சான் கிறித்தவக் குழுவினருடன் விவாதம்
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் 74:49,50,51
என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார உணர்வு இதழில் நாம் எழுதியிருந்தோம்.
இது ஆன்லைன் பீஜே டாட் காம் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உடனடியாக அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டன.
பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பைத் தொடர்ந்து ஜனவரி 28 மற்றும் 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில், குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் விவாதம் நடத்த இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டு, கிறிஸ்தவ மிஷனரிக்குச் சொந்தமான சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வித்யோதயா ஆடிட்டோரியத்தில் இந்த விவாதம் நடைபெறுவதாக இருந்தது.
தலைகுனிந்த கிறிஸ்தவ அறிஞர்கள் :
கடந்த வாரம் நடந்து முடிந்த பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வைக்கப்பட்ட பைபிளிலுள்ள ஆபாச வசனங்களுக்கும், கேவலமான சட்டங்களுக்கும், பொய்யான உளறல்களுக்கும், கணக்கில்லாத முரண்பாடுகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் கிறிஸ்தவ அறிஞர்கள் குழுவினர் திணறினார்கள்.
எதிரணியினரை ஆட்டம் காண வைத்த பீஜேவின் அறிவிப்பு:
பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் பேச வந்த கிறிஸ்தவ அறிஞர்கள் கூட்டம் பைபிளில் உள்ள ஆபாசங்களை நாம் அள்ளிப்போட ஆரம்பித்தவுடனே பதில் சொல்ல முடியாமல் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆபாசம் உள்ளது என்று கூறி சம்பந்தமில்லாத வசனங்களையும், ஹதீஸ்களையும் கூறி விவாதத்தைத் திசை திருப்பப் பார்த்ததை நாமெல்லாம் அறிவோம்.
இவர்களது இந்த குள்ள நரித்தனத்தைப் பற்றி பீஜே சென்ற விவாதத்தில் குறிப்பிடும் போது இது குறித்து அவர்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தார்.
தயார் நிலையில் 600க்கும் மேற்பட்ட சிலேடுகள்:
பைபிள் இறைவேதம் என்று நிரூபிக்க வந்தவர்கள் குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி தலைப்புக்கு வெளியே சென்று விட்டனர். இவர்கள் எப்படி பைபிளைப் பற்றி பேசாமல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி தலைப்புக்கு வெளியே சென்றார்களோ அது போல இவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியின் அடிப்படையில் நாமும் அடுத்த விவாதத்தில் தலைப்பில் விவாதிப்பதுடன் பைபிளில் உள்ள ஆபாசங்களையும் பட்டியல் போடுவோம்.
பைபிளிலுள்ள ஆபாசங்களில் சொற்பமான அளவு தான் இப்போது போட்டுக் காட்டியுள்ளோம் (சுமார் 20 சிலேடுகள் மட்டும் தான்). இது போல இன்னும் நாங்கள் தயாரித்து வைத்துள்ள 600 சிலேடுகளை அடுத்த விவாதத்தின் போது போட்டுக் காட்டுவோம் என்று பீஜே அறிவிப்பு செய்திருந்தார்.
20க்கே இந்த நாற்றம் என்றால் 600 போட்டால் என்னவாகுமோ?:
பைபிள் பற்றிய தலைப்பில் வெறும் இருபது சிலேடுகளுக்கே இப்படி நாறி நாற்றமெடுத்து விட்டது என்றால், 600 சிலேடுகளையும் போட்டுக் காட்டுவார்களேயானால் என்னவாகும் என்று பயந்த அந்தக் குழுவினர் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிடியிலிருந்து தப்பித்து தலைதெறித்து ஓட்டமெடுக்க வழிதேடிக் கொண்டிருந்தனர்.
வயிற்றில் புளியைக் கரைத்த பீஜேயின் அடுத்த அறிவிப்பு:
600 சிலேடுகள் அடுத்த தலைப்பில் வரவுள்ளன என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றுமொரு விஷயத்தையும் கடந்த விவாதத்தின் போது பீஜே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.
இவர்கள் இப்னு கஸீர் நூலில் அப்படி உள்ளது; இத்கான் என்ற நூலில் இப்படி உள்ளது; அல்கசாலி அப்படி சொல்லியுள்ளார்; அல்சுயூத்தி இப்படி சொல்லியுள்ளார்; அலிகான் என்பவர் அவ்வாறு கூறியுள்ளார்; அல்கபாரியும், அல்மசூதியும் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று மனம்போன போக்கில் தங்களது கற்பனைக் கோட்டையின் கதவுகளை திறந்துவிட்டு இஷ்டத்திற்கு புகுந்து விளையாடினர்.
