Sidebar

18
Fri, Oct
11 New Articles

பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?

பெண்கள் பகுதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?

உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்!

நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் சேட்டைகள் ஆகிய அனைத்திற்கும் சினிமா கூத்தாடிகளும், சினிமாவும், மெகா சீரியல்களும் தான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உண்மையை கடந்த வாரம் டெல்லி உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதோ அந்தத் தீர்ப்பு :

பதினான்கு வயது பள்ளி சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞனுக்கு, அபராதம் மட்டும் விதித்த டில்லி கோர்ட், சிறுமி மீது தான் தவறு உள்ளது; இளைஞனிடம் தவறு எதுவும் இல்லை' என, உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகவதி பிரசாத் என்ற இளைஞர், டில்லி பள்ளி ஒன்றில், டிரைவராக வேலை பார்த்தார். அவர் ஓட்டிச் சென்ற பஸ்சில், மாணவிகள் பலரும் பயணம் செய்தனர். அவர்களில், 14 வயது சிறுமி ஒருவர், டிரைவர், பகவதி பிரசாத்தை ஒரு தலையாக காதலித்தார்.

அதை பின் டிரைவர் பிரசாத், 2010, ஜூலை, 13ல், அந்த சிறுமியைக் கடத்தி, ராஜஸ்தான் சென்றார். அங்கு திருமணம் செய்து கொள்ள, அவர்கள் நினைத்திருந்த நேரத்தில், ஜூலை 20ம் தேதி, மெகந்திபுர் பாலாஜி என்ற இடத்தில், அந்த ஜோடியைப் பிடித்து போலீசார், டில்லி கொண்டு வந்தனர். சிறுமியைக் கடத்திச் சென்றதாக, பகவதி பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், பகவதி பிரசாத் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி, வீரேந்தர் பட் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பட், சிறுமியை கடத்திச் சென்ற பகவதி பிரசாத்தைத் தண்டித்தார். எனினும், அபராதம் மட்டும் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர் தன் தீர்ப்பில் கூறியிருந்ததாவது:

பகவதி பிரசாத் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சுமத்தப்படுவதாக, கோர்ட் கருதுகிறது. அந்த இளைஞரை, அந்த சிறுமி தான், திருமணம் செய்ய தொந்தரவு செய்துள்ளார். அவளின் வயதைக் கருத்தில் கொண்டு, அந்தக் கோரிக்கையை, பகவதி பிரசாத் நிராகரித்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதுதான், அவர் மீதான குற்றம்.

முதலில் அவருடன் சென்ற சிறுமி, வழக்கு விசாரணையின் போது, தன்னை வலுக்கட்டாயமாக ராஜஸ்தானுக்கு கூட்டிச் சென்றார், மிரட்டினார் என, பகவதி பிரசாத் மீது புகார் கூறுவதில் உண்மையில்லை. ஏனெனில், அந்த சிறுமி தான், அவரைத் தொந்தரவு செய்துள்ளாள் என்பது வழக்கு விசாரணையில் தெரிய வருகிறது.

இது போன்று ஏராளமான வழக்குகள், கோர்ட்டுகளுக்கு வருகின்றன. வீடுகளில், பெண் குழந்தைகளை, முறையாக, சிலர் வளர்ப்பதில்லை. வீடுகளின் வரவேற்பறையிலேயே, டிவி' பெட்டிகளில், இது போன்ற, இழுத்துச் செல்லப்படும் காட்சிகள், நாள் முழுக்க, பல சேனல்களில் காட்டப்படுகின்றன.

காதலுக்கு கண் இல்லை. காதல், மதம், ஜாதி, வயது என, எதையும் பார்ப்பதில்லை என, பாலிவுட் படங்களில் காட்சிகள் காட்டப்படுகின்றன. அந்த காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுமிகள், காதல் என்றும், காதல் திருமணம் என்றும், கனவில் மிதந்து, காதலர்களுடனும், ஆண் நண்பர்களுடன் ஓடிவிடுகின்றனர். பிறகு, அந்த ஆண் நண்பர்களை வழக்குகளில் சிக்க வைத்து விடுகின்றனர்.சில வீடுகளில், சிறுமிகளை, எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை' என, பெற்றோர் விட்டு விடுகின்றனர்.

இது போல, ஏராளமான வழக்குகளை நாங்கள் சந்திக்கிறோம்.எனவே, பகவதி பிரசாத் செய்த ஒரே குற்றம், 14 வயது சிறுமியை அழைத்து சென்றது தான். அதற்காக அவர், இதற்கு முன் அனுபவித்த சிறைத் தண்டனையே போதுமானது. இருந்தாலும், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண்கள் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான ரவீந்திர பட் அவர்கள்தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா சீரியல்களையும், சினிமாக்களையும் தங்களது பிள்ளை குட்டிகளுடன் குடும்ப சகிதம் அமர்ந்து கண்டு களிக்கும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது திருந்த வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களும் இது போன்று பிள்ளைகளை இழந்துவிட்டு நிற்க வேண்டிய நிலைதான் வரும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

25.12.2012. 9:05 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account