ஆதம் (அலை) தவறு செய்த போது?
ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட மரத்தை அணுகினார்கள். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டால் மன்னிப்புக் கேட்ட்தால் மன்னிக்கப்பட்டார்கள் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது.
இது பற்றி ஹதீஸ்கள் சில இருந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன. அதை விபரமாகப் பார்ப்போம்.
المستدرك على الصحيحين للحاكم (2/ 672)
4228 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ الْعَدْلُ، ثنا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، ثنا أَبُو الْحَارِثِ عَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ الْفِهْرِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ مَسْلَمَةَ، أَنْبَأَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قَالَ: يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي، فَقَالَ اللَّهُ: يَا آدَمُ، وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ؟ قَالَ: يَا رَبِّ، لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَىَ قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فَقَالَ اللَّهُ: صَدَقْتَ يَا آدَمُ، إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ «هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَهُوَ أَوَّلُ حَدِيثٍ ذَكَرْتُهُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ فِي هَذَا الْكِتَابِ»
[التعليق - من تلخيص الذهبي] 4228 - بل موضوع
المعجم الأوسط (6/ 313)
6502 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ، ثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْفِهْرِيُّ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا أَذْنَبَ آدَمُ الَّذِي أَذْنَبَهُ، رَفَعَ رَأْسَهُ إِلَى الْعَرْشِ، فَقَالَ: أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ إِلَّا غَفَرْتَ لِي، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: وَمَا مُحَمَّدٍ؟ وَمَنْ مُحَمَّدٍ؟ فَقَالَ: تَبَارَكَ اسْمُكَ، لَمَّا خَلَقْتَنِي رَفَعْتُ رَأْسِي [ص:314] إِلَى عَرْشِكَ، فَإِذَا فِيهِ مَكْتُوبٌ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَعَلِمْتُ أَنَّهُ لَيْسَ أَحَدٌ أَعْظَمُ عِنْدَكَ قَدْرًا مِمَّنْ جَعَلْتَ اسْمَهُ مَعَ اسْمِكَ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: يَا آدَمَ إِنَّهُ آخِرُ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّتِكَ، وَإِنَّ أَمَتَهُ آخِرُ الْأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ، وَلَوْلَا هُوَ يَا آدَمُ مَا خَلَقْتُكَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ إِلَّا ابْنُهُ عَبْدُ الرَّحْمَنِ، وَلَا عَنِ ابْنِهِ إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ، وَلَا يُرْوَى عَنْ عُمَرَ إِلَّا بِهَذَا الَإِسْنَادِ "
دلائل النبوة للبيهقي
2243 - حدثنا أبو عبد الله الحافظ ، إملاء وقراءة ، حدثنا أبو سعيد عمرو بن محمد بن منصور العدل إملاء ، حدثنا أبو الحسن محمد بن إسحاق بن إبراهيم الحنظلي ، حدثنا أبو الحارث عبد الله بن مسلم الفهري ، بمصر ، قال أبو الحسن هذا من رهط أبي عبيدة بن الجراح ، أنبأنا إسماعيل بن مسلمة ، أنبأنا عبد الرحمن بن زيد بن أسلم ، عن أبيه ، عن جده ، عن عمر بن الخطاب ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « لما اقترف آدم الخطيئة ، قال : يا رب أسألك بحق محمد لما غفرت لي ، فقال الله عز وجل : يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال : لأنك يا رب لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا : لا إله إلا الله محمد رسول الله ، فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك ، فقال الله عز وجل : صدقت يا آدم ، إنه لأحب الخلق إلي وإذ سألتني بحقه فقد غفرت لك ، ولولا محمد ما خلقتك » تفرد به عبد الرحمن بن زيد بن أسلم من هذا الوجه عنه ، وهو ضعيف ، والله أعلم
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின்னர், “என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு!” என்று பிரார்த்தனை செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ், “ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என்று கேட்டான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “என்னை நீ படைத்த உடனே என் தலையை உயர்த்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின் பெயரையும் நீ எழுதியுள்ளதால் அவர் உனக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து கொண்டேன்” என்று பதில் கூறினார்கள். உடனே அல்லாஹ், “முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னை நான் மன்னிக்கிறேன்” என்று கூறினான்.
அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற, மார்க்க அறிஞர்களால் அடிக்கடி கூறப்படுகின்ற, எழுதப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் நாம் மேலே எழுதி இருக்கிறோம்.
ஹாகிம், பைஹகீ, தப்ரானி ஆகியோர் இதனைத் தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.
“முஸ்தத்ரக்” என்று நூலில் ஹாகிம் அவர்களும்,
தலாயிலுன்னுபுவ்வத்” என்ற நூலில் பைஹகீ அவர்களும்,
“முஃஜமுஸ் ஸகீர்’ என்ற நூலில் தப்ரானி அவர்களும்
இதனைப் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய மூவருமே அப்துர் ரஹ்மான் பின் ஸைது பின் அஸ்லம் என்பவர் மூலமாகவே இதனை அறிவிக்கின்றனர்.
இதனை பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸின் இறுதியில் هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் என்று குறிப்பிடுகிறார். ஹாகிம் அவர்களின் இந்தக் கூறின் அடிப்படையில் தான் இது சரியான ஹதீஸ் என்று பலரும் நம்பி பிரச்சாரம் செய்கின்றனர்.
ஹாகிம் அவர்களின் நூலை மேலாய்வு செய்த அறிஞர் தஹபி அவர்கள் இந்த ஹதீஸ் ஹாகிம் சொல்வது போல் ஆதாரப்பூர்வமானது அல்ல. மாறாக بل موضوع இது இட்டுக்கட்டப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.
ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பட்டது அவரது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமனவர் என்று ஹாகிம் அவர்கள் தமது மற்றொரு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
المدخل إلى الصحيح
97 - عبد الرَّحْمَن بن زيد بن أسلم روى عَن أَبِيه أَحَادِيث مَوْضُوعَة لَا يخفى على من تأملها من أهل الصَّنْعَة أَن الْحمل فِيهَا عَلَيْهِ
அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பார் தனது தந்தை வழியாக இட்டுக்கட்டப்பட்ட பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை கவனிக்கும் வல்லுனர்கள் இவர் இடம் பெற்றதால் தான் அது பலவீனமாகிறது என்று அறிந்து கொள்வார்கள்.
அல்மத்கல் என்ற நூலில் ஹாகிம்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று அல் மத்கல் எனும் நூலில் குறிப்பிட்ட அதே ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று கூறுவது கவனக் குறைவால் ஏற்பட்ட பிழையாகும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதனால் தான் தஹபி அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ஹாகிம் நூலின் அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள், “இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. இவர் பலவீனமானவர்; ஏற்கத்தக்கவர் அல்லர்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைத் தமது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள்.
الجامع في الجرح والتعديل (2/ 70)
2490 - عبد الرحمن بن زيد بن أسلم، مولى عمر بن الخطاب، القرشي المديني.
* قال البخاريُّ: لا يَصِحُّ حديثُهُ. "التاريخ الكبير" 1/ 618 و 5/ 263.
وقال البخاري أيضًا: ضعَّفه عليٌّ جدًّا. "التاريخ الكبير" 5/ 922. و"الضعفاء الصغير" 208.
وقال أيضًا: ضعَّف عليٌّ عبدَ الرحمن بن زيد بن أسلم. "التاريخ الصغير" 2/ 229.
وقال أيضًا: قال علي بن المديني: ضعيفُ الحديثِ. "ترتيب علل الترمذيّ الكبير" ورقة 17.
وقال أيضًا: لا أروي عنه. "ترتيب علل الترمذيِّ الكبير" ورقة 76.
وذكره أبو زرعة الرازي في "أسامي الضعفاء" 184.
وقال يعقوب أيضًا: قال أبو طالب: عن أبي عبد الله. قال: سألتُه عن أسامة بن زيد بن أسلم؟ فقال: أسامة بن زيد وعبد الرحمن بن زيد وعبد الله بن زيد هم ثلاثة بنو زيد بن أسلم. فأسامة وعبد الرحمن بن زيد متقاربان ضعيفان. وعبد الله ثقة "المعرفة والتاريخ" 1/ 430.
وذكره يعقوب بن سُفيان في باب مَنْ يُرغب عن الرواية عنهم. "المعرفة والتاريخ" 3/ 43.
قال: وسمعت محمدًا يعني البخاري يذكر عن علي بن عبد الله: أنه ضَعَّف عبد الرحمن بن زيد بن أسلم. وقال: عبد الله بن زيد بن أسلم ثقة. "جامع الترمذيِّ" حديث (466 و 719).
وقال الترمذيُّ: ضعيف في الحديث، ضعَّفَهُ أحمدُ بن حنبل، وعلي بن المديني، وغيرهما من أهلِ الحديث، وهو كثير الغلطِ. "جامع الترمذيِّ" حديث (632).
وقال الترمذيُّ: يُضَعَّفُ في الحديثِ. قال محمد، يعني البخاريَّ: ولا أروي عنه شيئًا. "جامع الترمذيِّ" حديث (719).
وقال أيضًا: ضعيف الحديث. "ترتيب علل الترمذيِّ الكبير" الورقة 17.
* وقال النسائي: ضعيف مدني. "الضعفاء والمتروكون" 377.
* وقال البزار: أجمع أهل العلم بالنقل على تضعيف أخباره، وليس هو بحجة فيما ينفرد به. "كشف الأستار" (194).
وقال أيضًا: لَيِّنُ الحديث. "كشف الأستار" (1017 و 2071).
وقال أيضًا: منكر الحديث جدًّا. " كشف الأستار" (2071).
* وذكره الدارقطني في "الضعفاء والمتروكين" 331.
இந்தச் சம்பவத்தைப் பரிசீலனை செய்த தஹபீ அவர்களும், இப்னு ஹஜர் அவர்களும், முறையே தங்களின், “மீஸானுல் இஃதிதால்” “அல்லிஸான்” என்ற நூல்களில் “இந்த அப்துர் ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்கள். இப்னு கஸீர் அவர்கள் தமது சரித்திர நூலில் அப்துர் ரஹ்மானைப் பற்றி இப்படியே கருத்துத் தெரிவித்துள்ளன.
“அப்துர் ரஹ்மான் பலவீனமானவர்” என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியதாக இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அலி இப்னுல் மதீனீ, இப்னு ஸஃது, தஹாவீ போன்ற அறிஞர்கள் “அப்துர் ரஹ்மான் மிக மிகப் பலவீனமானவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.
“இவர் செய்திகளைத் தலைகீழாக மாற்றக் கூடியவர்” என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்னு தைமிய்யா அவர்களும் அப்துர் ரஹ்மானைப் பற்றி இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துர் ரஹ்மானைப் பற்றி எல்லா அறிஞர்களும் பொய்யரென்றும், இட்டுக்கட்டக் கூடியவர் என்றும், பலவீனமானவர் என்றும் ஒருமித்து கருத்துக் கூறி இருக்கும் போது அவர் வழியாக அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்?
(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:37
இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள், சில சொற்களைக் கற்றுக் கொண்டதாக இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட அந்தச் சொற்கள் எவை? என்பதை நாம் ஆராய வேண்டும்.
திருக்குர்ஆனின் ஒரு இடத்தில், கூறப்பட்ட வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனை நாம் புரட்டிக்கொண்டே வரும் போது ஒரு இடத்தில்
“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் (ஆதம், ஹவ்வா) கூறினர்.
திருக்குர்ஆன் 7:23
என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள் கற்றுக் கொண்ட சொற்கள் இது தான். இதைக் கூறியே அவர்கள் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறியலாம்.
“முஹம்மதின் பொருட்டால் மன்னிப்பாயாக” என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாகத் தங்களின் தவறை உணர்ந்து, தங்களின் இயலாமையை எடுத்துக்காட்டி இறைவனின் வல்லமையைப் பறை சாற்றி அவனிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தான் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகின்றது. இந்த அடிப்படையிலும் அந்த நிகழ்ச்சி சரியானதல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.
மேலும் அதே வசனத்தில் (2:37) இறைவனிடமிருந்து சில சொற்களைக் கற்றுக் கொண்டு அதனடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் மன்னிப்புக் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஆதாரமற்ற ஹதீஸில் ஆதம் (அலை) அவர்கள் தாமாகவே மன்னிப்புக் கேட்கும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் அதனால் தான் அல்லாஹ் மன்னித்தான் என்றும் கூறப்படுகிறது. இது திருக்குர்ஆனுடன் நேரடியாகவே மோதுகின்றது அல்லவா?
எனவே இந்த அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஆதம் (அலை) அவர்கள் தமது மன்னிப்புக்காக 7:23 வசனத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள் என்றும், இந்தக் கதையில் கூறப்பட்டது போல் அல்ல என்றும் தெரிந்து கொள்கிறோம்.
திருக்குர் ஆனுகு முரணாக அமைந்துள்ளதால் மேற்கண்ட ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம.
ஆதம் (அலை) தவறு செய்த போது?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode