கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா ?
صحيح البخاري
144 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَتَى أَحَدُكُمُ الغَائِطَ، فَلاَ يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا»உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது; கிப்லாவை முதுகுக்குப் பின்னாலும் ஆக்கக் கூடாது. கிழக்கையோ மேற்கையோ நோக்கி அமருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
நூல்: புகாரி 144, 394
கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமருங்கள் என்பது மதீனாவில் உள்ள மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். மதீனாவிலிருந்து வடக்கு திசையில் கிப்லா அமைந்திருப்பதால் வடக்கு தெற்காக அமராமல் கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். நமது நாட்டைப் பொறுத்த வரை மேற்குத் திசையில் அல்லது வடமேற்குத் திசையில் கிப்லா அமைந்திருப்பதால் நாம் வடக்கு தெற்காகத் தான் அமர வேண்டும்.
கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் இந்தத் தடை திறந்த வெளியில் தான். கட்டடத்திற்குள் கிப்லாவை நோக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.صحيح البخاري
145 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلاَ تَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ بَيْتَ المَقْدِسِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَقَدْ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلًا بَيْتَ المَقْدِسِ لِحَاجَتِهِ». وَقَالَ: لَعَلَّكَ مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ؟ فَقُلْتُ: لاَ أَدْرِي وَاللَّهِ. قَالَ مَالِكٌ: يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ
மலஜலம் கழிக்கும் போது கிப்லாவையோ, பைத்துல் முகத்தைஸையோ நோக்காதே என்று சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் எனது வீட்டின் முகட்டின் மீது ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி இரு செங்கற்கள் மீது அமர்ந்து தமது தேவையை நிறைவு செய்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
நூல்: புகாரி 145, 149صحيح البخاري مشكول (1/ 41)
148 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ [ص:42] مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ القِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِநான் (எனது சகோதரியும் நபிகள் நாயகத்தின் மனைவியுமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டின் மேல் ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முதுகுக்குப் பின்னால் ஆக்கி சிரியாவை முன்னோக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 148, 3102கட்டடத்திற்குள் மலஜலம் கழிப்பதாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கத் தடை ஏதும் இல்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
* திறந்த வெளியாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை முன்னோக்கவும், பின்னால் ஆக்கவும் கூடாது.
* கட்டடமாக இருந்தால் அதில் கிப்லாவை நோக்காது இருக்க வழி இருந்தால் அப்போதும் கிப்லாவை நோக்கக் கூடாது.
* கட்டடத்தில் கிப்லாவை நோக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால் அது போன்ற சந்தர்ப்பங்களில் கிப்லாவை முன்னோக்குவது குற்றமில்லை.
இப்படி முடிவு செய்தால் நபி (ஸல்) அவர்கள் தாம் இட்ட கட்டளையை தாமே ஏன் மீறினார்கள் என்பதற்கும் நமக்கு விடை கிடைக்கும். கிப்லாவை முன்னோக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை அங்கே இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு இருந்திருப்பார்கள் என்று விளக்கம் அளிக்க இடம் உண்டு.
பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கிழக்கு மேற்கில் அமைக்கப் பட்டிருந்தால் அங்கே நம்மால் வடக்கு தெற்காக அமர முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அது குற்றமில்லை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயலை ஆதாரமாகக் கொள்ளலாம்.صحيح البخاري
394 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَتَيْتُمُ الغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا القِبْلَةَ، وَلاَ تَسْتَدْبِرُوهَا وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: «فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ القِبْلَةِ فَنَنْحَرِفُ، وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى»
நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்காதீர்கள். அதைப் பின்னோக்கவும் செய்யாதீர்கள். கிழக்கு மேற்காக நோக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியிருந்தனர். நாங்கள் சிரியாவுக்கு வந்த போது அங்கே கிப்லாவை நோக்கி கழிவறைகள் அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டோம். எனவே சற்றே சாய்வாக அமர்ந்து (மலம் கழித்து விட்டு) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்வோம் என்று அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 394
இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நம்மால் இயன்ற வரை கிப்லாவை நோக்கி மலம் கழிக்காமல் இருக்க முயல வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.
வீட்டில் கிழக்கு மேற்காக கழிப்பிடம் அமைப்பதற்குத் தான் வசதி இருக்கின்றது என்றால் - அல்லது அமைக்கப் பட்ட கழிப்பிடங்களில் நாம் மலஜலம் கழிப்பதாக இருந்தால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டும் கிப்லாவை முன்னோக்குவதோ பின்னோக்குவதோ குற்றமாகாது
கிப்லா திசையில் கழிப்பிடம் கூடுமா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode