பீஜே பெயருடன் பட்டம் போடாதது ஏன்?
பதில் :அல்முபீன் அல்ஜன்னத் ஆசிரியராக தாங்கள் இருந்தபோது ஜைனுல்ஆபிதீன் உலவி என்று போட்டுள்ளீர்கள், தற்போது உலவி என்று போடுவதில்லையே ஏன் ?
- அபு ஜாசிம், ஷார்ஜாஹ்
? ஆரம்ப காலத்தில் மவ்லவி என்றும் உலவி என்றும் என் பெயருடன் சேர்த்துக் குறிப்பிடுவதை நான் ஆட்சேபிக்காமல் இருந்தேன். அடையாளத்துக்காக பெயருடன் பட்டங்களையும் பதவிகளையும் ஒருவர் குறிப்பிட விரும்பினால் அது தவறல்ல.
ஆனால் நான் தனிப்பட்ட முறையில் பெயரை மட்டுமே பயன்படுத்துவது என்றும், பட்டமும் பதவிகளும், அடைமொழிகளும் வேண்டாம் என்றும் முடிவு செய்து சில ஆண்டுகளாக இதைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து வருகிறேன்.
நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என் பெயருடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்றோ மவ்லவி, உலவி என்றோ, அறிஞர் என்றோ வேறு எந்த அடைமொழியுமோ பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறேன். இது என்னளவில் நான் எடுத்துக் கொண்ட முடிவு தான். எனக்குப் பிடிக்கவில்லை என்பது தான் இதற்குக் காரணம்.
உணர்வு 16:24
21.02.2012. 13:06 PM
பீஜே பெயருடன் பட்டம் போடாதது ஏன்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode