வாரியப் பதவி ஆசை வந்துவிட்டதா?
முன்பு தமுமுகவைச் சாடி வந்த நீங்கள், இப்போது கவிஞர் அப்துர் ரஹ்மானைச சாடுகிறீர்கள். இதில் இருந்து வக்ஃப் போர்டு ஆசை உங்களுக்கு வந்துவிட்டது என்ற சந்தேகம் வருகிறது.
ஷேக அப்துல் காதர்
யாருக்கு வேண்டுமானாலும் எந்தச் சந்தேகம் வேண்டுமானாலும் வரலாம். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் ஆதாரமும், தக்க காரணமும் இல்லாமல் சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது மன நோயில் கொண்டு போய் விட்டு விடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.
வக்பு வாரியத் தலைவரை நாம் விமர்சனம் செய்வதால் அந்தப் பதவியை நாம் விரும்புவதாக நீங்கள் கூறுவது போதுமான காரணம் அல்ல.
நாங்கள் பிரதமரையும் விமர்சித்துள்ளோம். முதல்வரையும் விமர்சித்துள்ளோம். இதை ஆதாரமாக வைத்து பிரதமர் பதவி மீது ஆசை வந்து விட்டது; முதல்வர் பதவி மீது ஆசை வந்து விட்டது என்று யாராவது கூறினால் அது அறிவுடைய வாதமா?
இப்போது நீங்கள் எங்களை விமர்சித்துளீர்கள். எனவே ஜமாஅத் தலைவர் பதவி மீது உங்களுக்கு ஆசை வந்து விட்டது என்று நாங்கள் நினைக்கலாமா? அப்படி நினைத்தால் அது சரியானதாக இருக்குமா?
நமக்குத் தவறு என்று படுவதை நாம் விமர்சிப்போம். இதில் எந்த உள் நோக்கமும் கிடையாது.
ஒருவர் வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை ஆசை வைத்தால் இப்போதைய தலைவரை விமர்சித்தால் அதை அடைய முடியுமா? அதை அடைவதற்கு இது தான் வழிமுறையா?
வாரியத் தலைவர் பதவியை வழங்குமிடத்தில் இருக்கும் முதல்வரைத் துதி பாடினால் தான் அது கிடைக்கும். அப்துர் ரஹ்மானை விட பலமாக முதல்வருக்கு நாங்கள் ஜால்ரா தட்டினால் இப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால் முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக் இருந்தாலும் அனைவரின் தவறுகளையும் தாட்சண்யமின்றி நாம் எதிர்க்கிறோம். எனவே நாம் விரும்பினாலும் அது கிடைக்காது.
மேலும் இது போன்ற பதவிகளுக்கு ஆசைப்பட்டு கொள்கையை விட்டு விட்டார்கள் என்பதால் தான் நாம் தமுமுகவைக் கை கழுவினோம். நாம் வெறுத்து விமர்சனம் செய்த அதே பதவி வெறிக்கு நாம் எப்படி ஆளாவோம்.
ஒரு காலத்திலும் இது போன்ற பதவிகளைப் பெற மாட்டோம் என்று கூறி ஆண்டுகள் முப்பது ஓடி விட்டன. இன்று வரை அதில் உறுதியாக இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனியுமிருப்போம்.
இது போன்ற பதவிகளைப் பெறுவதால் சிலரை விட மேலான நிலையை அடைய முடியும். ஆனால் சிலருக்கு கால் பிடித்து விடும் அடிமையாக நாம் மாற வேண்டும். இது போன்ற மானம் கெட்ட செயலை நாம் ஒரு போதும் செய்ய மாட்டோம்.
ஆதாரத்தோடு சந்தேகப்பட முயற்சி செய்யுங்கள்.
26.04.2010. 0:56 AM
வாரியப் பதவி ஆசை வந்துவிட்டதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode