உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா?
ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பின்னர் கருதி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட வேண்டுமா?
ஏ. அமீன், கொடிக்கால் பாளையம்.
பதில்:
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காக மற்ற முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு பிரார்த்தனையாகும். முதலில் அடக்கம் செய்யும் போது ஜனாஸா தொழுகை தொழுது விட்டால் மீண்டும் தோண்டி அடக்கும் போது தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இறந்ததற்காகத் தான் தொழுகை நடத்தப்படுகின்றதே தவிர அடக்கம் செய்வதற்கும், ஜனாஸா தொழுகைக்கும் சம்பந்தம் இல்லை.
உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode