பாலியல் கல்வி தேவையா?
கேள்வி: 'பாலியல் கல்வி' தேவைதானா....?
நம் மார்க்கம் அது பற்றி என்ன சொல்கிறது?
- பருத்தி இக்பால், மேலப்பாளையம்
எல்லாவற்றையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரும் கற்றுக் கொடுக்காமலே மனிதன் தானாகக் கற்றுக் கொள்ளும் விஷயங்களில் பாலியல் முதலிடத்தில் உள்ளது.
மேலும் இது அனைவருக்கும் ஒரே வயதில் தேவைப்படாது. அவர்களின் உடற்கூறையும் ஆசைகளையும் பொருத்து இது ஆளுக்கு ஆள் வேறுபடும்.
ஒரு பெண்ணுக்கு 13 வயதில் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் வருவதால் அனைத்து பெண்களுக்கும் அதையே நிர்ணயிக்க இயலாது.
அவரவருக்கு எப்போது தேவைப்படுமோ அப்போது அவர்களின் வயது அதைக் கற்றுக் கொடுத்து விடும்.
மேலும் பாலியல் கல்வி என்று வரும் போது ஆண் ஆசிரியர், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் போது மாணவிகளை தங்களின் ஆசைக்கு வீழ்த்தும் நிலை ஏற்படும்.
பெண் ஆசிரியைகள் ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். கோ எஜுகேசன் அமுலில் உள்ள நிலையில் இது பல விபரீதங்களை ஏற்படுத்தும்.
மிருகங்கள் கூட யாரும் கற்றுக் கொடுக்காமல் அறிந்து கொள்ளும் விஷயம் இது. இதற்கு எந்தக் கற்பித்தலும் தேவை இல்லை.
உணர்வு 16:16
29.12.2011. 4:56 AM
பாலியல் கல்வி தேவையா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode