விஞ்ஞானியின் பார்வையில் பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்

பெண்கள் பகுதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விஞ்ஞானியின் பார்வையில் பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்

2001ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் டிம் ஹன்ட். இவருக்கு வயது 72. தென் கொரியாவில் நடந்த உலக அறிவியல் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய விஞ்ஞானி டிம் ஹன்ட் கூறியதாவது

அவர் கருத்தரங்கில் பேசும்போது, விஞ்ஞானிகள் பாலியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களில் பணியாற்ற வேண்டும்.

பெண்களுடன் ஆய்வுக் கூடங்களில் சேர்ந்து பணியாற்றும் சக ஆண் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

உதாரணத்துக்கு, அவர்கள் 3 விதங்களில் தொல்லை அளிப்பார்கள்.

முதலில், நாம் அவர்களோடு காதல் வசப்பட்டு விடுவோம். இரண்டாவது, அவர்களுக்கு நம் மீது காதல் வரும்.

மூன்றாவது, அவர்களை நாம் விமர்சித்தால், உடனடியாக அழுது விடுவார்கள். இதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றவே முடியாது.

டிம் ஹன்ட்டின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர் பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்

, நகைச்சுவைக்காக அப்படி கூறினேன். எங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கூறினேன். நான் கூறியது முற்றிலும் உண்மை. உண்மையில் எனக்கு அந்த அனுபவம் உள்ளது. ஆய்வகத்தில் பணியாற்றும் பெண்களிடம் காதலில் விழுந்து உள்ளேன். அவர்களுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இது அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்.

ஆய்வகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம். உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால் விஞ்ஞானிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

எனது தவறு என்னவென்றால், பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்தில் நான் சிறிது யோசித்து பேசியிருக்க வேண்டும். உணர்ச்சி மிகுதியால் வாழ்க்கை கடினமாகி விடும். நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்  என்று கூறியுள்ளார்.

இந்த விஞ்ஞானி தான் கூறிய கருத்துக்கு மனிதர்களுக்குப் பயந்து மன்னிப்புக் கோரிய போதும், அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் நிலையில் மூன்றாவதாக அங்கே ஷைத்தான் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஆதாரம்: (திர்மிதீ 1091)

18.06.2015. 5:24 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account