இவர் இவர் இவ்வாறெல்லாம் சொல்லியுள்ளார் என்று சொன்னீர்களே அதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுடைய மூல நூல்களிலிருந்து விவாத ஒப்பந்தத்தின்படி ஆதாரம் காட்டியாக வேண்டும். எனவே நீங்கள் சொன்ன அனைத்திற்கும் ஆதாரம் தற்போது வேண்டும் என்று பீஜே சென்ற விவாதத்தில் கேட்டபோது அவர்கள் எதற்கும் ஆதாரம் தரவில்லை. புகாரி என்று மேற்கோள்காட்டிய ஒரு ஹதீஸிற்கு மட்டும் முஸ்லிமில் உள்ளதாக பலமணி நேர போராட்டத்திற்கு பின்பு ஆதாரம் தந்தனர்.
பைபிளில் பல வசனங்களைக் காணவில்லை. பல வசனங்களுக்கு பிராக்கேட் (அடைப்புக்குறி) போட்டுள்ளனர். பல வசனங்களில் வெறும் வசன எண் மட்டும் தான் உள்ளது என்று இவர்கள் பைபிளில் செய்துள்ள கைவரிசையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய போது, அதற்கு விவாதக் குழுவில் ஒருவரான பவுல் என்பவர் பதிலளித்தார். குர்ஆனின் மூலப்பிரதியிலும் இது போன்ற அடைப்புக்குறிகள் போடப்பட்டுள்ளது என்று அப்போது அவர் உளறியவுடனே, பீஜே அவர்கள் அதற்கும் ஆதாரத்தை மூலப்பிரதியிலிருந்து காட்ட வேண்டும் என்று கேட்க விவாதத்தின் இறுதி வரை அவர்கள் அதற்கு ஆதாரம் தரவில்லை.
இது குறித்து கருத்துச் சொன்ன பீஜே ., இவர்கள் ஆதாரமில்லாமல் சொன்ன விஷயங்கள் பலவற்றிற்கு ஆதாரம் கேட்டோம். அவர்கள் இது வரை எந்த ஆதாரத்தையும் தரவில்லை. ஆனால் அடுத்த தலைப்பில் நாங்கள் இவ்வாறு விடமாட்டோம். குர்ஆன் குறித்த ஏதாவது ஒரு குற்றச்சாட்டை இவர்கள் சொல்வார்களேயானால், அதற்குரிய ஆதாரத்தை மூலப்பிரதியில் இருந்து காட்டினால் தான் அடுத்த அமர்வுக்குச் செல்வோம்; ஒப்பந்தத்தின் படி ஆதாரத்தை எடுத்து காட்ட வேண்டும் என்ற பீஜேயின் அறிவிப்பு அவர்களுக்குக் கலக்கத்திற்கு மேல் கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில், இவர்கள் குர்ஆன் பற்றி சுமத்தக்கூடிய குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை இவர்களால் ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களே. இது குறித்து நாம் ஆய்வு செய்த வகையில் அதை உறுதி செய்து கொண்டோம்.
இவர்கள் விவாதத்திலிருந்து எப்படியாவது தப்பியோடிவிட வேண்டும் என்பதற்கான அவசியத்தை பீஜேவின் இந்த அறிவிப்பும் அவர்களுக்கு ஏற்படுத்தியது.
கிறிஸ்தவ அறிஞர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நேரடி ஒளிபரப்பு :
நிலைமை இவ்வாறு இருக்க விவாதம் செய்யும் இரண்டு தரப்பினரும், தங்களது இனையதளங்களின் வாயிலாக பரஸ்பரம் பேசிக் கொண்ட அடிப்படையில் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்புக்கொண்டு அவரவர் இணையதளத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மட்டும், ஆன்லைன் பீஜே, டிஎன்டிஜே டாட் நெட், தவ்ஹீத் வீடியோ , ஜீஸஸ் இன்வைட்ஸ் ஆகிய நான்கு தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதையும், ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் இந்த விவாதத்தை உலகம் முழுவதும் கண்டு களித்துள்ளனர் என்ற புள்ளி விபரத்தையும் கடந்த உணர்வு இதழில் தெரிவித்திருந்தோம். அது போல் அவர்களும் தமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
இவர்களுக்கு இது மிகப்பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியதும், உலகம் முழுவதுமுள்ள மக்கள் இவர்களையும், இவர்களது கொள்கையையும் புரிந்து கொள்ளும் நிலை உருவாவதற்கும், பைபிளின் புகழ்(?) உலகம் முழுவதும் பரவுவதற்கு இந்த நேரடி ஒளிபரப்பு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததும் இவர்களுக்கு பெருத்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இவர்கள் தப்பியோட வழிவகை தேட அடுத்த காரணியாக அமைந்தது.
கிறிஸ்தவ அறிஞர்களுக்கு பீதியை ஏற்படுத்திய விவாத முறை :
இவர்கள் ஆரம்பம் முதலே நம்மிடத்தில் விவாத அழைப்பு விடுத்ததிலிருந்து, விவாதம் ஒப்பந்தம் போட்டு முடிக்கும் வரைக்கும் ஒரே ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தனர்.
எந்த முறையில் விவாதம் நடத்துவது என்று பேசும் போது ஒவ்வொரு தலைப்பிலும் மொத்தம் விவாதம் செய்ய ஒதுக்கப்பட வேண்டிய நேரம் 3 மணி நேரம். 1 மணி நேரம் அவர்கள் ஒரு உரை நிகழ்த்துவார்களாம்; அடுத்து நாம் 1 மணி நேரம் உரை நிகழ்த்த வேண்டுமாம்; அடுத்து இருவரும் அரை மணி நேரம், அரைமணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு விவாதத்தை முடித்துவிட வேண்டுமாம். இதுதான் உலகம் முழுவதும் விவாதம் செய்ய ஏற்றுக் கொண்டுள்ள நடைமுறை. எனவே நாமும் அதைப் போலத் தான் விவாதிக்க வேண்டும் என்று சொல்லி அடம்பிடித்தனர்.
உலகம் முழுவதும் ஒரு கிறுக்குத்தனத்தைச் செய்து வந்தால் நாமும் அந்த கிறுக்குத்தனத்தை ஏன் செய்ய வேண்டும்? விவாதம் என்பது 2 மணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு படம்காட்டி விட்டு செல்வதற்கல்ல. சத்தியம் எது? அசத்தியம் எது? என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்காகத்தான் விவாதம். எனவே ஒரு தலைப்பிற்கு குறைந்தது மூன்று நாளிலிருந்து ஒரு வாரம் காலமாவது தேவை. அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால் குறைந்தது இரண்டு நாளாவது விவாதம் நடைபெற வேண்டும்.
அந்த விவாத நேர இடைவெளி கூட தரப்புக்கு பத்து பத்து நிமிடங்கள் தான் இருக்க வேண்டும் என்றும், இதுதான் நாங்கள் பின்பற்றக்கூடிய முறை என்று கூற அரண்டு போன எதிர்தரப்பினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டனர்.
விவாதம் என்றால் என்ன என்று பாடம் நடத்திய பீஜே :
இவர்கள் நினைத்து வந்ததோ 1 மணி நேர உரை நிகழ்த்திவிட்டு ஓடிவிடலாம் என்று, தவ்ஹீத் ஜமாஅத்தோ இவர்களுக்கு விவாதம் என்றால் என்ன என்று பாடம் நடத்திக் காட்டியது.
கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களை தங்கள் வாழ்நாளிலே இவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அல்லாஹ்வின் பேருதவியால் அவர்கள் துவைக்கப்பட்டனர். அப்போதுதான் இவர்களுக்கு புரிந்திருக்கும் விவாதம் என்றால் இதுதானா? என்று.
காரணமென்னவெனில் இவர்கள் இதற்கு முன்பு நடத்திய விவாதமெல்லாம் ஒரு மணி நேரம் படம் காட்டும் விவாதங்களே!. இப்பொழுதுதான் தங்கள் வாழ்க்கையில் விவாதம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டனர்.
இப்படி அடி வாங்கிக் கொண்டு எத்தனை நாட்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடத்தில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதையும் அனுபவப்பூர்வமாக இவர்கள் உணர்ந்ததும் தப்பியோட வேண்டிய நிர்பந்தமான நிலைக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதற்கான அடுத்த காரணம்.
குர்ஆன் பற்றிய தலைப்பில் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியம் என்ன? :
பைபிள் சம்பந்தமாக அத்துனை ஆபாசங்களையும், கேவலங்களையும் அள்ளிப்போட்ட பிறகும் அதைக் கேட்டுக் கொண்டு தாங்கிக்கொண்டு இருந்தவர்கள், குர்ஆன் பற்றிய தலைப்பிலிருந்து ஏன் தப்பியோட வேண்டும் என்ற கேள்விக்கான விடைகள்தான் மேலே நாம் சுட்டிக்காட்டியவை:
பைபிளில் உள்ள அசிங்களில் இன்னும் 600 சிலேடுகள் மிச்சமுள்ளன; அவைகளையும் இந்த தலைப்பில் அள்ளிப் போடுவோம் என்ற பீஜேயின் எச்சரிக்கை ஒருபுறம்
எந்த ஆதாரம் சொன்னாலும் அதற்கான மூலப்பிரதி ஆதாரம் கேட்போம் என்ற பீஜேயின் எச்சரிக்கை ஒருபுறம்
உலகம் முழுவதும் தலைக்குனிவை ஏற்படுத்தும் நேரடி ஒளிபரப்பு மறுபுறம்
கிடுக்கிப்பிடி போட்டு கேள்விகேட்டு அடித்தளத்தை ஆட்டம் காணவைக்கும் டிஎன்டிஜேயின் விவாத முறை மறுபுறம்
இவ்வளவையும் சகித்துக் கொண்டு எப்படி இவர்களோடு விவாதம் செய்வது? எனவே ஏதாவது காரணம் சொல்லி தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினால் மட்டுமே நம்முடைய கொள்கையை தக்க வைக்க முடியும். இல்லை என்றால் இவர்கள் நம்முடைய கொள்கைக்கு சமாதி கட்டி, இந்த வெத்துக்கோட்பாட்டை சிலுவையில் தொங்கவிட்டு விடுவார்கள் என்று பயந்த காரணத்தினால் தான் பின்வாங்கி ஓட்டமெடுத்துள்ளனர்.
ஓட்டமெடுப்பதற்கு கிடைத்த நம்பர் ஒன் நொண்டிச்சாக்கு :
எப்படியாவது தப்பியோடி விடலாம் என்று இவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு ஒரு நொண்டிச்சாக்கு கிடைத்தது.
கிறுஸ்தவ மிஷனரிக்குச் சொந்தமான வித்யோதயா ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று இவர்களது அமைப்புக்கு மட்டும் போலீஸ் தரப்பு தடை போட்டுள்ளதாக ஒரு செய்தியை ஜனவரி 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை கூறினர்.
வித்யோதயா ஆடிட்டோரியம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சாக் ஷி ஆகிய இரு அமைப்புகள் பெயரிலும் தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மட்டும் எப்படி தடை உத்தரவு போட்டார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த பரம ரகசியம். இது குறித்து காவல்துறை நமக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதே இவர்கள் உள்வேலை செய்துள்ளார்கள் என்பதற்குச் சரியான ஆதாரமாக உள்ளது.
இவர்கள் வெளியிட்ட போலீஸ் கமிஷனர் அலுவலக கடிதத்தில் உள்ள ஒரு வாசகம் கவனிக்கத் தக்கது.
கிறிஸ்தவர்களும், இந்துக்களும் டி.என்.டி,ஜே தவிர மற்ற முஸ்லிம்களும் இதை நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்ததாக அந்த கடிதத்தில் உள்ளது. சான் அமைப்பைத் தவிர மற்ற கிறிஸ்த்தவர்கள் இப்படி கேட்டுக் கொண்டதாக கமிஷனர் கடிதம் சொல்லவில்லை. இதில் இருந்து கோரிக்கை வைத்த கிறிஸ்தவர்களில் இவர்களும் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஆட்சேபனை செய்தாலும் அதில் டிஎன்டிஜே இருக்கவில்லை என்றும் கமிஷனர் கடிதம் கூறுகிறது.
இதன் பின்னர் நம்மை அவர்கள் தொடர்பு கொண்டு விவாதம் தடை செய்யப்பட்ட தகவலைச் சொன்னார்கள். வித்யோதையா அரங்கத்தில் தடை செய்யப்பட்டால் கவலை இல்லை. திட்டமிட்டபடி விவாதம் நடக்க வேண்டும். எனவே எங்கள் தலைமை அலுவலகத்தில் இதை நடத்திக் கொள்வோம் என்று நாம் தொலைபேசியில் தெரிவித்தோம்.
பார்வையாளர்களை மட்டும் ஒரு தரப்புக்கு 25 பேர் எனக் குறைத்துக் கொள்வோம் என்றும் நாம் கூறினோம்.
இதை ஏற்றுக் கொண்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அத்துடன் டி.என்.டி.ஜே தலைமை அலுவலகத்தில் நடத்திட எழுத்துமூலம் அழைப்பு தருமாறு அதில் குறிப்பிட்டனர்.
இது வெள்ளிக்கிழமை இரவு 7.46 க்கு அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்
கருத்தாக்கம்- TNTJ வினருக்கு துணை ஆணையாளர் விவாதத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து உங்கள் மாநிலத் தலைமையில் 25 பார்வையாளர்கள் அனுமதியுடன் விவாதம் நடத்தலாம் என தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தீர்கள் அதை அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றோம்.
அதன்படி 09.01 மணிக்கு நாம் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுத்து கீழ்க் கண்ட அழைப்பையும் அனுப்பினோம். எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் உரிய பாதுகாப்புடன் இதை நடத்துவோம் என்று உறுதி மொழியும் அளித்தோம்.
நாம் 9.01 க்கு அனுப்பிய மின்னஞ்சல்
இடத்தையும், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் தவிர மற்ற அனைத்தும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் நாம் மெயில் அனுப்பியவுடன் வெள்ளிக்கிழமை இரவு 9.07க்கு மணிக்கு தலைமையகத்தில் வைத்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்தனர்.
நமது அதிகாரப்பூர்வ அழைப்பை தொடர்ந்து இரவு 9.07 க்கு அவர்கள் அனுப்பிய மெயில்
கருத்தாக்கம் TNTJ நண்பர்களுக்கு உங்கள் அலுவலகத்தில் வைத்து விவாதம் நடத்த எங்களை அழைத்ததற்கு மிக்க நன்றி உங்கள் அலுவலகத்தில் நடைபெறும் விவாத்திற்கு நாங்கள் வருவோம் என உறுதி அளிக்கின்றோம்.
இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு நாங்கள் உறங்கச் சென்ற பின்னர் நள்ளிரவில் 12.40 மணிக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார்கள். அதில் நேரடி ஒளிபரப்பை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். அதை நிபந்தனையாக சொல்லவில்லை. இந்த மெயிலை நாங்கள் காலையில் தான் பார்த்தோம்.
நள்ளிரவு 12.40 க்கு அவர்கள் அனுப்பிய மெயில்
கருத்தாக்கம் TNTJ விற்கு காவல் துறை துணை ஆணையாளர் உத்தரவிற்கு இனங்க தாங்கள் நாளை விவாத நிகழ்ச்சியில் நேரடி இணையதள ஒளிரப்பை வைத்துக் கொள்ள வேண்டாம்.
இணையதள ஒளிபரப்பு இருந்தால் நாங்கள் விவாத்திற்கு வர மாட்டோம் என சனிக்கிழமை 28-1-2012 காலை 7.30 க்கு மணிக்கு அவர்கள் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து
8.47 க்கு அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்
கருத்தாக்கம்: இணையதள ஒளிபரப்பை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டால் நாங்கள் விவாத்திற்கு வரத் தயார்.
உடனே நேரடி ஒளிபரப்பைத் தவிர்க்க மாட்டோம் அதனால ஒரு பிரச்சனையும் வராது. வந்தால் அதை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று மறுத்து நாம் அனுப்பிய மின்னஞ்சல்
இதன் பின்னார் விவாதம் நடப்பதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது தான் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதாக சொன்னால் தான் நாங்கள் வருவோம் என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள்.
இது தான் நடந்த உண்மை.
இணையதள நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்ற துணை ஆணையாளர் உத்தரவிடவில்லை. என்று அவர்களே ஒப்புக் கொண்டு 9:19 க்கு அனுப்பிய மின்னஞ்சல்
விவாதத்திற்கு வர வேண்டியது உங்கள் மீது கடமை எனக்கூறி நாம் 9:46 க்குஅனுப்பிய மின்னஞ்சல்
அப்பட்டமான பொய்கள்:
தலைமையகத்தில் வைத்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்து இரவு 9.07 மணிக்கு இவர்கள் மின்னஞ்சல் அனுப்பிய போது, நேரடி ஒளிபரப்பு சம்பந்தமாக எதுவும் அவர்கள் பேசவில்லை. ஆனால் இதுகுறித்து ஜெர்ரிதாமஸ் அவர்கள் நாங்கள் ஏன் விவாதத்திலிருந்து பின்வாங்கினோம்? என்று விளக்கமளித்து நேரடி ஒளிபரப்பு செய்த போது புளுகிய அண்டப்புளுகுகளின் பட்டியல்:
புளுகு 1 :
விவாதத்தின் போது நேரடி ஒளிபரப்பை ரத்து செய்தால்தான் விவாதத்திற்கு நாங்கள் வருவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் தலைமையகத்தில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டோம் என்று அப்பட்டமாக புளுகித் தள்ளியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவில் நம்முடைய தலைமையகத்தில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டார்கள் விவாதம் நடப்பதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது தான் அர்த்தமற்ற நிபந்தனையை விதித்தார்கள்.
புளுகு 2 :
அதுமட்டுமல்லாமல் விவாதம் தொடங்குவதற்கு முன்னரே கிறிஸ்தவ தரப்பில் 25 பார்வையாளர்கள் தலைமையகத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும் தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை ஜெர்ரி அவிழ்த்துவிட்டுள்ளார்.
நம்முடைய தலைமையகத்தில் 16 இடங்களில் கண்கானிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. சனிக்கிழமை காலையில் இருந்து விவாதம் துவங்கும் வரை உள்ள பதிவுகளைக் காட்டி இவர்கள் தரப்பில் ஒருவரும் வரவில்லை என்று நிரூபிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
புளுகு 3:
அதோடுமட்டுமல்லாமல், ஜெர்ரி தனது விளக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று துணை ஆணையருடைய உத்தரவில் தெளிவாக உள்ளது என்று கூறி மக்களை முட்டாளாக்க முயற்சித்துள்ளார்.
துணை ஆணையருடைய உத்தரவில் டிவி சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உள்ளதைத் தான் தனக்கு ஏதுவாக மாற்றி புளுகியுள்ளார்.
விரட்டிச்சென்ற தவ்ஹீத் ஜமாஅத் :
இரவு விவாதத்திற்குரிய அனைத்து முன் ஏற்பாடுகளும் நமது மாநிலத் தலைமையகத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
எப்படியாவது போலீஸ் பெயரைச் சொல்லி தப்பி விடலாம் என்று ஐடியா பண்ணினால் அவர்களது தலைமையகத்திலேயே வைத்து நடத்தலாம் என்று சொல்லி விட்டார்களே! இனிமேலும் எப்படி தப்பியோடுவது என்று ஆலோசித்து அடுத்த கட்டநடவடிக்கையாக நள்ளிரவு 12.40க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்கள்.
டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று சொன்ன விஷயத்தை, இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இவர்களாக திரித்து கள்ளத்தனம் செய்துள்ளனர் என்பது பிறகு நமக்கு தெரியவந்தது.
சட்டம் ஒழுங்கை ரொம்ப(?) மதிப்பவர்களாம்:
எப்படியாவது தப்பியோடி மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் விவாதம் செய்கின்றோம் என்ற பெயரில் இழந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்த அந்தக்கூட்டம் நேரடி ஒளிபரப்பை நிறுத்தினால்தான் வருவோம் என்று அடம்பிடித்தனர்.
நேரில் வாருங்கள்; நாம் தலைமையகத்தில் அமர்ந்து ஆலோசனை செய்து கொள்வோம் என்று நாம் அழைத்தும், எங்கே அங்கு போனால் அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விவாத களத்தில் உட்கார வைத்து விடுவார்களோ என்ற பயத்திலும், நடுக்கத்திலும், தலைமையகத்திற்கு வரவும் மறுத்துவிட்டனர்.
விவாத ஒப்பந்தம் செய்வதற்காக பல முறை அவர்கள் நம்முடைய அலுவலகம் வந்தனர். நாம் எவ்வளவு கண்ணியமாக அவர்களை நடத்தினோம் என்பது அவர்களுக்கே தெரியும்.
உச்சகட்ட காமெடி :
கிறிஸ்தவர்கள் சட்டம் ஒழுங்கை மதிக்கக் கூடியவர்கள். எனவே தான் துணை ஆணையாளருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று டிஎன்டிஜேவினரை கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. எனவே தான் சட்ட ஒழுங்கை மீறக்கூடாது என்பதற்காக விவாததிலிருந்து பின்வாங்கி விட்டோம் என்று பொய்க் காரணத்தை கூறியுள்ளதுதான் உச்சகட்ட காமெடி.
இவர்கள் சட்ட ஒழுங்கை மதிப்பவர்களாக இருந்தால், துணை ஆணையாளருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக இருந்தால் வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று துணை ஆணையாளருடைய உத்தரவு நகல் இவர்களது கையில் கொடுக்கப்பட்டவுடனே இவர்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டும்.
பைபிள் பாணியில் உதாரணம் :
நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்ற போலீஸ் துறையின் உத்தரவை மீறுவார்களாம்; போலீஸ் போடாத உத்தரவான இணையதள நேரடி ஒளிபரப்பு விஷயத்தில் போலீஸுக்குக் கட்டுப்படுவார்களாம். பைபிளைப் போலவே இவர்களது பேச்சும் செயலும் முரண்பாடாகவும், உளறலாகவும் உள்ளது. தாங்கள் பைபிளை பின்பற்றக்கூடியவர்கள் எனபதை இப்படியும் இவர்கள் நிரூபித்து விட்டனர்.
ஒரு வழியாக ஏதோ ஒரு நொண்டிச் சாக்கைச் சொல்லி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்த கூட்டம் தங்களது இணையதளத்தில் உட்கார்ந்து கொண்டு நேரலை நிகழ்ச்சி நடத்தி குர்ஆனை விமர்சித்து பேசியதுதான் இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதற்குப் பலமான ஆதாரம்.
விவாதம் நடத்துவதாக நம்மிடம் ஒப்புக்கொண்டு போலீஸ் உத்தரவை மீறி சட்டம் ஒழுங்கை(?) நிலைநாட்டியது ஒருபுறம் அவர்களது இணையதளத்தில் உட்கார்ந்து கொண்டு திருக்குர்ஆனை விமர்சித்து நேரலை நிகழ்ச்சி நடத்தி இவர்கள் எந்த நொண்டிச்சாக்கைக் கூறினார்களோ அதை அவர்களே மீறி தங்களைப் பொய்யர்கள் என்று நிரூபித்தது மறுபுறம் அல்லாஹ் இவர்களது நயவஞ்சகத்தனத்தை இவர்களை வைத்தே நிரூபித்து விட்டான்.
திருக்குர்ஆன் இறைவேதமே!:
அவர்கள் வராமல் ஓடிவிட்டாலும் பரவாயில்லை; இணையதளத்தில் உலகம் முழுவதும் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்த நேயர்களுக்கும், விவாதத்தைக் காண பல நூறு கிலோ மீட்டர்களைக் கடந்து வந்திருந்த பார்வையாளர்களுக்கும், இந்த உலகத்திற்கும் இது குறித்த ஆதாரங்களை எடுத்து வைப்பது நாம் கடமை என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளைக் கொண்டு நிரூபித்தனர்.
மேலும், இந்த அரைவேக்காடுகள் கேட்ட மற்றும் கேட்கக்கூடிய கேள்விகளைப் பட்டியல் போட்டு அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பீஜே அவர்கள் வரிக்குவரி அவற்றிற்குப் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சி நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பது மீண்டும் நிரூபணமானது.
எஸ்கேப் .. எஸ்கேப் . எஸ்கேப் .
ஆக மொத்த்த்தில் பைபிளின் ஆபாசங்களையும், கேவலங்களையும், முரண்பாடுகளையும், உளறல்களையும், பொய்களையும் கேட்டுவிட்டு கடந்த விவாதத்தில் அவர்கள் தரப்பு பார்வையாளர்களாக வந்தவர்களில் 85 பார்வையாளர்கள் எஸ்கேப். ஆனால் தற்போது விவாதம் செய்ய வந்த மதபோதகர்களே எஸ்கேப் ஆகிவிட்டனர் என்றால் இதுவே சொல்கின்றது. பைபிள் இறைவேதமல்ல என்று.
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும் பாதிரி களையும் மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளை யிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
அல்குர்ஆன் 9:31,32
30.01.2012. 7:40 AM
சான் கிறித்தவக் குழுவினருடன் விவாதம்1
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode