Sidebar

19
Thu, Sep
1 New Articles

கோவிலைவிட கழிவறை முக்கியம் என்று மோடி சொன்னது சரியா

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கோவிலைவிட கழிவறை முக்கியம் என்று மோடி சொன்னது சரியா

கேள்வி கோவில் கட்டுவதைவிட கழிப்பறைகள் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று மோடி பேசியுள்ளாரே?

மசூது, கடையநல்லூர்

பதில்  இதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

இதே கருத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் என்பவர் கூறினார். இதைக் கூறியவுடன் சங்பரிவாரத்தின் அனைத்து இயக்கங்களும் அவருக்கு எதிராக வரிந்துகட்டி எதிர்ப்புத் தெரிவித்தன. ஜெயராம் ரமேஷ் இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டார் என்று கூறாத ஒரு இந்துத்துவா கட்சியும் இருக்கவில்லை.

மோடி இப்போது கூறுவது தான் அவரது உண்மையான கருத்து என்றால் ஜெய்ராம் ரமேஷ் கூறியதை நான் ஆதரிக்கிறேன் என்று அப்போது மோடி கூறியிருக்க வேண்டும். அவருக்குத் தார்மீக ஆதரவு அளித்து இருக்க வேண்டும்.

அப்போது வாய் திறக்காமல் மௌனமாக இருந்துவிட்டு இப்போது இந்தக் கருத்தைக் கூறுகிறார்.

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? மோடி ஒரு சந்தர்ப்பவாதி என்பதும் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் வேஷதாரி என்பதும் தான்.

இது புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயமாகும்.

இந்துத்துவா இயக்கங்கள் ஜெய்ராம் ரமேஷை எதிர்த்தது இந்து மதத்தின் மீது உள்ள பக்திக்காக என்றால் அதே கொந்தளிப்பை இப்போதும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மோடியின் வீட்டுமுன் விளக்குமாறுகளுடன் கூடியிருக்க வேண்டும். ஆனால் ஜெய்ராம் ரமேஷுக்குக் கொடுத்த எதிர்ப்பில் ஐந்து சதவிகிதம் கூட இவர்கள் மோடிக்கு எதிராக கருத்துக் கூறவில்லை. கண்டிக்கவில்லை.

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன?

இந்து மதத்தின் பெயரால் இயக்கம் நடத்தும் இவர்களுக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக உள்ளதால் இந்து உணர்வைக் கிளறி தம்மை வளர்த்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம் என்பது இதில் இருந்து தெரியும் இரண்டாவது உண்மையாகும்.

இது பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தங்கள் கடவுள் சிலையைத் தாங்களே உடைத்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழி போடுவதில் இருந்து இவர்களுக்கு இந்து கடவுள் மீது பக்தி இல்லை என்பதை முன்னரே நாம் பார்த்திருக்கிறோம்.

கற்பு, ஒழுக்கத்தை இந்து மதமும் அதில் நம்பிக்கை உள்ளவர்களும் பேணக் கூடியவர்களாக உள்ளனர். இந்து மதத்தின் பெயரால் இயக்கம் நடத்துவோர் பொது மக்களை விட அதிக பக்திமான்களாகவும் ஒழுக்கமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவினர் என்ன செய்தனர்?

சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்தனர்.

நிர்வாண நடனத்தை ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் சேர்ந்து ரசித்தனர்.

நித்தியானந்தாவை தங்களின் லோட்டஸ் டிவியில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

அழகியோடு பாஜக தலைவர் உல்லாசம் அனுபவித்த காட்சியை உலகமே பார்த்து காரித்துப்பியது.

மயக்க மருந்து கொடுத்து சிறுமியைச் சூறையாடிய பாஜக தலவர்களும் உள்ளனர்.

குசும்ராயுடன் ஆட்டம் போட்ட கல்யாண்சிங்,

வேலைக்காரனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட அமைச்சர்

என நீளும் பட்டியலில் இருந்து இவர்களுக்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தமில்லை என்பதை இந்துக்கள் புரிந்து கொண்டனர். (இது குறித்து ஆதாரங்களுடன் தனிக்கட்டுரை காண்க)

மோடியின் இந்தத் தத்துவத்துக்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பதும் அந்தப் பட்டியலில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்து மதம் என்பது இவர்கள் கடைப்பிடிக்கும் தத்துவம் அல்ல. இந்துக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க உதவும் பிழைப்புக்கான ஒரு வழியாகும் என்பதை எஞ்சிய இந்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியோ, ஜெயராம் ரமேஷோ இவர்கள் இவ்வாறு கூறியது சரியா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

இது போன்ற கருத்துக்கள் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடு என்று ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன.

உண்மையில் சிந்தனைக் குறைவின் காரணமாகவே இது போன்று உளறுகின்றனர் என்பது தான் நமது நிலைபாடு.

கோவில்கள் மீது முஸ்லிம்களாகிய நமக்கு நம்பிக்கை இல்லாததால் இது போன்ற பேச்சுக்களைக் கேட்கும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படக் கூடாது. இதை ஆதரித்தால் பள்ளிவாசல் கட்டுவதை விட கழிவறை தான் முக்கியம் என்று ஒரு அரைவேக்காடு நாளைக்குக் கூறுவான்.

இந்த இரண்டையும் கேட்டு நாத்திகர்களும் மகிழ்ச்சியடையக் கூடாது.

பெரியார் சிலை வைப்பதைவிட, இயக்க அலுவலகம் கட்டுவதை விட, கிளைகள் அமைப்பதை விட ,கொடிகள் கட்டுவதை விட கக்கூஸ் கட்டுவது நல்லது என்று கூறும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

இவை எல்லாம் மடத்தனமான வார்த்தைகள்.

ஒரு மனிதனுக்கு ஏராளமான தேவைகள் உள்ளன. அவை அனைத்தும் சமமான முக்கியத்துவம் உடையவை அல்ல என்ற போதும் மனிதன் அனைத்துக்கும் செலவிடுகிறான்.

ஆடை அணிவதை விட சோறுதான் முக்கியம் என்று கூறி நிர்வாணமாக யாரும் திரிவதில்லை. இரண்டையும் சேர்த்துச் செய்வது முரண்பாடானது அல்ல. சோற்றுக்கும் செலவிட்டு ஆடைக்கும் செலவிட முடியும்.

குழம்பைவிட சோறு முக்கியம் என்பது உண்மை என்றாலும் இதன் படி வெறும் சோற்றை யாரும் சாப்பிடுவதில்லை.

கோவில் மீது நம்பிக்கை உடையவர்கள் கோவிலைக் கட்டுவதுடன் கழிவறையையும் கட்டுவதில் என்ன பிரச்சனை உள்ளது?

பள்ளிவாசலையும் கட்டிக் கொண்டு கழிவறைக்குச் செலவிடாமல் யாரும் இருப்பதில்லை. அரை வேக்காட்டுத்தனமாக சிந்திப்பவர்கள் அடிக்கடி இது போல உளறி அறிவாளிகளாகக் காட்டப்பட்டு வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் பக்தியுடன் மதிப்பதையும், அவர்கள் இழிவாக நினைப்பதையும் சமமாக வைத்து யாரும் பேசுவது நல்லதல்ல.

மோடியாக இருக்கப் போய் இவ்வாறு கூறிவிட்டு தப்பித்து விட்டார். இதை குலாம் நபி ஆசாத், அல்லது சல்மான் குர்ஷித் சொன்னால் என்னவாகி இருக்கும்? ஆபாச ஓவியன் ஹுசைனுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இது போன்ற வாசல்களைத் திறந்து விடக்கூடாது என்பது தான் நமது நிலை.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

கோவில்களையும், பள்ளிவாசல்களையும் அதில் நம்பிக்கை உள்ள மக்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு கட்டுகிறார்கள். இதில் அரசுக்கு எந்த வேலையுமில்லை.

ஆனால் கழிவறை கட்டுவது அரசின் கடமையாகும்.

அது மக்கள் செய்யவேண்டியது.

இது அரசு செய்ய வேண்டியது.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையும் ஒப்பிட்டு மோடி பேசியதிலும் அவரது மடமை வெளிப்படுகிறது.

திருச்சியில் பிசுபிசுத்த மாநாட்டுக்குச் செலவு செய்த கோடிக்கணக்கான ரூபாயில் திருச்சி முழுவதும் கழிவறை கட்டலாமே என்று நாம் கேட்டால் மோடி இதற்கு கைதட்டுவாரா?

07.10.2013. 3:12 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account