பீஜே கொள்கை மாறிவிட்டாராம்?
சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும்; அதைத் தவிர எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற கருத்தில் முன்னர் நாம் இருந்தோம். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் 2:102 வசனம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. சூனியத்தின் மூலம் எதையும் செய்ய முடியாது என்பது தான் சரியான கருத்து என்ற முடிவுக்கு வந்தோம்.
இது குறித்து 495 வது குறிப்பில் பீஜே விளக்கியுள்ளார்.
இதன் பின்னர் தொடர் உரைகளிலும் இதை பீஜே விளக்கியுள்ளார். பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற நூலிலும் இது குறித்து பீஜே தெளிவாக விளக்கியுள்ளார்.
பீஜேயின் தமிழாக்கத்தில் பொருள் அட்டவணை என்ற பகுதி ஒன்று உள்ளது. சூனியத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும் என்ற கருத்தில் பீஜே இருந்த போது பொருள் அட்டவணையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்.
சூனியம் செய்வதாகக் கூறுவது இறை மறுப்பாகும் - 2:102
சூனியத்தால் ஏதும் செய்ய முடியாது - 2:102
சூனியத்தைக் கற்றவன் மறுமையில் வெற்றி பெற மாட்டான் - 2:102
அதிகபட்சமாக உறவினரிடையே பிளவு ஏற்படுத்தலாம் - 2:102
சூனியம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும் - 2:102
சூனியம் என்பது மாயையும், ஏமாற்றுதலுமே - 7:116, 10:81, 20:66, 20:69
நபிமார்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 17:47,48, 17:101, 25:8, 26:153, 26:185
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 5:67, 15:9, 75:17, 114:1
இப்படி பொருள் அட்டவணையில் பீஜே குறிப்பிட்டு இருந்தார்.
அதாவது பொருள் அட்டவணையில்
அதிகபட்சமாக உறவினரிடையே பிளவு ஏற்படுத்தலாம் - 2:102
என்று பீஜே குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் பொருள் அட்டவணையில் இந்த வரிகளை பீஜே நீக்கி இருக்க வேண்டும். ஆனால் கவனக் குறைவாக நீக்காமல் விட்டு விட்டார்.
சில பதிப்புகள் நீக்கப்படாமல் வந்து விட்டன. 14 வது பதிப்பும் அப்படியே அச்சாகி விட்டது.
ஆனால் வழிகெட்ட சூனியக்காரர்கள் _ சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியுமென்று பீஜே தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்று இதை வைத்து விமர்சனம் செய்து அற்ப திருப்திப்பட்டு வருகின்றனர்.
பீஜே தற்போது எந்தக் கருத்தில் இருக்கிறார் என்பது இவர்களுக்குத் தெரியும். இது திருத்தம் செய்யாமல் விடுபட்ட பிழை என்பதும் இவர்களுக்குத் தெரியும்.
14ஆம் பதிப்பில் 2:102 க்கான 495வது குறிப்பில் நமது நிலை என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளதும் இவர்களுக்குத் தெரியும்.
அப்படி இருந்தும் அறிவு நாணயமில்லாமல் இவ்வளவு கீழ்த்தரமாக இவர்கள் செயல்படுவது இவர்களின் கேடுகெட்ட தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
ஒருவனை, ஒருவனின் கருத்தை விமர்சனம் செய்வதாக இருந்தால் அந்தக் கருத்தில் தான் அவன் இருக்கிறானா? என்று தெளிவடைந்து விமர்சிக்க வேண்டுமே தவிர பிழையாக விடுபட்டதை வைத்து விமர்சித்தால் ஒரு நாளிலேயே சாயம் வெளுத்து விடும்.
இதைப் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்? உடனே : 2:102 வசனத்தை எடுத்துப் பார்ப்பார்கள். அந்த வசனத்தில் போடப்பட்டுள்ள குறிப்பு எண் 495ஐ எடுத்து வாசிப்பார்கள்.
இதில் சூனியத்தால் கணவன் மனைவியரிடையே பிரிப்பது உள்ளிட்ட எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று பீஜே விளக்கியுள்ளதைப் பார்ப்பார்கள்.
ஒரு வகையில் இந்த சலபிக் கும்பல் பீஜேயின் தமிழாக்கத்தை இவர்களின் ஆதரவாளர்களும் வாங்கிப் படிக்க தூண்டுதலாக அமைந்து விட்டனர்.
ஆஹா பீஜே நம் கருத்துக்கு வந்து விட்டாராமே என்று இவர்கள் கொடுக்கும் விளம்பரத்தால் ஆர்வமாக பீஜேயின் தமிழாக்கத்தை வாங்கிப் படிப்பார்கள். இவர்கள் சொன்னது போல் பீஜே மாறவில்லை. இன்னும் உறுதியாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்வார்கள். இதுதான் சரியான கருத்து என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
தற்போது அது நீக்கப்பட்டு விட்டது. ஆன்லைன் பீஜேயிலும் அது நீக்கப்பட்டு விட்டது.
05.08.2015. 6:26 AM
பீஜே கொள்கை மாறிவிட்டாராம்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode