அத்தியாயம் : 6 மாதவிடாய்
وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ عَنِ المَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي المَحِيضِ} [البقرة: 222]- إِلَى قَوْلِهِ - {وَيُحِبُّ المُتَطَهِّرِينَ} [البقرة: 222]
அல்லாஹ் கூறுகின்றான்:
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.48 "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்பு கிறான்'' எனக் கூறுவீராக!
بَابُ كَيْفَ كَانَ بَدْءُ
பாடம் : 1
மாதவிடாய் எப்படி ஆரம்பமானது?
الحَيْضِ وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இ(ந்த மாதவிடாயான)து, ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய விஷயமாகும் என்று சொன்னார்கள்.
وَقَالَ بَعْضُهُمْ: «كَانَ أَوَّلُ مَا أُرْسِلَ الحَيْضُ عَلَى بَنِي إِسْرَائِيلَ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَحَدِيثُ النَّبِيِّ صلّى الله عليه وسلم أَكْثَرُ»
சிலர், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்களிலிருந்தே முதன் முதலில் மாதவிடாய் ஆரம்ப மானது என்று கூறுகின்றனர்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன்மொழியே அதிகம் (ஏற்புடையது) ஆகும்.
294 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ القَاسِمِ، قَالَ: سَمِعْتُ القَاسِمَ بْنَ مُحَمَّدٍ ، يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: خَرَجْنَا لاَ نَرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قَالَ: «مَا لَكِ أَنُفِسْتِ؟». قُلْتُ: نَعَمْ، قَالَ: «إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ» قَالَتْ: وَضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ
294 ஹஜ்ஜைத் தவிர வேறு எண்ணமின்றை நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப்' என்ற இடத்தில் நாங்கள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. நான் அழுது கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், ஆம்' என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, கஅபாவை தவாஃப் செய்வது தவிர ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் அனைத்தையும் நிறைவேற்று என்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்தார்கள்.
அறிவிப்பவர் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)
بَابُ غَسْلِ الحَائِضِ رَأْسَ زَوْجِهَا وَتَرْجِيلِهِ
பாடம் : 2
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும், அவரது தலைமுடியை வாரிவிடுவதும்.
295 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»
295 எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
296 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّهُ سُئِلَ أَتَخْدُمُنِي الحَائِضُ أَوْ تَدْنُو مِنِّي المَرْأَةُ وَهِيَ جُنُبٌ؟ فَقَالَ عُرْوَةُ: كُلُّ ذَلِكَ عَلَيَّ هَيِّنٌ، وَكُلُّ ذَلِكَ تَخْدُمُنِي وَلَيْسَ عَلَى أَحَدٍ فِي ذَلِكَ بَأْسٌ أَخْبَرَتْنِي عَائِشَةُ: «أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ، تَعْنِي رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ حَائِضٌ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَئِذٍ مُجَاوِرٌ فِي المَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ، وَهِيَ فِي حُجْرَتِهَا، فَتُرَجِّلُهُ وَهِيَ حَائِضٌ»
296 மாதவிடாய் ஏற்பட்டவள் எனக்குப் பணிவிடை செய்யலாமா? பெருந்துடக்குடைய பெண் என்னை நெருங்கலாமா? என்று (என் தந்தை) உர்வா அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர் என்னைப் பொறுத்தவரையில் இது சாதாரண விஷயம் தான். (என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவார்கள். தமது அறையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்கு தலை வாரிவிடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள் என்று உர்வா அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹிஷாம் பின் உர்வா
بَابُ قِرَاءَةِ الرَّجُلِ فِي حَجْرِ امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ
பாடம் : 3
மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது.
وَكَانَ أَبُو وَائِلٍ: «يُرْسِلُ خَادِمَهُ وَهِيَ حَائِضٌ إِلَى أَبِي رَزِينٍ، فَتَأْتِيهِ بِالْمُصْحَفِ، فَتُمْسِكُهُ بِعِلاَقَتِهِ»
அபூவாயில் அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட தமது பணிப் பெண்ணை அபூரஸீன் அவர்களிடம் அனுப்பி திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள்.
297 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الفَضْلُ بْنُ دُكَيْنٍ، سَمِعَ زُهَيْرًا، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، أَنَّ أُمَّهُ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ القُرْآنَ»
297 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ مَنْ سَمَّى النِّفَاسَ حَيْضًا، وَالحَيْضَ نِفَاسًا
பாடம் : 4
பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய்க்கும், மாதவிடாயைக் குறிக்கும் ஹைல் எனும் சொல்லைப் பிரசவத் தீட்டுக்கும் பயன்படுத்துவது.
298 - حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ: بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُضْطَجِعَةٌ فِي خَمِيصَةٍ، إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي، قَالَ: «أَنُفِسْتِ» قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الخَمِيلَةِ
298 நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் மெல்ல நழுவி மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டு விட்டதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
அறிவிப்பவர் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி)
بَابُ مُبَاشَرَةِ الحَائِضِ
பாடம் : 5
மாதவிடாய் ஏற்பட்டுள்ள மனைவியை அணைத்தல்
299 - حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ كِلاَنَا جُنُبٌ»
299 பெருந்துடக்குடனிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
300 - وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ»
300 நான் மாதவிடயுடன் இருக்கும் போது துணி கட்டிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறிவிட்டு என்னை அணைத்துக்கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
301 - وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ»
301 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்த போது அங்கிருந்தவாறே என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்ட நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
302 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ هُوَ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَاشِرَهَا " أَمَرَهَا أَنْ تَتَّزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا، ثُمَّ يُبَاشِرُهَا، قَالَتْ: وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ، كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ " تَابَعَهُ خَالِدٌ، وَجَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ
302 (நபியின் மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அணைத்துக்கொள்ள விரும்பினால் துணியால் கட்டிக்கொள்ளுமாறு கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உணர்வைக் கட்டுப் படுத்துவது போல் உங்களில் யார் தமது உணர்வைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?
(அணைத்துக் கொள்வார்களே தவிர தாம்பத்தியத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பது இதன் கருத்து)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
303 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ: سَمِعْتُ مَيْمُونَةَ، تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَرَادَ أَنْ يُبَاشِرَ امْرَأَةً مِنْ نِسَائِهِ أَمَرَهَا، فَاتَّزَرَتْ وَهِيَ حَائِضٌ» وَرَوَاهُ سُفْيَانُ عَنِ الشَّيْبَانِيِّ
303 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக்கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக்கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
بَابُ تَرْكِ الحَائِضِ الصَّوْمَ
பாடம் : 6
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டுவிடுவது.
304 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي زَيْدٌ هُوَ ابْنُ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى المُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: وَبِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ»، قُلْنَ: وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَلَيْسَ شَهَادَةُ المَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا»
304 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், அல்லது நோன்புப் பெருநாள் தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பது எனக்குக் காட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் எனப் பெண்கள் கேட்டதும். நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; அறிவிலும், மார்க்கத்திலும் குறைவாக இருந்தும், மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியைப் போக்குவதில் உங்களைப் போல் யாரையும் நான் கண்டதில்லை எனக் கூறினார்கள். மார்க்கத்திலும், அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று அப்பெண்கள் கேட்டார்கள். பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்: என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? என்று கேட்க, அப்பெண்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது தான் அவளது மார்க்கக் குறைபாடாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
بَابٌ: تَقْضِي الحَائِضُ المَنَاسِكَ كُلَّهَا إِلَّا الطَّوَافَ بِالْبَيْتِ
பாடம் : 7
மாதவிடாய் ஏற்பட்டவள் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ்ஜுடைய கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றலாம்.
وَقَالَ إِبْرَاهِيمُ: «لاَ بَأْسَ أَنْ تَقْرَأَ الآيَةَ»،
இப்றாஹீம் அந்நகயீ அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை என்று கூறியுள்ளார்கள்.
وَلَمْ يَرَ ابْنُ عَبَّاسٍ «بِالقِرَاءَةِ لِلْجُنُبِ بَأْسًا»
பெருந்துடக்கு ஏற்பட்டு இருப்பவர் குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்.
وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ "
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்.
وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ: «كُنَّا نُؤْمَرُ أَنْ يَخْرُجَ الحُيَّضُ فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ وَيَدْعُونَ»
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை (தொழுகைத் திடலுக்கு) அழைத்துச் சென்று ஆண்களைப் போன்று தக்பீர் சொல்லவும் பிராத்திக்கவும் நாங்கள் பணிக்கப்பட்டோம் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ، أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَ فَإِذَا فِيهِ: " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَ {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ} [آل عمران: 64] " الآيَةَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி மன்னர் ஹெர்குலிஸ் அதை வாசிக்கச் செய்தார். அதில் : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் ... அளவற்ற அருளாளன் நகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்குமிடையில் பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள் (3:64) என்று தொடங்கும் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன என்று அபூ சுஃப்யான் கூறியதாக இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்.
وَقَالَ عَطَاءٌ: عَنْ جَابِرٍ، حَاضَتْ عَائِشَةُ فَنَسَكَتْ المَنَاسِكَ غَيْرَ الطَّوَافِ بِالْبَيْتِ وَلاَ تُصَلِّي
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; மேலும் தொழவில்லை என்று ஜாபிர் (ரலி) கூறியதாக அதா அறிவிக்கிறார்.
وَقَالَ الحَكَمُ: " إِنِّي لَأَذْبَحُ وَأَنَا جُنُبٌ، وَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلاَ تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121]
நான் பெருந்துடக்குடையவனாக இருக்கும் போது (பிராணிகளை) அறுப்பேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம் (6:121) என்று அல்லாஹ் கூறியுள்ளான் என்று ஹகம் என்பார் கூறுகிறார்.
305 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَذْكُرُ إِلَّا الحَجَّ، فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ؟» قُلْتُ: لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ العَامَ، قَالَ: «لَعَلَّكِ نُفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَافْعَلِي مَا يَفْعَلُ الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي»
305 ஹஜ்ஜைத் தவிர வேறு எண்ணமில்லாமல் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப்' என்ற இடத்திற்கு நாங்கள் வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. நான் அழுது கொண்டிருந்த போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து, ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்கள். நான், இந்த வருடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னால் ஹஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது ஆதமின் பெண்மக்களுக்கு அல்லாஹ் விதியாக்கியதாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் அனைத்தையும் நீ நிறைவேற்றிக்கொள். ஆயினும் தூய்மையாகும் வரை கஅபாவை தவாஃப் செய்யாதே என்றனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ الِاسْتِحَاضَةِ
பாடம் : 8
உயர் இரத்தப்போக்கு
306 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»
306 பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப் போக்குடையவளாவேன்; எனவே) நான் சுத்தமாவதில்லை. தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; மாதவிடாய் இரத்தமல்ல. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்து விட்டுத் தொழுதுகொள்! என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ غَسْلِ دَمِ المَحِيضِ
பாடம் : 9
மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்.
307 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ المُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهَا قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الحَيْضَةِ فَلْتَقْرُصْهُ، ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ»
307 அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று ஒரு பெண்மணி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டிருந்தால் அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் அவள் தொழலாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
308 - حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَتْ إِحْدَانَا تَحِيضُ، ثُمَّ تَقْتَرِصُ الدَّمَ مِنْ ثَوْبِهَا عِنْدَ طُهْرِهَا، فَتَغْسِلُهُ وَتَنْضَحُ عَلَى سَائِرِهِ، ثُمَّ تُصَلِّي فِيهِ»
308 எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் ஏற்படும். அவர் தூய்மையாகும் போது தனது ஆடையில் இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார். பின்னர் ஆடையின் மற்ற பகுதிகளில் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் தொழுவார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ اعْتِكَافِ المُسْتَحَاضَةِ
பாடம் : 10
உயர் இரத்தப்போக்குடையவள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது.
309 - حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ مَعَهُ بَعْضُ نِسَائِهِ وَهِيَ مُسْتَحَاضَةٌ تَرَى الدَّمَ»، فَرُبَّمَا وَضَعَتِ الطَّسْتَ تَحْتَهَا مِنَ الدَّمِ، وَزَعَمَ أَنَّ عَائِشَةَ رَأَتْ مَاءَ العُصْفُرِ، فَقَالَتْ: كَأَنَّ هَذَا شَيْءٌ كَانَتْ فُلاَنَةُ تَجِدُهُ
309 உயர் இரத்தப் போக்குடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் இரத்தத்தைக் காணும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் - தங்கியிருந்தார். சில சமயங்களில் இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை வைப்பார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் பின் மிஹ்ரான் அவர்கள் கூறுகின்றார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் குங்குமப்பூவின் நீரைப் பார்த்துவிட்டு, இது இன்னவளுக்கு ஏற்படுவது போல் உள்ளது என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா அவர்கள் கூறியுள்ளர்கள்.
310 - حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الدَّمَ وَالصُّفْرَةَ وَالطَّسْتُ تَحْتَهَا وَهِيَ تُصَلِّي»
310 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் மனைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் இரத்தத்தையும் மஞ்சள் நிறத்தையும் காண்பவராக இருந்தார். அவர் தொழும் போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
311 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ بَعْضَ أُمَّهَاتِ المُؤْمِنِينَ اعْتَكَفَتْ وَهِيَ مُسْتَحَاضَةٌ»
311 முஸ்லிம்களின் அன்னையரில் ஒருவர் உயர் இரத்தப்போக்குடையவராய் இருக்கும் நிலையில் இஃதிகாஃப் இருந்தார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابٌ: هَلْ تُصَلِّي المَرْأَةُ فِي ثَوْبٍ حَاضَتْ فِيهِ؟
பாடம் : 11
ஒரு பெண் மாதவிடாய் ஏற்பட்ட ஆடையுடன் தொழலாமா?
312 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «مَا كَانَ لِإِحْدَانَا إِلَّا ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِذَا أَصَابَهُ شَيْءٌ مِنْ دَمٍ قَالَتْ بِرِيقِهَا، فَقَصَعَتْهُ بِظُفْرِهَا»
312 எங்களில் சிலருக்கு ஒரேயொரு ஆடை மட்டுமே இருக்கும். அதில் தான் அவருடை மாதவிடாய் ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால் தமது உமிழ் நீரைத் தொட்டு அந்த இடத்தில் வைத்து தமது நகத்தால் சுரண்டிவிடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابٌ: الطِّيبُ لِلْمَرْأَةِ عِنْدَ غُسْلِهَا مِنَ المَحِيضِ
பாடம் : 12
மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது நறுமணத்தைப் பயன்படுத்துதல்.
313 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَوْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا، إِلَّا ثَوْبَ عَصْبٍ، وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ، وَكُنَّا نُنْهَى عَنِ اتِّبَاعِ الجَنَائِزِ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ ، عَنْ أُمِّ عَطِيَّةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
313 இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.)
எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது அள்ஃபார்' நகரத்து நறுமணக் குச்சியில் ஒரு துண்டைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம்.
அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி)
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
بَابُ دَلْكِ المَرْأَةِ نَفْسَهَا إِذَا تَطَهَّرَتْ مِنَ المَحِيضِ، وَكَيْفَ تَغْتَسِلُ، وَتَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً، فَتَتَّبِعُ أَثَرَ الدَّمِ
பாடம் : 13
ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும், அவள் எப்படிக் குளிக்க வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்தை எப்படித் துடைக்க வேண்டும் எனும் முறையும்.
314 - حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنَ المَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ، قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ، فَتَطَهَّرِي بِهَا» قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ؟ قَالَ: «تَطَهَّرِي بِهَا»، قَالَتْ: كَيْفَ؟، قَالَ: «سُبْحَانَ اللَّهِ، تَطَهَّرِي» فَاجْتَبَذْتُهَا إِلَيَّ، فَقُلْتُ: تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ
314 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாய்க்கான குளிப்பு பற்றிக் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையைக் கூறினார்கள். கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் தூய்மைப்படுத்திக்கொள்! என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்மணி, அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனால் தூய்மைப்படுத்திக்கொள்! என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் எப்படி? என்று கேட்டார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்டவாறு) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக் கொள்! என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக! என்று கூறினேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ غَسْلِ المَحِيضِ
பாடம் : 14
மாதவிடாய்க் குளியல்.
315 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ أَغْتَسِلُ مِنَ المَحِيضِ؟ قَالَ: «خُذِي فِرْصَةً مُمَسَّكَةً، فَتَوَضَّئِي ثَلاَثًا» ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَحْيَا، فَأَعْرَضَ بِوَجْهِهِ، أَوْ قَالَ: «تَوَضَّئِي بِهَا» فَأَخَذْتُهَا فَجَذَبْتُهَا، فَأَخْبَرْتُهَا بِمَا يُرِيدُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
315 அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வந்து), மாதவிடாக்காக நான் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து மூன்று முறை சுத்தம் செய்!' என்றோ அல்லது அதன் மூலம் சுத்தம் செய்!' என்றோ சொன்னார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவருவதை அவருக்கு விளக்கிக் கொடுத்தேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ امْتِشَاطِ المَرْأَةِ عِنْدَ غُسْلِهَا مِنَ المَحِيضِ
பாடம் : 15
மாதவிடாய்க் குளியலின் போது சீப்பினால் தலையை வாரிக்கொள்ளுதல்.
316 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: أَهْلَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، فَكُنْتُ مِمَّنْ تَمَتَّعَ وَلَمْ يَسُقْ الهَدْيَ، فَزَعَمَتْ أَنَّهَا حَاضَتْ وَلَمْ تَطْهُرْ حَتَّى دَخَلَتْ لَيْلَةُ عَرَفَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ لَيْلَةُ عَرَفَةَ وَإِنَّمَا كُنْتُ تَمَتَّعْتُ بِعُمْرَةٍ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَمْسِكِي عَنْ عُمْرَتِكِ»، فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْتُ الحَجَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ لَيْلَةَ الحَصْبَةِ، فَأَعْمَرَنِي مِنَ التَّنْعِيمِ مَكَانَ عُمْرَتِي الَّتِي نَسَكْتُ
318 (ஹஜ்ஜத்துல் வதா எனும்) விடைபெறும்' ஹஜ்ஜின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டினேன். நான் குர்பானிப் பிராணியைக் கொண்டுவராமல் தமத்துவு வகை இஹ்ராம் கட்டியவளாக இருந்தேன். இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபாவுடைய இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. (மாதவிடாயிலிருந்து நீங்கிய அந்த இரவு) அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ரா செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன். இதோ அரஃபா இரவாகி விட்டது. இதனால் என்னால் உம்ரா செய்யமுடியாமற் போய்விட்டது என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள்! உம்ரா செய்வதை நிறுத்திவிடு! (ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக்கொள்!) என்றனர். நானும் அவ்வாறே செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை நான் செய்து முடித்த போது (மதீனா செல்லும் வழியில்) ஹஸ்பா (எனுமிடத்தில் நாங்கள்) இரவில் அப்துர் ரஹ்மானை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்ஈம்' என்ற இடத்திற்குப் புறப்பட்டு அங்கிருந்து (இஹ்ராம் கட்டி) புறப்பட்டுச் சென்று என்னை உம்ரா செய்விக்குமாறு பணித்தார்கள். இந்த உம்ரா அந்த உம்ராவின் இடத்தில் (பதிலாக) அமைந்தது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ نَقْضِ المَرْأَةِ شَعَرَهَا عِنْدَ غُسْلِ المَحِيضِ
பாடம் : 16
மாதவிடாய்க் குளியலின் போது தலைமுடியை அவிழ்த்துவிடுதல்.
