3 - كِتَابُ العِلْمِ
அத்தியாயம் : 3 கல்வி
بَابُ فَضْلِ العِلْمِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا العِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ} [المجادلة: 11] وَقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا} [طه: 114]
பாடம் : 1
கல்வியின் சிறப்பும் உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (திருக்குர்ஆன் 58:11 ஆவது) இறை வசனமும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
என் இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக!' என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
(திருக்குர்ஆன் 20:114)
بَابُ مَنْ سُئِلَ عِلْمًا وَهُوَ مُشْتَغِلٌ فِي حَدِيثِهِ، فَأَتَمَّ الحَدِيثَ ثُمَّ أَجَابَ السَّائِلَ
பாடம் : 2
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக் கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்குப் பதிலளிக்கலாம்.
59 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحٌ، ح وحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ يُحَدِّثُ القَوْمَ، جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ فَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ القَوْمِ: سَمِعَ مَا قَالَ فَكَرِهَ مَا قَالَ. وَقَالَ بَعْضُهُمْ: بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ: «أَيْنَ - أُرَاهُ - السَّائِلُ عَنِ السَّاعَةِ» قَالَ: هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ»، قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: «إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ»
59. ஓர் அவையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். - அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பவில்லை' என்று கூறினர். மற்ற சிலர், நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர்.- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, மறுமை நாளைப் பற்றி கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் தான்' என்றார். அமானிதம் (நாணயம்) பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கவர், அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தகுதியற்றோரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்! என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
بَابُ مَنْ رَفَعَ صَوْتَهُ بِالعِلْمِ
பாடம் : 3
உரத்த குரலில் கல்வி போதிப்பது.
60 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ عَارِمُ بْنُ الفَضْلِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا فَأَدْرَكَنَا - وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلاَةُ - وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ» مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا
60. நாங்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தொழுகையின் நேரத்தை நாங்கள் அடைந்து உளூ செய்து கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள்; அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவிக்கொள்ள ஆரம்பித்தோம். (அதைக் கண்டதும்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நாசம் தான் என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
بَابُ قَوْلِ المُحَدِّثِ: حَدَّثَنَا، وَأَخْبَرَنَا، وَأَنْبَأَنَا
وَقَالَ لَنَا الحُمَيْدِيُّ: " كَانَ عِنْدَ ابْنِ عُيَيْنَةَ حَدَّثَنَا، وَأَخْبَرَنَا، وَأَنْبَأَنَا، وَسَمِعْتُ وَاحِدًا وَقَالَ ابْنُ مَسْعُودٍ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ وَقَالَ شَقِيقٌ: عَنْ عَبْدِ اللَّهِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَةً وَقَالَ حُذَيْفَةُ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَيْنِ وَقَالَ أَبُو العَالِيَةِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ وَقَالَ أَنَسٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ عَزَّ وَجَلَّ
பாடம் : 4
ஹதீஸ்துறை நிபுணர் ஹத்தஸனா, அஃக்பரனா, அன்பஅனா (எமக்கு அறிவித்தார்) என்று கூறுவது.
அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் ஸுபைர் அல்ஹுமைதீ அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்:
ஹத்தஸனா, அஃக்பரனா, அன்பஅனா, சமிஉத்து (நான் செவியுற்றேன்) என்ற நான்கு வார்த்தைகளையும் சுஃப்யான் பின் உயைனா அவர்கள் ஒரே கருத்துடைய வார்த்தைகளாகவே கருதினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் (ஒரு நபிமொழியை அறிவிக்கும் போது) உண்மையாளரும், உண்மைப்படுத்தப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் எமக்கு அறிவித்தார்கள்' (ஹத்தஸனா) என்று சொன்னார்கள்.
ஷகீக் பின் சலமா அவர்கள் கூறுகின்றார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நான் ஒரு வார்த்தையைச் செவியுற்றேன்' (சமிஉத்து) என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள் (ஹத்தஸனா).
அபுல் ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தரப்பிலிருந்து அறிவித்த சில செய்திகளைப் பற்றி குறிப்பிடும் போது இப்னு அப்பாஸ் (ரலி), அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (யர்வீ அன் ரப்பிஹி) என்று சொன்னார்கள்.
அனஸ் (ரலி), அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (யர்வீ அன் ரப்பிஹி அஸ்ஸ வஜல்ல) என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (யர்வீ அன் ரப்பிக்கும் அஸ்ஸ வ ஜல்ல) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
61 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ المُسْلِمِ، فَحَدِّثُونِي مَا هِيَ» فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ البَوَادِي قَالَ عَبْدُ اللَّهِ: وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَاسْتَحْيَيْتُ، ثُمَّ قَالُوا: حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «هِيَ النَّخْلَةُ»
61. மரங்களில் ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்சை மரம் தான் என்று நான் நினைத்தேன். ஆனால் வெட்கப்பட்(டுக் கொண்டு மொளனமாக) இருந்துவிட்டேன். பின்னர் மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சை மரம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
بَابُ طَرْحِ الإِمَامِ المَسْأَلَةَ عَلَى أَصْحَابِهِ لِيَخْتَبِرَ مَا عِنْدَهُمْ مِنَ العِلْمِ
பாடம் : 5
மக்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக தலைவர் மக்களிடமே கேள்வி கேட்பது
62 - حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ المُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ» قَالَ: فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ البَوَادِي قَالَ عَبْدُ اللَّهِ: فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَاسْتَحْيَيْتُ، ثُمَّ قَالُوا: حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «هِيَ النَّخْلَةُ»
62. மரங்களில் ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. ஆனால், அது பேரீச்சை மரம் தான் என்று என் மனதில் பட்டது. பின்னர் மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அது பேரீச்சை மரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
بَابُ مَا جَاءَ فِي العِلْمِ. وَقَوْلِهِ تَعَالَى: {وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا} [طه: 114]
القِرَاءَةُ وَالعَرْضُ عَلَى المُحَدِّثِ وَرَأَى الحَسَنُ، وَالثَّوْرِيُّ، وَمَالِكٌ: «القِرَاءَةَ جَائِزَةً» وَاحْتَجَّ بَعْضُهُمْ فِي القِرَاءَةِ عَلَى العَالِمِ " بِحَدِيثِ ضِمَامِ بْنِ ثَعْلَبَةَ: قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: آللَّهُ أَمَرَكَ أَنْ تُصَلِّيَ الصَّلَوَاتِ قَالَ: «نَعَمْ» قَالَ: «فَهَذِهِ قِرَاءَةٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَ ضِمَامٌ قَوْمَهُ بِذَلِكَ فَأَجَازُوهُ» وَاحْتَجَّ مَالِكٌ: " بِالصَّكِّ يُقْرَأُ عَلَى القَوْمِ، فَيَقُولُونَ أَشْهَدَنَا فُلاَنٌ وَيُقْرَأُ ذَلِكَ قِرَاءَةً عَلَيْهِمْ وَيُقْرَأُ عَلَى المُقْرِئِ، فَيَقُولُ القَارِئُ: أَقْرَأَنِي فُلاَنٌ " حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الحَسَنِ الوَاسِطِيُّ، عَنْ عَوْفٍ، عَنِ الحَسَنِ، قَالَ: «لاَ بَأْسَ بِالقِرَاءَةِ عَلَى العَالِمِ» وَأَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الفَرَبْرِيُّ، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ البُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ سُفْيَانَ قَالَ: إِذَا قُرِئَ عَلَى المُحَدِّثِ فَلاَ بَأْسَ أَنْ يَقُولَ: حَدَّثَنِي قَالَ: وَسَمِعْتُ أَبَا عَاصِمٍ يَقُولُ عَنْ مَالِكٍ، وَسُفْيَانَ القِرَاءَةُ عَلَى العَالِمِ وَقِرَاءَتُهُ سَوَاءٌ
பாடம் : 6
கல்வி (கற்பித்தல்) குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ் கூறுகின்றான்:
என் இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக!' என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
(திருக்குர்ஆன் 20:114).
ஹதீஸ்துறை அறிஞர் ஒருவரிடம் (பயிலும் மாணவர்கள் ஹதீஸ்களை) வாசித்துக்காட்டுவது; எடுத்துச் சொல்வது.
ஹஸன் அல்பஸரி, சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மாலிக் பின் அனஸ் ஆகியோர் இவ்வாறு வாசித்துக் காட்டுவதன் மூலம் ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறுவதை அனுமதிக்கப்பட்ட முறையாகக் கருதுகின்றார்கள்.
ஹதீஸ்துறை அறிஞரிடம் வாசித்துக் காட்டுவதற்கு பின்வரும் நபிமொழியை அவர்களில் சிலர் ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்:
ளிமாம் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் தொழ வேண்டும் என அல்லாஹ்வா தாங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்? எனக் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்!' என்றனர். - இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வாசித்துக் காட்டப்பட்டுள்ளது. - பின்னர் ளிமாம் (ரலி) அவர்கள் இதைத் தமது கூட்டத்தாருக்கு அறிவித்ததும் அவர்கள் அனைவரும் அவற்றை ஏற்றுக்கெண்டனர்.
மாலிக் அவர்கள் இதற்கு மற்றொரு சான்றை ஆதாரமாகக் கொள்கிறார்கள். அதாவது எழுதப்பட்ட படிவம் மக்களிடம் வாசித்துக் காட்டப்படுகிறது. அதனை (முழுமையாகக்) கேட்டுவிட்டு அவர்கள் இன்னார் எங்களுக்கு அங்கீகாரம் அளித்தார் எனக் கூறுகிறார்கள். மற்ற (சில சமயம்) அவர்களிடம் அது (மனனமாகவும்) சொல்லிக் காட்டப்படுகிறது. இன்னும் சிலசமயம் ஒருவர் திருக்குர்ஆனை அறிஞரிடம் ஓதிக்காட்டிவிட்டு இன்னார் எனக்கு ஒதிக் காட்டினார் என்று (மக்களிடம்) கூறுகிறார்கள்.
அவ்ஃப் பின் அபீ ஜமீலா அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு நபிமொழி அறிஞரிடம் (மாணவர்) வாசித்துக்காட்டினால் தவறில்லை என ஹஸன் அல்பஸரி அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒரு மாணவர்) நபிமொழித் துறை வல்லுநரிடம் வாசித்துக்காட்டி விட்டு, அவர் எனக்கு அறிவித்தார்' என்று கூறுவது தவறில்லை என சுஃப்யான் பின் உயைனா அவர்கள் கூறினார்கள்.
ஒரு நபிமொழித்துறை அறிஞரிடம் வாசித்துக் காட்டுவதும் அந்த அறிஞர் படித்துக் காட்டுவதும் சமம் தான் என சுஃப்யான், மாலிக் ஆகியோர் கூறியதாக அபூஆஸிம் அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன்.
63 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ هُوَ المَقْبُرِيُّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ، فَأَنَاخَهُ فِي المَسْجِدِ ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ لَهُمْ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْنَا: هَذَا الرَّجُلُ الأَبْيَضُ المُتَّكِئُ. فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا ابْنَ عَبْدِ المُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَبْتُكَ». فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي المَسْأَلَةِ، فَلاَ تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ؟ فَقَالَ: «سَلْ عَمَّا بَدَا لَكَ» فَقَالَ: أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ، آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ؟ فَقَالَ: «اللَّهُمَّ نَعَمْ». قَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الخَمْسَ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ؟ قَالَ: «اللَّهُمَّ نَعَمْ». قَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ؟ قَالَ: «اللَّهُمَّ نَعَمْ». قَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ نَعَمْ». فَقَالَ الرَّجُلُ: آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ وَرَوَاهُ مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَعَلِيُّ بْنُ عَبْدِ الحَمِيدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا
63. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளியில் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் உங்களில் முஹம்மது அவர்கள் யார்?' என்று கேட்டார். - அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.- இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர் தாம்' என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் புதல்வரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். அவற்றைக் கடினமாக நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டு விடக் கூடாது என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம் மனதில் பட்டதைக் கேளும்! என்றனர்.
உடனே அம்மனிதர் உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ் தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றனர். அடுத்து அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் இரவிலும், பகலிலுமாக ஐவேளைத் தொழுகைளைத் தொழ வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக என்றனர். அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வொரு ஆண்டிலும் இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றனர். அவர், அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ் தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஜகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம், அல்லாஹ் சாட்சியாக!' என்றனர்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் என்று கூறிவிட்டு நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான் தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா என்றும் கூறினார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
بَابُ مَا يُذْكَرُ فِي المُنَاوَلَةِ، وَكِتَابِ أَهْلِ العِلْمِ بِالعِلْمِ إِلَى البُلْدَانِ
وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: نَسَخَ عُثْمَانُ بْنُ عَفَّانَ المَصَاحِفَ فَبَعَثَ بِهَا إِلَى الآفَاقِ، وَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، وَمَالِكُ بْنُ أَنَسٍ ذَلِكَ جَائِزًا وَاحْتَجَّ بَعْضُ أَهْلِ الحِجَازِ فِي المُنَاوَلَةِ بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ كَتَبَ لِأَمِيرِ السَّرِيَّةِ كِتَابًا وَقَالَ: «لاَ تَقْرَأْهُ حَتَّى تَبْلُغَ مَكَانَ كَذَا وَكَذَا». فَلَمَّا بَلَغَ ذَلِكَ المَكَانَ قَرَأَهُ عَلَى النَّاسِ، وَأَخْبَرَهُمْ بِأَمْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
பாடம் : 7
ஆசிரியர் மாணவரிடம் ஒரு நபிமொழிச் சுவடியை ஒப்படைப்பது, கல்வியை மார்க்க அறிஞர்கள் பல்வேறு ஊர்களுக்கு எழுதி அனுப்புவது ஆகியவை தொடர்பாக வந்துள்ளவை.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைப் பல பிரதிகளில் படியெடுத்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள்.
இது அனுமதிக்கப்பட்ட முறையே' என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), யஹ்யா பின் சயீத், மாலிக் பின் அனஸ் ஆகியோர் கருதியுள்ளனர்.
நபிமொழிச் சுவடியை ஒப்படைக்கலாம் என்பதற்கு ஹிஜாஸ்வாசிகள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்: ஒரு படைப் பிரிவிற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து இன்ன இடத்தை நீர் அடையும் வரை இதனைப் படிக்கக் கூடாது' என்று சொல்லியனுப்பினார்கள். அதன்படி அவர் அந்த இடத்தை அடைந்ததும் தான் அதனை மக்களுக்குப் படித்துக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
64 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بَعَثَ بِكِتَابِهِ رَجُلًا وَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ البَحْرَيْنِ فَدَفَعَهُ عَظِيمُ البَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ مَزَّقَهُ فَحَسِبْتُ أَنَّ ابْنَ المُسَيِّبِ قَالَ: فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ»
64. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் எழுதிய கடிதத்தை ஒரு மனிதர் மூலம் அனுப்பி வைத்தார்கள். அதனை பஹ்ரைனின் ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர் அதை கிஸ்ரா (இடம் ஒப்படைத்தார்.) அதனைக் கிஸ்ரா படித்ததும் அதை கிழித்துப் போட்டுவிட்டான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்தித்தார்கள் என சயீத் பின் அல்முஸய்யப் அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
65 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ المَرْوَزِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَتَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كِتَابًا - أَوْ أَرَادَ أَنْ يَكْتُبَ - فَقِيلَ لَهُ: إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلَّا مَخْتُومًا، فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، نَقْشُهُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، فَقُلْتُ لِقَتَادَةَ مَنْ قَالَ: نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ؟ قَالَ أَنَسٌ
65. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ரோம அரசுக்கு) கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார்கள்' அல்லது எழுதிட விரும்பினார்கள்'. அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள் என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது. ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள். அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.
கத்தாதா பின் திஆமா அவர்களிடம், அ(ந்த மோதிரத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்று பொறிக்கப்பட்டிருந்ததாக யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் தாம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
بَابُ مَنْ قَعَدَ حَيْثُ يَنْتَهِي بِهِ المَجْلِسُ، وَمَنْ رَأَى فُرْجَةً فِي الحَلْقَةِ فَجَلَسَ فِيهَا
பாடம் : 8
ஓர் அவையில் கடைசியில் அமரலாம். வட்டமாக அமர்ந்து இருப்பவர்களின் மத்தியில் இடைவெளி கண்டால் அதிலும் அமரலாம்.
66 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي المَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ، قَالَ: فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا أَحَدُهُمَا: فَرَأَى فُرْجَةً فِي الحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ: فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ: فَأَدْبَرَ ذَاهِبًا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ؟ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ»
66. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் இருந்த போது மூன்று பேர் வந்தனர். இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்று விட்டார். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:
இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டார். எனவே அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ புறகக்ணித்தார். எனவே அல்லாஹ்வும் அவரை புறக்கணித்தான்.
அறிவிப்பவர் : அபூ வாகித் அல்லைஸீ (ரலி)
بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ»
பாடம் : 9
நேரில் கேட்டவரை விடக் கேட்டவரிடம் கேட்கும் எத்தனையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று.
67 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدَ عَلَى بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ - أَوْ بِزِمَامِهِ - قَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا»، فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ» قُلْنَا: بَلَى، قَالَ: «فَأَيُّ شَهْرٍ هَذَا» فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ: «أَلَيْسَ بِذِي الحِجَّةِ» قُلْنَا: بَلَى، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، بَيْنَكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، لِيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ»
67. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது எந்த நாள்? என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (அறுப்பதற்குரிய) நாள் அல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்' என்றோம். அடுத்து இது எந்த மாதம்? என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா? என்றனர். நாங்கள் ஆம்' என்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனி தமானவையாகும் என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிட வேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்து வைக்கக் கூடும் என்றனர்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
بَابٌ: العِلْمُ قَبْلَ القَوْلِ وَالعَمَلِ
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَاعْلَمْ أَنَّهُ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ} [محمد: 19] فَبَدَأَ بِالعِلْمِ «وَأَنَّ العُلَمَاءَ هُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ، وَرَّثُوا العِلْمَ، مَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ بِهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الجَنَّةِ» وَقَالَ جَلَّ ذِكْرُهُ: {إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ العُلَمَاءُ} [فاطر: 28] وَقَالَ: {وَمَا يَعْقِلُهَا إِلَّا العَالِمُونَ} [العنكبوت: 43] {وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ} [الملك: 10] وَقَالَ: {هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لاَ يَعْلَمُونَ} [الزمر: 9] وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ» وَإِنَّمَا العِلْمُ بِالتَّعَلُّمِ " وَقَالَ أَبُو ذَرٍّ: «لَوْ وَضَعْتُمُ الصَّمْصَامَةَ عَلَى هَذِهِ - وَأَشَارَ إِلَى قَفَاهُ - ثُمَّ ظَنَنْتُ أَنِّي أُنْفِذُ كَلِمَةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ تُجِيزُوا عَلَيَّ لَأَنْفَذْتُهَا» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {كُونُوا رَبَّانِيِّينَ} [آل عمران: 79] " حُلَمَاءَ فُقَهَاءَ، وَيُقَالُ: الرَّبَّانِيُّ الَّذِي يُرَبِّي النَّاسَ بِصِغَارِ العِلْمِ قَبْلَ كِبَارِهِ "
பாடம் : 10
சொல்வதற்கும், செயல்படுவதற்கும் முன்னர் அறிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் (நபியே!) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்பதை அறிந்து கொள்வீராக (திருக்குர்ஆன் 47:19) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தில் அறிந்து கொள்வதைப் பற்றி இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான்.
அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகளாவர். அவர்கள் அறிவை வாரிசுச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பாக்கியம் பெற்றவராவர்.
கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்குச் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தாம். (திருக்குர்ஆன் 35:28)
அல்லாஹ் கூறுகின்றான்:
இவற்றை அறிஞர்களைத் தவிர புரிந்து கொள்ள மாட்டார்கள். (திருக்குர்ஆன் 29:43)
அல்லாஹ் கூறுகின்றான்:
நாங்கள் கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்து கொண்டிருந்தாலோ (இன்று) நரக வாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று (நிராகரிப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (திருக்குர்ஆன் 67:10)
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? (திருக்குர்ஆன் 39:9) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஒருவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை நாடினால் அவரை (மார்க்கத்தில்) விளக்கமுடையவராக ஆக்கி விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: மார்க்க ஞானம் என்பது கற்றுக் கொள்வதின் மூலம் தான் கிடைக்கும்.
அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக் காட்டி இதன் மீது நீங்கள் உருவிய வாளை வைத்தால் என்னைக் கொல்வதற்குள் நான் சொல்ல நினைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்ற செய்தியைச் சொல்லி விடுவேன் என்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்களே!) ரப்பானீகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்! என்று கூறினார்கள்.
ரப்பானீ' என்பவர் மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப்படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.
بَابُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُهُمْ بِالْمَوْعِظَةِ وَالعِلْمِ كَيْ لاَ يَنْفِرُوا
பாடம் : 11
மக்கள் சலிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பக்குவமாகப் போதனை செய்ததும், கல்வி புகட்டியதும்.
68 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ، كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا»
68. எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
69 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا، وَلاَ تُنَفِّرُوا»
69. எளிதாக நடந்து கொள்ளுங்கள்! சிரமப்படுத்தாதீர்கள்! நற்செய்தி சொல்லுங்கள்! வெறுப்பேற்றாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
بَابُ مَنْ جَعَلَ لِأَهْلِ العِلْمِ أَيَّامًا مَعْلُومَةً
பாடம் : 12
கற்றவர்களுக்காக சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்குவது.
