சபதம் ஏற்போம்!
சகோதரர் பீஜே அவர்கள் அல்ஜன்னத் மாத இதழில் ஆசிரியராக இருந்த போது அதன் கடைசி பக்கத்தில், சபதம் ஏற்போம் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட கொள்கை முழக்கம் இடம் பெறும்.
கீழே நீங்கள் பார்ப்பது 1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அல்ஜன்னத் மாத இதழின் கடைசிப் பக்கத்தைத்தான்.
அப்போதே இந்த ஜமாத் தனது கொள்கையைத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதோ அந்தக் கொள்கை முழக்கம்:
சபதம் ஏற்போம்!
எந்நிலையிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவோம்!
இணைவைத்தலின் சாயல் கூட நம்மீது படிய விடமாட்டோம்!
அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம்!
அவர்களுக்கு இணையாக மனிதர்களில் எவரையும் கருதமாட்டோம்!
திருக்குர் ஆனையும், நபி மொழியையும் உயிருக்கு மேலாய் மதிப்போம்!
இவ்விரண்டிற்கும் முரண்பட்ட எவரது கருத்தையும் நிராகரிப்போம்!
இஸ்லாத்திற்காக தியாகங்கள் சேவைகள் செய்த உத்தமர்களை மதிப்போம்!
அல்லாஹ்வுக்கு இணையாக அவனது தூதருக்கு சமமாக அவர்களில் யாரையும் கருத இடம் தரமாட்டோம்!
தவறுகள் எவரிடத்திலிருந்து வந்தாலும் அந்த தவறுகளை மட்டும் தாட்சண்யமின்றி விமர்சிப்போம்!
தவறிய மனிதர்களை தரைக்குறைவாக விமர்சிக்க மாட்டோம்!
தவறுகளை எவர் சுட்டிக்காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம்!
வரட்டுக் கௌரவம் பார்ப்பவர்களையும், முரட்டுப் பிடிவாதம் கொள்பவர்களையும் அலட்சியம் செய்வோம்!
தனி நபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம்!
தனி நபர் தாக்குதலை அடியோடு தவிர்ப்போம்!
சபதம் ஏற்போம்!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode