு சென்றுதானே தொழுகையை நிறைவேற்றியிருப்பார்கள். அதைத்தானே காரணமாகச் சொல்லியிருப்பார்கள்? என்ற சந்தேகமும் எழுகின்றது.

இவரது இந்த உரை இல.கணேசனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று ஆரூடம் சொல்கிறார் வாத்தியார்.

இவரது இந்த உரை இல.கணேசனுக்கு குஷியைத்தான் அதிகப்படுத்தியிருக்கும். ஏனெனில் சங்பரிவாரம் முஸ்லிம்களை அடாவடிக்காரர்களாக சித்தரித்து செய்யும் வேலையை அவர்களது பினாமி செய்து அவர்களது வேலையை இலகுவாக்கி உள்ளது என்றால் அவர்களுக்கு குஷிதானே வரும்.

மேலும் அவர் தனது உரையில்,

இந்திய தொல்லியல் துறை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை விவரிக்கும் போது வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையைப் பறித்து இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறித்த விபரத்தையும் அதனை மீட்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வரும் வரலாற்றையும் எடுத்துரைத்தேன். இதே போல் மாமல்லபுரத்தில் வழிபாடு இல்லாத கோயில்களை தன்வசப்படுத்தி அவற்றை பாதுகாக்க தவறி வரும் இந்திய தொல்லியல் நிறுவனம், மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடந்து வரும் தலசயானப் பெருமாள் கோயிலை தமிழக இந்து அறநலத்துறையிடமிருந்து தன் வசப்படுத்தி வழிப்பாட்டு உரிமையை பறிப்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக் காட்டினேன் என்று அள்ளிவிட்டுள்ளார்.

இவர் உண்மையிலேயே துணிச்சலான ஆளாக இருப்பாரேயானால், வேலூரில் உள்ள பள்ளிவாசலில் தொழ அனுமதி வழங்கக்கோரி முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திய போது, தொழுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்பரிவாரக் கும்பல் எதிர்ப் போராட்டம் நடத்தியது. அதைக் கண்டித்து, சங்பரிவாரக் கும்பலின் தலைவர் முன்னிலையில் பேசியிருக்க வேண்டுமா? இல்லையா?

இந்த இடத்தில் வேலூர் பள்ளிவாசலைப் பற்றி பேசும்போது சங்பரிவாரத்தின் தலைவன் அமர்ந்திருக்கும் மேடையில், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக் கூடிய சங்பரிவாரத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கு ஏற்ற இடம் அதுதான். அதைவிட்டுவிட்டு மேடையில் அதற்கு ஜால்ரா தட்டிவிட்டு தான் செய்த ஈனச் செயலுக்கு இதை ஆதாரமாகக் காட்டித் திரிகின்றார் இந்த (மா)மாவீரர்(?).

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று புதிய அரசு ஆட்சியில் அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் கொடியவன் மோடி வருகிறான் என்று தெரிந்த பிறகு நாம் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்லி காமெடி பண்ணியுள்ளார்.

நரபலி மோடி வருவதால்தான் பதவியேற்பு விழாவை ம.ம.கட்சி புறக்கணித்தது என்று இதற்கு முன்னால் இந்த ஜால்ரா மன்னன் எந்த ஒரு இடத்திலும் மூச்சுக் கூட விடவில்லை.

நரபலி மோடி வருவதால்தான் பதவியேற்பு விழாவை ம.ம.கட்சி புறக்கணித்தது என்று கண்டன அறிக்கையாவது வெளியிட்டாரா? இல்லவே இல்லை.

நரபலி மோடியை பதவியேற்பு விழாவிற்கு அழைத்த ஜெயலலிதாவை கண்டித்தாரா இவர்? இல்லவே இல்லை.

நரபலி மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆளனுப்பி ஆசி வழங்கிய அம்மாவை கண்டித்தாரா?

இவ்வளவு அநியாயத்தையும் செய்து விட்டு, பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்ற பில்டப் விட்டதுதான் இருப்பதிலேயே ஹைலைட் காமெடி.

இவ்வளவு பதிலையும் மறுப்பு அறிக்கை என்ற ரீதியில் கொடுத்துவிட்டு, நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை வைத்து கடும் விமர்சனத்தை சிலர் இப்போது செய்து வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான். செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிக்கேற்ப தான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் எந்த எண்ணத்துடன் பங்கு கொண்டேன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் என்று இவர் கூறியுள்ளதுதான் இவர் எத்தகைய நாடக நடிகர் என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றது.

இத்தனை பக்கத்திற்கு பதில் சொல்லிவிட்டு, நான் யாருக்கும் பதில் சொல்ல அவசியமில்லை என்று இவர் உளறுவதே இவர் போடும் வேஷத்தை வெளிப்படுத்திவிட்டது.

இவர் ஆதாரமில்லாத உமர் (ரலி) விஷயத்தை உதாரணமாகக் கூறியதால், நாம் இவருக்கு உரைக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான அலி (ரலி) அவர்களது உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டுகின்றோம்.

அலி (ரலி) அவர்களை எதிர்க்க களம்கண்ட காரிஜியாக்கள் இப்படித்தான் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற திருமறை வசனத்தை சொல்லிக் கொண்டு அவர்களுக்கு எதிராக போர் புரிய வந்தனர். அப்போது அலி(ரலி) அவர்கள் சொன்ன விஷயத்தையே நாம் இவருக்கு பதிலாகக் கூறிக் கொள்கின்றோம்.

அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற திருமறை வசனத்தை காரிஜியாக்கள் சொல்லிய போது தவறான இடத்தில் பயன்படுத்தப்பட்ட சரியான வார்த்தை என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்களே, அதுபோலத் தான் இவர் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தையும் அமைந்துள்ளது.

நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம்தான் என்று இவர் சொல்வாரேயானால் பிறகு ஏன் இங்கு விளக்கம் கொடுக்கின்றார். பொது வாழ்க்கையில் வந்துவிட்டால் பொதுமக்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதைவிடுத்து விட்டு, திருடிய திருடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டவுடன் போலீசாரிடத்தில் விசாரணையின் போது நான் உங்களுக்கெல்லாம் பதில் சொல்லத்தேவையில்லை நான் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான். என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இவர் வைக்கும் வாதமும் உள்ளது. கையும் களவுமாக பிடிபட்ட திருடனைப் போலத்தான் வாத்தியார் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றார்.

அடுத்து தான் செய்த இழி செயலுக்கு வாத்தியார் காட்டும் அடுத்த நபிமொழி, செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. மேற்கண்ட நபிமொழியையும் தனது தவறுக்கு ஆதாரமாக்கப் பார்க்கின்றார். செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்ற நபிமொழி நல்ல செயல்களை செய்துவிட்டு அதற்கு அல்லாஹ் தகுந்த கூலியை எப்போது வழங்குவான் என்றால் எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் வழங்குவான் என்பதற்காக சொல்லப்பட்டது.

ஒருவன் விபச்சாரியிடத்தில் சென்று விபச்சாரம் செய்துவிட்டு, அவளுக்கு கணவன் இல்லாத காரணத்தால், அவளுடைய உள்ளம் நொந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில்தான் நான் அவளிடம் விபச்சாரம் செய்தேன். எனது எண்ணம் தூய எண்ணம். செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோலத் தான் வாத்தியாரின் இந்த உதாரணம் உள்ளது. கேடுகெட்டவர்களுடன் கைகோர்த்து நின்று ஈனச் செயல் புரிந்துவிட்டு செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்று தனது இழிசெயலுக்கு நபிகளாரின் பொன்மொழியை இவர் ஆதாரம் காட்டுகின்றார் என்றால் இவரை என்னவென்பது?

11.07.2012. 6:37 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account