அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் தொடர்பாக தங்களை Salem al Aamry (இவர் ஜாகிர் நாய்க், பிலால் பிலிப்ஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர்) அவர்கள் விவாதத்துக்கு அழைத்ததாகவும், ஆனால் தமிழில் வார்த்தைகளால் விளையாடுவது போல் அரபியில் செய்ய முடியாது என்பதற்காக தாங்கள் பின்வாங்கியதாகவும் அய்யம்பேட்டயை (தஞ்சாவூர் மாவட்டம்) சேர்ந்த பிலால் பிலிப்ஸ் வகையறாக்கள் என்னிடம் சில மாதங்களுக்கு முன்னால் கூறினார்கள். இது உண்மையா?
அப்துல் ஹகீம் பெங்களூர்
பதில்
நான் அமீரகம் சென்றிருந்த போது எனது நிகழ்ச்சிகள் பல தடை செய்யப்பட்டன. அப்போது இந்த அறிஞரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பை அபுதாபி ஹாமின், யூசுப் அலி ஆகியோர் ஏற்படுத்தித் தந்தனர். அவருடன் ஜகாத், குறித்தும், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்தும் கலந்துரையாடல் நடத்தினோம். நாம் கூறியதை கவனமாகக் கேட்ட இவர் நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கதாக உள்ளது என்று கூறினார்.
இன்னும் பல அறிஞர்கள் மத்தியிலும் இது பற்றி நான் கலந்து பேசுகிறேன் என்று கூறினார்.
இது தான் நடந்தது. விவாத அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதன் பின்னர் இந்தியாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த இவர் என்னை நினைவு வைத்து என்னைச் சந்திக்க விரும்பினார். சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜில் சந்தித்து பேசிக் கொண்டேன். அவர் எனக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எனது நிலைபாடு சரி என்றோ தவறு என்றோ பேசவும் இல்லை. விவாதம் தொடர்பாக எந்தப் பேச்சும் எஙகளுக்குள் நடக்கவில்லை.
20.05.2010. 10:42 AM
அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode