Sidebar

21
Sat, Dec
38 New Articles

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே?

துஆ திக்ர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே?

இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாத்திமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா?

முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை

பதில்

நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான்

المعجم الكبير (24/ 351)

 871 - حدثنا أحمد بن حماد بن زغبة ثنا روح بن صلاح ثنا سفيان الثوري عن عاصم الأحول عن أنس بن مالك قال :  : لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي بن أبي طالب دخل عليها رسول الله صلى الله عليه و سلم فجلس عند رأسها فقال : رحمك الله يا أمي كنت أمي بعد أمي وتشبعيني وتعرين وتكسيني وتمنعين نفسك طيباوتطعميني تريدين بذلك وجه الله والدار الآخرة ثم أمر أن تغسل ثلاثا فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه و سلم بيده ثم خلع رسول الله صلى الله عليه و سلم قميصه فألبسها إياه وكفنها ببرد فوقه ثم دعا رسول الله صلى الله عليه و سلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاما أسود يحفرون فحفروا قبرها فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه و سلم بيده وأخرج ترابه بيده فلما فرغ دخل رسول الله صلى الله عليه و سلم فاضطجع فيه ثم قال : الله الذي يحيي ويميت وهو حي لايموت أغفر لأمي فاطمة بنت أسد ولقنها حجتها ووسع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين وكبر عليها أربعا وادخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم

இது தான் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ். இந்த ஹதீஸ் தப்ரானியில் மட்டுமின்றி அபூ நயீம் அவர்களின் ஹில்யதுல் அவ்லியா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ரூஹ் பின் ஸலாஹ் روح بن صلاح என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

இவரைப் பற்றி இப்னு ஹிப்பான் நம்பகமானவர் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இப்னு ஹிப்பானைப் பொருத்தவரை யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று சொல்லக் கூடியவர் என்பதால் இவரது நற்சான்றை அறிஞர்கள் ஏற்பதில்லை.

அது போல் ஹாகிம் அவர்களும் இவரை நம்பகமானவர் என்று சொல்லி இருக்கிறார். நம்பகமானவர் என்று முடிவு செய்வதில் ஹாகிம் கவனமில்லாமல் முடிவு செய்பவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஹாஃபிழ் ஹைசமீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

مجمع الزوائد (9/ 414)

 ( رواه الطبراني في الكبير والأوسط وفيه روح بن صلاح وثقه ابن حبان والحاكم وفيه ضعف وبقية رجاله رجال الصحيح )

இதில் இடம்பெறும் ரூஹ் பின் ஸலாஹ் என்பவர் பலவீனமானவராக இருந்தும் இவரை இப்னு ஹிப்பானும், ஹாகிமும் நம்பகமானவர்கள் எனக் கூறியுள்ளனர்.

இப்னு அதீ அவர்கள் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர். இவரது இரண்டு ஹதீஸ்களை இப்னு அதீ அவர்கள் பதிவு செய்து விட்டு இவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவற்றில் சிலவற்றில் ஆட்சேபனை உள்ளது என்றும் கூறுகிறார்

لسان الميزان - ابن حجر (2/ 465)

روح بن صلاح المصري يقال له بن سيابة ضعفه بن عدي يكنى أبا الحارث.... .... وقال بن عدي بعد أن أخرج له حديثين له أحاديث كثيرة في بعضها نكرة

நூல் : லிஸானுல் மீஸான்

தாரகுத்னீ அவர்களும் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர். ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரைப் பலவீனர் என்று முடிவு செய்துள்ளதாக இப்னு மஃகூலா கூறுகிறார்

لسان الميزان - ابن حجر (2/ 465)

وقال الدارقطني ضعيف في الحديث وقال بن ماكولا ضعفوه

நூல் : லிஸானுல் மீஸான்

இவர் நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு முரணாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று இப்னு யூனுஸ் கூறுகிறார்.

لسان الميزان - ابن حجر (2/ 465)

ذكره بن يونس في تاريخ الغرباء فقال من أهل الموصل قدم مصر وحدث بها رويت عنه مناكير

நூல் :லிஸானுல் மீஸான்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account