70 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ؟ قَالَ: أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ، كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا "
70. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மக்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அபூ அப்திர் ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள் என்றனர்.
அறிவிப்பவர் : அபூவாயில்
بَابٌ: مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
பாடம் : 13
அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.
71 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ، لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»
71. எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகின்றான். நான் விநியோகிப்பவன் தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
بَابُ الفَهْمِ فِي العِلْمِ
பாடம் : 14
கல்வியைப் புரிந்து கொள்ளுதல்
72 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: قَالَ لِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى المَدِينَةِ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا حَدِيثًا وَاحِدًا، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُتِيَ بِجُمَّارٍ، فَقَالَ: «إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً، مَثَلُهَا كَمَثَلِ المُسْلِمِ»، فَأَرَدْتُ أَنْ أَقُولَ: هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَصْغَرُ القَوْمِ، فَسَكَتُّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ النَّخْلَةُ»
72. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மதீனா வரை சென்றேன். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை. ஆனால், ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்சை மரக்குறுத்து கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வகை மரமுள்ளது; அது முஸ்லிமுக்கு உவமானமாகும் (அது என்ன மரம்?) என்று கேட்டார்கள். அது பேரீச்சை மரம் தான் என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது நான் அங்கிருந்தவர்களில் சிறியவனாயிருந்ததால் மவுனமாக இருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது பேரீச்சை மரம்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஜாஹித்
بَابُ الِاغْتِبَاطِ فِي العِلْمِ وَالحِكْمَةِ
وَقَالَ عُمَرُ: «تَفَقَّهُوا قَبْلَ أَنْ تُسَوَّدُوا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَبَعْدَ أَنْ تُسَوَّدُوا وَقَدْ تَعَلَّمَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِبَرِ سِنِّهِمْ»
பாடம் : 15
கல்வியிலும், ஞானத்திலும் தாமும் பிறர் போல் சிறந்து விளங்க ஆர்வம் காட்டுவது.
நீங்கள் தலைவர்களாவதற்கு முன்னர் சட்ட ஞானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! என்று உமர் (ரலி) கூறினார்கள்.
நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் என்று (புகாரியாகிய) நான் கூறுகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களது முதிய வயதில் கல்வி கற்றுள்ளனர்.
73 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَلَى غَيْرِ مَا حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ، قَالَ: سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لاَ حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "
73. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது என்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
بَابُ مَا ذُكِرَ فِي ذَهَابِ مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي البَحْرِ إِلَى الخَضِرِ
وَقَوْلِهِ تَعَالَى: (هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا)
பாடம் : 16
களிர் (அலை) அவர்களைத் தேடி மூஸா (அலை) அவர்கள் கடலில் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை.
உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கு நீங்கள் கற்றுத் தர நான் உங்களைப் பின்தொடர்ந்து வரலாமா? (திருக்குர்ஆன் 18:66) என்று மூஸா (அலை) கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
74 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَهُ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى، قَالَ ابْنُ عَبَّاسٍ: هُوَ خَضِرٌ، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى، الَّذِي سَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " بَيْنَمَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ " قَالَ مُوسَى: لاَ، فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى مُوسَى: بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ: إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، وَكَانَ يَتَّبِعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، قَالَ: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا)، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي كِتَابِهِ "
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களும் மூஸா அவர்களுடனிருந்த அடியார் யார்?' எனும் விஷயத்தில் விவாதித்துக் கொண்டனர். அவர் களிர் (அலை) தாம்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அழைத்து, நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா (அலை) யாரைச் சந்திக்க வழி கேட்டார்களோ அவர் யார் என்று விவாதித்துக் கொண்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்! அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டுத் தொடர்ந்து கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூஸா (அலை) அவர்களிடம், உங்களை விட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை) அவர்கள் எனக்குத் தெரியவில்லை என்றனர். அப்போது அல்லாஹ் அப்படியல்ல; நம் அடியார் களிர் உங்களை விட அறிந்தவராயிரக்கிறார் என்று கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று கேட்டார்கள். அப்போது மூஸா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர் என்று சொல்லப்பட்டது. (அதன்படி) அவர்கள் மீன் கடலில் தொலைந்து போவதை எதிர்பார்த்தவர்களாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர் நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்த போது அந்த இடத்தில் மீனை நான் மறந்து விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான் மறக்கடித்து விட்டான்' என்று கூறினார். மூஸா (அலை) அவர்கள், அந்தச் சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே பேசிக் கொண்டே திரும்பி வந்தார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்துள்ள நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ்
بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الكِتَابَ»
பாடம் : 17
இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
75 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: ضَمَّنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الكِتَابَ»
75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
بَابٌ: مَتَى يَصِحُّ سَمَاعُ الصَّغِيرِ؟
பாடம் : 18
சிறுவர்கள் செவியேற்றது எப்போது ஏற்கப்படும்
76 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: «أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَيَّ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் சுவர் எதையும் முன்னோக்காதவர்களாகத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் ஒரு பெட்டைக் கழுதையில் ஏறி அவர்களை நோக்கிச் சென்றேன்.-அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு வரிசையினூடே கடந்து சென்று நானும் நின்று கொண்டேன். அதற்காக யாரும் என்னைக் கண்டிக்கவில்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
77 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، قَالَ: «عَقَلْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ»
77. நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.
அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீஉ (ரலி)
بَابُ الخُرُوجِ فِي طَلَبِ العِلْمِ
وَرَحَلَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ مَسِيرَةَ شَهْرٍ، إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، فِي حَدِيثٍ وَاحِدٍ
பாடம் : 19
கல்வியைத் தேடிப் புறப்படுவது
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிவதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி ஒரு மாதத் தொலை தூரத்திற்கு பயணித்துள்ளார்கள்.
78 - حَدَّثَنَا أَبُو القَاسِمِ خَالِدُ بْنُ خَلِيٍّ قَاضِي حِمْصَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ؟ فَقَالَ أُبَيٌّ: نَعَمْ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ يَقُولُ: " بَيْنَمَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: أَتَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ قَالَ مُوسَى: لاَ، فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى مُوسَى: بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ: إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ يَتَّبِعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ فَتَى مُوسَى لِمُوسَى: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، قَالَ مُوسَى: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا)، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ "
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களும் மூஸா (அலை) அவர்களின் தோழர் குறித்து விவாதித்தனர். அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அழைத்து, மூஸா (அலை) யாரைச் சந்திக்க வழி கேட்டார்களோ அவர் யார் என்று விவாதித்துக் கொண்டுள்ளோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றிக் கூறக் கேட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்! அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்:
பனூஇஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூஸா (அலை) அவர்களிடம், உங்களை விட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள் எனக்குத் தெரியவில்லை என்றனர். அப்போது அல்லாஹ் அப்படியல்ல; நம் அடியார் களிர்' இருக்கிறார் என்று கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று கேட்டார்கள். அப்போது மூஸா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள அல்லாஹ் மீனை அடையாளமாக ஆகினான். அவர்களிடம் இந்த மீனை எங்கே தொலைத்துவிடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை நீர் சந்திப்பீர் என்று சொல்லப்பட்டது. (அதன்படி) அவர்கள் மீன் கடலில் தொலைந்து போவதை எதிர்பார்த்தவர்களாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர் நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்த போது அந்த இடத்தில் மீனை நான் மறந்து விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான் மறக்கடித்து விட்டான்' என்று கூறினார். மூஸா (அலை) அவர்கள், அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே பேசிக் கொண்டே திரும்பி வந்தார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ்
بَابُ فَضْلِ مَنْ عَلِمَ وَعَلَّمَ
பாடம் : 20
கற்பவர் மற்றும் கற்பிப்பவரின் சிறப்பு
79 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الهُدَى وَالعِلْمِ، كَمَثَلِ الغَيْثِ الكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ، قَبِلَتِ المَاءَ، فَأَنْبَتَتِ الكَلَأَ وَالعُشْبَ الكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ، أَمْسَكَتِ المَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً وَلاَ تُنْبِتُ كَلَأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللَّهِ، وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ إِسْحَاقُ: وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ المَاءَ، قَاعٌ يَعْلُوهُ المَاءُ، وَالصَّفْصَفُ المُسْتَوِي مِنَ الأَرْضِ
79. அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும், பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.
இது தான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்களின் அறிவிப்பில் அவற்றில் இன்னும் சில நிலங்களும் உள்ளன. அவை தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன என்று இடம்பெற்றுள்ளது.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள கீஆன்' என்பதன் பன்மை காஉ.' என்பதாகும்.) காஉ' என்பதற்கு தண்ணீர் தேங்காத பூமி என்று பொருள். ஸஃப் ஸஃப்' என்பதற்கு சமநிலம் என்று பொருள்.
بَابُ رَفْعِ العِلْمِ وَظُهُورِ الجَهْلِ
وقَالَ رَبِيعَةُ: «لاَ يَنْبَغِي لِأَحَدٍ عِنْدَهُ شَيْءٌ مِنَ العِلْمِ أَنْ يُضَيِّعَ نَفْسَهُ»
பாடம் : 21
கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும்
ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் தம்மைப் பாழாடித்துவிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள்.
80 - حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا "
80. கல்வியறிவு அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை நிலைத்து விடுவதும், மது அருந்தப்படுவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடப்பதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் pபின் மாலிக் (ரலி)
81 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يَقِلَّ العِلْمُ، وَيَظْهَرَ الجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً القَيِّمُ الوَاحِدُ "
81. எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்காத அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற செய்தி ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வியறிவு குறைந்துவிடுவதும், அறியாமை வெளிப்படுவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடப்பதும், ஐம்பது பெண்களை நிர்வகிக்க ஒரு ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
بَابُ فَضْلِ العِلْمِ
பாடம் : 22
கூடுதலான கல்வியாற்றல்
82 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَا أَنَا نَائِمٌ، أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الخَطَّابِ» قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «العِلْمَ»
82. நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. நான் அருந்தினேன். இறுதியில் எனது நகக் கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்? அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
بَابُ الفُتْيَا وَهُوَ وَاقِفٌ عَلَى الدَّابَّةِ وَغَيْرِهَا
பாடம் : 23
பிராணிகள் மீதும் மற்றவை மீதும் இருந்து கொண்டு தீர்ப்பு வழங்குவது
83 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ فِي حَجَّةِ الوَدَاعِ بِمِنًى لِلنَّاسِ يَسْأَلُونَهُ، فَجَاءهُ رَجُلٌ فَقَالَ: لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ؟ فَقَالَ: «اذْبَحْ وَلاَ حَرَجَ» فَجَاءَ آخَرُ فَقَالَ: لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «ارْمِ وَلاَ حَرَجَ» فَمَا سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلَّا قَالَ: «افْعَلْ وَلاَ حَرَجَ»
83. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும்' ஹஜ்ஜின் போது மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்து விட்டேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பரவாயில்லை; இப்போது குர்பானி கொடுப்பீராக! என்றனர். மற்றொருவர் வந்து நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல் எறிவீராக! என்றனர். முற்படுத்திச் செய்யப்பட்ட, பிற்படுத்திச் செய்யப்பட்ட எதைப் பற்றி கேட்ட போதும் பரவாயில்லை; செய்யுங்கள்!' என்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
بَابُ مَنْ أَجَابَ الفُتْيَا بِإِشَارَةِ اليَدِ وَالرَّأْسِ
பாடம் : 24
கையால் அல்லது தலையால் சைகை செய்து தீர்ப்பு வழங்குதல்
84 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ فِي حَجَّتِهِ فَقَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ فَأَوْمَأَ بِيَدِهِ، قَالَ: «وَلاَ حَرَجَ» قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ؟ فَأَوْمَأَ بِيَدِهِ: «وَلاَ حَرَجَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜின் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒருவர் நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை எனத் தமது கையால் சைகை செய்தார்கள். மற்றொருவர், குர்பானி கொடுப்பதற்கு முன் தலை முடியை மழித்துவிட்டேன்' என்றார். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை எனத் தமது கையால் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
85 - حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ سَالِمٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُقْبَضُ العِلْمُ، وَيَظْهَرُ الجَهْلُ وَالفِتَنُ، وَيَكْثُرُ الهَرْجُ»، قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا الهَرْجُ؟ فَقَالَ: «هَكَذَا بِيَدِهِ فَحَرَّفَهَا، كَأَنَّهُ يُرِيدُ القَتْلَ»
கல்வி கைப்பற்றப்படும்; அறியாமையும் குழப்பங்களும் வெளிப்படும்; கொந்தளிப்பு (ஹர்ஜ்) மிகுந்துவிடும் என்று கூறினார்கள். அப்போது ஹர்ஜ் என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் இப்படி என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்துகாட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
86 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ: أَتَيْتُ عَائِشَةَ وَهِيَ تُصَلِّي فَقُلْتُ: مَا شَأْنُ النَّاسِ؟ فَأَشَارَتْ إِلَى السَّمَاءِ، فَإِذَا النَّاسُ قِيَامٌ، فَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ، قُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ بِرَأْسِهَا: أَيْ نَعَمْ، فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الغَشْيُ، فَجَعَلْتُ أَصُبُّ عَلَى رَأْسِي المَاءَ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: " مَا مِنْ شَيْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلَّا رَأَيْتُهُ فِي مَقَامِي، حَتَّى الجَنَّةُ وَالنَّارُ، فَأُوحِيَ إِلَيَّ: أَنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ - مِثْلَ أَوْ - قَرِيبَ - لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ - مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، يُقَالُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا المُؤْمِنُ أَوِ المُوقِنُ - لاَ أَدْرِي بِأَيِّهِمَا قَالَتْ أَسْمَاءُ - فَيَقُولُ: هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالهُدَى، فَأَجَبْنَا وَاتَّبَعْنَا، هُوَ مُحَمَّدٌ ثَلاَثًا، فَيُقَالُ: نَمْ صَالِحًا قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُوقِنًا بِهِ. وَأَمَّا المُنَافِقُ أَوِ المُرْتَابُ - لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ - فَيَقُولُ: لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ "
86. நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி சைகை செய்தார்கள். சுப்ஹானல்லாஹ்' (-அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது எதேனும் அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஆம்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். நான் கிறக்கமுற்றேன். என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன். (தொழுகை முடிந்ததும்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத சொர்க்கம், நரகம் உட்பட அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன். மேலும் எனக்கு இறைவனின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு நிகரான அல்லது நெருக்கமான அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.
அப்போது (கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? என்று கேட்கப்படும். அப்போது இறை நம்பிக்கையாளர்' அல்லது உறுதி கொண்டவர்' இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அவர் எங்களிடம் தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தாம்' என்று மும்முறை கூறுவார். அப்போது தகுதி பெற்றவராக நீர் உறங்குவீராக!' என்றும், நிச்சயமாகவே நீர் இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே இருந்தீர் என்று நாமறிவோம்' என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ' அல்லது சந்தேகப் பேர்வழியோ', எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன் என்பான்.
-அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் முன்திர் கூறுகிறார்கள்:
(நிகரான' அல்லது நெருக்கமான' ஆகிய) இவற்றில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
بَابُ تَحْرِيضِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدَ عَبْدِ القَيْسِ عَلَى أَنْ يَحْفَظُوا الإِيمَانَ وَالعِلْمَ، وَيُخْبِرُوا مَنْ وَرَاءَهُمْ
وقَالَ مَالِكُ بْنُ الحُوَيْرِثِ: قَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَعَلِّمُوهُمْ»
பாடம் : 25
ஈமான், மார்க்கக் கல்வி ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களுக்கப்பால் இருப்பவர்களிடம் அறிவிக்கும்படி அப்துல்கைஸ் தூதுக் குழுவினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூண்டியது
(அப்துல்கைஸ் தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்த) மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என்று எங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
87 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ: كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ ابْنِ عَبَّاسٍ وَبَيْنَ النَّاسِ، فَقَالَ: إِنَّ وَفْدَ عَبْدِ القَيْسِ أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنِ الوَفْدُ أَوْ مَنِ القَوْمُ» قَالُوا: رَبِيعَةُ فَقَالَ: «مَرْحَبًا بِالقَوْمِ أَوْ بِالوَفْدِ، غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى» قَالُوا: إِنَّا نَأْتِيكَ مِنْ شُقَّةٍ بَعِيدَةٍ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الحَيُّ مِنْ كُفَّارِ مُضَرَ، وَلاَ نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلَّا فِي شَهْرٍ حَرَامٍ، فَمُرْنَا بِأَمْرٍ نُخْبِرُ بِهِ مَنْ وَرَاءَنَا، نَدْخُلُ بِهِ الجَنَّةَ. فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ: أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ عَزَّ وَجَلَّ وَحْدَهُ، قَالَ: «هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصَوْمُ رَمَضَانَ، وَتُعْطُوا الخُمُسَ مِنَ المَغْنَمِ» وَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالحَنْتَمِ وَالمُزَفَّتِ " قَالَ شُعْبَةُ: رُبَّمَا قَالَ: «النَّقِيرِ» وَرُبَّمَا قَالَ: «المُقَيَّرِ» قَالَ: «احْفَظُوهُ وَأَخْبِرُوهُ مَنْ وَرَاءَكُمْ»
87. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே நான் (பார்சீ மொழியில்) மொழி பெயர்ப்பாளனாக இருந்தேன். (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த போது இம்மக்கள் யார்?' அல்லது இத்தூதுக் குழுவினர் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், (இவர்கள்) ரபீஆ குடும்பத்தினர் என்றனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நலவரவாகுக! என்று கூறினார்கள். அத்தூதுக் குழுவினர் நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும், உங்களுக்குமிடையே (எதிரிகளான) முளர் குலத்து இறை மறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தினர் உள்ளனர். எனவே புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியாது. எனவே, தெளிவான ஆணை பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கை செயல்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்; நான்கை அவர்களுக்குத் தடைவிதித்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை நிலை நிறுத்துவது; ஜகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது, மேலும் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கிட வேண்டும் என்று கூறினார்கள்.
(மதுவை ஊற்றப் பயன்படும்) சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். (இத்தடை பின்னர் நீக்கப்பட்டது.) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு உங்கள் பின்னால் இருப்போரிடம் சென்று அறிவித்து விடுங்கள் என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா அவர்கள் கூறுகின்றார்கள்:
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும் மரப் பீப்பாய் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.
அறிவிப்பவர் : அபூஜம்ரா
بَابُ الرِّحْلَةِ فِي المَسْأَلَةِ النَّازِلَةِ، وَتَعْلِيمِ أَهْلِهِ
பாடம் : 26
ஒரு சட்டப் பிரச்சனைக்காகப் பயணம் சென்று அதைத் தன் குடும்பத்தினருக்குக் கற்றுக் கொடுத்தல்
88 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ
நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' என்று கூறினார். நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; நீங்கள் எனக்கு தெரிவிக்கவுமில்லையே! என்று நான் கேட்டேன்.
உடனே நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் வினவினேன். அப்போது அவர்கள், சொல்லப்பட்ட பின் எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.
அறிவிப்பவர் : உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி)
بَابُ التَّنَاوُبِ فِي العِلْمِ
பாடம் : 27
முறைவைத்துக் கற்றல்
89 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، قَالَ: كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي المَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ اليَوْمِ مِنَ الوَحْيِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا، فَقَالَ: أَثَمَّ هُوَ؟ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ، فَقَالَ: قَدْ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ. قَالَ: فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي، فَقُلْتُ: طَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: لاَ أَدْرِي، ثُمَّ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ وَأَنَا قَائِمٌ: أَطَلَّقْتَ نِسَاءَكَ؟ قَالَ: «لاَ» فَقُلْتُ: اللَّهُ أَكْبَرُ
89. நானும், அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வருவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். தம்மடைய முறை வந்த போது எனது அன்சாரி நண்பர் என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா? என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி வெளியே வந்தேன். அப்போது அவர் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டிருக்கிறது என்றார்.
உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்துவிட்டார்களா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் எனக்குத் தெரியவில்லை' என்றார். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா? என்று நின்ற நிலையில் கேட்டேன். நபியவர்கள் இல்லை' என்றனர். உடனே நான் அல்லாஹ் மிகப் பெரியவன்' (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
بَابُ الغَضَبِ فِي المَوْعِظَةِ وَالتَّعْلِيمِ ، إِذَا رَأَى مَا يَكْرَهُ
பாடம் : 28
அறிவுரை கூறும் போதும், கல்வி கற்றுக் கொடுக்கும் போதும் தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் சினம் கொள்ளுதல்
90 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، لاَ أَكَادُ أُدْرِكُ الصَّلاَةَ مِمَّا يُطَوِّلُ بِنَا فُلاَنٌ، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْ يَوْمِئِذٍ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مُنَفِّرُونَ، فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ المَرِيضَ، وَالضَّعِيفَ، وَذَا الحَاجَةِ»
90. அல்லாஹ்வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீட்டுவதால் என்னால் பெரும்பாலும் தொழுகையில் சேர்ந்துகொள்ள முடிவதில்லை' என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள். முன் எப்போதும் அடைந்திராத அளவு கோபத்தை அன்றைய தின உரையில் நான் கண்டேன். மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர்களாக உள்ளீர்கள். எவர் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமாக்கட்டும். ஏனெனில் மக்களில் நோயாளிகள், பலவீனமானவர்கள், அலுவல் உடையோர் நிச்சயம் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி)
91 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو العَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ المَدِينِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ: «اعْرِفْ وِكَاءَهَا، أَوْ قَالَ وِعَاءَهَا، وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اسْتَمْتِعْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ» قَالَ: فَضَالَّةُ الإِبِلِ؟ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ، أَوْ قَالَ احْمَرَّ وَجْهُهُ، فَقَالَ: «وَمَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ المَاءَ وَتَرْعَى الشَّجَرَ، فَذَرْهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا» قَالَ: فَضَالَّةُ الغَنَمِ؟ قَالَ: «لَكَ، أَوْ لِأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ»
91. பாதையில் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதன் முடிச்சை அல்லது அதன் பையையும் அதன் உறையையும் நீ அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்! அதன் உரிமையாளர் வந்துவிட்டால் அதை அவரிடம் கொடுத்துவிடு! என்றனர். அப்படியானால் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகம்? என்று அம்மனிதர் கேட்டார். இதைக் கேட்டதும் கன்னங்கள் அல்லது முகம் சிவக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள்.. பிறகு, அதைப் பற்றி உமக்கு என்ன? அதனுடன் தான் அதன் தண்ணீர்ப் பையும் அதன் கால் குளம்புகளும் உள்ளனவே! அது (தானாக) நீர் நிலைக்குச் செல்லும்; மரத்தில் மேய்ந்துகொள்ளும். எனவே அதனை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும் வரை விட்டுவிடு! என்று கூறினார்கள். அப்படியானால் வழிதவறி வந்த ஆடு? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது உனக்கு உரியது; அல்லது (நீ பிடித்துக் கொள்ளாவிட்டால்) ஓநாய்க்கு உரியது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
92 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَشْيَاءَ كَرِهَهَا، فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ، ثُمَّ قَالَ لِلنَّاسِ: «سَلُونِي عَمَّا شِئْتُمْ» قَالَ رَجُلٌ: مَنْ أَبِي؟ قَالَ: «أَبُوكَ حُذَافَةُ» فَقَامَ آخَرُ فَقَالَ: مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ» فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
92. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்களிடம் கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்ட போது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுதாஃபா தாம் உன் தந்தை என்று பதிலளித்தார்கள். உடனே மற்றொருவர் எழுந்து என் தந்தை யார், அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்க, உமது தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் தாம் என்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மெய்யாகவே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் என்றனர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
بَابُ مَنْ بَرَكَ عَلَى رُكْبَتَيْهِ عِنْدَ الإِمَامِ أَوِ المُحَدِّثِ
பாடம் : 29
தலைவர் அல்லது அறிஞர் முன்னால் மண்டியிட்டு அமர்தல்
93 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ: مَنْ أَبِي؟ فَقَالَ: «أَبُوكَ حُذَافَةُ» ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ: «سَلُونِي» فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ: رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا فَسَكَتَ
93. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்த போது மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேபப்படும் விதத்தில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, என் தந்தை யார்? என்று கேட்டார். ஹுதாஃபா தாம் உன் தந்தை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு என்னிடம் கேளுங்கள்! என்று அடிக்கடி கூறினார்கள். உடன் உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
بَابُ مَنْ أَعَادَ الحَدِيثَ ثَلاَثًا لِيُفْهَمَ عَنْهُ
فَقَالَ: «أَلاَ وَقَوْلُ الزُّورِ» فَمَا زَالَ يُكَرِّرُهَا وَقَالَ: ابْنُ عُمَرَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ بَلَّغْتُ ثَلاَثًا؟»
பாடம் : 30
தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல்
பொய் சாட்சியும் பெரும்பாவத்தில் ஒன்று தான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் எல்லாவற்றையும் சமர்ப்பித்து விட்டேனா? என்று மூன்று முறை கேட்டார்கள்.
94 - حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ «إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا»
94. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்னால் மூன்று முறை சொல்வார்கள்; ஏதேனும் ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்று முறை சொல்வார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
95 - حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَارُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ «إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا، حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ، سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا»
95. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை ஸலாம் சொல்வார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
96 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: تَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ سَافَرْنَاهُ، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا الصَّلاَةَ، صَلاَةَ العَصْرِ، وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا»
96. நாங்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்டதால் நாங்கள் உளூ செய்து கொண்டிருக்கும் போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவிக் கொள்ளலானோம். (அதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
அறிவிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
بَابُ تَعْلِيمِ الرَّجُلِ أَمَتَهُ وَأَهْلَهُ
பாடம் : 31
ஒருவர் அடிமைப் பெண்ணுக்கும், தம் குடும்பத்தாருக்கும் கல்வி கற்றுக் கொடுத்தல்
97 - أَخْبَرَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، حَدَّثَنَا المُحَارِبِيُّ، قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ حَيَّانَ، قَالَ: قَالَ عَامِرٌ الشَّعْبِيُّ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الكِتَابِ، آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالعَبْدُ المَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ "، ثُمَّ قَالَ عَامِرٌ: أَعْطَيْنَاكَهَا بِغَيْرِ شَيْءٍ، قَدْ كَانَ يُرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى المَدِينَةِ
97. 1. தமது இறைத்தூதரையும், முஹம்மதையும் நம்பிக்கை கொண்ட வேதக்காரர்,
2. அல்லாஹ்வின் கடமைகளையும், தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றிய அடிமை
3. தனது அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதைச் செம்மையாகச் செய்து, கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்து, பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர்
ஆகிய இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சாலிஹ் பின் ஹய்யான் அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ அவர்கள் சிரமம் ஏதுமில்லாமல் இந்தக் கல்வியை நான் உமக்கு வழங்கியிருக்கிறேன். இதை விடச் சிறிய பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
بَابُ عِظَةِ الإِمَامِ النِّسَاءَ وَتَعْلِيمِهِنَّ
பாடம் : 32
தலைவர் பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும், அவர்களுக்கு போதிப்பதும்
98 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ: إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، وَقَالَ: عَنْ ابْنِ عَبَّاسٍ، أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
98. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ அவர்கள் கூறுகிறார்கள்:
நான் உறுதியளிக்கிறேன்' என்று அதாஉ பின் அபீரபாஹ் அவர்கள் கூறினார்களா அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
இஸ்மாயீல் பின் உலய்யா அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில் நான் உறுதியளிக்கிறேன்' என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
بَابُ الحِرْصِ عَلَى الحَدِيثِ
பாடம் : 33
ஹதீஸ்கள் மீது பேராசை கொள்ளுதல்
99 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ: قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ القِيَامَةِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلُنِي عَنْ هَذَا الحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الحَدِيثِ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ، مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ، أَوْ نَفْسِهِ»
99. அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை' (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம் என்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
بَابٌ: كَيْفَ يُقْبَضُ العِلْمُ
وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ: انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ، فَإِنِّي خِفْتُ دُرُوسَ العِلْمِ وَذَهَابَ العُلَمَاءِ، وَلاَ تَقْبَلْ إِلَّا حَدِيثَ النَّبِيِّ صلّى الله عليه وسلم: «وَلْتُفْشُوا العِلْمَ، وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لاَ يَعْلَمُ، فَإِنَّ العِلْمَ لاَ يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا» حَدَّثَنَا العَلاَءُ بْنُ عَبْدِ الجَبَّارِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ: بِذَلِكَ، يَعْنِي حَدِيثَ عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ، إِلَى قَوْلِهِ: ذَهَابَ العُلَمَاءِ
பாடம் : 34
கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?
உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்து அதனை எழுதி வைத்துக் கொள்வீராக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் மார்க்க அறிஞர்கள் சென்று விடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்திகளைத் தவிர வேறு எதையும் ஏற்கக் கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி இரகசியமாக இருக்கும் போதே அழிகிறது.
அப்துல்லாஹ் பின் தீனார் அவர்களிடமிருந்து வரும் அறிவிப்பில் அறிஞர்கள் சென்று விடுவார்கள்' என்பது வரைதான் உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்களின் கடிதத்தில் இடம் பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.
100 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ العِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ العِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ العِلْمَ بِقَبْضِ العُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا» قَالَ الفِرَبْرِيُّ: حَدَّثَنَا عَبَّاسٌ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ نَحْوَهُ
100. அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேடியாக கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலம் அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
இதே கருத்தில் அமைந்த இன்னோர் ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
بَابٌ: هَلْ يُجْعَلُ لِلنِّسَاءِ يَوْمٌ عَلَى حِدَةٍ فِي العِلْمِ؟
பாடம் : 35
பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்கலாமா?
101 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الأَصْبَهَانِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَتَيْنِ؟ فَقَالَ: «وَاثْنَتَيْنِ»
101. தங்களிடம் ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்குங்கள் என பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; வலியுறுத்தினார்கள். உங்களில் ஒரு பெண் தனது குழந்தைகளில் மூவரை இழந்து விடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி, இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஆம்) இரண்டு, குழந்தைகளை இழந்துவிட்டாலும் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
102 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الحِنْثَ»
102. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில் பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
بَابُ مَنْ سَمِعَ شَيْئًا فَلَمْ يَفْهَمْهُ فَرَاجَعَ فِيهِ حَتَّى يَعْرِفَهُ
பாடம் : 36
ஒரு செய்தியைக் கேட்டவர் அதனைப் புரிந்துகொள்ளும் வரை அதையொட்டி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பது
103 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ، إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حُوسِبَ عُذِّبَ» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَتْ: فَقَالَ: " إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَكِنْ: مَنْ نُوقِشَ الحِسَابَ يَهْلِكْ "
103. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
எவர் விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வலக்கரத்தில் தமது பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும் (திருக்குர்ஆன் 84:8) என்று அல்லாஹ் கூறுகின்றானே? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது மேலோட்டமாக எடுத்துக் காட்டுவது தான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார் என்று கூறினார்கள்.
அறிவிவிப்பவர் : இப்னு அபீமுலைக்கா
بَابٌ: لِيُبَلِّغِ العِلْمَ الشَّاهِدُ الغَائِبَ
قَالَهُ ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
பாடம் : 37
இந்தக் கல்வியை இங்கே வந்திருப்போர் வராதவர்களுக்குச் சொல்லட்டும்!
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
104 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ: - وَهُوَ يَبْعَثُ البُعُوثَ إِلَى مَكَّةَ - ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ، أُحَدِّثْكَ قَوْلًا قَامَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الغَدَ مِنْ يَوْمِ الفَتْحِ، سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ: حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: " إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ، وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، فَلاَ يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا، وَلاَ يَعْضِدَ بِهَا شَجَرَةً، فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا، فَقُولُوا: إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ، وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ، ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا اليَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ " فَقِيلَ لِأَبِي شُرَيْحٍ مَا قَالَ عَمْرٌو قَالَ: أَنَا أَعْلَمُ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ لاَ يُعِيذُ عَاصِيًا وَلاَ فَارًّا بِدَمٍ وَلاَ فَارًّا بِخَرْبَةٍ
104. அம்ர் பின் சயீத், அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை நோக்கி படைப்பிரிவுகளை அனுப்பிய போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: எனது காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது; நபியவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன; அவ்வுரையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு போரிட்டதனால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்) தான் அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை என்று சொல்லி விடுங்கள். எனக்குக் கூட (நேற்றைய) பகல் பொழுது மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று கூறினார்.
அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?' என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் அபூஷுரைஹே! உம்மை விட நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக மக்கா குற்றவாளிக்கும், மரண தண்டனைக்குப் பயந்து ஓடி வந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ர் கூறினார்' என்றேன்.
அறிவிப்பவர் : சயீத் பின் அபீசயீத்
105 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، ذُكِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ - قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ - وَأَعْرَاضَكُمْ، عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ مِنْكُمُ الغَائِبَ». وَكَانَ مُحَمَّدٌ يَقُولُ: صَدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ ذَلِكَ «أَلاَ هَلْ بَلَّغْتُ» مَرَّتَيْنِ
105. உங்களுடைய இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்களுக்குப் புனிதமிக்கவையாகும். அறிந்து கொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு சொல்லி விடட்டும்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் நான் சமர்ப்பித்து விட்டேனா?' என்று இரண்டு முறை கேட்டார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அபீபக்ரா அவர்கள், உங்கள் மான மரியாதைகளும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன் என்றனர்.
முஹம்மத் பின் சீரீன் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே நடந்தது என்று கூறுவது வழக்கம்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
بَابُ إِثْمِ مَنْ كَذَبَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
பாடம் : 38
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பாவம்.
106 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ: سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ»
106. என் பெயரில் பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் பெயரில் பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
107 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ لِلزُّبَيْرِ: إِنِّي لاَ أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يُحَدِّثُ فُلاَنٌ وَفُلاَنٌ؟ قَالَ: أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ، وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
107. இன்னார் இன்னாரெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல் தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்? என்று நான் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம், கேட்டேன். அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், (மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், என் பெயரில் யார் பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றனர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
108 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ، قَالَ أَنَسٌ: إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
108. என் பெயரில் எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால் தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ்
109 - حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَقُلْ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
109. நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சலமா பின் அக்வஃ (ரலி)
110 - حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
110. (முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள்; (அபுல்காசிம் என்ற) எனது செல்லப் பெயரை உங்கள் செல்லப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் எவர் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவத்தை எடுக்க மாட்டான். மேலும் என் பெயரில் யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
بَابُ كِتَابَةِ العِلْمِ
பாடம் : 39
கல்வியை எழுதி வைத்துக்கொள்ளல்
111 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قُلْتُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: هَلْ عِنْدَكُمْ كِتَابٌ؟ قَالَ: " لاَ، إِلَّا كِتَابُ اللَّهِ، أَوْ فَهْمٌ أُعْطِيَهُ رَجُلٌ مُسْلِمٌ، أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قَالَ: قُلْتُ: فَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ؟ قَالَ: العَقْلُ، وَفَكَاكُ الأَسِيرِ، وَلاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ "
111. உங்களிடம் (பிரத்தியேக) ஏடு ஏதேனும் உள்ளதா? என்று அலி (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தையும், ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும், மேலும் இந்த எழுதப்பட்ட சுவடியில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை என்றனர். நான் இந்தச் சுவடியில் என்ன இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஈட்டுத் தொகை போர்க் கைதிகளை விடுவிப்பது, மற்றும் நிராகரிப்பாளன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது (என்பன பற்றிய சட்டங்கள் இதில் உள்ளன) என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஜுஹைஃபா (ரலி)
112 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ خُزَاعَةَ قَتَلُوا رَجُلًا مِنْ بَنِي لَيْثٍ - عَامَ فَتْحِ مَكَّةَ - بِقَتِيلٍ مِنْهُمْ قَتَلُوهُ، فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صلّى الله عليه وسلم، فَرَكِبَ رَاحِلَتَهُ فَخَطَبَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ القَتْلَ، أَوِ الفِيلَ» - قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَذَا، قَالَ أَبُو نُعَيْمٍ وَاجْعَلُوهُ عَلَى الشَّكِّ الفِيلَ أَوِ القَتْلَ وَغَيْرُهُ يَقُولُ الفِيلَ - وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمُؤْمِنِينَ، أَلاَ وَإِنَّهَا لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي، أَلاَ وَإِنَّهَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، أَلاَ وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ، لاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ تُلْتَقَطُ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ، فَمَنْ قُتِلَ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ: إِمَّا أَنْ يُعْقَلَ، وَإِمَّا أَنْ يُقَادَ أَهْلُ القَتِيلِ ". فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ اليَمَنِ فَقَالَ: اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «اكْتُبُوا لِأَبِي فُلاَنٍ». فَقَالَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ: إِلَّا الإِذْخِرَ يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَّا الإِذْخِرَ إِلَّا الإِذْخِرَ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: يُقَالُ: يُقَادُ بِالقَافِ فَقِيلَ لِأَبِي عَبْدِ اللَّهِ أَيُّ شَيْءٍ كَتَبَ لَهُ؟ قَالَ: كَتَبَ لَهُ هَذِهِ الخُطْبَةَ
112. பனூலைஸ் குலத்தார், குஸாஆ குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக அவர்களில் ஒருவரை குஸாஆ குலத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்று விட்டார்கள். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்ளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தவர்களாக ஓர் உரை நிகழ்த்தினார்கள். சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த நகரை விட்டும் யானைப் படையை அல்லது கொலையை தடுத்து விட்டான். மேலும் மக்காவாசிகள் மீது அல்லாஹ் தன் தூதரையும் நம்பிக்கையாளர்களையும் அதிகாரம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எச்சரிக்கை! இங்கு போர் செய்வது இந்த நேரத்தில் தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் பிடுங்கப்படக் கூடாது; இதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை அறிவிப்புச் செய்பவரைத் தவிர எடுக்கக் கூடாது. (இனிமேல்) எவரேனும் கொலை செய்யப்பட்டால் அவருடைய உறவினர்கள் உயிர் ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்ளல், அல்லது பழிக்கு பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள்.
அப்போது யமன்வாசிகளில் (அபூஷாஹ் எனும்) ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு எழுதித் தாருங்கள்! என்று கேட்டுக் கொண்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்னாரின் தந்தைக்கு (அபூஷாஹிற்கு) எழுதிக் கொடுங்கள் என்றனர். அப்போது குறைஷிகளில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் புல்லிற்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில் நாங்கள் அதனை எங்கள் வீடுகளிலும், எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்கிர் புற்களைத் தவிர என்று சொன்னார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
யுகாது என்பது காஃப் எழுத்தாக சொல்ல வேண்டும்.
அவருக்கு எதை எழுதிக் கொடுக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்? என்று கேட்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆற்றிய இந்த உரையைத் தான் என்று பதிலளித்தேன்.
113 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرٌو، قَالَ: أَخْبَرَنِي وَهْبُ بْنُ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «مَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْهُ مِنِّي، إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلاَ أَكْتُبُ» تَابَعَهُ مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ
113. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக்ச் கொள்வார்கள். நான் எழுதி வைத்துக் கொண்டதில்லை என்று அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
114 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ قَالَ: «ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ» قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَلَبَهُ الوَجَعُ، وَعِنْدَنَا كِتَابُ اللَّهِ حَسْبُنَا. فَاخْتَلَفُوا وَكَثُرَ اللَّغَطُ، قَالَ: «قُومُوا عَنِّي، وَلاَ يَنْبَغِي عِنْدِي التَّنَازُعُ» فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: «إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ، مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ كِتَابِهِ»
114. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வேதனை அதிகமான போது என்னிடம் ஒரு ஏடு கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகி விட்டது; நம்மிடம் தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே! நமக்கு (அதுவே) போதும் என்றனர். உடனே கருத்து வேறுபாடு கொண்டனர். கூச்சல் அதிகரித்தது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னை விட்டு எழுந்து செல்லுங்கள்; என்னருகில் (இது போன்ற) சச்சரவுகள் இருப்பது தகாது என்றனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மடலுக்கும் மத்தியில் குறுக்கீடு ஏற்பட்டது முழுக்க முழுக்க சோதனையாகும் என்று கூறியபடி (எங்களிடமிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.
بَابُ العِلْمِ وَالعِظَةِ بِاللَّيْلِ
பாடம் : 40
இரவில் கற்பதும் போதிப்பதும்
115 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، وَعَمْرٍو، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتَنِ، وَمَاذَا فُتِحَ مِنَ الخَزَائِنِ، أَيْقِظُوا صَوَاحِبَاتِ الحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ»
115. ஓர் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் தாம் என்ன! திறந்துவிடப்பட்ட கருவூலங்கள் தாம் என்ன! என்று கூறிவிட்டு, அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள்! (அவர்கள் அல்லாஹ்வை வணங்கட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள் என்று கூறினார்கள்.
அறிவிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
بَابُ السَّمَرِ فِي العِلْمِ
பாடம் : 41
இரவில் கல்வி குறித்துப் பேசுதல்
116 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، وَأَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ، فَقَالَ: «أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا، لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ»
116. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில் எங்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்து முடிந்ததும் எழுந்து நின்று, இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருப்பவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
117 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا الحَكَمُ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ: «نَامَ الغُلَيِّمُ» أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ، حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ
117. என் சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தங்கியிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுவித்து விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரகஅத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து சின்னப் பையன் தூங்கி விட்டானா? அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். உடனே நான் எழுந்து (அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே என்னை இழுத்து தம் வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்களும், பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுதுவிட்டு, அவர்களின் குறட்டை சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பிறகு தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
بَابُ حِفْظِ العِلْمِ
பாடம் : 42
கல்வியை மனனம் செய்தல்
118 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، وَلَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا، ثُمَّ يَتْلُو {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ البَيِّنَاتِ وَالهُدَى} [البقرة: 159] إِلَى قَوْلِهِ {الرَّحِيمُ} [البقرة: 160] إِنَّ إِخْوَانَنَا مِنَ المُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وَإِنَّ إِخْوَانَنَا مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمُ العَمَلُ فِي أَمْوَالِهِمْ، وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِبَعِ بَطْنِهِ، وَيَحْضُرُ مَا لاَ يَحْضُرُونَ، وَيَحْفَظُ مَا لاَ يَحْفَظُونَ "
118. அபூஹுரைரா அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறார்' என்று மக்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையாயின் நான் ஒரு நபிமொழியைக்கூட அறிவித்திருக்க மாட்டேன். அந்த வசனங்கள் வருமாறு:
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
நம்முடைய முஹாஜிர் சகோதரர்களின் கவனத்தை கடைவீதிகளில் அவர்கள் செய்துவந்த வியாபாரம் ஈர்த்துக் கொண்டது. நம்முடைய அன்சாரி சகோதரர்களின் கவனத்தை அவர்களுடைய செல்வங்களைப் பராமரிக்கும் பணி ஈர்த்துக் கொண்டது. ஆனால், (இந்த) அபூஹுரைராவோ வயிறு நிரம்பினால் போதுமென்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே ஒட்டிக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் ஆஜராகாத இடங்களிலெல்லாம் நான் ஆஜராகி விடுவேன்; மற்றவர்கள் மனனம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனனம் செய்து கொண்டிருந்தேன் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
119 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ أَبُو مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا أَنْسَاهُ؟ قَالَ: «ابْسُطْ رِدَاءَكَ» فَبَسَطْتُهُ، قَالَ: فَغَرَفَ بِيَدَيْهِ، ثُمَّ قَالَ: «ضُمَّهُ» فَضَمَمْتُهُ، فَمَا نَسِيتُ شَيْئًا بَعْدَهُ. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ بِهَذَا أَوْ قَالَ: غَرَفَ بِيَدِهِ فِيهِ
119. நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன்மொழிகளைக் கேட்கின்றேன். ஆனால், அவற்றை நான் மறந்து விடுகின்றேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனது மேலங்கியை விரி! என்று சொல்ல, உடனே நான் அதை விரித்தேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளால் (எதையோ அள்ளுவது போன்று சைகை செய்து) அள்ளி அணைத்துக் கொள்! என்றனர். உடனே நான் அதை அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதையும் மறந்ததே இல்லை என்று அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள்.
120 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ: فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا البُلْعُومُ "
120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு பைகளை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
بَابُ الإِنْصَاتِ لِلْعُلَمَاءِ
பாடம் : 43
அறிஞர்கள் கூறுவதை செவியேற்பது
121 - حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرٍو، عَنْ جَرِيرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» فَقَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»
121. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது என்னிடம் மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்! என்று கூறிவிட்டு, (மக்களே!) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் (ரலி)
بَابُ مَا يُسْتَحَبُّ لِلْعَالِمِ إِذَا سُئِلَ: أَيُّ النَّاسِ أَعْلَمُ؟ فَيَكِلُ العِلْمَ إِلَى اللَّهِ
பாடம் : 44
மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?' என்று ஓர் அறிஞரிடம் வினவப்பட்டால் இதைப் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு' என்று இறைவனிடம் சாட்டிவிடுவதே நன்று
122 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرٌو، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّ نَوْفًا البَكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ؟ فَقَالَ: كَذَبَ عَدُوُّ اللَّهِ حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَيُّ النَّاسِ أَعْلَمُ؟ فَقَالَ: أَنَا أَعْلَمُ، فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ العِلْمَ إِلَيْهِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ البَحْرَيْنِ، هُوَ أَعْلَمُ مِنْكَ. قَالَ: يَا رَبِّ، وَكَيْفَ بِهِ؟ فَقِيلَ لَهُ: احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ، فَإِذَا فَقَدْتَهُ فَهُوَ ثَمَّ، فَانْطَلَقَ وَانْطَلَقَ بِفَتَاهُ يُوشَعَ بْنِ نُونٍ، وَحَمَلاَ حُوتًا فِي مِكْتَلٍ، حَتَّى كَانَا عِنْدَ الصَّخْرَةِ وَضَعَا رُءُوسَهُمَا وَنَامَا، فَانْسَلَّ الحُوتُ مِنَ المِكْتَلِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي البَحْرِ سَرَبًا، وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا، فَانْطَلَقَا بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمَهُمَا، فَلَمَّا أَصْبَحَ قَالَ مُوسَى لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى مَسًّا مِنَ النَّصَبِ حَتَّى جَاوَزَ المَكَانَ الَّذِي أُمِرَ بِهِ، فَقَالَ لَهُ فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ) قَالَ مُوسَى: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا) فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، إِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ، أَوْ قَالَ تَسَجَّى بِثَوْبِهِ، فَسَلَّمَ مُوسَى، فَقَالَ الخَضِرُ: وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ؟ فَقَالَ: أَنَا مُوسَى، فَقَالَ: مُوسَى بَنِي إِسْرَائِيلَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا قَالَ: إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ، وَأَنْتَ عَلَى عِلْمٍ عَلَّمَكَهُ لاَ أَعْلَمُهُ، قَالَ: سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ البَحْرِ، لَيْسَ لَهُمَا سَفِينَةٌ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمَا، فَعُرِفَ الخَضِرُ فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ، فَجَاءَ عُصْفُورٌ، فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ فِي البَحْرِ، فَقَالَ الخَضِرُ: يَا مُوسَى مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلَّا كَنَقْرَةِ هَذَا العُصْفُورِ فِي البَحْرِ، فَعَمَدَ الخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ، فَنَزَعَهُ، فَقَالَ مُوسَى: قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا؟ قَالَ: أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا؟ قَالَ: لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا - فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا -، فَانْطَلَقَا، فَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ، فَأَخَذَ الخَضِرُ بِرَأْسِهِ مِنْ أَعْلاَهُ فَاقْتَلَعَ رَأْسَهُ بِيَدِهِ، فَقَالَ مُوسَى: أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ؟ قَالَ: أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا؟ - قَالَ ابْنُ عُيَيْنَةَ: وَهَذَا أَوْكَدُ - فَانْطَلَقَا، حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ، قَالَ الخَضِرُ: بِيَدِهِ فَأَقَامَهُ، فَقَالَ لَهُ مُوسَى: لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا، قَالَ: هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ " قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا»
122. மூஸா, இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூஸா அல்லர். அவர் வேறொரு மூஸா என்று நவ்ஃப் அல்பகாலீ என்பார் கூறுகிறாரே?' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இறை விரோதியான அவர் பொய்யுரைத்து விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே நின்று கொண்டிருந்த போது அவர்களிடம், மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா (அலை) அவர்கள் நானே மிகவும் அறிந்தவன் என்று பதிலளித்து விட்டார்கள்.
ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா (அலை) அவர்கள் (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு' என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். எனவே இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகமாக அறிந்தவர் என்று அல்லாஹ் அறிவித்தான்.
மூஸா (அலை) அவர்கள் என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி? என்று கேட்டார்கள். அதற்கு, கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அவ்வாறே மூஸா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாருடன் ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர்.
கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் பாதை அமைத்து விட்(டுச் சென்றுவிட்டது. மூஸா (அலை) அவர்களுக்கும், உதவியாளருக்கும் வியப்பாய் அமைந்தது. இந்நிலையில் அன்றைய மீதிப் பொழுதிலும் இரவிலும் அவர்கள் நடந்தனர். மறுநாள் பொழுது விடிந்த போது மூஸா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்றனர். தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும் வரை மூஸா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை.
நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே, பார்த்தீர்களா? அங்கே நான் அந்த மீனை மறந்து விட்டேன். அதனை நான் கூறுவதை ஷைத்தான் எனக்கு மறக்கடித்து விட்டான். விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது என்று உதவியாளர் கூறினார். மூஸா (அலை) அவர்கள், நாம் தேடி வந்த இடம் அது தான் என்று கூறினார்கள். பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே தம்மை முழுவதுமாக ஓர் துணியால் அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒரு மனிதர் இருந்தார். மூஸா (அலை) அவர்கள் அவருக்கு ஸலாம் சொல்ல, அம்மனிதர், உங்களுடைய வட்டாரத்தில் ஸலாம் எவ்வாறு என்று கேட்டார்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள், நான் தான் மூஸா என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், இஸ்ரவேலர்களின் மூஸாவா? என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள், ஆம்' என்று பதிலளித்து விட்டு, உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு களிர் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூஸாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்றனர்.
இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் தங்கள் இருவரையும் ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.
அப்போது ஒரு சிட்டுக் குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது மூஸா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள் மூஸாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த அளவில் தான் உள்ளது என்று கூறினார்கள்.
களிர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (இதைக் கண்ட) மூஸா (அலை) அவர்கள் நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமலேயே ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்தி விட்டீர்களே? என்று கேட்டார்கள்.
அதற்கு களிர் (அலை) அவர்கள், என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள் என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூஸா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.-
இருவரும் நடந்துபோய்க் கொண்டிருக்கும் போது சிறுவர்களுடன் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். களிர் (அலை) அவர்கள் அவனது உச்சந்தலையைத் திருகி தலையைத் தனியே எடுத்து விட்டார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? என்று கேட்டார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், நீங்கள் என்னுடன் பொறுமை யாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா அவர்கள் கூறுகின்றார்கள்: இனம்முறை களிர் (அலை) அவர்கள் கூறியது, முதல் முறை கூறியதை விட கூடுதலான அழுத்தம் கொண்டதாகும்.-
மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) களிர் (அலை) அவர்கள் அச்சுவரை தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூஸா (அலை) அவர்கள், நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே என்றனர்.
களிர் (அலை) அவர்கள், இது தான் நானும், நீங்களும் பிரிய வேண்டிய கட்டம் என்று கூறினார்கள்.
(இந்த நிகழ்ச்சியை கூறி முடித்தபின்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூஸா பொறுமையாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றிய விஷயங்கள் நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே என நாம் விரும்பினோம் என்று சொன்னார்கள்.
بَابُ مَنْ سَأَلَ، وَهُوَ قَائِمٌ، عَالِمًا جَالِسًا
பாடம் : 45
அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்று கொண்டு கேள்வி கேட்பது
123 - حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا القِتَالُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً، فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ، قَالَ: وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلَّا أَنَّهُ كَانَ قَائِمًا، فَقَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
123. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இன உணர்வினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காக போரிடுகின்றாரோ அவர்தாம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார் என்று பதிலளித்தார்கள்.
கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
بَابُ السُّؤَالِ وَالفُتْيَا عِنْدَ رَمْيِ الجِمَارِ
பாடம் : 46
கல்லெறியும் நேரத்தில் மார்க்கத் தீர்ப்புக் கேட்பதும், பதிலளிப்பதும்
124 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الجَمْرَةِ وَهُوَ يُسْأَلُ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «ارْمِ وَلاَ حَرَجَ»، قَالَ آخَرُ: يَا رَسُولَ اللَّهِ، حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ؟ قَالَ: «انْحَرْ وَلاَ حَرَجَ». فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلَّا قَالَ: «افْعَلْ وَلاَ حَرَجَ»
124. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ராவில் கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல்லெறிந்துவிடும்! என்றனர். மற்றொருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலைமுடியை மழித்து விட்டேன் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பரவாயில்லை; இப்போது குர்பானிகொடுத்து விடும்! என்றனர்.
முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்ட, பிற்படுத்திச் செய்யப்பட்டவை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் பரவாயில்லை; செய்வீராக! என்றே சொன்னார்கள்.
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَمَا أُوتِيتُمْ مِنَ العِلْمِ إِلَّا قَلِيلًا} [الإسراء: 85]
பாடம் : 47
உங்களுக்கு சிறிதளவு ஞானமே கொடுக்கப்பட்டுள்ளது! எனும் (திருக்குர்ஆன் 17:85ஆவது) இறைவசனம்.
125 - حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ سُلَيْمَانُ بْنُ مِهْرَانَ عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَرِبِ المَدِينَةِ، وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ اليَهُودِ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ؟ وَقَالَ بَعْضُهُمْ: لاَ تَسْأَلُوهُ، لاَ يَجِيءُ فِيهِ بِشَيْءٍ تَكْرَهُونَهُ، فَقَالَ بَعْضُهُمْ: لَنَسْأَلَنَّهُ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ، فَقَالَ يَا أَبَا القَاسِمِ مَا الرُّوحُ؟ فَسَكَتَ، فَقُلْتُ: إِنَّهُ يُوحَى إِلَيْهِ، فَقُمْتُ، فَلَمَّا انْجَلَى عَنْهُ، قَالَ: «(وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُوا مِنَ العِلْمِ إِلَّا قَلِيلًا)». قَالَ الأَعْمَشُ: هَكَذَا فِي قِرَاءَتِنَا
125. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவின் ஒரு பாழ்வெளியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த பேரீச்சை மட்டையாலான கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்! என்றார். இன்னொருவர் இவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத ஏதும் அவரிடமிருந்து வந்துவிடப் போகிறது என்றார். இறுதியில் அவர்களில் சிலர் இல்லை! கட்டாயம் அவரிடம் கேட்டுவிடுவோம் என்றனர். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது நான் நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து இறைச்செய்தி (வஹீ) அறிவிக்கப்படுகிறது' என்று கூறிக் கொண்டேன். அவர்கள் தெளிவடைந்த போது, (நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்கு சிறிதளவு ஞானமே கொடுக்கப்பட்டுள்ளது! எனும் (திருக்குர்ஆன் 17:85 ஆவது) இறை வசனத்தைக் கூறினார்கள்.
குர்ஆனில் 17;85 வசனத்தில் உங்களுக்கு அதாவது ஊத்தீதும் என்று தான் உள்ளது.
இதற்கு மாற்றமாக அவர்களுக்கு அதாவது வமா ஊத்தூ என்று குறிப்பிட்ட அஃமஷ் என்பார் எங்கள் கிராஅத்தில் இப்படித்தான் உள்ளது என்று கூறுகிறார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதில் வமா ஊத்தீதும் என்று தான் உள்ளது இதற்கு மாற்றமாக குர்ஆனை வாசித்து விட்டு எங்கள் கிராஅத்தில் இப்படி உள்ளது என்று நியாயப்படுத்துவதை நாம் ஏற்க வேண்டியதில்லை. - மொழி பெயர்ப்பாளர்
بَابُ مَنْ تَرَكَ بَعْضَ الِاخْتِيَارِ، مَخَافَةَ أَنْ يَقْصُرَ فَهْمُ بَعْضِ النَّاسِ عَنْهُ، فَيَقَعُوا فِي أَشَدَّ مِنْهُ
பாடம் : 48
மக்களில் சிலர் ஒன்றைத் தவறாக விளங்கி விபரீத முடிவுக்கு வந்து விடக்கூடும் என்று அஞ்சி, சிறந்த ஒன்றைக் கூட செய்யாமல் விட்டுவிடுவது
126 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ: قَالَ لِي ابْنُ الزُّبَيْرِ، كَانَتْ عَائِشَةُ تُسِرُّ إِلَيْكَ كَثِيرًا فَمَا حَدَّثَتْكَ فِي الكَعْبَةِ؟ قُلْتُ: قَالَتْ لِي: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا عَائِشَةُ لَوْلاَ قَوْمُكِ حَدِيثٌ عَهْدُهُمْ - قَالَ ابْنُ الزُّبَيْرِ - بِكُفْرٍ، لَنَقَضْتُ الكَعْبَةَ فَجَعَلْتُ لَهَا بَابَيْنِ: بَابٌ يَدْخُلُ النَّاسُ وَبَابٌ يَخْرُجُونَ " فَفَعَلَهُ ابْنُ الزُّبَيْرِ
126. ஆயிஷா (ரலி) அவர்கள் உங்களிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாக இருந்தார்களே! அவர்கள் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன சொன்னார்கள்? என்று என்னிடம் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் (பின்வருமாறு) பதிலளித்தேன்:
ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:
ஆயிஷாவே! உன்னுடைய சமுதாயத்தார் அண்மைக் காலத்(தில் இஸ்லாமுக்கு வந்)தவர்கள் என்பது மட்டும் இல்லாமலிருந்தால் நான் கஅபாவைத் துளைத்து அதற்கு இரண்டு வாசல்கள் அமைத்து விட்டிருப்பேன் என்று கூறினார்கள்.
நான் அண்மைக் காலத்தவர்கள்' என்று சொன்னதும் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் இறைமறுப்புக் காலத்துக்கு அண்மைக் காலத்தவர்கள்' என்று குறிப்பிடும்படி நினைவூட்டினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்வத் பின் யஸீத்
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபியின் விருப்பப்படி செய்து முடித்தார்கள்.
بَابُ مَنْ خَصَّ بِالعِلْمِ قَوْمًا دُونَ قَوْمٍ، كَرَاهِيَةَ أَنْ لاَ يَفْهَمُوا
பாடம் : 49
ஒரு சாரார் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தால் புரிந்து கொள்ளாதோரை விடுத்துப் புரிந்து கொள்ளும் ஒரு சாராருக்குத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்தல்
127 - وَقَالَ عَلِيٌّ: «حَدِّثُوا النَّاسَ، بِمَا يَعْرِفُونَ أَتُحِبُّونَ أَنْ يُكَذَّبَ، اللَّهُ وَرَسُولُهُ» حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ مَعْرُوفِ بْنِ خَرَّبُوذٍ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ عَلِيٍّ بِذَلِكَ
127. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :
மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொய்யார்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா, என்ன?
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
128 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمُعاذٌ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ، قَالَ: «يَا مُعَاذَ بْنَ جَبَلٍ»، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «يَا مُعَاذُ»، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ ثَلاَثًا، قَالَ: «مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، صِدْقًا مِنْ قَلْبِهِ، إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»، قَالَ يَا رَسُولَ اللَّهِ: أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ: «إِذًا يَتَّكِلُوا» وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலே! என்று அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். முஆதே!' என மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்து விட்டான் என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களே! என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நீர் அறிவித்தால் அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள் என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
129 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: ذُكِرَ لِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ: «مَنْ لَقِيَ اللَّهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ»، قَالَ: أَلاَ أُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: «لاَ إِنِّي أَخَافُ أَنْ يَتَّكِلُوا»
129. அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார் என முஆத் (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள் இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்க, வேண்டாம். மக்கள் அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
بَابُ الحَيَاءِ فِي العِلْمِ
وَقَالَ مُجَاهِدٌ: «لاَ يَتَعَلَّمُ العِلْمَ مُسْتَحْيٍ وَلاَ مُسْتَكْبِرٌ» وَقَالَتْ عَائِشَةُ: «نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَمْنَعْهُنَّ الحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ»
பாடம் : 50
கற்பதில் வெட்கப்படுவது
முஜாஹித் பின் ஜப்ர் அவர்கள் கூறுகின்றார்கள்: வெட்கப்படுபவரும், அகந்தை கொள்பவரும் கல்வியைக் கற்றுக்கொள்ள மாட்டார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் ஒரு போதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
130 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الحَقِّ، فَهَلْ عَلَى المَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَتِ المَاءَ» فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ، تَعْنِي وَجْهَهَا، وَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَوَتَحْتَلِمُ المَرْأَةُ؟ قَالَ: «نَعَمْ، تَرِبَتْ يَمِينُكِ، فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا»
130. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவள் நீரைப் பார்த்தால் (கடமை) என்று பதிலளித்தார்கள். உடனே நான் எனது முகத்தை மூடிக் கொண்டு, பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் என்பது செல்லமாக திட்டும் சொல்லாகும்.
131 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَهِيَ مَثَلُ المُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ؟» فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ البَادِيَةِ، وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، قَالَ عَبْدُ اللَّهِ: فَاسْتَحْيَيْتُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنَا بِهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ النَّخْلَةُ» قَالَ عَبْدُ اللَّهِ: فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي، فَقَالَ: «لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا»
131. மரங்களில் ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. வெட்கப்பட்டுக் கொண்டு இருந்து விட்டேன். பிறகு மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அது பேரீச்சை மரம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும் என்றனர்.
بَابُ مَنِ اسْتَحْيَا فَأَمَرَ غَيْرَهُ بِالسُّؤَالِ
பாடம் : 51
வெட்கப்பட்டுப் பிறர் மூலம் கேள்வி கேட்டல்
132 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «فِيهِ الوُضُوءُ»
132. இச்சைக் கசிவு (மதீ') அதிமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். மிக்தாத் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் இது பற்றி நபியவர்களிடம் கேட்டார். அதற்காக உளூ செய்வது தான் கடமை; என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி)
بَابُ ذِكْرِ العِلْمِ وَالفُتْيَا فِي المَسْجِدِ
பாடம் : 52
பள்ளிவாசலில் கற்பதும், கற்பிப்பதும், தீர்ப்பு வழங்குவதும்
133 - حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الخَطَّابِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا، قَامَ فِي المَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيْنَ تَأْمُرُنَا أَنْ نُهِلَّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُهِلُّ أَهْلُ المَدِينَةِ مِنْ ذِي الحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّأْمِ مِنَ الجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ» وَقَالَ ابْنُ عُمَرَ وَيَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَيُهِلُّ أَهْلُ اليَمَنِ مِنْ يَلَمْلَمَ» وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ: لَمْ أَفْقَهْ هَذِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
133. ஒரு மனிதர் பள்ளிவாசலில் எழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகள் துல்ஹுலைஃபா' எனும் இடத்திலிருந்தும், ஷாம் (சிரியா) வாசிகள் ஜுஹ்ஃபா' எனும் இடத்திலிருந்தும், நஜ்த்வாசிகள் கர்ன்' எனும் இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்று பதிலளித்தார்கள்.
யமன்வாசிகள் யலம்லம் (இப்போதைய சஅதியா) எனும் இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (எதையும்) நான் அறியவில்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
بَابُ مَنْ أَجَابَ السَّائِلَ بِأَكْثَرَ مِمَّا سَأَلَهُ
பாடம் : 53
வினவப்பட்டதை விட விரிவாகப் பதில் கூறுதல்.
134 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ: مَا يَلْبَسُ المُحْرِمُ؟ فَقَالَ: «لاَ يَلْبَسُ القَمِيصَ، وَلاَ العِمَامَةَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ البُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ الوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الكَعْبَيْنِ»
134. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, வர்ஸ் எனும் செடியினால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்கவிட்டால் காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி வெட்டி விடவேண்டும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
அத்தியாயம் : 3 கல்வி (59-134)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode