Sidebar

23
Thu, May
323 New Articles

அடக்கத்தலத்தை கட்டக் கூடாது

ஜியாரத், தர்கா, சமாதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அடக்கத்தலத்தை கட்டக் கூடாது

سنن النسائي

2027 - أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه - قال الشيخ الألباني : صحيح

கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807

حدثنا أبو بكر بن أبى شيبة حدثنا حفص بن غياث عن ابن جريج عن أبى الزبير عن جابر قال نهى رسول الله -صلى الله عليه وسلم- أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه.

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

சமாதியில் பூசுவதும் இந்த ஹதீஸில் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட், சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் குற்றமாகும்.

وحدثنى أبو الطاهر أحمد بن عمرو حدثنا ابن وهب أخبرنى عمرو بن الحارث ح وحدثنى هارون بن سعيد الأيلى حدثنا ابن وهب حدثنى عمرو بن الحارث - فى رواية أبى الطاهر - أن أبا على الهمدانى حدثه - وفى رواية هارون - أن ثمامة بن شفى حدثه قال كنا مع فضالة بن عبيد بأرض الروم برودس فتوفى صاحب لنا فأمر فضالة بن عبيد بقبره فسوى ثم قال سمعت رسول الله -صلى الله عليه وسلم- يأمر بتسويتها.

ஸுமாமா பின் ஷுஃபை அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள 'ரோடிஸ்' தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது சமாதியைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதியைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 1763

சமாதிகள் கட்டப்படக் கூடாது என்பதை இன்னும் உறுதியாக விளக்கும் வகையில் சமாதிகளின் மீது எழுதக் கூடாது என்றும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account