பீஜேயை விசாரித்த நீதிபதி பார்வையில்
PJ பற்றி குற்றவியல் நடுவர் நீதிபதி உத்திராபதி கதிர்வேலாயுதம் அவர்கள் கோரா (QUORA) இணையதளத்தில் (2017ல்) தெரிவித்த முக்கிய கருத்து.
கோரா (QUORA) இணையதளத்தைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்தவொரு தலைப்பு, பிரபலமான நபர்கள் குறித்து நாம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்டாலும், அதில் உறுப்பினர்களாக உள்ள துறைசார்ந்த நிபுணர்கள் நமக்கு விடையளிப்பார்கள்.
#PJ குறித்தும், #TNTJ குறித்தும் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு குற்றவியல் நடுவர் உத்திராபதி கதிர்வேலாயுதம் அவர்களின் கருத்து உங்கள் பார்வைக்கு கீழே.
உத்திராபதி அவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாவார்
இவர் கூறுகிறார் ?
"அந்த அமைப்பின் (TNTJ) நிகழ்கால செயல்பாடுகள் குறித்து எனக்கு தெரியாது. அதனால் நான் அவ்வமைப்பை குறித்து கருத்து கூறுவதைவிட்டு விலகுகிறேன். ஆனால் இந்த கேள்வியில் கேட்கப்பட்ட PJ ஒரு குற்றவழக்கில் சாட்சியாக என் முன் கொண்டுவரப்பட்டார். அவ்வழக்கில் 1305 சாட்சிகளை நான் விசாரித்திருக்கிறேன்.
எனக்கேற்பட்ட தனிப்பட்ட ஆர்வத்தினால் சாட்சிகளின் புத்தி கூர்மை, அறிவு, துருவித்துருவி குறுக்கு விசாரணை செய்யும் போது அதை தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சல், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றை குறித்து நான் ஒரு ஆய்வு செய்தேன். PJ அதில் முதல் ரேங்க் வாங்கினார். இந்த பண்புகளில் இரண்டாவது ரேங்க் வாங்கியவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்."
https://www.quora.com/What-is-your-view-on-Tamil-Nadu-Thowheed-Jamath-TNTJ-and-P-Jainulabdeen
பீஜேயை விசாரித்த நீதிபதி பார்வையில்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode