Sidebar

07
Thu, Nov
47 New Articles

ஜியாரத் என்றால் என்ன?

ஜியாரத், தர்கா, சமாதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஜியாரத் என்றால் என்ன?

சம்சுதீன்

பதில் :

ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன.

முஸ்லிம்களின் கப்ருகளை ஸியாரத் செய்வது முதல் வகை.

மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வரலாம்.

இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.

(2208) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ:السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ وَأَتَاكُمْ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) பகீஉல் ஃகர்கத் பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு சென்று (பின்வருமாறு) கூறுவார்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன. ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

நூல் : முஸ்லிம்

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! உங்களூக்கு வாக்களிக்கப்பட்டது உங்களிடம் வந்து விட்டது. அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பாயாக!)

இரண்டாம் வகை:

மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இறை மறுப்பாளர்களாகவும், இணை வைப்பாளர்களாகவும் இருந்தால் அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துவிட்டு மட்டும் வருவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

1622 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள்,  என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்! என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

974 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمِ النَّبِيلُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ رواه الترمذي

புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகின்றன.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : திர்மிதி

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் வரவழைத்துக் கொள்வதற்குப் பெயர் தான் ஜியாரத் என்பது.

ஆனால் தர்ஹாக்களுக்குச் சென்று இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடுவதற்கும் பரவலாக ஜியாரத் என்று கூறப்படுகிறது.

  • கப்ரைப் பூசுவது,
  • கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது,
  • அடக்கம் செய்யப்பட்ட மனிதரிடம் தன்னுடைய கோரிக்கைகளை வைப்பது,
  • அவருக்காக நேர்ச்சை செய்து கப்ரை முத்தமிடுவது,
  • விளக்கேற்றுவது,
  • கப்ர் மீது சந்தனம் தெளிப்பது,
  • பூ போடுவது

இன்னும் ஏராளமான இணைவைப்புக் காரியங்கள் நடக்கும் இடம் தான் தர்ஹாவாகும். எனவே தர்காக்களுக்குச் செல்வது ஜியாரத்தில் சேராது. ஏனெனில் அதில் மரண பயம் வருவதில்லை.

தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள கப்ர்களை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும்.

(2196) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى وَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَ زُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى: أَخْبَرَنَا. وَقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي الْهَيَّاجِ الأَسْدِيِّ قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، : أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللّهِ ؟ أَنْ لاَ تَدَعَ تِمثْالاً إِلاَّ طَمَسْتَهُ. وَلاَ قَبْراً مُشْرِفاً إِلاَّ سَوَّيْتَهُ.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்! என்று அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்த கப்ர் ஜியாரத் என்பது இறந்து போன பொதுமக்கள் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடிக்குச் செல்வது தான்.

ஆனால் தர்ஹா வணக்கம் செய்வோர் பொது மையவாடிக்குச் செல்வதில்லை. மாறாக ஜியாரத் என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரை நல்லடியார் என்று இவர்களாகக் கற்பனை செய்துகொண்டு அவரது கப்ரில் மார்க்கம் தடை செய்த பலவற்றைச் செய்துவருகிறார்கள். இறந்துபோன மனிதர்களிடத்தில் பிரார்த்தனை செய்து இறைவனுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலையும் செய்து வருகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ இறந்துவிட்ட நல்லடியார்களது கப்ர்களுக்கு நாம் சென்றால் நாம் தான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

உயிரோடிருப்பவர்கள் தான் இறந்துவிட்டவர்களுக்காக ஏதேனும் உதவி செய்ய முடியுமே தவிர, இறந்து விட்டவர்களால் உயிரோடிருப்பவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை நபியவர்களின் இந்த கட்டளையிலிருந்து கூடுதலாக நாம் அறிய முடிகின்றது.

மார்க்கம் தடை செய்த பல அம்சங்களைக் கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் ஜியாரத் என்ற பெயரில் அங்கு செல்வதும் ஹராமாகும். ஏனென்றால் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا(140)4

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account