Sidebar

21
Sat, Dec
38 New Articles

டான்பாஸ்கோ கை அழியாமல் உள்ளதாமே?

கிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

டான்பாஸ்கோ கை அழியாமல் உள்ளதாமே

பல ஆண்டுகள் கழித்தும் புனித டான் போஸ்கோவின் கை அழியாமல் இருப்பதாகவும், அதனோடு இணைத்து மெழுகுச்சிலை ஊர்வலம் வருவது குறித்தும் செய்திகள் வெளியாகிறதே, அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சாத்தியமா?

- யி. முஹம்மது இம்ரான், குரோம்பேட்டை

இயேசு எந்தக் கொள்கையைப் போதித்தாரோ அந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து பவுல் என்பவர் புது மதத்தை உருவாக்கினார். அந்த மதத்துக்கும் இயேசுவுக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றாலும் அதற்கு கிறித்தவமதம் என்று பெயரிட்டுக் கொண்டனர்.

இந்தப் புது மதத்தை மக்களிடம் எப்படி கொண்டு போவது? உருப்படியான ஒரு கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தை மக்களிடம் கொண்டு செல்ல பவுல் என்பவர் அற்புதமான வழிமுறையை வகுத்தார். மதத்தைப் பரப்ப எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் என்பதுதான் அந்தக் கொள்கை.

இதோ பவுல் உருவாக்கிய பைபிள் கூறும் வாக்கு மூலம்:

நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

ரோமர் 3:5-8

கிறித்தவ பிரச்சாரகர்களின் ஒரே கொள்கை பொய் சொல்லி மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே.

இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

குருடர் பார்க்கிறார்கள் என்பது உண்மையானால் இவர்கள் மருத்துவமனைகள் பல நிறுவுவது ஏன்? நற்செய்தி(?)யாளர்கள் பலர் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படுவது ஏன்? பொய் சொல்லி மதத்தைப் பரப்பலாம் என்பதே அடிப்படைக் கொள்கையாக உள்ளதால் இதில் அவர்களுக்கு குற்ற உணர்வோ உறுத்தலோ ஏற்படுவதில்லை.

நான் அழைத்து வரும் குருடனுக்குப் பார்வை கொடுப்பாயா என்று நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு நாம் கேள்வி கேட்டாலும் வெட்கமின்றி அப்பாவிகளை ஏமாற்றும் அடுத்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதற்கும் இது தான் காரணம்.

இது போன்ற புளுகு மூட்டைகளில் ஒன்று தான் டான் போஸ்கொவின் சேதமடையாத கை.

இது முற்றிலும் கட்டுக் கதை. அந்த உடல் எப்படி செயற்கையானதோ அது போல் கையும் செயற்கையானது தான். அவர்கள் சோதனைக்கு உடன்பட்டால் அது செய்யப்பட்ட கை என்பதையும் அது எந்தப் பொருளால் செய்யப்பட்டது என்பதையும் நாம் நிரூபித்துக் காட்டுகிறோம் என்று சவால் விடுகிறோம்.

அல்லது அவர்களின் ஆட்சி நடக்கும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் மருத்துவக் குழுவில் அந்தக் கையை ஒப்படைத்து இது நிஜக் கை தான் என்றும் அது இத்தனை ஆண்டுக்கு முந்திய கை தான் என்றும் தக்க ஆதாரங்கள் கொண்ட சான்றிதழ் வாங்கிக் காட்ட இவர்கள் தயாரா?

இவர்கள் எதற்கும் தயார் இல்லை. அப்பாவி கிறித்தவ மக்கள் இதை நம்புகிறார்கள் என்பதால் இவர்கள் அதை வைத்தே இது போல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். *

உணர்வு 16:11

16.12.2011. 9:26 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account