317 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مُوَافِينَ لِهِلاَلِ ذِي الحِجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهْلِلْ، فَإِنِّي لَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لَأَهْلَلْتُ بِعُمْرَةٍ» فَأَهَلَّ بَعْضُهُمْ بِعُمْرَةٍ، وَأَهَلَّ بَعْضُهُمْ بِحَجٍّ، وَكُنْتُ أَنَا مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ، وَامْتَشِطِي وَأَهِلِّي بِحَجٍّ»، فَفَعَلْتُ حَتَّى إِذَا كَانَ لَيْلَةُ الحَصْبَةِ، أَرْسَلَ مَعِي أَخِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ فَخَرَجْتُ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِي قَالَ هِشَامٌ: «وَلَمْ يَكُنْ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ هَدْيٌ، وَلاَ صَوْمٌ وَلاَ صَدَقَةٌ»
317 துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் (மதீனாவிலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளலாம். ஏனெனில் குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்திருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன் என்று கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினர். நான் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருத்தியாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அரஃபா நாள் வந்துவிட்டது. (அதனால் உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்! என்றனர். நானும் அவ்வாறே செய்தேன்.
ஹஸ்பா எனுமிடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக) என்னுடன் என் சகோதரர் அப்துர்ரஹ்மானை அனுப்பி வைத்தார்கள். நான் தன்ஈம்' என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று விடுபட்ட எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் கட்டினேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஹிஷாம் பின் உர்வா அவர்கள் கூறுகிறார்கள்:
இவற்றில் எதற்காகவும் (பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ, தான தர்மங்கள் செய்வதோ இருக்கவில்லை.
بَابُ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ} [الحج: 5]
பாடம் : 17
(பெண்ணின் கருவறையில்) வடிவமைக்கப்பட்டும் வடிவமைக்கப்படாமலும் உள்ளவை குறித்த இறைவனின் கூற்று
318 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا ، يَقُولُ: يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ: أَذَكَرٌ أَمْ أُنْثَى، شَقِيٌّ أَمْ سَعِيدٌ، فَمَا الرِّزْقُ وَالأَجَلُ، فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ "
318 கருவறைக்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமித்துள்ளான். அந்த வானவர், என் இறைவா! இப்போது விந்தாக உள்ளது. என் இறைவா! இப்போது கருற்ற சினையாக உள்ளது. என் இறைவா! இப்போது சதைத்துண்டாக உள்ளது என்று கூறிக் கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்க அல்லாஹ் விரும்பும் போது அவ்வானவர், என் இறைவா! (இது) ஆணா அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு? என்று கேட்டு தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
بَابٌ: كَيْفَ تُهِلُّ الحَائِضُ بِالحَجِّ وَالعُمْرَةِ
பாடம் : 18
மாதவிடாய் ஏற்பட்டவள் எப்படி ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் இஹ்ராம்' கட்ட வேண்டும்?
319 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، فَقَدِمْنَا مَكَّةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ، فَلْيُحْلِلْ، وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى، فَلاَ يُحِلُّ حَتَّى يُحِلَّ بِنَحْرِ هَدْيِهِ، وَمَنْ أَهَلَّ بِحَجٍّ، فَلْيُتِمَّ حَجَّهُ» قَالَتْ: فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ، وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ، فَأَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ، وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ العُمْرَةَ، فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي، فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنَ التَّنْعِيمِ
319 விடைபெறும்' ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென்றோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டினர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உங்களில்) எவர் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலகிக் கொள்ளலாம். எவர் தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள் வரை தமது இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம்.
(உங்களில்) எவர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவாக்கட்டும் என்று சொன்னார்கள்.
உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு அரஃபா நாள் ஆகும் வரை நீடித்தது. எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக்கொள்ளுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விடுபட்ட) உம்ராவிற்காக உம்ராச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ إِقْبَالِ المَحِيضِ وَإِدْبَارِهِ
பாடம் : 19
மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும்.
وَكُنَّ نِسَاءٌ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ بِالدُّرَجَةِ فِيهَا الكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ، فَتَقُولُ: «لاَ تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ القَصَّةَ البَيْضَاءَ» تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنَ الحَيْضَةِ وَبَلَغَ بِنْتَ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ نِسَاءً يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَنْظُرْنَ إِلَى الطُّهْرِ، فَقَالَتْ: «مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا وَعَابَتْ عَلَيْهِنَّ»
சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தி மஞ்சள் நிறமாகிய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்புவார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த பஞ்சை வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்படாதீர்கள் என்று கூறுவார்கள். அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டதாகக் கருதாதீர்கள்' என்றனர். சில பெண்கள் நள்ளிரவு நேரத்தில் விளக்குகளைக் கொண்டு வரச் சொல்லி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள்' என்ற செய்தி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர் (நபி ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை என்று கூறி அவர்களைக் கடிந்து கொண்டார்கள்.
320 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي»
320 பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி உயர் இரத்தப்போக்கு உடையவராக இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, இது இரத்தக் குழா(யிலிருந்து வெளிவருவதே)யாகும்; மாதவிடாயன்று. எனவே மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்! என்றனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابٌ: لاَ تَقْضِي الحَائِضُ الصَّلاَةَ
பாடம் : 20
மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.
وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: وَأَبُو سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَدَعُ الصَّلاَةَ»
அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்:
(மாதவிடாய் ஏற்பட்ட) பெண் தொழுகைகளை விட்டுவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
321 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: حَدَّثَتْنِي مُعَاذَةُ، أَنَّ امْرَأَةً قَالَتْ لِعَائِشَةَ: أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ؟ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ «كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ يَأْمُرُنَا بِهِ» أَوْ قَالَتْ: فَلاَ نَفْعَلُهُ
321 பெண்களாகிய நாங்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமானதற்குப் பின்புள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா? என்று ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் நீ ஹரூரா' எனும் (காரிஜிய்யாக்கள் வசிக்கும்) இடத்தைச் சேர்ந்தவளா? என்று கேட்டுவிட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களைப் பணிக்க மாட்டார்கள்' என்றோ அத்தொழுகைகளை நாங்கள் தொழ மாட்டோம்' என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆதா பின்த் அப்தில்லாஹ்
بَابُ النَّوْمِ مَعَ الحَائِضِ وَهِيَ فِي ثِيَابِهَا
பாடம் : 21
மாதவிடாய் இரத்தம்பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய கணவன் உறங்குவது.
322 - حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ، قَالَتْ: حِضْتُ وَأَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمِيلَةِ، فَانْسَلَلْتُ فَخَرَجْتُ مِنْهَا، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَلَبِسْتُهَا، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنُفِسْتِ» قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَأَدْخَلَنِي مَعَهُ فِي الخَمِيلَةِ
قَالَتْ: وَحَدَّثَتْنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ»
«وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الجَنَابَةِ»
322 ஒரு கருப்புப்போர்வைக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. போர்வைக்குள்ளிருந்து நழுவிச் சென்று மாதவிடாய்த் துணியை எடுத்து அணிந்து கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம்' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அழைத்து அந்தப் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து பொருந்துடக்கின் குளியலை நிறைவேற்றுவோம்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
بَابُ مَنِ اتَّخَذَ ثِيَابَ الحَيْضِ سِوَى ثِيَابِ الطُّهْرِ
பாடம் : 22
சுத்தமாக இருக்கும் போது அணியும் துணி அல்லாமல் மாதவிடாய்க்காக ஒரு துணியை வைத்துக்கொள்வது.
323 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعَةٌ فِي خَمِيلَةٍ حِضْتُ، فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي، فَقَالَ: «أَنُفِسْتِ»، فَقُلْتُ: نَعَمْ فَدَعَانِي، فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الخَمِيلَةِ "
323 ஒரு கருப்புப் போர்வைக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் படுத்துக் கொண்டிருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நன் நழுவிச் சென்று மாதவிடாய்த் துணியை எடுத்தேன் அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம்' என்றேன். அவர்கள் என்னை (அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களோடு அந்தப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)
بَابُ شُهُودِ الحَائِضِ العِيدَيْنِ وَدَعْوَةَ المُسْلِمِينَ، وَيَعْتَزِلْنَ المُصَلَّى
பாடம் : 23
மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டும் அவர்கள் விலகி இரு பெருநாள் தொழுகைகளிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்துகொள்வது
324 - حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي العِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ، فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ، قَالَتْ: كُنَّا نُدَاوِي الكَلْمَى، وَنَقُومُ عَلَى المَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا وَلْتَشْهَدِ الخَيْرَ وَدَعْوَةَ المُسْلِمِينَ»، فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ، سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بِأَبِي، نَعَمْ، وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلَّا قَالَتْ: بِأَبِي، سَمِعْتُهُ يَقُولُ: «يَخْرُجُ العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ، أَوِ العَوَاتِقُ ذَوَاتُ الخُدُورِ، وَالحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الخَيْرَ، وَدَعْوَةَ المُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى»، قَالَتْ حَفْصَةُ: فَقُلْتُ الحُيَّضُ، فَقَالَتْ: أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَكَذَا وَكَذَا
324 இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை நாங்கள் தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.
-என்னுடைய சகோதரி அவர்களின் கணவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.-
(பெண்களாகிய) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப்போம் என என் சகோதரி கூறினார்.
எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் குற்றமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் விசுவாசிகளின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள் என என் சகோதரி கூறினார்.
ஹஃப்ஸா பின்த் சீரீன் அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.
வயது வந்த பெண்களும், திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும், மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும், இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் நம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருக்கட்டும் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.
மாதவிடாயுள்ள பெண்களுமா என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா பிந்த் ஸீரின்
بَابُ إِذَا حَاضَتْ فِي شَهْرٍ ثَلاَثَ حِيَضٍ، وَمَا يُصَدَّقُ النِّسَاءُ فِي الحَيْضِ وَالحَمْلِ، فِيمَا يُمْكِنُ مِنَ الحَيْضِ
பாடம் : 24
ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றை ஏற்றுக்கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்கப்படும் என்பதும்.
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ} [البقرة: 228] وَيُذْكَرُ عَنْ عَلِيٍّ، وَشُرَيْحٍ: «إِنِ امْرَأَةٌ جَاءَتْ بِبَيِّنَةٍ مِنْ بِطَانَةِ أَهْلِهَا مِمَّنْ يُرْضَى دِينُهُ، أَنَّهَا حَاضَتْ ثَلاَثًا فِي شَهْرٍ صُدِّقَتْ» وَقَالَ عَطَاءٌ: «أَقْرَاؤُهَا مَا كَانَتْ وَبِهِ» قَالَ إِبْرَاهِيمُ: وَقَالَ عَطَاءٌ: «الحَيْضُ يَوْمٌ إِلَى خَمْسَ عَشْرَةَ» وَقَالَ مُعْتَمِرٌ: عَنْ أَبِيهِ: سَأَلْتُ ابْنَ سِيرِينَ عَنِ المَرْأَةِ تَرَى الدَّمَ بَعْدَ قُرْئِهَا بِخَمْسَةِ أَيَّامٍ؟ قَالَ: «النِّسَاءُ أَعْلَمُ بِذَلِكَ»
ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:
(அப்பெண்கள்) தங்கள் கருவறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது (2:228).
ஒரு பெண் மார்க்கப் பற்றுள்ள தன் நெருங்கிய உறவினர்களில் ஒரு சாட்சியைக் கொண்டு வந்து தமக்கும் ஒரே மாதத்தில் மூன்று முறை மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறினால் அவளது கூற்று ஏற்கப்படும் என அலீ (ரலி), ஷுரைஹ் பின் ஹாரிஸ் ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
(விவகாரத்துச் செய்யப்பட்ட) ஒரு பெண்ணின் இத்தா காலம் (விவாகரத்துக்கு) முன்னாலுள்ள அவளது (மாதவிடாய்) வழக்கத்தை ஒட்டியே கணிக்கப்படும் என அதாவு பின் அபீரபாஹ் அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்ராஹீம் அந்நகயீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
அதாவு பின் அபீரபாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
மாதவிடாய் (குறைந்தது) ஒரு நாளிலிருந்து (அதிகபட்சமாக) பதினைந்து நாட்கள் வரை நீடிக்கலாம்.
சுலைமான் அத்தைமீ அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் முஹம்மத் பின் சீரீன் அவர்களிடம் மாதவிடாய் நின்று தூய்மையடைந்ததிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து ஒரு பெண் இரத்தத்தைக் காண்பது குறித்து கேட்டேன். அதற்கு அவர்கள், இது விஷயமாக பெண்களே நன்கறிவார்கள் என்று பதிலளித்தார்கள்.
இதைத் தம் தந்தை சுலைமான் அவர்களிடமிருந்து முஅதமிர் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
325 - حَدَّثَنَا أَحْمَدُ ابْنُ أَبِي رَجَاءٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ: «لاَ إِنَّ ذَلِكِ عِرْقٌ، وَلَكِنْ دَعِي الصَّلاَةَ قَدْرَ الأَيَّامِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهَا، ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي»
325 ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வந்து), நான் உயர் இரத்தப்போக்கு உடையவளாக இருக்கின்றேன்; நான் சுத்தமாவதில்லை. எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்கு தொழுகையை விட்டுவிடு! பிறகு குளித்துவிட்டு தொழுதுகொள்! என்றனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ الصُّفْرَةِ وَالكُدْرَةِ فِي غَيْرِ أَيَّامِ الحَيْضِ
பாடம் : 25
மாதவிடாய் அல்லாத நாட்களில் மஞ்சளாகவோ கலங்கலான நிறமாகவோ வெளிப்படும் இரத்தம்.
326 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا لاَ نَعُدُّ الكُدْرَةَ وَالصُّفْرَةَ شَيْئًا»
326 மஞ்சள் நிறத்தையும் கலங்கல் நிறத்தையும் நாங்கள் மாதவிடாயாகக் கருதமாட்டோம்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
بَابُ عِرْقِ الِاسْتِحَاضَةِ
பாடம் : 26
உயர் இரத்தப்போக்கு நோய்.
327 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَسَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ، فَقَالَ: «هَذَا عِرْقٌ» فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلاَةٍ
327 உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது குளித்துக்க்க்குமாறு அவருக்கு கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்த நாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ المَرْأَةِ تَحِيضُ بَعْدَ الإِفَاضَةِ
பாடம் : 27
ஹஜ்ஜில், தவாஃபுல் இஃபாளா' எனும் தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால்
328 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ قَدْ حَاضَتْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّهَا تَحْبِسُنَا أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ»، فَقَالُوا: بَلَى، قَالَ: «فَاخْرُجِي»
328 அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நம்மை (ஊருக்குச்) செல்லவிடாமல் தடுத்து விடுவார் போலிருக்கிறதே! என்று கூறிவிட்டு அவர் உங்களுடன் தவாஃப் (அல்இஃபாளா)' செய்யவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தோர், ஆம் (தவாஃப் செய்தார்) என்று பதிலளித்தார்கள். அப்படியானால் புறப்படு! (போகலாம்) என்றனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
329 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا حَاضَتْ»
329 (ஹஜ்ஜில் தவாஃபுல் இஃபாளாவை முடித்த) ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் ஊருக்குப் புறப்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
330 - وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ: " فِي أَوَّلِ أَمْرِهِ إِنَّهَا لاَ تَنْفِرُ، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: «تَنْفِرُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لَهُنَّ»
330 மாதவிடாய் ஏற்பட்ட பெண் (கடைசித் தவாஃபான தவாஃபுல் விதா செய்யாமல்) மக்காவை விட்டுச் செல்லக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு (ஊருக்குப் புறப்பட) அனுமதி வழங்கினார்கள் என்று கூறியதைக் கேட்டேன்.
அறிவிப்பவர் : தாவூஸ் பின் கைஸ்
بَابُ إِذَا رَأَتِ المُسْتَحَاضَةُ الطُّهْرَ
பாடம் : 28
உயர் இரத்தப்போக்கு ஏற்பட்டவள் தான் தூய்மையாகி விட்டதை அறிந்தால்
قَالَ ابْنُ عَبَّاسٍ: «تَغْتَسِلُ وَتُصَلِّي وَلَوْ سَاعَةً، وَيَأْتِيهَا زَوْجُهَا إِذَا صَلَّتْ، الصَّلاَةُ أَعْظَمُ»
சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்துவிட்டு அவள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்; மிகப் பெரிய விஷயமான தொழுகையையே அவள் நிறைவேற்றலாம் எனும் போது அவளுடன் கணவன் தாம்பத்திய உறவு கொள்வதில் தவறில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
331 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ، فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»
331 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உயர் இரத்தப் போக்கு ஏற்பட்டுவந்த ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணியிடம்) (வழக்கம் போல்) மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைக் கழுவி தொழுதுகொள்! என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ الصَّلاَةِ عَلَى النُّفَسَاءِ وَسُنَّتِهَا
பாடம் : 29
பிரசவ இரத்தப் போக்கின் போது உயிர்நீத்த பெண்ணுக்கு இறுதித் தொழுகை தொழுவதும், அதன் வழிமுறையும்
332 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنَا شَبَابَةُ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حُسَيْنٍ المُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: «أَنَّ امْرَأَةً مَاتَتْ فِي بَطْنٍ، فَصَلَّى عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ وَسَطَهَا»
பிரசவ இரத்தப்போக்கினால் ஒருபெண் இறந்துவிட்டார். அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது நபியவர்கள் ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
333 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ مُدْرِكٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ اسْمُهُ الوَضَّاحُ، مِنْ كِتَابِهِ، قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، قَالَ: سَمِعْتُ خَالَتِي مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا كَانَتْ تَكُونُ حَائِضًا، لاَ تُصَلِّي وَهِيَ مُفْتَرِشَةٌ بِحِذَاءِ مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَهُوَ يُصَلِّي عَلَى خُمْرَتِهِ إِذَا سَجَدَ أَصَابَنِي بَعْضُ ثَوْبِهِ»
333 எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு நான் தொழாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்திற்கு அருகில் படுத்திருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகை விரிப்பில் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் சஜ்தா செய்யும் போது அவர்கள் அணிந்திருந்த அடையின் ஒரு பகுதி என் மீது படும்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
அத்தியாயம் : 6 மாதவிடாய் (222-333)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode