Sidebar

27
Fri, Dec
34 New Articles

நபி காலத்தில் பைபிள் அரபு மொழியில் இருந்ததா?

இஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிகள் காலத்தில் பைபிள் அரபு மொழியில் இருந்ததா?

திருக்குர்ஆன் முந்தைய வேதங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கிறித்தவ போதகர்கள் சொல்லி வருகின்றனர். இந்த வாதம் முற்றிலும் தவறாகும்.

இந்த தவறான வாதத்துக்கு ஏற்கத்தக்க விடை இஸ்லாத்தில் உள்ளது.

இது குறித்து அறிய முன் வேதங்களில் இருந்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதா? என்ற ஆக்கத்தில் இது குறித்து ஓரளவு விளக்கியுள்ளோம்.

இந்த வாதத்துக்கு மறுப்புச் சொல்லும் சில சகோதரர்கள் இதற்கு தவறான காரணத்தைச் சொல்கிறார்கள்.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பைபிள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கவில்லை; அவ்வாறு இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு பைபிளைக் காப்பி அடித்து இருக்க முடியும் என்பது தான் அந்தக் காரணம்.

இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஞ்சீல் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது என்று ஹதீஸ் ஆதாரம் இருப்பதால் இந்தக் காரணத்தை இதற்கு விடையாக நாம் சொல்லக் கூடாது.

இப்படி சொன்னவர்களில் அறிஞர் ஜாகிர் நாயக்கும் ஒருவராவார்.

இது தவறு என்று ஹதீஸ் ஆதாரத்துடன் ஒரு கிறித்தவர் கேள்வி கேட்கிறார். வரகா என்பார் அரபு மொழியில் பைபிளை வாசிப்பவராக உள்ளார் என்று புகாரி ஹதீஸ் உள்ளதே என்று கேட்ட போது தவறை ஒப்புக் கொள்ளாமல் ஜாகிர் நாயக் அவர்கள் திசை திருப்பி பதில் சொல்லி உள்ளார்.

கேள்வி கேட்டவர் சொன்னவாறு தான் புகாரியில் உள்ளது.

மேலும் வரகா பின் நவ்பல் என்பார் யூத வம்சாவழியில் வந்தவர் என்பதால் அவர் ஹிப்ரு மொழியில் வாசித்து இருக்கலாம் என்றும் ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.

ஜாகிர் நாயக் அவர்களின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.

ஜாகிர் நாயக் அவர்களின் அந்த வீடியோ இதுதான்:

இந்த பதில் உண்மைக்கு மாறானதாக உள்ளதால் இதைப் பரப்ப வேண்டாம். இதனால் நமக்கு பின்னடைவு ஏற்படும் என்பதற்காக இது குறித்த விளக்கத்தை இங்கே பதிவிடுகிறோம்.

தவ்ராத், இஞ்சீல் வேதங்கள் நபிகள் காலத்துக்கு முன்பே அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது என்பதே சரியான கருத்தாகும்.

3392 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا اللَّيْثُ ، قَالَ : حَدَّثَنِي عُقَيْلٌ ، عَنِ ابْنِ شِهَابٍ ، سَمِعْتُ عُرْوَةَ قَالَ : قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا : فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلًا تَنَصَّرَ يَقْرَأُ الْإِنْجِيلَ بِالْعَرَبِيَّةِ، فَقَالَ وَرَقَةُ : مَاذَا تَرَى ؟ فَأَخْبَرَهُ، فَقَالَ وَرَقَةُ : هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا . النَّامُوسُ : صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ. 

3392 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை (தம் ஒன்று விட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறி விட்டிருந்த ஒரு மனிதராயிருந்தார். அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார். வரகா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், நீங்கள் என்ன பார்த்தீர்கள்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, இவர்தாம் (இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத வெளிப்பாட்டைக் கொண்டு வரும்) நாமூஸ்'எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன் என்று கூறினார்.

நாமூஸ்'-என்பவர் பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறை கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவித் துத் தரும் வானவர் ஆவார்.

புகாரி 3392

அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அரபு மொழியில் ஓதி வந்தார் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கும் போது அதற்கு வேறு விளக்கம் கூறுவது ஏற்புடையது அல்ல. அரபு மொழியில் எப்போது மொழி பெயர்க்கப்பட்டது என்பதற்கு இஸ்லாம் தொடர்பல்லாத ஆதாரங்களை ஜாகிர் நாயக் சொல்லி இருப்பதும் ஏற்புடையதல்ல.

மேலும் வரகா யூத வம்சம் என்று ஜாகிர் நாயக் சொன்னதும் ஏற்புடையதல்ல. அவர் அரபி வம்சமாவார். கதீஜா நாயகி அவர்களின் சிறிய தந்தையின் மகனாவார் என்பதை பினவரும் ஹதீஸ் கூறுகிறது.

6982 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ح وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، حَدَّثَنَا مَعْمَرٌ ، قَالَ الزُّهْرِيُّ : فَأَخْبَرَنِي عُرْوَةُ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ : أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْوَحْيِ، الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ، فَكَانَ يَأْتِي حِرَاءً، فَيَتَحَنَّثُ فِيهِ - وَهُوَ التَّعَبُّدُ - اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ، فَتُزَوِّدُهُ لِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ، فَجَاءَهُ الْمَلَكُ فِيهِ، فَقَالَ : اقْرَأْ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَقُلْتُ : مَا أَنَا بِقَارِئٍ ". فَأَخَذَنِي فَغَطَّنِي ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ : اقْرَأْ. فَقُلْتُ : " مَا أَنَا بِقَارِئٍ ". فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ : اقْرَأْ. فَقُلْتُ : " مَا أَنَا بِقَارِئٍ ". فَغَطَّنِي الثَّالِثَةَ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ : { اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ } حَتَّى بَلَغَ : { مَا لَمْ يَعْلَمْ }. فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ ، حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ : " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ ، فَقَالَ : " يَا خَدِيجَةُ، مَا لِي ". وَأَخْبَرَهَا الْخَبَرَ، وَقَالَ : " قَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ". فَقَالَتْ لَهُ : كَلَّا، أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ. ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ قُصَيٍّ، وَهُوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخُو أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ، فَيَكْتُبُ بِالْعَرَبِيَّةِ مِنَ الْإِنْجِيلِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ، فَقَالَتْ لَهُ خَدِيجَةُ : أَيِ ابْنَ عَمِّ، اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ. فَقَالَ وَرَقَةُ : ابْنَ أَخِي، مَاذَا تَرَى ؟ فَأَخْبَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَى، فَقَالَ وَرَقَةُ : هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَوَمُخْرِجِيَّ هُمْ ؟ ". فَقَالَ وَرَقَةُ : نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا . ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الْوَحْيُ فَتْرَةً، حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِيمَا بَلَغَنَا - حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَيْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الْجِبَالِ، فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ، تَبَدَّى لَهُ جِبْرِيلُ، فَقَالَ : يَا مُحَمَّدُ، إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا. فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ ، وَتَقِرُّ نَفْسُهُ فَيَرْجِعُ، فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ، فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ، فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ ابْنُ عَبَّاسٍ : { فَالِقُ الْإِصْبَاحِ } ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ، وَضَوْءُ الْقَمَرِ بِاللَّيْلِ. 

6982 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறைஅறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாட்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாட்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய (வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும் வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ஓதுவீராக' என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று அவருக்குப் பதிலளித்தார்கள்.

அப்போது நடந்த சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்று சொன்னார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக என்றார். அப்போதும், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக... என்று தொடங்கும் (96ஆவது அத்தியாயத்தின்) வசனங்களை மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் என்பது வரை (96:1-5) ஓதினார்.

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டகன்றது. அப்போது, கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுகிறீர்கள் என்று சொன்னார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பாரின் புதல்வர் வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள் என்று சொன்னார்கள். அப்போது வரக்கா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உம்முடைய சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே! என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன் என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேதஅறிவிப்போடு) சிறிது காலம் இறைச்செய்தி தடைபட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.

நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வின் தூதர்தாம் என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். அவர்களது உள்ளம் அமைதியாகிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்துவிடுவார்கள். இறைச்செய்தி தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும் போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போலவே கூறுவார்கள்.

புகாரி 6982

இந்த ஹதீஸில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன

நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பாரின் புதல்வர் வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள் என்று சொன்னார்கள்.

இதில் இருந்து தெரிவது என்ன? வரகா அவர்கள் அரபு வம்சமாவார். கிறித்தவராக மதம் மாறியவராவார். கதீஜா நாயகிக்கும் நபிகள் நாயகத்துக்கும் உறவினராவார் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

எனவே நபிகள் காலத்தில் பைபிள் அரபு மொழியில் இருக்கவில்லை என்று பதிலளிப்பதை நாம் தவிர்க்க வேண்டும்

ஜாகிர் நாயக் அவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லி இனிமேல் இது போல் அவர் சொல்லாமல் இருக்க அவருக்கு உதவ வேண்டும்

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலை செய்ய நினைத்தார்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. நபிகள் அப்படி நினைப்பார்களா என்ற சந்தேகம் வரலாம். அதற்கான விளக்கத்தை

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா என்ற ஆக்கத்தை வாசிக்கவும்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account