Sidebar

27
Fri, Dec
24 New Articles

பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா?

தவ்ஹீதுக்கு எதிரானவை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா?

கேள்வி

இறைவனுக்கு உருவம் உண்டு; சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்பன போன்ற ஆய்வுகள் தற்போது தேவையா? நாம் செல்ல வேண்டிய பயணம் இன்னும் இருக்கும் போது இது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தில் அவசியமா?

மைதீன்

பதில்

அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னவை அனைத்தும் தேவையான விஷயங்கள் தான். இவை தேவையற்றவை என்று நாம் கருதினால் தேவையற்ற, மக்களுக்குப் பயனில்லாத விஷயங்களை இறைவனும். இறைத்தூதரும் சொல்லியிருக்கிறார்கள் என்ற பாரதூரமான கருத்து இதனால் ஏற்படும்.

இந்தக் கருத்தை இப்போது சொன்னால் இவரைப் பாதிக்கும்; அது அவரைப் பாதிக்கும் என்று காரணம் கூறி மார்க்கத்தில் உள்ள எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது போகும்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.

திருக்குா்ஆன் 15:94, 95

நாம் கூறிய இந்தக் கருத்துக்கள் நம்முடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. திருக்குா்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் தான் எடுத்துக் கூறியிருக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

இந்தக் கருத்துக்கள் மக்களுக்கு சொல்லப்படத்  தேவையில்லை எனில் இறைவன் ஏன் இதைக் குா்ஆனில் கூற வேண்டும்? நபிகளார் இதை ஏன் சொல்ல வேண்டும்.

இந்தக் காலத்திலேயே இந்தக் கருத்துகள் தேவையற்றவை எனில் நபித்தோழா்கள் காலத்தில் இதை நபிகளார் ஏன் சொன்னார்கள்?

இது போல் கேட்பது குா்ஆனையும், நபிமொழியையும், இறைவனையும், இறைத்தூதரையும் விமா்சிப்பதாக ஆகும்.

2626 ( 144 ) حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ - يَعْنِي الْخَزَّازَ - عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ، عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ".

நன்மையான காரியங்களில் எதையும் அற்பமானதாகக் கருதாதீா்கள் என்பது நபிமொழி

நூல் : முஸ்லிம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படித் தான் சொன்னார்கள். தர்காவை எதிர்த்த போது இப்போது இது தேவையா என்று கேட்டார்கள். இதனால் சமுதாயத்தில் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றார்கள்.

பின்னர் மத்ஹபுகளில் நாம் கை வைத்த போது தர்காவைப் பற்றி சொன்னீர்கள். அது சரி தான். ஆனால் மத்ஹப் பற்றி இப்போது பேசுவது தேவையா? இதனால் தர்காவைப் பற்றி நாம் பேசுவதும் எடுபடாமல் போய் விடுமே என்றார்கள்.

பின்னர் தராவீஹ் தொழுகை பற்றி பேசிய போது இது போன்ற பிரச்சனைகளால் மக்களின் கோபம் உங்கள் மீது திரும்பும். இதனால் எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்ல முடியாமல் போகுமே என்றார்கள்.

விரலசைத்தல், தாமதமின்றி நோன்பு துறத்தல், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்பன போன்ற விஷயங்களைச் சொன்ன போதும் நீங்கள் சொன்ன இதே கோரிக்கைகள் வந்தன.

ஆனால் இந்தச் சகோதரர்கள் பயந்தது போல் ஒன்றும் ஆகவில்லை. எல்லா உண்மைகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தான் செய்தனர். உறுதியான அஸ்திவாரத்தின் மீது அதாவது குர்ஆன், ஹதீஸ் மீது நமது கொள்ளை கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்று விட்டதால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் நாம் சொல்லும் அனைத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

உங்க்ளைப் போன்றவர்கள் இப்படி நினைப்பதற்குக் காரணம் இதனால் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும். நிறைய எதிர்ப்புகளால் நம்முடைய பணிகள் பாதிக்கும் என்ற மனநிலை தான். இந்த மனநிலை மாறினால் எல்லாம் சரியாகி விடும்.

12.04.2013. 22:27 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account