Sidebar

22
Sun, Dec
38 New Articles

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

தம்பதியர் உரிமைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

ரஹீமா.

பதில் :

வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இது போல் வெளியே சென்று பொருளீட்டும் நிலையில் இல்லாதவர்களும், பொருளீட்டுவதற்காக குறைந்த நேரம் செலவிட்டு வீட்டில் அதிக நேரம் வேலை இல்லாமல் இருப்பவர்களும் மனைவியின் வேலைகளில் துணை செய்வதுதான் நியாயமாகும்.

صحيح البخاري

5363 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْنَعُ فِي البَيْتِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்? என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் ; அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

நூல்: புகாரி 5363

مسند أحمد بن حنبل

 24793 – حدثنا عبد الله حدثني أبي ثنا مؤمل قال ثنا سفيان عن هشام عن أبيه قال قيل لعائشة : ما كان النبي صلى الله عليه و سلم يصنع في بيته قالت كما يصنع أحدكم يخصف نعله ويرقع ثوبه

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : அஹ்மத்

முஸ்லிம்கள் இதையே முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account