ஒத்துழையாமையும் நமது நிலையும்
ஒத்துழையாமை குறித்து நமது நிலைபாடு என்னவாக இருந்தது?
NRC எனும் குடியுரிமைப் பதிவேட்டுக்காக ஒரு முஸ்லிம் கூட எந்த ஆவணத்தையும் கொடுக்க மாட்டோம் என்று முடிவு செய்யுங்கள் என்று பீஜே முஸ்லிம் சமுதாயத்துக்கு வேண்டுகோள் விட்டார்.
இதற்கு சமுதாயத்தில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் இது தவறு என்றும், ஜனநாயக நாட்டில் இந்தப் போராட்டம் கூடாது என்றும் கூறி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து வருகிறது.
ஆனால் ஒத்துழையாமை இயக்கமும் ஜனநாயக போராட்ட வழிமுறையில் ஒன்று என்பது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இதற்கு முன்னர் இருந்து வந்தது. இது குறித்து முன்னரே நாம் விளக்கியுள்ளதை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி உண்ர்வு இதழில் பீஜேயிடம் ஒத்துழையாமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பீஜே பதில் அளித்து உணர்வு இதழில் வெளியிடப்பட்டது.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்டது.
நேற்று (26-12-2019) அன்று அதை நீக்கி விட்டனர்.
பிறை குறித்த ஹதீஸை வெளியிட்டு விட்டு அந்த ஹதீஸ் இவர்களின் பெருநாள் அறிவிப்புக்கு எதிராக இருந்த காரணத்தால் ஹதீஸையே நீக்கி அறிக்கையைத் திருத்தியவர்களுக்கு இது சாதாரண விஷயம் தான்.
அந்த கேள்வி பதில் இதோ:
உ.பி. படுகொலையைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பி.ஜே. பேசும் போது முஸ்லிம்களுக்கு எதிராக இதே நிலை தொடர்ந்தால் முஸ்லிம்கள் மீண்டும் ஒரு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்று கருத்துப்பட பேசினார். இந்தக் கருத்து சரிதானா? இந்தியாவில் இந்த நிலை சாத்தியமா? இது நடைமுறைக்கு ஒத்துவராத முறைபோல் உள்ளதே? ஒருவேளை இந்த நிலை ஏற்பட்டால் முஸ்லிம்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா? இதைத் தக்க காரணங்களுடன் விளக்கவும்.
-சாலிஹ், நெல்லை.
இன்றைய நிலையில் இருந்து யோசித்தால் ஒத்துழையாமை என்பது சாத்தியமில்லை. ஆனால் இன்று இருப்பதை விட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது இது சாத்தியமாகும்.
அந்த நேரத்தில் தங்களையும், தங்கள் உரிமைகளையும் காத்துக் கொள்ள எப்படிப்பட்ட போராட்ட வழிமுறைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அப்படிப்பட்ட நிலை வரும்போது தான் நாமும் அந்த அறிவிப்பை வெளியிடுவோம்.
இட ஒதுக்கீடு போராட்டத்தை நாம் துவக்கிய நேரத்தில் இது சாத்தியமற்ற கோரிக்கை என சகலராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வீதிகள் தோறும் விளக்கக் கூட்டங்கள் நடத்தினோம். அரசின் புறக்கணிப்பால் நேர்ந்த அவலங்களைப் புரிய வைத்தோம். இறைவனின் கிருபையால் எதிர்த்தவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள்.
அரசும் அதை அங்கீகரித்தது. ஒட்டுமொத்த சமுதாயமும் இப்போது அதன் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது.
அவ்வளவு ஏன்? விடுதலைப் போராட்ட காலத்தில் ஒத்துழையாமை இயக்கம் வெற்றி பெற்றது எப்படி? அந்தக் காலத்து மக்களுக்கு ஆங்கில அரசு கொடுத்த நெருக்கடிகள் தானே அதற்குக் காரணம். அந்தக் கஷ்டங்கள் தானே அதை நோக்கி அவர்களைத் தள்ளியது.
அதுபோலத் தான் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகும் நிலை வந்தால் ஒத்துழையாமையைக் கையிலெடுப்போம். மக்களும் அதை வழிமொழிவார்கள்.
இன்ஷா அல்லாஹ்.
இதுதான் முன்னரே நாம் கொண்டிருந்த நிலைபாடு. அதற்கான நேரம் வந்து விட்டதால் உரிய நேரத்தில் பீஜே அறிவித்தார்.
ஒத்துழையாமையும் நமது நிலையும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode