ஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு
நிரூபித்த அமெரிக்க, இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்!
மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.
இந்த நோய் ஐவேளைத் தொழுகைகளைக் குறித்த நேரத்தில் தொழும் முஸ்லிம்களைத் தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஞாபக மறதி நோயால் 4 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்க, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வில் இறங்கினர்.
டெல் அவீவ், யாஃபா, மற்றும் அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையைப் பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளிவ்லேண்டில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துழைப்புடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப டெக்னியான் என்ற இஸ்ரேல் நிறுவனம், மற்றும் ஐக்கிய சுகாதார அமெரிக்க தேசிய நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுபவர்களுக்கு இந்த ஞாபக மறதி நோய் தாக்குவதில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயைத் தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் ரிவேகா இஜெல்பெர்க் கூறுகிறார்.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; ஐவேளை தொழும் முஸ்லிம்களை இது பாதிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இயந்திரத்தனமான வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் பல்வேறு வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாகத் தான் தன்னைத்தானே மறக்கக்கூடிய அளவிற்கு ஞாபக மறதி நோய் மனிதனை ஆட்கொள்கின்றது.
மனிதன் பதறக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான். தொழுகையாளிகளைத் தவிர. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள். அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.அவர்கள் தீர்ப்பு நாளை நம்புவார்கள்.அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.
திருக்குர்ஆன் 70 : 19-27
இந்த ஆய்வின் முடிவில் என்ன சொல்லியுள்ளார்களோ அதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது.
பதறக்கூடியவனாக உள்ள மனிதனுக்குரிய மருந்து அவன் தொழுகையாளியாக மாறுவது தான். அதைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாம் இறைவனின் மார்க்கமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
10.08.2012. 15:18 PM
ஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode