Sidebar

18
Sat, May
26 New Articles

ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்று சொல்லலாமா?

மறைவான விஷயங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்று சொல்லலாமா?

பதில் :

முனாஃபிக் என்ற சொல்லுக்கு அகராதியில் ஒரு அர்த்தம் உள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு அர்த்தம் உள்ளது.

இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன் முனாஃபிக் என்ற சொல் நடிப்பவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் இந்தச் சொல்லால் இகழப்பட்டனர். இதை முஸ்லிமல்லாத மக்கள் இந்தப் பொருளில் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் வந்த பின் இச்சொல் இஸ்லாத்தை மனதார ஏற்காமல் முஸ்லிமைப் போல் நடிப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த அர்த்தத்தில் உள்ள முனாஃபிக் சொல்லை அல்லாஹ் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனெனில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றாரா? நடிக்கிறாரா என்பதை அல்லாஹ்வால் மட்டுமே அறிய முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் தவிர ஒருவரை முனாஃபிக் என்று சொல்ல முடியாது. சொன்னதுமில்லை.

ஈமான் அல்லாத விஷயங்களில் ஒருவர் இரு வேடம் போடுவது தெரிய வந்தால் அவரை வேடதாரி என்ற அர்த்தத்தில் முனாஃபிக் என்று சொல்லலாம்.

அகராதி நூல்களிலும் இதற்கு ஆதாரம் உள்ளது.

ويقال نافَقَ اليربوعُ إذا دخل في نافِقائه وقَصَّع إذا خرج من القاصِعاء وتَنَفَّق خرج قال ذو الرمة إذا أَرادوا دَسْمَهُ تَنَفَّقا أَبو عبيد سمي المنافقُ مُنافقاً للنَّفَق وهو السَّرَب في الأَرض وقيل إنما سمي مُنافقاً لأنه نافَقَ كاليربوع وهو دخوله نافقاءه يقال قد نفق به ونافَقَ وله جحر آخر يقال له القاصِعاء فإذا طلِبَ قَصَّع فخرج من القاصِعاء فهو يدخل في النافِقاء ويخرج من القاصِعاء أو يدخل في القاصِعاء ويخرج من النافِقاء فيقال هكذا يفعل المُنافق يدخل في الإسلام ثم يخرج منه من غير الوجه الذي دخل فيه الجوهري والنافِقاء إحدى جِحَرةَ اليَرْبوع يكتمها ويُظْهر غيرها وهو موضع يرققه فإذا أُتِيَ من قِبَلِ القاصِعاء ضرب النافِقاء برأْسه فانْتَفَق أَي خرج والجمع النَّوَافِقُ

لسان العرب (10/ 357)

منه نَفَّق اليَرْبوع تَنْفيقاً ونافَقَ أَي دخل في نافِقائه ومنه اشتقاق المُنافق في الدين والنِّفاق بالكسر فعل المنافِق والنِّفاقُ الدخول في الإسلام من وَجْه والخروُج عنه من آخر مشتقّ من نَافِقَاء اليربوع إسلامية وقد نافَقَ مُنافَقَةً ونِفاقاً وقد تكرر في الحديث ذكر النِّفاق وما تصرّف منه اسماً وفعلاً وهو اسم إسلاميّ لم تعرفه العرب بالمعنى المخصوص به وهو الذي يَسْترُ كُفْره ويظهر إيمانَه وإن كان أَصله في اللغة معروفاً يقال نافَقَ يُنافِق مُنافقة ونِفاقاً وهو مأْخوذ من النافقاء لا من النَّفَق وهو السَّرَب الذي يستتر فيه لستره كُفْره وفي حديث حنظلة نافَقَ حَنْظَلة أَراد أَنه إذا كان عند النبي صلى الله عليه وسلم أخلص وزهد في الدنيا وإذا خرج عنه ترك ما كان عليه ورغب فيها فكأَنه نوع من الظاهر والباطن ما كان يرضى أَن يسامح به نفسه وفي الحديث أَكثر مُنافِقِي هذه الأُمَّة قُرَّاؤها أَراد بالنِّفاق ههنا الرياء لأَن كليهما إظْهار غير ما في الباطن

لسان العرب (10/ 357)

ويقال نافَقَ اليربوعُ إذا دخل في نافِقائه وقَصَّع إذا خرج من القاصِعاء

فيه الجوهري والنافِقاء إحدى جِحَرةَ اليَرْبوع يكتمها ويُظْهر غيرها وهو موضع يرققه فإذا أُتِيَ من قِبَلِ القاصِعاء ضرب النافِقاء برأْسه

யர்பூ (gerbil) எனும் ஒரு வகை எலி உள்ளது. இது மணல் எலி எனப்படும். இந்த எலி இரண்டு இடங்களில் குழி தோண்டி உள்ளே இரண்டையும் இணைத்து ஒரு வலையாக ஆக்கிக் கொள்ளும். எதிரிகளைக் கண்டால் ஒரு குழியில் நுழைந்து மறு குழி வழியாக தப்பித்து ஓடி விடும். ஒரு குழி நாஃபிகா எனவும், மறு குழி காசிஆ எனவும் கூறப்படும். அந்த நாஃபிகா என்ற சொல்லில் இருந்து தான் முனாஃபிக் என்ற சொல் வழக்கு வந்தது.

وهو اسم إسلاميّ لم تعرفه العرب بالمعنى المخصوص به وهو الذي يَسْترُ كُفْره ويظهر إيمانَه وإن كان أَصله في اللغة معروفاً

ஒரு வழியில் இஸ்லாத்தில் நுழைந்து மறு வழியில் வெளியேறும் தன்மைக்கு முனாஃபிக் தனம் என்று சொல்வது இஸ்லாமியச் சொல் வழக்காகும். இதன் நேரடி அர்த்தம் அகராதியில் அறியப்பட்டதாக இருந்தாலும் உள்ளத்தில் இறை மறுப்பையும் வெளியே விசுவாசத்தையும் காட்டுதல் என்ற இந்தப் பொருளை இஸ்லாத்துக்கு முன் அரபுகள் அறிந்திருக்கவில்லை.

وفي حديث حنظلة نافَقَ حَنْظَلة أَراد أَنه إذا كان عند النبي صلى الله عليه وسلم أخلص وزهد في الدنيا وإذا خرج عنه ترك ما كان عليه ورغب فيها فكأَنه نوع من الظاهر والباطن ما كان يرضى أَن يسامح به نفسه

ஹன்ழலாவாகிய நான் முனாஃபிக்காகி விட்டேன் என்று நபியின் முன்னிலையில் ஹன்ழலா சொன்னது உள்ளொன்று வைத்து வெளியே வேறுவிதமாக நடந்து கொள்ளுதல் என்ற பொருளில் தான்.

نفسه وفي الحديث أَكثر مُنافِقِي هذه الأُمَّة قُرَّاؤها أَراد بالنِّفاق ههنا الرياء لأَن كليهما إظْهار غير ما في الباطن

இந்த உம்மத்தின் முனாஃபிக்குகளில் அதிகமானவர்கள் அறிஞர்கள் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது பிறர் மெச்சுவதற்காக செயல்படுவதைப் பற்றித்தான். ஏனெனில் இதிலும் உள்ளே ஒரு விதமாகவும் வெளியே வேறு விதமாகவும் இருக்கும் தன்மை அடங்கியுள்ளது.

இது தான் முனாஃபிக் என்ற சொல் பிறந்த விதம் குறித்து லிஸானுல் அரப் தரும் ஆதாரம்.

மணல் எலி எப்படி ஒரு வலைக்கு இரண்டு பாதைகளைத் தோண்டி எதிரிகளை ஏமாற்றுகிறதோ அது போல் ஏமாற்றுவது முனாஃபிக் தனம் என்று அரபுகள் அறிந்து வைத்து இருந்தனர்.

ஆனால் உள்ளே குஃப்ரை வைத்து வெளியே ஈமானைக் காட்டும் இந்த அர்த்தம் அரபுகள் அறிந்திருக்கவில்லை என்று லிஸானுல் அரப் ஆசிரியர் கூறுகிறார்.

ஹன்ழலா என்ற நபித்தோழர் தன்னை முனாஃபிக் என்று கூறியதாக லிசானுல் அரப் ஆசிரியர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இதுதான்.

حدثنا يحيى بن يحيى التيمي وقطن بن نسير واللفظ ليحيى أخبرنا جعفر بن سليمان عن سعيد بن إياس الجريري عن أبي عثمان النهدي عن حنظلة الأسيدي قال وكان من كتاب رسول الله صلى الله عليه وسلم قال لقيني أبو بكر فقال كيف أنت يا حنظلة قال قلت نافق حنظلة قال سبحان الله ما تقول قال قلت نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالنار والجنة حتى كأنا رأي عين فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عافسنا الأزواج والأولاد والضيعات فنسينا كثيرا قال أبو بكر فوالله إنا لنلقى مثل هذا فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم قلت نافق حنظلة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم وما ذاك قلت يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة حتى كأنا رأي عين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينا كثيرا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لو تدومون على ما تكونون عندي وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم ولكن يا حنظلة ساعة وساعة ثلاث مرات

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான், ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான், நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும் போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும், குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம் என்று சொன்னேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம் என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான், அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகி விட்டான் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்ன அது? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும் போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம் என்று மூன்று முறை கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

صحيح البخاري (2/ 942) ( من يعذرني من رجل بلغني أذاه في أهلي فوالله ما علمت على أهلي إلا خيرا وقد ذكروا رجلا ما علمت عليه إلا خيرا وما كان يدخل على أهلي إلا معي ) . فقام سعد بن معاذ فقال يا رسول الله أنا والله أعذرك منه إن كان من الأوس ضربنا عنقه وإن كان من إخواننا من الخزرج أمرتنا ففعلنا فيه أمرك . فقام سعد ابن عبادة وهو سيد الخزرج وكان قبل ذلك رجلا صالحا ولكن احتملته الحمية فقال كذبت لعمر الله لا تقتله ولا تقدر على ذلك . فقام أسيد بن الحضير فقال كذبت لعمر الله والله لتقتلنه فإنك منافق تجادل عن المنافقين . فثار الحيان الأوس والخزرج حتى هموا ورسول الله صلى الله عليه و سلم على المنبر فنزل فخفضهم حتى سكتوا وسك

சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நோக்கி நீர் முனாஃபிக் ஆவீர். முனாஃபிக்குகள் சார்பாக பேசுகிறீர் என்று நபிகள் நாயகத்தின் முன்னிலையில் சஅது பின் முஆத் (ரலி) கூறினார். அந்த வாசகத்தைச் சொன்னதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. இது புகாரியில் நீண்ட ஹதீஸில் ஒரு பகுதியாகும்.

பார்க்க புகாரி 4141, 4750

சிறந்த ஒரு நபித்தோழரைப் பற்றி மற்றொரு சிறந்த நபித்தோழர் இவ்வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சொல்லி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.

நடிப்பவர், முரண்பட்டு பேசுபவர் என்ற அர்த்தத்தில் சொல்லி இருந்தால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காமல் இருந்திருக்க முடியும்.

صحيح البخاري

4274 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي الحَسَنُ بْنُ مُحَمَّدٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي رَافِعٍ، يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَالزُّبَيْرَ، وَالمِقْدَادَ، فَقَالَ: «انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةً مَعَهَا كِتَابٌ، فَخُذُوا مِنْهَا» قَالَ: فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى أَتَيْنَا الرَّوْضَةَ، فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ، قُلْنَا لَهَا: أَخْرِجِي الكِتَابَ، قَالَتْ: مَا مَعِي كِتَابٌ، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ الكِتَابَ، أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ، قَالَ: فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا، فَأَتَيْنَا بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا فِيهِ: مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ، إِلَى نَاسٍ بِمَكَّةَ مِنَ المُشْرِكِينَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَاطِبُ، مَا هَذَا؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لاَ تَعْجَلْ عَلَيَّ، إِنِّي كُنْتُ امْرَأً مُلْصَقًا فِي قُرَيْشٍ، يَقُولُ: كُنْتُ حَلِيفًا، وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهَا، وَكَانَ مَنْ مَعَكَ مِنَ المُهَاجِرِينَ مَنْ لَهُمْ قَرَابَاتٌ يَحْمُونَ أَهْلِيهِمْ وَأَمْوَالَهُمْ، فَأَحْبَبْتُ إِذْ فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ فِيهِمْ، أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ قَرَابَتِي، وَلَمْ أَفْعَلْهُ ارْتِدَادًا عَنْ دِينِي، وَلاَ رِضًا بِالكُفْرِ بَعْدَ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكُمْ»، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا المُنَافِقِ، فَقَالَ: " إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى مَنْ شَهِدَ بَدْرًا فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ ". فَأَنْزَلَ اللَّهُ السُّورَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الحَقِّ} [الممتحنة: 1]- إِلَى قَوْلِهِ - {فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ} [البقرة: 108]

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும், நீங்கள் ரவ்ளத்து காக் எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ரவ்ளா எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), கடிதத்தை வெளியே எடு என்று கூறினோம். அவள், என்னிடம் கடிதம் எதுவுமில்லை என்று சொன்னாள். நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம் என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது? என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும், சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணை வைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணை வைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறை மறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மை பேசினார் என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ் பின்வரும் (60வது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்து விட்டவர்கள்......(60:1)

நூல் : புகாரி 4274

இந்த ஹதீஸில் ஈமான் உள்ள ஒரு தோழர் தனது சொத்தைப் பாதுகாப்பதற்காக மக்காவின் ரகசியங்களை காஃபிர்களுக்கு அனுப்பினார். அவர் ஈமான் உள்ளவர் தான். பத்ருப் போரில் பங்கெடுத்தவர் தான். ஈமானை இழந்தவர் அல்ல. ஆனாலும் அவரை முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று உமர் (ரலி) கூறியது இரண்டு நிலை எடுத்தவர் என்ற பொருளில் தானே தவிர ஈமானே இல்லாதவர் என்ற அர்த்தத்தில் இல்லை.

அவர் செய்த தவறு அல்லாஹ் மன்னிக்கக் கூடிய தவறு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கம் தருகிறார்கள். முனாஃபிக் என்ற வார்த்தையை எப்படிச் சொல்லலாம் என்று கண்டிக்கவில்லை. ஏனெனில் அகராதிப் பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை என்பது தான் இதற்குக் காரணம்.

குறிப்பிட்ட நபர்களைப் பற்றி இல்லாமல் எந்தக் காரியங்கள் முனாஃபிக்குகளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) மூலம் சொல்லப்பட்டதோ அதைச் செய்பவர் முனாபிக் என்று நாம் கூறலாம்.

பொய் சொல்பவன் முனாஃபிக், வாக்கு மீறுபவன் முனாஃபிக், மோசடி செய்பவன் முனாஃபிக் என்பது போல் பொதுவாகக் கூறலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account