Sidebar

19
Wed, Feb
67 New Articles

பரிசுத்த ஆவி மூலம் பேசுவதாக சொல்வது உண்மையா?

கிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா?

வி.பாஸ்கர்

பதில் :

இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும், நோய்களைப் போக்குவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

மாற்கு 16:17

இதை ஆதாரமாக்க் கொண்டு மனித இயல்புக்கு அப்பாற்பட்ட தொனியிலும், தோரணையிலும் உபதேசம் செய்கிறார்கள். அப்போது தான் அதை இவர்கள் பேசாமல் பரிசுத்த ஆவி பேசுகிறது என்று அப்பாவி கிறித்தவர்கள் நம்புவார்களாம். இதற்காக இறங்ங்ங்ங்குவீராக என்று நவமான பாஷை பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் ஆதரமாகக் காட்டும் மேற்கண்ட வசனத்துக்கு அடுத்த வசனத்தில் உள்ளதை பரிசுத்த ஆவி மூலம் செய்து காட்டச் சொன்னால் ஓட்டம் பிடிப்பார்கள். இது தான் அடுத்த வசனம்.

சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

மாற்கு 16:18

பாம்புகளைக் கையால் பிடிக்கலாம்; விஷத்தைக் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

கொஞ்சம் சயனைட் விஷத்தை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து இதைக் குடித்து விட்டு உயிரோடு இருந்து காட்டுங்கள் என்று கிறித்தவ போதகர்களிடம் கேளுங்கள். மேலும் கட்டு விரியன் பாம்பை கையால் பிடிக்கச் சொல்லுங்கள். அப்போது பரிசுத்த ஆவி அசுத்த ஆவியாகி விடும்.

இவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. இயேசுவே சொன்னதாக பைபிள் கூறுவது தான் நம்முடைய கருத்து.

தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள். தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்! கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

மத்தேயு 23:5

அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெபஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும்  நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு! அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்! அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்! உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

மத்தேயு 6:5-8

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்;. நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள். இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு 23:13-15

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம்! வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

மத்தேயு 10:9,10

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்!; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 7:15

மேலும் கிறித்தவக் கொள்கையின் நிறுவனர் பவுலடிகள் நாங்கள் மதத்தைப் பரப்ப பொய் சொல்வோம் என்று வாக்கு மூலம் கொடுத்த பின் வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

முதலாம் கொரிந்தியர்-9:7

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account