இந்து மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்தை விமர்சிப்பது ஏன்?
கேள்வி :
சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, நீங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்? எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) தாக்குதல் நடத்துவது ஏன்? இது போல் இந்து மதத்தை விமர்சிக்கவில்லையே ஏன்?
மற்ற மதத்தினரை விமர்சிக்கக்கூடாது; உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்ற குர்ஆன் வசனத்தையெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆனால், நாங்கள் குர்ஆன் வசனத்தைக் கடைப்பிடித்து வருகின்றோம். எந்த மதத்தையும் விமர்சிப்பதில்லை.
ஜெஸ்ஸி ராணி - மங்கலம்பேட்டை
பதில் :
இந்து மதத்தினர் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதோடு வைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களிடமோ, கிறித்தவர்களிடமோ எங்கள் மார்க்கமே சிறந்தது எனக் கூறி பிரச்சாரம் செய்வதில்லை. பணம் கொடுத்து ஆள் பிடிப்பதில்லை. ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி தங்கள் கல்விக் கூடங்களில் இலவசக் கல்வி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்வதில்லை. நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை என்று ஆசை காட்டி தங்கள் மதத்துக்கு அழைப்பதில்லை.
ஆனால், கிறித்தவ பிரச்சாரகர்களின் முழு நேர வேலையே இதுவாகத் தான் உள்ளது.
அது மாத்திரமில்லாமல் இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி, தங்களின் தவறான கொள்கையைத் தான் இஸ்லாம் சொல்கின்றது என்று சொல்லி, குர்ஆனில் ஈஸா என்று நூல் வெளியிடுகிறார்கள்.
முஸ்லிம்கள் பயன்படுத்தும் கியாமத் நாள் என்ற பெயரில் நூல் வெளியிட்டு முஸ்லிம் அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கின்றனர்.
ஆலிம் அப்துல்லாஹ், மவ்லவி பிலால் ஆகியோர் நற்செய்திக் கூட்டங்களில் பேசுவதாக விளம்பரம் செய்து வம்புக்கு இழுக்கின்றனர். குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள்; செத்த பிணங்கள் உயிரோடு எழும்பி வருகின்றன என்ற நிகழ்ச்சி போல் இதுவும் செட்டப் நிகழ்ச்சிதான்.
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் திட்டி தபால் பெட்டி எண் மட்டும் போட்டு நோட்டீஸ்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
டெலிபோன் டைரக்டரியில் உள்ள முஸ்லிம்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்து அவர்களின் முகவரிக்கு தங்கள் கிறுக்குத்தனமான பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றனர்.
முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து நற்செய்தி என்ற பெயரில் தங்கள் மதத்தில் சேருமாறு கூறும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கை எல்லை மீறிப்போய்க் கொண்டு உள்ளது.
தங்கள் கல்விக் கூடங்களில் அனைவரும் இயேசுவைத் தான் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
தங்கள் கொள்கை தான் சரியானது என்றும், இஸ்லாம் பொய்யானது என்றும் சித்தரிக்கும் இவர்களை நாம் எதிர்கொள்ளும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.
ஆபாசப் புத்தகத்தை வேதமாக வைத்துக் கொண்டு எங்களை உங்கள் மதத்துக்கு அழைக்க வந்து விட்டீர்களா? பொய்களையும், புரட்டுகளையும், முட்டாள்தனமான கருத்துக்களையும் சிறந்த கொள்கை என்று சொல்கிறீர்களா? என்று கேட்கக் கூடிய வகையில் அனைத்து முஸ்லிம்களையும் தயார்படுத்தும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.
இதனால் தான் விவாதக் களத்தில் சந்தித்து கிறித்தவ மதத்தை எங்களிடம் பிரச்சாரம் செய்ய அவர்களே வெட்கப்படும் நிலையை ஏற்படுத்தவே அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்க வற்புறுத்துகிறோம்.
இந்துக்களின் ஊர்களில் இவர்கள் வாலாட்டினால் அவர்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுக்கும் சமபவங்களை நாம் பார்க்கிறோம். அது போல் செய்யாமல் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்ற அறிவுப்பூர்வமான நெருக்கடியைத் தான் ஏற்படுத்துகின்றோம்.
இத்தனை ஆண்டுகளாக கிறித்தவப் பிரச்சாரம் என்ற பெயரில் நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடித்து வரும் பாதிரிமார்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர்கள் இருந்தால் அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்கும் அவசியம் ஏற்படாது.
10.04.2012. 10:23 AM
இந்து மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்தை விமர்சிப்பது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode