மக்காவின் புனிதப் பள்ளி மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்வது ஏன்?
ஹராம் என்றால் தடுக்கப்பட்டவை என்று பொருள். மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளுக்குச் சொல்லப்படும் பெயரை புனிதப் பள்ளிக்கு சூட்டியது ஏன்?
ஹராம் என்றால் தடுக்கப்பட்டவை என்று தான் பொருள். மற்ற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பல காரியங்கள் புனிதப் பள்ளியில் தடுக்கப்பட்டுள்ளதால் மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்லப்படுகிறது.
அங்கே உள்ள புல் பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. வேட்டைப்பிராணிகள் தென்பட்டால் அங்கே வேட்டையாட்க் கூடாது என்பன போன்ற சிறப்புத் தடைகள் உள்ளதால் மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்லப்படுகிறது.
திருக்குர்ஆனில் 2:144, 2:149, 2:150, 2:191, 2:195, 2:217, 5:2, 8:34, 9:7, 9:19, 9:28, 17:1, 22:25, 48:25, 48:27 ஆகிய வசனங்களில் கஅபா ஆலயத்தைச் சுற்றி உளள் பள்ளிவாசலை மஸ்ஜிதுல் ஹராம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
புனித எல்லையைக் குறிப்பிடும் போது ஹரம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க 28:57, 29:57) ஹரம் ஹராம் ஆகிய இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்.
இஹ்ராம் என்பதும் ஹராம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான். ஹலாலாக இருந்த பல காரியங்கள் இஹ்ராம் கட்டிய பின் ஹராமாக ஆவதால் இஹ்ராம் என்று சொல்லப்படுகிறது.
தொழுகையின் ஆரம்ப தக்பீர் தஹ்ரீமா என்று சொல்லப்படுகிறது. தஹ்ரீமா என்பதும் ஹராம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான். அனுமதிக்கப்பட்ட பல காரியங்கள் தக்பீர் கட்டிய உடன் ஹராமாகி விடுகிறது என்பதால் தஹ்ரீமா எனப்படுகிறது.
புனித மாதங்கள் ஹராமான மாதம் ஷஹ்ருல் ஹராம் என்று சொல்லப்படுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 2:194, 2:217, 5:2, 5:97) இந்த மாதங்களில் போர் செய்வது ஹராமாக்கப்பட்டுள்ளதால் ஹராமான மாதம் எனப்படுகிறது.
இது போல் தான் ஹராமான பள்ளி என்று புனிதப் பள்ளிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மக்காவின் புனிதப் பள்ளி மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்வது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode