கோட்டார் விவாதம் 1986
ஓரிரு ஊர்களில் மட்டும் சிறிய அளவில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து வந்த காலகட்டத்தில் நாகர்கோயில் கோட்டார் எனும் ஊரில் முதன்முதலாக சுன்னத்வல்ஜமாத்திற்கும், அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பிற்கும் ஒரு விவாதம் 18,19-07-1986 ல் இரண்டு நாள் நடைபெற்றது.
சுன்னத் வல்ஜமாஅத் சார்பாக 20 க்கும் மேற்பட்ட மவ்லவிமார்கள் கலந்துகொண்டு விவாதித்தனர்.
நமது சார்பாக அதிகமான மவ்லவிமார்கள் அந்தக் காலக்கட்டத்தில் இல்லாததால்
P.ஜெய்னுல் ஆபிதீன்
S.கமாலுதீன் மதனி,
S.I.அப்துல் காதிர் மதனி,
K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,
M.அப்துல் ஜலீல் மதனி,
F.அப்துல் ஹமீது ஆமிர் உமரி,
S.S.U.சைபுல்லாஹ் ஹாஜா
ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
எதிர்த் தரப்பில் கேரளாவின் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார், இலங்கை ஏ.எல்.பத்ருத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காந்தபுரம் அபூபக்ர் முஸ்லியார் கேரளாவில் சுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப்பெரிய அறிஞராவார். அப்படி இருந்தும் பீஜே அவர்களின் அறிவார்ந்த வாதம் காரணமாக அவர்களுக்கு படுதோல்வியே ஏற்பட்டது.
இந்த விவாதத்துக்குப் பின்னர் தான் குமரி மாவட்டத்தின் பல ஊர்களில் ஜாக் இயக்கத்துக்கு கிளைகள் உருவாயின. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட்டது. அந்த அளவுக்கு இந்த விவாதத்தில் அல்லாஹ் வெற்றியளித்தான்.
விவாதத்தின் தலைப்புகளாக
இறந்தவர்களிடம் வசீலா தேடுதல்
இறந்தவர்களுக்கு குர் ஆன் ஹத்தம் ஓதுதல்
தொழுகைக்குப்பின் கூட்டு துஆ
ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொள்கைச் சகோதரர்களும், சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லக்கூடியவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த விவாதம் தமிழகத்தில் தவ்ஹீதின் வளர்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது. இந்த விவாதம் "கோட்டாறு முனாழரா" எனும் தலைப்பில் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.
கோட்டார் விவாதம் 1986
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode